புதிய ஏற்பாடு 2023
பெப்ருவரி 13–19. மத்தேயு 5; லூக்கா 6; “நீங்கள் பாக்கியவான்கள்”


“பெப்ருவரி 13–19. மத்தேயு 5; லூக்கா 6: ‘நீங்கள் பாக்கியவான்கள்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“பெப்ருவரி 13–19. மத்தேயு 5; லூக்கா 6,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
மலையில் இயேசு போதித்தல்

மலைப்பிரசங்கத்தை இயேசு பிரசங்கித்தல்–குஸ்டவே டோர்

பெப்ருவரி 13–19

மத்தேயு 5; லூக்கா 6

“நீங்கள் பாக்கியவான்கள்”

மத்தேயு 5மற்றும் லூக்கா 6 நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் பெறும் எண்ணங்களுக்கு கவனம் செலுத்தவும், மற்றும் அவற்றை ஒரு படிப்பு குறிப்பிதழில் அல்லது வேறு பிற விதமாக பதிவு செய்யவும். இந்த அதிகாரங்களில் சில முக்கியமான கொள்கைகளை அடையாளம் காண இந்த குறிப்பு உதவும், ஆனால் உங்கள் ஆய்வில் நீங்கள் கண்டறிந்த மற்றவைகளுக்கும் திறந்த மனதோடிருக்கவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

அவரது ஊழியத்தின் இக்கட்டத்தில், அவரது காலத்தில் ஜனங்கள் கேட்டவற்றுக்கு இயேசுவின் போதனைகள் பொருத்தமானதாயிருக்காது என்பது தெளிவானது. எளிமையுள்ளவர்கள் தேவ இராஜ்யத்தைப் பெறுவார்கள்? சாந்தகுணமுள்ளோர் பூமியை சுதந்தரிப்பார்கள்? துயரப்படுபவர்கள் பாக்கியவான்கள்? வேத பாரகரும் பரிசேயரும் அப்படிப்பட்ட காரியங்களை போதிக்கவில்லை. இருப்பினும் தேவனின் நியாயப்பிரமாணங்களை உண்மையாகவே புரிந்துகொண்டவர்கள் இந்த கோட்பாடுகள் சரியென உணர்ந்தார்கள். “கண்ணுக்குக் கண்” மற்றும் “உங்கள் சத்துருவை பகைப்பாயாக” ஆகியன குறைந்த நியாயப்பிரமாணங்கள் (மத்தேயு 5:38, 43). ஆனால் ஒருநாள் “பரலோகத்திலிருக்கிற [நமது] பிதா பூரண சற்குணராயிருப்பதுபோல, பூரண சற்குணராக” (மத்தேயு 5:48) ஆக நமக்கு உதவ வடிவமைக்கப்பட்ட உயர் நியாயப்பிரமாணத்தை போதிக்கவும், (3 நேபி 15:2–10 பார்க்கவும்) இயேசு கிறிஸ்து வந்தார்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

மத்தேயு 5:1–12; லூக்கா 6:20–26,46-49

நீடித்த மகிழ்ச்சி இயேசு கிறிஸ்து போதித்த விதமாக வாழ்வதிலிருந்து வருகிறது.

ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள், ஆனால் அதே இடங்களில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியை தேடவில்லை. சிலர் உலகப்பிரகார வல்லமையையும் பதவியையும், பிறர் செல்வத்தையும் அல்லது சரீர இச்சைகளையும் திருப்திப்படுத்துவதையும் தேடுகிறார்கள். நீடித்த மகிழ்ச்சிக்கான வழியை போதிக்கவும், ஆசீர்வதிக்கப்படுவது உண்மையாகவே என்ன என போதிக்கவும் இயேசு கிறிஸ்து வந்தார். மத்தேயு 5:1–12 மற்றும் லூக்கா 6:20–26லிருந்து நீடித்த மகிழ்ச்சி பெறுவதைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? மகிழ்ச்சியைப்பற்றிய உலகத்தின் பார்வையிலிருந்து இது எப்படி வித்தியாசமானதாயிருக்கிறது?

இயேசு கிறிஸ்துவின் சீஷனாக இருப்பதைப்பற்றி லூக்கா 6:46–49உடன் இணைந்து, இந்த வசனங்கள் உங்களுக்கு என்ன போதிக்கின்றன? இந்த வசனங்களில் விவரிக்கப்பட்ட குணங்களை விருத்தி செய்ய நீங்கள் என்ன செய்ய உணர்த்தப்படுகிறீர்கள்?

