“ஜனுவரி 2–8. மத்தேயு 1; லூக்கா 1: ‘உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)
“ஜனுவரி 2–8. மத்தேயு 1; லூக்கா 1,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023
ஜனுவரி 2–8
மத்தேயு 1; லூக்கா 1
“உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது”
மத்தேயு 1 மற்றும் லூக்கா 1 நீங்கள் வாசித்து சிந்திக்கும்போது, நீங்கள் பெறுகிற ஆவிக்குரிய உணர்வுகளை பதிவு செய்யவும். என்ன கோட்பாட்டு சத்தியங்களை நீங்கள் காண்கிறீர்கள்? உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மிகவும் மதிப்பு மிக்க செய்திகளாக எவை இருக்கும்? இந்த குறிப்பிலுள்ள படிப்பு ஆலோசனைகள் கூடுதல் உள்ளுணர்வுகளை கண்டுபிடிக்க உங்களுக்கு உதவக்கூடும்.
உங்கள் எண்ணங்களை பதிவு செய்யவும்
ஒரு அநித்திய பார்வையில் இது சாத்தியமற்றதாக இருந்தது. ஒரு கன்னியால் கருத்தரிக்க முடியவில்லை, குழந்தை பிறக்கும் ஆண்டுகளைக் கடந்த ஒரு மலட்டுப் பெண்ணாலும் முடியாது. ஆனால் தேவன் தன் குமாரன் மற்றும் யோவான் ஸ்நானனின் பிறப்புக்கு ஒரு திட்டம் வைத்திருந்தார், ஆகவே மரியாளும் எலிசபெத்தும் உலகப்பிரகாரமான காரியங்களுக்கு எதிராக தாயானார்கள். முடியாது என்பதாகத் தோன்றுகிறதை நாம் எதிர்கொள்ளும்போதெல்லாம் அவர்களது அற்புதமான அனுபவங்களை நினைவுகூர்வது உதவிகரமானதாயிருக்கும். நாம் நமது பெலவீனங்களை மேற்கொள்ள முடியுமா? அசைக்கமுடியாத ஒரு குடும்ப அங்கத்தினரின் இருதயத்தை நாம் தொடமுடியுமா? காபிரியேல் மரியாளுக்கு நினைவூட்டியபோது, நம்முடன் எளிதாக பேசியிருந்திருக்கலாம், “தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை” (லூக்கா 1:37). தேவன் தமது சித்தத்தை வெளிப்படுத்தும்போது, “உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” (லூக்கா 1:38)என்ற மரியாளின் பதிலே நமது பதிலாகவும் இருக்க முடியும்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
மத்தேயுவும் லூக்காவும் யார்?
மத்தேயு ஒரு யூத ஆயக்காரன், அல்லது வரி வசூலிப்பவன், அவனை இயேசு தன் அப்போஸ்தலர்களில் ஒருவனாக அழைத்தார் (மத்தேயு 10:3; Bible Dictionary, “Publicans”ஐயும் பார்க்கவும்). மத்தேயு தன் சுவிசேஷத்தை முக்கியமாக தன் சக யூதர்களுக்காக எழுதினான், ஆகவே இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியம் மூலம் நிறைவேற்றப்பட்ட மேசியாவைப்பற்றிய பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களை வலியுறுத்துவதை அவன் தேர்ந்தெடுத்தான்.
அப்போஸ்தலனாகிய பவுலுடன் பிரயாணம் பண்ணிய லூக்கா புறஜாதியானான (யூதனல்லாத) மருத்துவன். முக்கியமாக ஒரு யூதரல்லாத வாசகர்களுக்கே இரட்சகரின் மரணத்துக்குப்பின் அவரது சுவிசேஷத்தை அவன் எழுதினான். புறஜாதியாருக்கும் யூதர்களுக்கும் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக அவன் சாட்சியளித்தான். இரட்சகரின் வாழ்க்கையின் நிகழ்ச்சிகளின் கண்கண்ட சாட்சியாக அவன் பதிவு செய்தான், பிற சுவிசேஷங்களை ஒப்பிட்டால் பெண்களை ஈடுபடுத்தி அவன் அதிக கதைகளை சேர்த்தான்.
Bible Dictionary, “Gospels,” “மத்தேயு,” “லூக்கா.” ஐயும் பார்க்கவும்.
மத்தேயு 1:18–25; லூக்கா 1:26-35
இயேசு கிறிஸ்து ஒரு அநித்திய தாய் மற்றும் நித்திய பிதாவால் பிறந்தார்.
