புதிய ஏற்பாடு 2023
டிசம்பர் 26–ஜனுவரி 1. நமது சொந்த கற்றுக்கொள்ளுதலுக்கு நாமே பொறுப்பு


“டிசம்பர் 26–ஜனுவரி 1. நமது சொந்த கற்றுக்கொள்ளுதலுக்கு நாமே பொறுப்பு” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“டிசம்பர் 26–ஜனுவரி 1. நமது சொந்த கற்றுக்கொள்ளுதலுக்கு நாமே பொறுப்பு,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
குடும்பம் புகைப்பட தொகுப்பை பார்த்தல்

டிசம்பர் 26–ஜனுவரி 1

நமது சொந்த கற்றுக்கொள்ளுதலுக்கு நாமே பொறுப்பு

நீங்கள் கிறிஸ்துவிடத்தில் வரவும், அவரது சுவிசேஷத்தில் ஆழமாக மனமாற்றப்படவும் உதவுவதே வேதங்களின் நோக்கம். வேதங்களை நீங்கள் புரிந்துகொள்ளவும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தேவைப்படுகிற ஆவிக்குரிய பலத்தை அவற்றில் காணவும் என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் உங்களுக்கு உதவமுடியும். பின்னர், உங்கள் சபை வகுப்புகளில் உள்ளுணர்வுகளைப் பகிரவும், கிறிஸ்துவைப் பின்பற்ற உங்கள் சக பரிசுத்தவான்களின் முயற்சிகளில் அவர்களை ஊக்குவிக்கவும் நீங்கள் சந்தர்ப்பங்களைப் பெறுவீர்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

“நீங்கள் என்ன தேடுகிறீர்கள்?” யோவான் ஸ்நானனின் சீஷர்களிடத்தில் இயேசு கேட்டார் (யோவான் 1:38). நீங்கள் அதே கேள்வியை உங்களிடமே கேட்கலாம், ஏனெனில் இவ்வாண்டில் புதிய ஏற்பாட்டில் நீங்கள் காண்பது நீங்கள் தேடுவதை பெரிதும் சார்ந்திருக்கிறது. “தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்” என்பது இரட்சகரின் வாக்குத்தத்தம் (மத்தேயு 7:7). ஆகவே, நீங்கள் படிக்கும்போது உங்கள் மனதில் எழும் கேள்விகளைக் கேளுங்கள், பின்பு பதில்களை கருத்தாய் தேடுங்கள். புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களின் வல்லமையான ஆவிக்குரிய அனுபவங்களைப்பற்றி வாசிப்பீர்கள். இரட்சகரின் விசுவாசமிக்க சீஷனாக, “என்னைப் பின்பற்றி வாருங்கள்” (லூக்கா 18:22) என்ற இந்த பரிசுத்த புத்தகம் முழுவதும் காணப்படுகிற இரட்சகரின் அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போது, நீங்கள் உங்கள் சொந்த வல்லமையான ஆவிக்குரிய அனுபவங்களைப் பெற முடியும்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்பிற்கான ஆலோசனைகள்

இரட்சகரிடமிருந்து உண்மையாகவே கற்றுக்கொள்ள, “என் பின்னே வா” என்ற அவரது அழைப்பை நான் ஏற்க வேண்டும்.

சீஷத்துவத்தின் பாதையில் நாம் புதியவர்களாக இருந்தாலும், அல்லது நம் வாழ்க்கை முழுவதும் அதில் நடந்திருந்தாலும், “என் பின்னே வா” என்ற இரட்சகரின் அழைப்பு, அனைவருக்கும் பொருந்துகிறது. கட்டளைகளைக் கைக்கொள்ள முயன்றுகொண்டிருந்த ஐஸ்வர்யவானான வாலிபனுக்கு இது அவரது அழைப்பாக இருந்தது (மத்தேயு 19:16–22; லூக்கா 18:18–23 பார்க்கவும்). அந்த வாலிபன் கற்றதும், நாமனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியதும், ஒரு சீஷனாயிருப்பதென்பது பரலோக பிதாவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் நமது முழு ஆத்துமாக்களையும் கொடுப்பதாகும். நாம் பின்தங்கியிருக்கிறவற்றை அடையாளம் கண்டு, மாற்றங்கள் செய்து அவற்றை முற்றிலுமாக பின்பற்ற தேடும்போது, நாம் நமது சீஷத்துவத்தில் முன்னேறுகிறோம்.

அவர் போதித்ததை புரிந்துகொள்ள நாம் முயற்சிக்கும்போது, இரட்சகரிடமிருந்து கற்பது தொடங்குகிறது. உதாரணமாக, நீங்கள் பின்வருவனவற்றை ஆராயும்போது, தாழ்மையைப்பற்றிய உங்கள் புரிதல் எவ்வாறு ஆழமாகிறது?