Guide to the Scriptures, “Beatitudes,” scriptures.ChurchofJesusChrist.org; “Sermon on the Mount: The Beatitudes” (video), ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

மத்தேயு 5:13

“நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்.”

உப்பு பாதுகாக்கவும், மணத்துக்காகவும், சுத்திகரிக்கவும் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரவேலருக்கு உப்பு, மதம் சார்ந்த அர்த்தமும் கொண்டிருந்தது. மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி பழங்கால மிருக பலி வழக்கத்துடன் இது தொடர்புடையது (லேவியராகமம் 2:13; எண்ணாகமம் 18:19 பார்க்கவும்). உப்பு தன் சாரத்தை இழக்கும்போது, அல்லது சக்தியற்றதாகவும் “வேறொன்றுக்கும் உதவாததாகவும்” ஆகிறது (மத்தேயு 5:13). பிற மூலப்பொருட்களுடன் இது கலக்கப்படும்போதும் அல்லது மாசடையும்போதும் இது நடக்கிறது.

நீங்கள் மத்தேயு 5:13 ஐ தியானிக்கும்போது, இதை மனதில் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவின் சீஷனாக நீங்கள் எவ்வாறு உங்கள் சாரத்தைக் காத்துக்கொள்வீர்கள்? பூமியின் உப்பாக உங்கள் பாதுகாக்கும் மற்றும் தூய்மைப்படுத்தும் வேலையை நீங்கள் எவ்வாறு நிறைவேற்றுவீர்கள்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 103:9–10ஐயும் பார்க்கவும்.

படம்
உப்பு

“நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்” (மத்தேயு 5:13).

மத்தேயு 5:17–48; லூக்கா 6:27–35

கிறிஸ்துவின் நியாயப்பிரமாணம் மோசேயின் நியாயப்பிரமாணத்துக்கு மேலானதாயிருக்கிறது.

தாங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தை எவ்வளவு சிறப்பாக காத்துக்கொண்டோம் என பெருமை பேசிய, வேதபாரகர் மற்றும் பரிசேயரைவிட மேலானதாக அவர்கள் நீதி இருக்க வேண்டும் என இயேசு சொல்ல கேட்ட சீஷர்கள் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும் (மத்தேயு 5:20 பார்க்கவும்)

மத்தேயு 5:21–48 மற்றும் லூக்கா 6:27–35 நீங்கள் வாசிக்கும்போது, (“நீங்கள் கேள்விப்பட்டிருக்கிற …”)மோசேயின் நியாயப்பிரமாணத்துக்கு தேவைப்பட்ட நடத்தைகளையும், அவர்களது நடத்தைகளை உயர்த்த இயேசு போதித்தவைகளையும் அடையாளமிடுவதை கருத்தில் கொள்ளவும். இரட்சகரின் வழி ஏன் உயர் நியாயப்பிரமாணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

உதாரணமாக, மத்தேயு 5:27–28ல் நமது எண்ணங்களுக்கு மேலான நமது பொறுப்பைப்பற்றி இயேசு என்ன போதித்தார்? உங்கள் மனதிலும் இருதயத்திலும் வருகிற எண்ணங்கள் மீது எப்படி நீங்கள் அதிக கட்டுப்பாடு பெற முடியும்? (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:45 பார்க்கவும்).

“Sermon on the Mount: The Higher Law” (video), ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

மத்தேயு 5:48

நான் உண்மையாகவே பரிபூரணனாக இருக்க வேண்டுமென பரலோக பிதா எதிர்பார்க்கிறாரா?

தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்:

பரிபூரணம் என்ற வார்த்தை கிரேக்க டிலியோஸ், வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது அதன் அர்த்தம் ‘முழுமையான.’ … வினைச்சொல்லின் முடிவில்லா வடிவம் டிலியானோ அதன் பொருள் ‘தொலை தூர முடிவை அடைய, முழுவதுமாக விருத்தியடைய, நிறைவடைய அல்லது முடிக்க’ என்பதாகும். அந்த வார்த்தை ‘தவறிலிருந்து சுதந்தரத்துக்கு’; என்பதைக் குறிப்பிடவில்லை, ஒரு ‘தொலைவிலுள்ளதை அடைவதை குறிக்கிறது.’ …

“… கர்த்தர் போதித்தார், ‘இப்போது நீங்கள் தேவபிரசன்னத்தில் தரித்திருக்க முடியாது … ஆகவே நீங்கள் பரிபூரணமடையும் வரை பொறுமையில் தொடருங்கள்’ [கோட்பாடும் உடன்படிக்கைகளும் 67:13].

