புதிய ஏற்பாடு 2023
ஜனுவரி 23–29. மத்தேயு 3; மாற்கு 1; லூக்கா 3: “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்”


“ஜனுவரி 23–29. மத்தேயு 3; மாற்கு 1; லூக்கா 3: ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்’” என்னைப் பின்பற்றி வாருங்கள் —தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“ஜனுவரி 23–29. மத்தேயு 3; மாற்கு 1; லூக்கா 3,” என்னைப் பின்பற்றி வாருங்கள் —தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
யோவான் ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தல்

நாவூ இல்லினாய் ஆலயத்தில் வண்ண ஜன்னல் கண்ணாடி–டாம் ஹோல்ட்மன்

ஜனுவரி 23–29

மத்தேயு 3; மாற்கு 1; லூக்கா 3

“கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்”

மத்தேயு 3; மாற்கு 1; லூக்கா 3 வாசித்து ஆரம்பியுங்கள். இந்த அதிகாரங்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ பரிசுத்த ஆவிக்காக நீங்கள் ஜெபிக்கும்போது, அவர் விசேஷமாக உங்களுக்கான உள்ளுணர்வுகளை உங்களுக்குக் கொடுப்பார். இந்த எண்ணங்களைப் பதிவு செய்து அவைகளின்படி செயல்பட திட்டமிடவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்.

இயேசு கிறிஸ்துவும் அவரது சுவிசேஷமும் உங்களை மாற்ற முடியும். இரட்சகரின் வருகை பெறப்போகிற தாக்கத்தை விவரித்த ஏசாயாவின் பூர்வகால தீர்க்கதரிசனத்தை லூக்கா மேற்கோள் காட்டினான்: “பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும்” (லூக்கா 3:4; ஏசாயா 40:4 ஐயும் பார்க்கவும்). அவர்களால் மாற முடியாது என நினைப்பவர்கள் உள்ளிட்ட நம் அனைவருக்கும் இது ஒரு செய்தியாகும். மலை போன்ற நிரந்தரமான ஒன்று தட்டையாக்கப்பட முடியுமென்றால், கர்த்தர் நமது கோணலான பாதைகளை நேராக்க முடியும் (லூக்கா 3:4–5 பார்க்கவும்). மனந்திரும்பவும் மாறவும் யோவான் ஸ்நானனின் அழைப்பை நாம் ஏற்றுக்கொள்ளும்போது, நாமும் “தேவனின் இரட்சிப்பைக் காணும்படிக்கு” இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள நாம் நமது மனங்களையும் இருதயங்களையும் ஆயத்தம் செய்கிறோம் (லூக்கா 3:6).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

மாற்கு யார்?

சுவிசேஷத்தை எழுதியவர்களுக்கு மத்தியில் மாற்கைப்பற்றி நாம் குறைவாகவே அறிகிறோம். பவுல், பேதுரு மற்றும் அநேக பிற ஊழியக்காரர்களுடன் அவன் ஊழியத் தோழனாக இருந்தான் என நாம் அறிகிறோம். இரட்சகரின் வாழ்க்கை நிகழ்வுகளை பதிவு செய்ய மாற்கை பேதுரு வழிநடத்தினான் என அநேக வேத விற்பன்னர்கள் நம்புகின்றனர். பிற மூன்றுக்கும் முன்னர் மாற்கின் சுவிசேஷம் எழுதப்பட்டிருக்கலாம்.

Bible Dictionary, “Mark,”பார்க்கவும்.

மத்தேயு 3:1–12; மாற்கு 1:1–8; லூக்கா 3:2–18

மனந்திரும்புதல் என்பது, மனம் மற்றும் இருதயத்தின் ஒரு பலத்த மாற்றம் ஆகும்.

யோவான் ஸ்நானனின் ஊழியம் இரட்சகரை வரவேற்கவும், அதிகமாக அவரைப்போலாகவும் ஜனங்களின் இருதயங்களை ஆயத்தப்படுத்துவதாயிருந்தது. இதை அவன் எப்படிச் செய்தான்? அவன் அறிவித்தான், “மனந்திரும்புங்கள்” (மத்தேயு 3:2). மனந்திரும்புதலின் முக்கியத்துவத்தைப் போதிக்க அவன் கனி மற்றும் கோதுமை போன்ற வடிவங்களை பயன்படுத்தினான் (லூக்கா 3:9, 17 பார்க்கவும்).

