புதிய ஏற்பாடு 2023
ஜனுவரி 9–15. மத்தேயு 2; லூக்கா 2: நாங்கள் அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்


“ஜனுவரி 9–15. மத்தேயு 2; லூக்கா 2: நாங்கள் அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“ஜனுவரி 9–15. மத்தேயு 2; லூக்கா 2,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
ஒட்டகங்களின்மேல் சாஸ்திரிகள் பயணித்தல்

நாம் அவரைத் தொழுதுகொள்வோமாக–டானா மரியோ வுட்

ஜனுவரி 9–15

மத்தேயு 2; லூக்கா 2

நாங்கள் அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்

மத்தேயு 2 மற்றும் லூக்கா 2, நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் பெறும் எந்த ஆவிக்குரிய உள்ளுணர்வுகளுக்கும் கவனம் செலுத்துங்கள். இந்த குறிப்பிலுள்ள படிப்பு ஆலோசனைகள் இந்த அதிகாரங்களிலுள்ள முக்கிய மற்றும் பொருத்தமான கொள்கைகளை அடையாளம் காண உங்களுக்கு உதவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

இயேசு ஒரு சாதாரண குழந்தையில்லை என்பது அவருடைய பிறப்பின் நாளிலிருந்து தெளிவாயிருந்தது. வானங்களில் புதிய நட்சத்திரம் அல்லது சந்தோஷத்தின் தூதனின் பிரகடனம் மட்டுமே இயேசுவின் குழந்தைப் பருவத்தை தனித்துவமாக்கவில்லை. வேறு வேறு தேசங்கள், தொழில்கள், பின்னணிகளிலிருந்து வந்த பல்வேறு வகையான விசுவாசமுள்ள ஜனங்கள் உடனடியாக அவரிடத்தில் ஈர்க்கப்பட்டதாக உணர்ந்தார்கள் என்பதும் உண்மையாகும். “என் பின்னே வா” என அவர் அழைப்பு விடுவதற்கு முன்பே அவர்கள் வந்தார்கள் (லூக்கா 18:22). நிச்சயமாக, எல்லோரும் அவரிடம் வரவில்லை. அவரைக் கவனிக்காத பலர் இருந்தனர், மேலும் ஒரு பொறாமை கொண்ட ஆளுநர் அவரது உயிரை வாங்க வகை தேடினான். ஆனால் தாழ்மையான, தூய்மையான, அர்ப்பணிப்புள்ள நீதியைத் தேடுபவர்கள் அவரை யார் என்று பார்த்தார்கள்— அவர்களின் வாக்களிக்கப்பட்ட மேசியா. அவர்களுடைய அர்ப்பணிப்பு நமக்கு உணர்த்துகிறது ஏனெனில் “எல்லா ஜனத்துக்கும்” “மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி” மேய்ப்பர்களுக்கு கொடுக்கப்பட்டு, இன்று “கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்” நம் அனைவருக்காவும் பிறந்திருக்கிறார் (லூக்கா2:10–11 பார்க்கவும்).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

லூக்கா 2:1–7

தாழ்மையான சூழ்நிலைகளில் இயேசு கிறிஸ்து பிறந்தார்.

“உலகம் உண்டாகிறதற்கு முன்னே” பிதாவாகிய தேவனிடத்தில் மகிமையோடு இயேசு கிறிஸ்து இருந்தாலும்கூட, (யோவான் 17:5) தாழ்மையான சூழ்நிலைகளில் பிறக்கவும் பூமியில் நம்மிடையே வாழவும் அவர் சித்தமாயிருந்தார். லூக்கா 2:1–7ஐ நீங்கள் வாசிக்கும்போது, அவருடைய பிறப்பின் விவரம் அவரைப்பற்றி உங்களுக்கு என்ன போதிக்கிறது என சிந்திக்கவும்? இதற்கு முன்பு நீங்கள் கவனித்திராத இந்தக் கதையில் ஒரு விவரத்தை அல்லது உள்ளுணர்வை அடையாளம்காண முயற்சியுங்கள். இந்த விஷயங்களைக் கவனிப்பது அவரைப்பற்றிய உங்கள் உணர்வுகளை எவ்வாறு பாதிக்கிறது?

“The Christ Child” (video), ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

மத்தேயு 2:1–12; லூக்கா 2:8–38

கிறிஸ்துவின் பிறப்பைக்குறித்து அநேக சாட்சியங்களிருக்கின்றன.

கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் குழந்தைப்பருவம் பல தரப்பு சாட்சிகள் மற்றும் வழிபாட்டாளர்களால் குறிக்கப்பட்டது. அவர்களுடைய கதைகளை நீங்கள் ஆராயும்போது, கிறிஸ்துவை தொழுதுகொள்ளவும், சாட்சியாயிருக்கவும் வழிகளைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

கிறிஸ்துகுறித்த சாட்சி

தொழுதுகொள்ளுதலையும், சாட்சிகூறுதல்பற்றியும் நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?

