புதிய ஏற்பாடு 2023
பெப்ருவரி 27–மார்ச் 5. மத்தேயு 8; மாற்கு 2–4; லூக்கா 7: “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது”


“பெப்ருவரி 27–மார்ச் 5. மத்தேயு 8; மாற்கு 2–4; லூக்கா 7: ‘உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“பெப்ருவரி 27–மார்ச் 5. மத்தேயு 8; மாற்கு 2–4; லூக்கா 7,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

இயேசு படுக்கையிலிருந்து மனிதனை எழுப்புதல்

பெப்ருவரி 28–மார்ச் 5

மத்தேயு 8; மாற்கு 2–4; லூக்கா 7

“உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது”

வேதங்களைப் படிப்பதில் அவசரப்படாமல் கவனமாக இருங்கள். ஒவ்வொரு வசனத்தையும் வாசிக்க உங்களுக்கு நேரமில்லை என்றாலும், ஜெபத்துடன் சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள். சிந்திக்கும் இந்த தருணங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட வெளிப்பாட்டிற்கு வழிவகுக்கும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

புதிய ஏற்பாட்டில் உள்ள தெளிவான செய்திகளில் ஒன்று இயேசு கிறிஸ்து ஒரு குணப்படுத்துபவர். இரட்சகர் நோயுற்றவர்களையும் துன்பப்பட்டவர்களையும் குணப்படுத்துவதைப்பற்றிய விவரங்கள்—காய்ச்சல் உள்ள ஒரு பெண் முதல் இறந்த விதவையின் மகன் வரை. சரீர குணப்படுத்தலுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? இந்த அற்புதங்களிலிருந்து நமக்கு என்ன செய்திகள் இருக்க முடியும்? நமது சரீர வேதனைகள் மற்றும் பூரணமின்மை உள்ளிட்ட எல்லாவற்றின் மீதும் வல்லமையுடைய, இயேசு கிறிஸ்து தேவ குமாரன் என்பதே நிச்சயமாக ஒரு தெளிவான செய்தி. ஆனால் சந்தேகமிக்க ஆயக்காரர்களுக்கு அவரது வார்த்தையில் மற்றொரு அர்த்தம் காணப்படுகிறது: “பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு வல்லமை உண்டென்பதை நீங்கள் அறியும்பொருட்டு” (மாற்கு 2:10). ஆகவே ஒரு குருடர் அல்லது குணமாக்கப்படுகிற ஒரு குஷ்டரோகியைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் ஆவிக்குரிய மற்றும் சரீர குணமாக்குதலைப்பற்றி நினைக்கலாம், இரட்சகரிடமிருந்து நீங்கள் பெறும்படிக்கும் “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என உங்களிடம் அவர் சொல்வதை கேட்கும்படிக்கும் (லூக்கா 7:50).

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

மத்தேயு 8; மாற்கு 2–3; லூக்கா 7

ஊனங்களையும் பிணிகளையும் இரட்சகர் குணமாக்க முடியும்.

இரட்சகரால் செய்யப்பட்ட அற்புதமான குணமாக்குதல்களின் தருணங்களை இந்த சில அதிகாரங்கள் பதிவு செய்கின்றன. இந்த குணமாக்குதல்களைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, உங்களுக்கு சாத்தியமான செய்திகளைத் தேடவும். நீங்கள் உங்களையே கேட்கலாம்: இயேசு கிறிஸ்து மீதுள்ள விசுவாசத்தைப்பற்றி இந்த விவரம் என்ன போதிக்கிறது? இரட்சகரைப்பற்றி இந்த விவரம் என்ன போதிக்கிறது? இந்த அற்புதத்திலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என தேவன் விரும்புகிறார்? இதோ சில உதாரணங்கள், ஆனால் மிக அதிகம் உள்ளன:

David A. Bednar, “Accepting the Lord’s Will and Timing,” Liahona, Aug. 2016, 17–23; Neil L. Andersen, “Wounded,” Liahona, Nov. 2018, 83–86 ஐயும் பார்க்கவும்.

மத்தேயு 2:15–17; லூக்கா 7:36–50

இயேசு கிறிஸ்து பாவிகளை கண்டிக்க அல்ல அவர்களை குணப்படுத்த வந்தார்.

