புதிய ஏற்பாடு 2023
ஜனுவரி 16–22. யோவான் 1: நாங்கள் மேசியாவைக் கண்டோம்


“ஜனுவரி 16–22. யோவான் 1: நாங்கள் மேசியாவைக் கண்டோம்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“ஜனுவரி 16–22. யோவான் 1,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
ரயில் நிலையத்தில் பெண் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்

ஜனுவரி 16–22

யோவான் 1

நாங்கள் மேசியாவைக் கண்டோம்

யோவான் 1, நீங்கள் வாசித்து சிந்திக்கும்போது நீங்கள் பெறுகிற எண்ணங்களைப் பதிவு செய்யவும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மிகவும் மதிப்புடைய என்ன செய்திகளைக் காண்கிறீர்கள்? உங்கள் சபை வகுப்புக்களில் நீங்கள் எதைப் பகிர்ந்துகொள்ள முடியும்?

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

அவரது அநித்திய ஊழியத்தின்போது நீங்கள் உயிரோடிருந்திருந்தால், தேவ குமாரனாகிய நாசரேத்தின் இயேசு கிறிஸ்துவை அடையாளம் கண்டிருப்பீர்களா என எப்போதாவது வியந்திருக்கிறீர்களா? பல ஆண்டுகளாக, அந்திரேயா, பேதுரு, பிலிப்பு மற்றும் நத்தானுவேல் உள்ளிட்ட விசுவாசமிக்க இஸ்ரவேலர், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மேசியாவின் வருகைக்காக காத்திருந்து ஜெபித்திருக்கிறார்கள். அவர்கள் அவரை சந்தித்தபோது, அவர்கள் தேடிக்கொண்டிருந்தவர் அவர்தான் என அவர்கள் எவ்வாறு அறிந்தார்கள்? நாமே “வந்து பார்க்கும்படி” அவரது அழைப்பை ஏற்றுக்கொள்வதால் அதே விதமாக நாமனைவரும் இரட்சகரை அறியவருகிறோம் (யோவான் 1:39) . நாம் அவரைப்பற்றி வேதங்களில் வாசிக்கிறோம். நாம் அவரது கோட்பாட்டைக் கேட்கிறோம். நாம் அவர் வாழ்ந்த விதத்தை கடைபிடிக்கிறோம். நாம் அவரது ஆவியை உணர்கிறோம். அவ்விதமாகவே, இரட்சகர் நம்மை அறிகிறார், நம்மை நேசிக்கிறார் மற்றும் “பெரிதானவைகளைப்” பெற நம்மை ஆயத்தப்படுத்துகிறார் என நத்தானுவேலைப் போல நாம் கண்டுபிடிக்கிறோம் (யோவான் 1:50).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

யோவான் யார்?

யோவான், யோவான் ஸ்நானனின் சீஷன் மற்றும் பின்னர் இயேசு கிறிஸ்துவை முதலில் பின்பற்றியவர்களில் ஒருவனாயும் அவரது பன்னிரு அப்போஸ்தலர்களில் ஒருவனாயுமிருந்தான். அவன் யோவான் சுவிசேஷத்தையும், பல நிருபங்களையும், வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தையும் எழுதினான். “இயேசு நேசித்தவனாகவும்,” “மற்ற சீஷனாகவும்” தனது சுவிசேஷத்தில் அவன் தன்னை குறிப்பிட்டான் (யோவான் 13:23; 20:3). அவன் கிறிஸ்துவுக்கு ஆத்துமாக்களை கொண்டுவரும்படியாக இரட்சகரின் இரண்டாம் வருகைவரை சுவிசேஷத்தைப் போதிக்க உலகத்தில் இருக்கும்படியாக கேட்ட யோவானின் வேட்கை அவ்வளவு பலத்ததாக இருந்தது. ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 7:1–6 பார்க்கவும்).

Bible Dictionary, “John” மற்றும் “John, Gospel of” ஐயும் பார்க்கவும்.

யோவான் 1:1–5

இயேசு கிறிஸ்து “ஆதியிலே தேவனோடிருந்தார்.”