கிறிஸ்துகுறித்த சாட்சி

மேய்ப்பர்கள் (லூக்கா 2:8–20)

தொழுதுகொள்ளுதலையும், சாட்சிகூறுதல்பற்றியும் நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?

கிறிஸ்துகுறித்த சாட்சி

சீமோன் (லூக்கா 2:25–35)

தொழுதுகொள்ளுதலையும், சாட்சிகூறுதல்பற்றியும் நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?

கிறிஸ்துகுறித்த சாட்சி

அன்னாள் (லூக்கா 2:36–38)

தொழுதுகொள்ளுதலையும், சாட்சிகூறுதல்பற்றியும் நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?

கிறிஸ்துகுறித்த சாட்சி

சாஸ்திரிகள் (மத்தேயு 2:1–12)

தொழுதுகொள்ளுதலையும், சாட்சிகூறுதல்பற்றியும் நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?

1 நேபி 11:13–23; 3 நேபி 1:5–21; “Shepherds Learn of the Birth of Christ” and “The Christ Child Is Presented at the Temple” (videos), ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்.

மத்தேயு 2:13–23

தங்களுடைய குடும்பத்தைப் பாதுகாக்க பெற்றோர் வெளிப்படுத்தல் பெறலாம்.

இயேசுவின் பிள்ளைப்பருவத்தில் அவரைப் பாதுகாக்க, யோசேப்பிடம் கேட்கப்பட்டதை பரலோக உதவியில்லாமல் அவரால் ஒருபோதும் செய்திருக்கமுடியாது. சாஸ்திரிகளைப்போலவே, அபாயத்தைப்பற்றி அவனை எச்சரித்த ஒரு வெளிப்படுத்தலை அவன் பெற்றான். யோசேப்பின் அனுபவத்தைப்பற்றி மத்தேயு 2:13–23ல், நீங்கள் வாசிக்கும்போது, இன்று குடும்பங்கள் எதிர்கொள்கிற சரீர மற்றும் ஆவிக்குரிய அபாயங்களைப்பற்றி சிந்தியுங்கள். உங்களையும் உங்களை நேசிக்கிறவர்களையும் பாதுகாத்தலில் தேவனுடைய வழிநடத்துதலை நீங்கள் உணர்ந்த அனுபவங்களைப்பற்றி சிந்தியுங்கள். மற்றவர்களோடு இந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதலை கருத்தில்கொள்ளவும். வருங்காலத்தில் இத்தகைய வழிநடத்துதலைப் பெற உங்களால் என்ன செய்யமுடியும்?

கூடுதலாக,தேவ குமாரனைக் கவனித்துக்கொள்ளுவதின் பொறுப்பை யோசேப்பு எதிர்கொண்டபோது அவன் எவ்வாறு உணர்ந்திருப்பான் என்பதை சித்தரிக்க “The First Christmas Spirit” (ChurchofJesusChrist.org) என்ற காணொலியைப் பார்ப்பதை நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடும்.

லூக்கா 2:40–52

ஒரு வாலிபனாகக்கூட அவருடைய பிதாவின் சித்தத்தைச் செய்வதில் இயேசு கவனமாயிருந்தார்.

அவருடைய “புத்தியையும் மாறுத்தரங்களையும்” குறித்து போதகர்களும்கூட ஆச்சரியப்படுமளவுக்கு ஒரு வாலிபனாக இரட்சகர் ஆலயத்தில் மிக வல்லமையுடன் சுவிசேஷத்தைப் போதித்தார் (லூக்கா 2:47). ஒரு வாலிபனாக இரட்சகரைப்பற்றி இந்த வசனங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? “[தங்களுடைய] தகப்பனுக்கடுத்தவைகளில்” இருக்க உங்களுக்குத் தெரிந்த வாலிபர்கள் எவ்வாறு முயற்சிக்கிறார்கள்? (லூக்கா 2:49). சுவிசேஷத்தைப்பற்றி ஒரு ஆழமான புரிந்துகொள்ளுதலைப் பெற இளைஞர்களும் பிள்ளைகளும் எவ்வாறு உங்களுக்கு உதவியிருக்கிறார்கள்? லூக்கா 2:40–52 மற்றும் ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, மத்தேயு 3:24–26 (வேதாகம பிற்சேர்க்கையிலும்) இயேசுவின் பிள்ளைப்பருவத்தின் எடுத்துக்காட்டிலிருந்து வேறெதை நீங்கள் கற்றுக்கொள்ளுகிறீர்கள்?

படம்
ஆலயத்தில் இயேசு ஒரு பையனாக போதகர்களுடன்

“என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறீயீர்களா?” (லூக்கா 2:49).

ஜோசப் ஸ்மித்தின் மொழிபெயர்ப்பு என்பது என்ன?