வேதபாரகர் மற்றும் பரிசேயர்களுடனான இயேசுவின் தொடர்புகளைப்பற்றி இந்த வசனங்களில் நீங்கள் வாசிக்கும்போது, இந்த விவரங்களில் உங்களைப் பார்க்கிறீர்களா என்று நீங்கள் சிந்திக்கலாம். உதாரணமாக, உங்கள் எண்ணங்களும் செயல்களும் எப்போதுமே பரிசேயனான சீமோனின் சிந்தனையைப் போல இருக்கிறதா? இயேசு பாவிகளைப் பார்த்த விதத்திற்கும் சீமோன் போன்ற பரிசேயர்கள் அவர்களைப் பார்த்த விதத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எப்படி விவரிப்பீர்கள்? பாவத்தால் பாரப்பட்டவர்கள் இரட்சகருடன் இருக்கும்போது எப்படி உணருவார்கள் என்று சிந்தியுங்கள். அவர்கள் உங்களுடன் இருக்கும்போது அவர்கள் எப்படி உணருகிறார்கள்?

லூக்கா 7:36–50ல் விவரிக்கப்பட்டுள்ள பெண்ணைப் போல நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் சிந்திக்கலாம். ஸ்திரீயினடத்தில் இரட்சகர் காட்டிய மென்மையையும் இரக்கத்தையும் நீங்கள் எப்போது அனுபவத்திரிக்கிறீர்கள்? விசுவாசம், அன்பு மற்றும் மனத்தாழ்மை ஆகியவற்றின் அவளுடைய உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

யோவான் 3:17; லூக்கா 9:51–56; Dieter F. Uchtdorf, “The Gift of Grace,” Liahona, May 2015, 107–10ஐயும் பார்க்கவும்.

மத்தேயு 8:18–22; மாற்கு 3:31–35

இயேசு கிறிஸ்துவின் சீஷனாக இருப்பது என்பது என் வாழ்க்கையில் அவரை முதலில் வைப்பதாகும்.

இந்த வசனங்களில் சில சமயங்களில் நாம் மதிக்கிற பிற காரியங்களை நாம் தியாகம் செய்யவேண்டுமானாலும், நமது வாழ்க்கையில் அவரை முதன்மையாக வைப்பது தேவைப்படுகிறது என இயேசு தன் சீஷர்களுக்கு போதித்தார். இந்த பாகங்களை நீங்கள் வாசிக்கும்போது, உங்கள் சொந்த சீஷத்துவத்தைப்பற்றி சிந்தியுங்கள். இரட்சகரை முதன்மையாக வைக்க ஏன் சீஷர்கள் வாஞ்சையாயிருக்க வேண்டும்? இயேசுவை முதன்மையாக வைக்க நீங்கள் எதை விட வேண்டியிருக்கும்? (லூக்கா 9:57–62 ஐயும் பார்க்கவும்).

மத்தேயு 8:23–27; மாற்கு 4:35–41

வாழ்க்கையின் புயல்களுக்கு மத்தியில், சமாதானம் கொடுக்க இயேசு கிறிஸ்து வல்லமை பெற்றிருக்கிறார்.

தண்ணீர் அலைகள் படகை நிறைத்தபோது, “போதகரே நாங்கள் மடிந்து போகிறது உமக்குக் கவலையில்லையா” எனக் கேள்வி கேட்டபோது—கடலில் புயலில் இயேசுவின் சீஷர்கள் செய்த விதமாக நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?

மாற்கு 4:35–41ல், நான்கு கேள்விகளை நீங்கள் காண்பீர்கள். இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்துடன் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதைப்பற்றி இது என்ன போதிக்கிறது என்பதைப்பற்றி ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு சிந்திக்கவும். உங்கள் வாழ்க்கையின் புயல்களுக்கு, இரட்சகர் எவ்வாறு சமாதானம் கொண்டு வருகிறார்?

Lisa L. Harkness, “Peace, Be Still,” Liahona, Nov. 2020, 80–82ஐயும் பார்க்கவும்.