மத்தேயு 1: 18–25 மற்றும் லூக்கா 1: 26–35 ல், இயேசுவின் பிறப்பின் அற்புதத்தை மத்தேயுவும் லூக்காவும் விவரித்ததைக் கவனியுங்கள். அவர்களின் விவரிப்புகள் இரட்சகரின் மீதான உங்கள் விசுவாசத்தை எவ்வாறு வலுப்படுத்துகின்றன? இயேசு தேவ குமாரன் மற்றும் மரியாள் இருவரின் மகன் என்பதை நீங்கள் அறிவது ஏன் முக்கியம்?
இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்திக்கு “மரணத்துக்கு உட்படாத ஒரு நித்தியமானவரால் ஒரு தனிப்பட்ட பலி தேவைப்பட்டது என தலைவர் ரசல் எம். நெல்சன் விளக்கினார். இருந்தும், அவர் மரித்து தன் சொந்த சரீரத்தை திரும்பவும் பெற வேண்டும். இதை நிறைவேற்றக்கூடியவர் இரட்சகர் ஒருவர் மட்டுமே. தன் தாயிடமிருந்து அவர் மரிக்கும் வல்லமையை சுவீகரித்தார். தன் பிதாவிடமிருந்து மரணத்தின் மீது வல்லமையை அவர் பெற்றார்.” (“Constancy amid Change,” Ensign, Nov. 1993, 34).
தேவனின் ஆசீர்வாதங்கள் அவரது சொந்த நேரத்தில் வருகின்றன.
ஒரு ஆசீர்வாதத்துக்காக காத்திருக்க வேண்டியதை நீங்கள் கண்டால், அல்லது தேவன் உங்கள் ஜெபங்களைக் கேட்காததுபோல் தோன்றினால், எலிசபெத் மற்றும் சகரியாவின் கதை, அவர் உங்களை மறக்கவில்லை என்பதன் நினைவூட்டலாக இருக்கும். மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் வாக்களித்ததுபோல: “நமது ஜெபங்கள் சிலவற்றிற்கான பதில்களுக்காக நாம் ஒன்றுசேர்ந்து உழைத்து காத்திருக்கும்போது, ஒருவேளை அந்த நேரத்தில் அல்லது நாம் விரும்புகிற வழியில் இல்லாதிருந்தும் அவைகள் கேட்கப்பட்டு பதிலளிக்கப்படுமென்கிற எனது அப்போஸ்தல வாக்குத்தத்தத்தை நான் உங்களுக்கு அருளுகிறேன். ஆனால் அவைகள் எப்போதும் அந்த நேரத்திலும், ஒரு சர்வஞான மற்றும் நித்திய இரக்கமுள்ள பெற்றோர் அவைகளுக்கு பதிலளிக்கவேண்டிய வழியிலும் பதிலளிக்கப்படுகின்றன. (“Waiting on the Lord,” Liahona, Nov. 2020, 115–16). சகரியாவும் எலிசபெத்தும் எப்படி விசுவாசமாக இருந்தார்கள்? ( லூக்கா 1:5–25, 57–80 பார்க்கவும்). நீங்கள் ஒரு ஆசீர்வாதத்துக்காக காத்திருப்பதை உங்களில் காண்கிறீர்களா? நீங்கள் காத்திருக்கும்போது, கர்த்தர் என்ன எதிர்பார்க்கிறார் என உணர்கிறீர்கள்?
மத்தேயு 1:18–25; லூக்கா 1:26–38
விசுவாசமுள்ளவர்கள் தேவனின் சித்தத்துக்கு வாஞ்சையுடன் கீழ்ப்படிகிறார்கள்.