  • இரட்சகரின் போதனைகள் (மத்தேயு 18:1–5; லூக்கா 18:9–14 பார்க்கவும்)

  • அவரது வாழ்க்கையிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு (யோவான் 13:1–15 பார்க்கவும்)

நீங்கள் அதிகம் கற்றுக்கொள்ள விரும்பினால், அன்பு அல்லது மன்னித்தல் போன்ற மற்றொரு சுவிசேஷ கொள்கையுடன் இந்த பயிற்சியை முயற்சி செய்யவும்.

என் சொந்த கற்றுக்கொள்ளுதலுக்கு நானே பொறுப்பு.

மூப்பர் டேவிட் எ. பெட்னார் போதித்தார்: “அர்ப்பணிப்புமிக்க சீஷர்களாக மாறுவதற்கும், முடிவுபரியந்தம் துணிவுடன் நிலைத்திருக்கவும் நாம் அறிந்துகொள்ளவும் செய்யவும் வேண்டிய ஒவ்வொன்றையும் போதிக்க அல்லது நமக்குக் கூற, சபையை ஒரு அமைப்பாக நாம் எதிர்பார்க்கக் கூடாது. மாறாக, நாம் கற்கவேண்டியதைக் கற்றுக்கொள்ளவும், நாம் எப்படி வாழவேண்டுமென நாம் அறிந்ததின்படி வாழவும், நாம் யாராய் மாறவேண்டுமென போதகர் விரும்புகிறாரோ அதுபோல மாறவும் நமக்கு தனிப்பட்ட பொறுப்பிருக்கிறது. கற்றுக்கொள்ளுதலுக்கும், ஜீவிப்பதற்கும் மற்றும் மாறுதலுக்கும் ஒரே அமைப்பாய் நமது வீடுகளிருக்கின்றன” (“Prepared to Obtain Every Needful Thing,” Liahona, May 2019, 102).

உங்கள் சொந்த கற்றுக்கொள்ளுதலுக்கு பொறுப்பேற்பது என்றால் என்ன? மூப்பர் பெட்னாரின் வாசகத்திலும் பின்வரும் வசனங்களிலும் சாத்தியமான பதில்களைத் தேடுங்கள்: யோவான் 7:17; 1தெசலோனிக்கேயர் 5:21; யாக்கோபு 1:5–6, 22; 2:17; 1 நேபி 10:17–19; 2 நேபி 4:15; ஆல்மா 32:27; மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:18; 58:26–28; 88:118. சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்வதில் அதிக ஈடுபாடாய் இருக்க நீங்கள் என்ன செய்ய உணர்த்தப்படுவதாக உணர்கிறீர்கள்?

நானே சத்தியத்தை அறிய வேண்டும்.

அவர்களது வாழ்க்கையில் என்ன நடந்தாலும் ஒருபோதும் தங்கள் விசுவாசத்தை இழக்காதவர்களை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம். இரட்சகரின் உவமையிலுள்ள ஐந்து புத்தியுள்ள கன்னிகைகளை அவர்கள் உங்களுக்கு நினைவூட்டலாம் (மத்தேயு 25:1–13 பார்க்கவும்) சத்தியத்தைப்பற்றிய அவர்களது சாட்சியங்களை பெலப்படுத்த அவர்களது கருத்தான முயற்சிகள், நீங்கள் பார்த்திராதவையாயிருக்கலாம்.

நாம் நமது சொந்த சாட்சிகளை எவ்வாறு பெற்று போஷிப்பது? பின்வரும் வசனங்களை நீங்கள் சிந்திக்கும்போது, உங்கள் எண்ணங்களை எழுதவும்: லூக்கா 11:9–13; யோவான் 5:39; 7:14–17; அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:10–12; 1 கொரிந்தியர் 2:9–11; மற்றும் ஆல்மா 5:45–46. (Gospel Topics, “Testimony,” topics.ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்.)

படம்
பாதையோரத்தில் இளம் பெண்

நாம் ஒவ்வொருவரும் நாமே ஒரு சாட்சியைப் பெற வேண்டும்.

என்னிடம் கேள்விகள் இருக்கும்போது நான் என்ன செய்ய வேண்டும்?

ஆவிக்குரிய அறிவை நீங்கள் தேடும்போது, கேள்விகள் உங்கள் மனதில் வரும். விசுவாசத்தையும் சாட்சியையும் கட்டுகிற வழிகளில் கேள்விகளுக்கு பதிலளிக்க பின்வரும் கொள்கைகள் உங்களுக்கு உதவ முடியும்:

  • தேவனிடமிருந்து புரிதலை நாடுதல். தேவன் எல்லா சத்தியங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறார், பரிசுத்த ஆவியானவர், வேதங்கள், மற்றும் அவரது தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்கள் மூலம் அவர் சத்தியத்தை வெளிப்படுத்துகிறார்.