யோவான் ஸ்நானன் ஊழிய விவரங்களில் வேறு பிற என்ன வடிவங்களை நீங்கள் காண்கிறீர்கள்? (மத்தேயு 3:1–12; மாற்கு 1:1–8; லூக்கா 3:2–18 பார்க்கவும்). உங்கள் வேதங்களில் அவற்றைக் குறியிடுதல் அல்லது அவற்றின் படங்களை வரைவதைக் கருத்தில் கொள்ளவும். மனந்திரும்புதலின் கோட்பாடு மற்றும் தேவையைப்பற்றி இந்த வடிவங்கள் என்ன போதிக்கின்றன?

உண்மையான மனந்திரும்புதல் என்பது “ஒரு மனமாற்றம், தேவனைப்பற்றி, தன்னைப்பற்றி மற்றும் உலகத்தைப்பற்றிய புதிய பார்வை. … [அதாவது] தேவனிடத்தில் இருதயம் மற்றும் சித்தத்தின் மாற்றம்” (Bible Dictionary, “Repentance”). லூக்கா 3:7–14ல், கிறிஸ்துவை வரவேற்க ஆயத்தப்பட என்ன மாற்றங்களை செய்ய யோவான் ஜனங்களை அழைத்தான்? இந்த ஆலோசனை உங்களுக்கு எப்படி பொருந்தும்? நீங்கள் உண்மையாகவே மனந்திரும்பினீர்கள் என எவ்வாறு காட்ட முடியும்? (லூக்கா 3:8 பார்க்கவும்).

Russell M. Nelson, “We Can Do Better and Be Better,” Liahona, May 2019, 67–69; Dallin H. Oaks, “Cleansed by Repentance,” Liahona, May 2019, 91–94 ஐயும் பார்க்கவும்.

மத்தேயு 3:7; லூக்கா 3:7

பரிசேயர்களும் சதுசேயர்களும் யார்?

மோசேயின் நியாயப் பிரமாணத்தையும் அதன் சடங்குகளையும் கடுமையாக ஆசரிப்பதில் தாங்கள் பெருமை பாராட்டிய யூத மத பிரிவின் அங்கத்தினர்கள் பரிசேயர்கள். சதுசேயர்கள் குறிப்பிடத்தக்க மத மற்றும் அரசியல் செல்வாக்குடைய ஐஸ்வரியமுடைய யூத பிரிவினர். அவர்கள் உயிர்த்தெழுதலின் கோட்பாட்டை நம்பவில்லை. இரண்டு குழுக்களும் தேவ நியாயப்பிரமாணங்களின் அசல் நோக்கத்திலிருந்து விலகிவிட்டன.

மத்தேயு 23:23–28; Bible Dictionary, “Pharisees,” “Sadducees ஐயும் பார்க்கவும்.”

மத்தேயு 3:11, 13–17; மாற்கு 1:9–11; லூக்கா 3:15–16, 21–22

“எல்லா நீதியையும் நிறைவேற்ற” இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டார்.

நீங்கள் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டபோது, நீங்கள் இரட்சகரின் எடுத்துக்காட்டை பின்பற்றினீர்கள். இரட்சகரின் ஞானஸ்நானத்தைப்பற்றிய விவரங்களிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்வதை உங்கள் ஞானஸ்நானத்தின்போது என்ன நடந்தது என்பதுடன் ஒப்பிடவும்.

இரட்சகரின் ஞானஸ்நானம்

என் ஞானஸ்நானம்

இரட்சகரின் ஞானஸ்நானம்

இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தது யார், மற்றும் அவன் என்ன அதிகாரத்தைத் தரித்திருந்தான்?

என் ஞானஸ்நானம்

உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தது யார், அவர் என்ன அதிகாரம் தரித்திருந்தார்?

இரட்சகரின் ஞானஸ்நானம்

இயேசு எங்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டார்?

என் ஞானஸ்நானம்

நீங்கள் எங்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டீர்கள்?

இரட்சகரின் ஞானஸ்நானம்

இயேசு எவ்வாறு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டார்?

என் ஞானஸ்நானம்

நீங்கள் எவ்வாறு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டீர்கள்?

இரட்சகரின் ஞானஸ்நானம்

இயேசு ஏன் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டார்?

என் ஞானஸ்நானம்

நீங்கள் ஏன் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டீர்கள்?

இரட்சகரின் ஞானஸ்நானம்

இயேசு கிறிஸ்துவில் பரலோக பிதா பிரியமாயிருப்பதை அவர் எவ்வாறு காட்டினார்?