மரியாளைப்போல, நமது வாழ்க்கைக்கான தேவ திட்டங்கள் நாம் திட்டமிட்டவற்றுக்கு மிகவும் வித்தியாசமானவைகள் என நாம் சில சமயங்களில் காண்கிறோம். தேவனின் சித்தத்தை ஏற்றுக்கொள்வதைப்பற்றி மரியாளிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்? பின்வரும் அட்டவணைகளில், அவர்கள் கூறுவதில் நீங்கள் காண்கிற செய்திகளுடன் தூதன் மற்றும் மரியாள் கூறியவற்றை எழுதவும்.(லூக்கா 1:26–38 பார்க்கவும்):
மரியாளுக்கு தூதனின் வார்த்தைகள் |
எனக்கான செய்திகள் |
---|---|
மரியாளுக்கு தூதனின் வார்த்தைகள் “கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்” (வசனம் 28). | எனக்கான செய்திகள் கர்த்தர் என் சூழ்நிலைகளையும் போராட்டங்களையும் அறிந்திருக்கிறார். |
மரியாளுக்கு தூதனின் வார்த்தைகள்
| எனக்கான செய்திகள்
|
மரியாளுக்கு தூதனின் வார்த்தைகள்
| எனக்கான செய்திகள்
|
மரியாளின் பிரதிகிரியைகள் |
எனக்கான செய்தி |
---|---|
மரியாளின் பிரதிகிரியைகள் “இது எப்படியாகும்?” (வசனம் 34). | எனக்கான செய்தி தேவ சித்தத்தை நன்கு புரிந்துகொள்ள கேள்விகளைக் கேட்பது சரி. |
மரியாளின் பிரதிகிரியைகள்
| எனக்கான செய்தி
|
மரியாளின் பிரதிகிரியைகள்
| எனக்கான செய்தி
|
மத்தேயு 1:18–25ல் யோசேப்பின் நீதியான எடுத்துக்காட்டைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, தேவனுடைய சித்தத்தை ஏற்றுக்கொள்ளுவதைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? சகரியா மற்றும் எலிசபெத்தின் அனுபவங்களிலிருந்து நீங்கள் என்ன கூடுதல் உள்ளுணர்வுகளைக் கற்றுக்கொள்கிறீர்கள்? (லூக்கா 1 பார்க்கவும்).
லூக்கா 22:42; Bible Dictionary, “Gabriel” ஐயும் பார்க்கவும்.
இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தைப்பற்றி மரியாள் சாட்சியளித்தாள்.
லூக்கா 1:46–55லுள்ள மரியாளின் வார்த்தைகள், இரட்சகரின் ஊழியத்தின் தன்மைகளைப்பற்றி முன்னறிவித்தன. மரியாளின் வார்த்தைகளிலிருந்து இயேசு கிறிஸ்துவைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்? 1சாமுவேல் 2:1–10லுள்ள அன்னாளின் வார்த்தைகள் மற்றும் மத்தேயு 5:3–12லுள்ள இயேசுவின் ஆசீர்வாத வார்த்தைகளை இந்த வசனங்களுடன் நீங்கள் ஒப்பிடலாம். இந்த வசனங்களைப்பற்றி நீங்கள் சிந்திக்கும்போது, பரிசுத்த ஆவி உங்களுக்கு என்ன போதிக்கிறது?
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
மத்தேயு 1:1–17.உங்கள் குடும்பம் இயேசுவின் வம்சாவளியை வாசிக்கும்போது, நீங்கள் உங்கள் சொந்த குடும்ப வரலாற்றைப்பற்றி கலந்துரையாடலாம் மற்றும் உங்கள் முன்னோர்களைப்பற்றிய சில கதைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் குடும்ப வரலாற்றைப்பற்றி அறிவது, எவ்வாறு உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்கும்? கூடுதல் குடும்ப வரலாறு நிகழ்ச்சிகளுக்கு, FamilySearch.org/discovery பார்க்கவும்.
-
மத்தேயு 1:20; லூக்கா 1:11–13, 30.இந்த வசனங்களிலுள்ள ஜனங்கள் எதற்காக பயப்பட வேண்டும்? எது நம்மை பயமுடன் உணர வைக்கிறது? “பயப்படாதே” என எவ்வாறு தேவன் நம்மை அழைக்கிறார்?
-
லூக்கா 1:37.“தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை” என விசுவாசத்தைக் கட்ட உங்கள் குடும்பத்துக்குதவ, நீங்கள் லூக்கா 1 ல் ஒன்றாக தேடி, கூடாததாகக் கருதப்படக்கூடிய தேவன் செய்த காரியங்களைக் கண்டுபிடிக்கலாம். கூடாத காரியங்களாக தோன்றுகிறவற்றில் தேவன் செய்த, வேதங்கள் அல்லது நமது சொந்த வாழ்க்கையிலிருந்து, நாம் என்ன பிற கதைகளை பகிர்ந்துகொள்ள முடியும்? Gospel Art Book முழுவதும் தேடுவது ஆலோசனைகளை கொடுக்கக் கூடும்.
-
லூக்கா 1:46–55. இரட்சகர் நமக்காக செய்த சில “பெரிய காரியங்கள்” யாவை? “கர்த்தரை மகிமைப்படுத்துவது” என்பதன் அர்த்தம் நமது ஆத்துமாக்களுக்கு என்னவாக இருக்கக்கூடும்?
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “He Sent His Son,” Children’s Songbook, 34–35.