நூற்றாண்டுகளாக வேதாகமத்திலிருந்து “எளியதும் விலையேறப்பெற்றதுமான” அநேக சத்தியங்கள் காணாமற்போனதால், ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு என்றறியப்பட்ட வேதாகமத்தின் ஒரு உணர்த்துதலான(1 நேபி 13:28; மோசே 1:41 ஐயும் பார்க்கவும்) திருத்தத்தை செய்ய ஜோசப் ஸ்மித்துக்கு தேவன் கட்டளையிட்டார். தீர்க்கதரிசியால் செய்யப்பட்ட அநேக திருத்தங்கள், பிற்காலப் பரிசுத்தவான் வேதங்களின் பிற்சேர்க்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. ஜோசப் ஸ்மித்—மத்தேயு என்றறியப்பட்ட மத்தேயு 24,ன் ஜோசப் ஸ்மித்தின் மொழிபெயர்ப்பு, விலையேறப்பெற்ற முத்துவில் காணப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு, “Joseph Smith Translation (JST)” in the Bible Dictionary and the Gospel Topics article “Bible, Inerrancy of” (topics.ChurchofJesusChrist.org) பார்க்கவும்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

லூக்கா 2.லூக்கா 2ல் விவரிக்கப்பட்டுள்ள ஒரு நபரை தேர்ந்தெடுக்க குடும்பத்தினரை அழைக்கவும், இரட்சகரோடு அந்த நபரின் தொடர்புகளைப்பற்றிய ஒரு சில வசனங்களை வாசிக்கவும், மற்றும் இயேசு கிறிஸ்துவில் அவர்களுடைய விசுவாசத்தை அதிகரிக்கிற அவர்கள் கற்றுக்கொண்ட சிலவற்றை பகிர்ந்துகொள்ளவும். “Mary’s Lullaby” அல்லது “The Nativity Song,” (Children’s Songbook, 44–45, 52–53) ஒன்று சேர்ந்து பாடவும். இரட்சகரின் பிறப்பைப்பற்றி இந்த பாடல்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

கிறிஸ்துவின் பிறப்பைப்பற்றிய உங்கள் கலந்துரையாடலை கலைப்படைப்பு எவ்வாறு மேம்படுத்தலாம் என்று சிந்தியுங்கள். (எடுத்துக்காட்டுகளுக்கு Gospel Art Book அல்லது history.ChurchofJesusChrist.org/exhibit/birth-of-Christ பார்க்கவும்.)

மத்தேயு 2:1–12.சாஸ்திரிகளின் உதாரணத்திலிருந்து இரட்சகரைத் தேடுவது மற்றும் கண்டுபிடிப்பதைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

லூக்கா 2:41–49. “பிதாவுக்கடுத்தவைகள்” என்றால் என்ன? (லூக்கா 2:49; மோசே 1:39; General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 1.2, ChurchofJesusChrist.orgபார்க்கவும்). லூக்கா2:41–49லிலுள்ள கதையிலிருந்து, சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதைப்பற்றி நாம் என்ன கற்கிறோம்? பிதாவுக்கடுத்தவற்றிலும், அவற்றை ஒரு ஜாடிக்குள் போடுவதிலும் உங்களுடைய குடும்பத்தினர் பங்கேற்க சில வழிகளை எழுதுவதை கருத்தில்கொள்ளவும். வரப்போகிற வாரத்தில், பரலோக பிதாவுக்கடுத்தவற்றைச் செய்ய வழிகளை உங்கள் குடும்பத்தினர் தேடிக்கொண்டிருக்கும்போது, ஜாடியிலிருந்து அவர்கள் தேர்ந்தெடுக்கமுடியும். உங்களுடைய அனுபவங்களை நீங்கள் பகிர்ந்துகொள்ளும் ஒரு நேரத்தைத் திட்டமிடவும்.

லூக்கா 2:52.அவருடைய வாழ்நாளில் இயேசு எவ்வாறு விருத்தியடைந்தாரென்பதைப்பற்றி லூக்கா 2:52லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளமுடியும்? “ஞானத்திலும், வளர்த்தியிலும் தேவகிருபையிலும் மனுஷர் தயவிலும்” வளர நாம் எந்த தனிப்பட்ட அல்லது குடும்ப இலக்குகளை அமைக்க முடியும்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கபட்ட பாடல்: “Stars Were Gleaming,” Children’s Songbook, 37.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

வேதப் படிப்பு உதவிகளைப் பயன்படுத்தவும். நீங்கள் வேதங்களைப் படிக்கும்போது, அடிக்குறிப்புகள், Topical Guide, Bible Dictionary, Guide to the Scriptures, மற்றும் ChurchofJesusChrist.orgபிற படிப்பு உதவிகள் போன்ற ஆதாரங்களை கூடுதல் உள்ளுணர்வு பெற பயன்படுத்தவும்.

படம்
மரியாளும், யோசேப்பும், குழந்தை இயேசுவும்

தாழ்மையான சூழ்நிலைகளில் உலகத்தின் இரட்சகர் பூமிக்கு வந்தார்.

அச்சிடவும்