என் ஞானஸ்நானம்

நீங்கள் ஞானஸ்நானம் பெற்றபோது அவர் மகிழ்ச்சியாயிருந்தார் என்பதை பரலோக பிதா எவ்வாறு காட்டினார்? அப்போதிலிருந்து அவர் எவ்வாறு தன் அங்கீகாரத்தை காட்டினார்?

2 நேபி 31; மோசியா 18:8–11; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37, 68–74; “The Baptism of Jesus” (video), ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்.

மத்தேயு 3:16–17; மாற்கு 1:9–11; லூக்கா 3:21–22

தேவத்துவ அங்கத்தினர்கள் மூன்று தனித்தனியான நபர்கள்.

தேவத்துவ அங்கத்தினர்கள் மூன்று தனித்தனியான நபர்கள் என ஏராளமான ஆதாரங்கள் வேதாகமத்தில் அடங்கியிருக்கிறது. இரட்சகரின் ஞானஸ்நானத்தின் விவரங்கள் ஒரு உதாரணம். இந்த விவரங்களை நீங்கள் படிக்கும்போது, தேவத்துவத்தைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள் என்று சிந்தியுங்கள். இந்த கோட்பாடுகள் உங்களுக்கு ஏன் முக்கியமானவை?

ஆதியாகமம் 1:26; மத்தேயு 17:1–5; யோவான் 17:1–3; அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:55–56; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 130:22 ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

மத்தேயு 3.யோவான் ஸ்நானன் ஆரோனிய ஆசாரியத்துவம் தரித்திருந்தான். ஆரோனிய ஆசாரியத்துவத்தின் நோக்கங்களைப்பற்றி யோவானின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? ஆரோனிய ஆசாரியத்துவத்தின் நிமித்தம் நாம் என்ன ஆசீர்வாதங்களை பெறுகிறோம்? உங்கள் குடும்பத்தில் ஒரு இளைஞன் இருந்தால், அவன் மற்றவர்களை ஆசீர்வதிக்க ஆரோனிய ஆசாரியத்துவத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்துகொள்ள அவனுக்கு உதவ நேரம் எடுக்கலாம். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13:1; 20:46–60 ஐயும் பார்க்கவும்.)

படம்
வாலிபன் மற்றொருவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தல்

நாம் ஞானஸ்நானம் கொடுக்கப்படும்போது, நமது பாவங்கள் கழுவப்படுகின்றன.

மத்தேயு 3:11–17; மாற்கு 1:9–11; லூக்கா 3:21–22யாராவது ஞானஸ்நானம் பெறுவதை அல்லது சபையின் உறுப்பினராக திடப்படுத்தப்படுவதை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பார்த்திருக்கிறார்களா? குடும்ப உறுப்பினர்கள் என்ன உணர்ந்தார்கள்? ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தப்படுத்தலின் அடையாளத்தைப்பற்றி ஒருவேளை நீங்கள் அவர்களுக்கு கற்பிக்கலாம். ஞானஸ்நானம் பெறுவது மற்றும் திடப்படுத்தப்படுவது ஒரு புதிய பிறப்பு போல எப்படி இருக்கிறது? நாம் ஞானஸ்நானம் கொடுக்கப்படும்போது நாம் ஏன் முழுமையாக தண்ணீரில் மூழ்கடிக்கப்படுகிறோம்? நாம் ஞானஸ்நானம் பெறும்போது நாம் ஏன் வெள்ளை உடை உடுத்துகிறோம்? பரிசுத்த ஆவியின் வரம் ஏன் “அக்கினியால் ஞானஸ்நானம்” என விவரிக்கப்படுகிறது? (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:41; Bible Dictionary, “Baptism,” “Holy Ghost” ஐயும் பார்க்கவும்).

மத்தேயு 3:17; மாற்கு 1:11; லூக்கா 3:22தேவன் நம்முடன் பிரியமாக இருந்ததை நாம் எப்போது உணர்ந்திருக்கிறோம்? தேவனை மகிழ்விக்க ஒரு குடும்பமாக நாம் என்ன செய்ய முடியும்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Baptism,” Children’s Songbook, 100–101.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

கர்த்தரிடம் உதவி கேட்கவும். வேதங்கள் வெளிப்படுத்தலால் கொடுக்கப்பட்டன, அவற்றை உண்மையாகவே புரிந்துகொள்ள நமக்கு தனிப்பட்ட வெளிப்படுத்தல் தேவை. கர்த்தர் வாக்குத்தத்தம் செய்தார், “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” (மத்தேயு 7:7).

படம்
யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தல்

யோவான் ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தல்–க்ரெக் கே. ஆல்சன்

அச்சிடவும்