யோவான் பிறப்பதற்கு முன்பே கிறிஸ்து செய்த பணியை விவரித்து அவன் தன் சுவிசேஷத்தைத் தொடங்கினான்: “ஆதியிலே … வார்த்தை [இயேசு கிறிஸ்து] தேவனோடிருந்தது.” இரட்சகர் மற்றும் அவரது பணியைப்பற்றி வசனங்கள் 1–5லிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, யோவான் 1:1–5 (in the Bible appendix)ல் உதவிகரமான தெளிவுரைகளை நீங்கள் காணலாம். இரட்சகரின் வாழ்க்கையை நீங்கள் படிக்க தொடங்கும்போது, அவரது அநித்தியத்துக்கு முந்தய பணியைப்பற்றி அறிவது ஏன் முக்கியமாக இருக்கிறது?

“Jesus Christ Chosen as Savior,” Gospel Topics, topics.ChurchofJesusChrist.org பார்க்கவும்.

யோவான் 1:1–18.

இயேசு கிறிஸ்து “மெய்யான ஒளி,” தேவ குமாரன்.

“அவன், அந்த மெய்யான ஒளியைக் குறித்து … சாட்சி கொடுக்க அனுப்பப்பட்டவன்” (யோவான் 1:8–9) என அறிவித்த, யோவான் ஸ்நானனின் சாட்சியினிமித்தம் இரட்சகரை தேட யோவான் உணர்த்தப்பட்டான். இரட்சகரின் வாழ்க்கையையும் ஊழியத்தையும்பற்றி யோவான் தானே வல்லமையான சாட்சியும் கொடுத்தான்.

கிறிஸ்துவைப்பற்றிய அவனது தொடக்க சாட்சியில் யோவான் சேர்த்த சத்தியங்களின் பட்டியலை எழுதுவது ரசிக்கத்தக்கதாக இருக்கும் (வசனங்கள் 1–18; ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, யோவான் 1:1–19 [in the Bible appendix]) ஐயும் பார்க்கவும்). இந்த சத்தியங்களோடு தன் சுவிசேஷத்தை யோவான் தொடங்கினான் என ஏன் நினைக்கிறீர்கள்? இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சாட்சியை எழுதினால், எதைப் பகிர்ந்துகொள்ள விரும்புவீர்கள்? என்பதைக் கருத்தில் கொள்ளவும். இரட்சகரை அறியவும் பின்பற்றவும் உங்களுக்கு எந்த அனுபவங்கள் உதவியிருக்கின்றன? உங்கள் சாட்சியைக் கேட்பதால் யார் ஆசீர்வதிக்கப்படக் கூடும்?

யோவான் 1:11–13

தேவனின் குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் “மாறுவதற்கான வல்லமையை” இயேசு கிறிஸ்து நமக்கு அளிக்கிறார்.

நாம் அனைவரும் தேவனின் ஆவிக்குமாரர்களும் குமாரத்திகளுமாக இருந்தாலும், நாம் பாவம் செய்யும்போது நாம் அவரிடமிருந்து வழிதவறுகிறோம் அல்லது பிரிகிறோம். இயேசு கிறிஸ்து அவருடைய பாவநிவாரண பலி மூலம் நமக்கு ஒரு வழியைத் தருகிறார். தேவனின் குமாரத்திகளாகவும் குமாரர்களாகவும் மாறுவதைப்பற்றி யோவான் 1:11–13 என்ன போதிக்கிறதென சிந்தித்துப் பாருங்கள். இந்த வரத்தை நாம் எவ்வாறு பெறுகிறோம் என்பதைப்பற்றி இந்த வசனங்கள் என்ன போதிக்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவும்: ரோமர் 8:14–18; மோசியா 5:7–9; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:1. தேவனின் குமாரத்தியாகவோ அல்லது குமாரனாகவோ “ஆகுவதற்கு வல்லமை” என்பது உங்களுக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது?

யோவான் 1:18

பிதா தனது குமாரனைப்பற்றி சாட்சி கொடுக்கிறார்.