  • விசுவாசத்தில் செயல்படுங்கள். உடனே பதில்கள் வராவிட்டால், சரியான நேரம் வரும்போது பதில்களை கர்த்தர் வெளிப்படுத்துவார் என நம்புங்கள். அந்த நேரத்தில், நீங்கள் ஏற்கனவே அறிந்த சத்தியத்தின்படி வாழுங்கள்.

  • ஒரு நித்திய பார்வையை காத்துக்கொள்ளுங்கள். உலகம் பார்க்கிற விதமாக அல்ல, கர்த்தர் அவற்றைப் பார்க்கிற விதமாக காரியங்களைப் பார்க்க முயலுங்கள். உங்கள் கேள்விகளை நமது பரலோக பிதாவின் இரட்சிப்பின் திட்டப்படி பாருங்கள்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

மத்தேயு 13:1–23. இவ்வாண்டு புதிய ஏற்பாட்டிலிருந்து கற்றுக்கொள்ள, உங்கள் குடும்பம் ஆயத்தம் செய்ய உதவ, விதைப்பவனின் உவமையை நீங்கள் வாசிக்கலாம். உங்கள் குடும்பம் வெளியில் சென்று, உவமையில் விவரிக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான நிலங்களைத் தேடி மகிழலாம். இயேசு விவரித்த “நல்ல நிலத்தைப்போல” நாம் எப்படி நம் இருதயங்களை உருவாக்க முடியும்? (மத்தேயு 13:8).

கலாத்தியர் 5:22–23; பிலிப்பியர் 4:8. “[உங்கள்] வீட்டை விசுவாசத்தின் சரணாலயமாக மாற்ற” மற்றும் “உங்கள் வீட்டை சுவிசேஷம் கற்றல் மையமாக மாற்றியமைக்க” உங்களை தலைவர் ரசல் எம். நெல்சன் அழைப்பு விடுத்துள்ளார். இக்காரியங்களைச் செய்பவர்களுக்கு அவர் வாக்களித்தார்: “உங்கள் பிள்ளைகள் இரட்சகரின் போதனைகளைக் கற்றுக்கொள்ளவும், அதன்படி வாழவும் உற்சாகமுள்ளவராயிருப்பார்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையிலும் உங்கள் வீட்டிலும் எதிரியின் செல்வாக்கு குறைந்துபோகும். உங்கள் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் வியக்கத்தக்கதாகவும் நீடித்ததாகவுமிருக்கும்” (“Becoming Exemplary Latter-day Saints,” Liahona, Nov. 2018, 113).

உங்கள் வீட்டை “விசுவாசத்தின் சரணாலயம்” மற்றும் “சுவிசேஷம் கற்றல் மையம்” ஆக்குவதைப்பற்றி குடும்ப ஆலோசனைக் கூட்டம் நடத்த புதிய ஆண்டின் தொடக்கமே சரியான நேரம். கலாத்தியர் 5:22–23 மற்றும் பிலிப்பியர் 4:8 நாம் வாசிக்கும்போது, இதை எப்படி செய்வது என்பதைப்பற்றிய என்ன ஆலோசனைகள் உங்கள் மனதுக்கு வருகின்றன? இந்த வருகிற ஆண்டு புதிய ஏற்பாட்டைப் படிக்க உங்கள் குடும்பம் தனிப்பட்ட மற்றும் குடும்ப இலக்குகளை அமைக்கலாம். நம் இலக்குகளை நமக்கு நாமே நினைவூட்டுவதற்கு நாம் என்ன செய்யலாம்?

பிள்ளைகளுக்கு கற்பிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு இந்த வாரக் குறிப்பில் என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனயளிக்கப்பட்ட பாடல்: “Teach Me to Walk in the Light,” Children’s Songbook, 177.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

கோட்பாட்டைத் தேடவும். ஒரு கோட்பாடு நித்திய மாறாத சத்தியமாகும். தலைவர் பாய்ட் கே. பாக்கர் அறிவித்ததாவது “புரிந்து கொள்ளப்பட்ட உண்மையான கோட்பாடு, மனப்பாங்குகளையும் நடத்தைகளையும் மாற்றுகிறது” (“Little Children,” Ensign, Nov. 1986, 17). நீங்களும் உங்கள் குடும்பமும் வேதங்களைப் படிக்கும்போது, அதிகமாக இரட்சகர் போல வாழ உங்களுக்கு உதவக்கூடிய சத்தியங்களைத் தேடவும்.

படம்
இயேசு கிறிஸ்து

உலகத்தின் ஒளி–ப்ரெண்ட் போருப்

அச்சிடவும்