“பரிபூரணத்தை நோக்கிய நமது நேர்மையான முயற்சிகள் இப்போது கடினமானதாயும் முடிவற்றதாயும் தோன்றினாலும் நாம் ஏமாற்றமடையத் தேவையில்லை. பரிபூரணம் காத்திருக்கிறது. உயிர்த்தெழுதலுக்குப் பிறகும் கர்த்தர் மூலமுமே இது முழுமையாக வர முடியும். அவரை நேசிப்பவர்களுக்காகவும் அவரது கட்டளைகளைக்குக் கீழ்ப்படிபவர்களுக்காகவும் அது காத்திருக்கிறது” (“Perfection Pending,” Ensign, Nov. 1995, 86, 88).

2 பேதுரு 1:3–11; மரோனி 10:32–33; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:69; Jeffrey R. Holland, “Be Ye Therefore Perfect—Eventually,” Liahona, Nov. 2017, 40–42 ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

மத்தேயு 5:1–9.மத்தேயு 5:1–9ல் போதிக்கப்பட்டுள்ள எந்த கொள்கைகள் உங்கள் வீடு மகிழ்ச்சியான இடமாக இருக்க உதவ முடியும்? உங்கள் குடும்பத்திற்கு குறிப்பாக முக்கியமான ஒன்று அல்லது இரண்டை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக நாம் சமாதானம் பண்ணுபவர்களாக இருக்க உதவக்கூடிய எந்த போதனைகளை நாம் காண்கிறோம்? (மத்தேயு 5:21–25, 38–44 பார்க்கவும்). நாம் என்ன இலக்குகளை ஏற்படுத்த முடியும்? நீங்கள் எப்படி பின்தொடர்வீர்கள்?

மத்தேயு 5:13.உப்பு சேர்க்கப்பட்ட சில உணவுகளையும், அதே உணவை உப்பு இல்லாமலும் உண்ணுங்கள். என்ன வித்தியாசத்தை நாம் கவனிக்கிறோம்? “பூமிக்கு உப்பு” என்பதன் அர்த்தம் என்ன? இதை நாம் எவ்வாறு செய்வது?

மத்தேயு 5:14–16.“உலகத்தின் ஒளியாயிருப்பது” என்றால் என்னவென உங்கள் குடும்பத்தினர் புரிந்துகொள்ள உதவ, உங்கள் வீட்டிலும், அக்கம்பக்கத்திலும், உலகத்திலும் சில ஒளியின் ஆதாரங்களை நீங்கள் ஆராயலாம். நீங்கள் ஒரு ஒளியை மறைக்கும்போது, என்ன நடக்கிறது என காட்ட இது உதவிகரமாக இருக்கும். “நீங்கள் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறீர்கள்” என இயேசு சொன்ன அர்த்தம் யாது? (மத்தேயு 5:14). நமது குடும்பத்துக்கு யார் ஒளியாக இருந்திருக்கிறார்கள்? நாம் எவ்விதம் பிறருக்கு ஒளியாக இருக்க முடியும்? (3 நேபி18:16, 24–25 பார்க்கவும்).

மத்தேயு 5:43–45.இந்த வசனங்களில் உங்கள் குடும்பம் இரட்சகரின் வார்த்தைகளைப் படிக்கும்போது, குறிப்பாக, நீங்கள் நேசிக்க, ஆசீர்வதிக்க, ஜெபிக்க முடியுமென நீங்கள் உணருகிறவர்களைப்பற்றி நீங்கள் பேசலாம். அவர்கள் மீது நமது அன்பை நாம் எப்படி அதிகரிக்கலாம்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Shine On,” Children’s Songbook, 144.

நமது கற்பித்தலை மேம்படுத்துதல்

கவனிப்பவராயிருங்கள். “உங்கள் [பிள்ளைகளின்] வாழ்க்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என நீங்கள் கவனம் செலுத்தும்போது, நீங்கள் மிகச் சிறந்த போதிக்கும் சந்தர்ப்பங்களைப் பெறுவீர்கள். … [அவர்கள்] செய்யும் விமரிசனங்கள் அல்லது அவர்கள் கேட்கும் கேள்விகள் கற்பிக்கும் தருணங்களுக்கும் வழிவகுக்கும் ” Teaching in the Savior’s Way, 16).

படம்
மெழுகுவர்த்தி

“நீங்கள் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறீர்கள்” (மத்தேயு 5:14).

அச்சிடவும்