யோவான் 1:18 தேவனை யாரும் பார்க்கவில்லை என்று கூறுகிறது. இருப்பினும், இந்த வசனத்தின் ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, “குமாரனைப் பற்றிய சாட்சி கூறினாலொழிய, எந்த நேரத்திலும் எவரும் தேவனைப் பார்த்ததில்லை” என்று தெளிவுபடுத்துகிறது.(யோவான் 1:18, footnote c பார்க்கவும்). பிதாவாகிய தேவன் குமாரனைப்பற்றி சாட்சி கூறியதை கேட்ட பின்வரும் நிகழ்வுகளை மறுபரிசீலனை செய்வதைக் கருத்தில் கொள்ளுங்கள்: மத்தேயு 3:17; 17:5; 3 நேபி 11:6–7; ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:17.

இந்த விவரங்கள் இருப்பது ஏன் ஒரு ஆசீர்வாதம்? பிதாவுடன் இயேசு கிறிஸ்துவுக்கு இருக்கும் உறவைப்பற்றி அவர்கள் உங்களுக்கு என்ன கற்பிக்கிறார்கள்?

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

படம்
சிறுமி வேதங்களை வாசித்தல்

நாம் வேதங்களைப் படிக்கும்போது நமது வாழ்க்கைக்காக உணர்த்துதல் பெறுவோம்.

யோவான் 1:4–10.இந்த வசனங்களில் அவர்கள் ஒளியைப்பற்றி வாசிப்பதை உங்கள் குடும்பத்தினர் கற்பனை செய்ய நீங்கள் எப்படி உதவலாம்? ஒரு இருட்டறையில் ஒரு விளக்கேற்ற குடும்ப அங்கத்தினர்கள் முறை எடுத்து, இரட்சகர் அவர்களது வாழ்க்கையில் எப்படி ஒளியாக இருக்கிறார் என பகிர்ந்துகொள்ள அனுமதிக்கவும். பின்பு நீங்கள் யோவான் 1:4–10 வாசிக்கும்போது, உலகத்தின் ஒளியாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய யோவானின் சாட்சியில் உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் கூடுதல் உள்ளுணர்வு பெறலாம்.

யோவான் 1:35–36.யோவான்ஸ்நானன் ஏன் இயேசுவை “தேவ ஆட்டுக்குட்டி” என்று அழைத்திருக்கலாம்? மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்டின் செய்தியில் இருந்து இந்தத் தலைப்பைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம், “Behold the Lamb of God” or Elder Gerrit W. Gong’s message “Good Shepherd, Lamb of God”? (Liahona, May 2019, 44–46, 97–101)

யோவான் 1:35–46.யோவானின் சாட்சியின் விளைவுகள் என்ன? சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதெப்படி என இந்த வசனங்களில் விவரிக்கப்பட்டவற்றிலிருந்து உங்கள் குடும்பத்தினர் என்ன கற்றுக்கொள்ள முடியும்? “Inviting Others to ‘Come and See’” (ChurchofJesusChrist.org) ஒளிநாடாவையும் பார்க்கவும்.

யோவான் 1:45–51.இரட்சகரைப்பற்றிய சாட்சி பெற அவனுக்கு உதவிய எதை நாத்தானுவேல் செய்தான்? குடும்ப உறுப்பினர்கள் தங்கள் சாட்சியங்களை எவ்வாறு பெற்றனர் என்பதைப்பற்றி பேச அழைக்கவும்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “The Lord Is My Shepherd,” Hymns, no. 89.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

பொருள்சார் பாடங்களைப் பகிர்ந்துகொள்ளவும். குடும்பமாக நீங்கள் வாசிக்கிற வசனங்களில் காணப்படுகிற கொள்கைகளை அவர்கள் பயன்படுத்த உதவக்கூடிய பொருட்களைக் கண்டுபிடிக்க குடும்ப அங்கத்தினர்களை அழைக்கவும். உதாரணமாக கிறிஸ்துவின் ஒளியைக் குறிக்க அவர்கள் ஒரு மெழுகுவர்த்தியை பயன்படுத்தலாம் (யோவான் 1:4 பார்க்கவும்).

படம்
இயேசு கிறிஸ்து பூமியை சிருஷ்டித்தல்

யேகோவா பூமியை சிருஷ்டித்தல் –வால்ட்டர் ரானே

அச்சிடவும்