இயேசு படகிலிருந்து புயலை அமைதிப்படுத்துதல்

பயத்திலிருந்து விசுவாசத்திற்கு – ஹோவார்ட் லையன்

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

மத்தேயு 8; மாற்கு 2–4; லூக்கா 7.இந்த அதிகாரங்களில் விவரிக்கப்பட்டுள்ள அற்புதங்களின் பட்டியலை உருவாக்குவதைக் கருத்தில் கொள்ளவும். அவற்றில் சிலவற்றைக் கண்டுபிடிக்க அல்லது வரைய முயற்சிக்கவும் (Gospel Art Book or ChurchofJesusChrist.org பார்க்கவும்). ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் அற்புதங்களில் ஒன்றைப்பற்றி சொல்ல படங்களைப் பயன்படுத்தலாம் மற்றும் அதிலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டதைப் பகிர்ந்து கொள்ளலாம். நமது நாட்களில் நீங்கள் பார்த்த அல்லது வாசித்த அற்புதங்களின் சில எடுத்துக்காட்டுகளை நீங்கள் பகிர்ந்துகொள்ளலாம்.

“Widow of Nain” and “Calming the Tempest” (ChurchofJesusChrist.org) காணொலிகளையும் பார்க்கவும்.

2:22
2:17

மத்தேயு 8:5–13; லூக்கா 7:1–10இயேசுவைக் கவர்ந்த நூற்றுக்கதிபதியின் விசுவாசம்பற்றிய எது இயேசுவைக் கவர்ந்தது? நாம் எவ்வாறு இயேசு கிறிஸ்துவுக்கு அதுபோன்ற விசுவாசத்தைக் காட்ட முடியும்?

மாற்கு 2:1–12.அதிகாரம் 23: The Man Who Could Not Walk” (in New Testament Stories, 57–58, or the corresponding video on ChurchofJesusChrist.org), மாற்கு 2:1–12ஐ கலந்துரையாட உங்கள் குடும்பத்துக்கு உதவலாம். (“Jesus Forgives Sins and Heals a Man Stricken with Palsy” ChurchofJesusChrist.orgல் காணொலியையும் பார்க்கவும்.) நடக்க முடியாத மனிதனின் நண்பர்களைப் போல நாம் எப்படி இருக்க முடியும்? அப்படிப்பட்ட நண்பர்களாக நமக்கு யார் இருந்திருக்கிறார்கள்?

NaN:NaN
2:57

மாற்கு 4:35–41.குடும்ப அங்கத்தினர்கள் பயப்படும்போது, இந்த விவரங்கள் அவர்களுக்கு உதவ முடியுமோ? ஒருவேளை அவர்கள் வசனம் 39 வாசித்து, சமாதானமாக உணர இரட்சகர் உதவிய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளலாம்.

மாற்கு 4:35–38, யாராவது வாசிக்கும்போது புயல் நிறைந்த கடலில் படகில் இருப்பதாகக் காட்டிக்கொண்டு குழந்தைகள் மகிழலாம். பிறகு, 39 வது வசனத்தை யாராவது வாசிக்கும்போது, அவர்கள் அமைதியான கடலில் படகில் இருப்பது போல் நடிக்கலாம். Master, the Tempest Is Raging” (Hymns, no. 105) போன்ற இரட்சகரில் அமைதியைக் கண்டறிவதைப்பற்றிய ஒரு பாடலை நீங்கள் ஒன்றாகப் பாடலாம். பாடலில் என்ன சொற்றொடர்கள் இயேசு வழங்கும் அமைதியைப்பற்றி நமக்குக் கற்பிக்கின்றன?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Master, the Tempest Is Raging,” Hymns, no. 105.

நமது கற்பித்தலை மேம்படுத்துதல்

உதவவும் அணுகவும் முன்வாருங்கள் சில சிறந்த கற்பிக்கும் தருணங்கள் குடும்ப அங்கத்தினர்களின் இருதயங்களிலுள்ள கேள்விகள் மற்றும் அக்கறைகளிலிருந்து ஆரம்பிக்கின்றன. நீங்கள் கேட்க ஆர்வமாக உள்ள உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களின் மூலம் குடும்ப அங்கத்தினர்களுக்கு தெரியப்படுத்துங்கள். (Teaching in the Savior’s Way16 பார்க்கவும்.)

படுக்கையில் இருந்த, சுகமில்லாத, கூரை வழியாக இறக்கப்பட்ட மனிதனுடன் இயேசு

கிறிஸ்துவும் முடக்குவாதமுள்ள மனிதனும் – ஜெ. கிர்க் ரிச்சர்ட்ஸ்