புதிய ஏற்பாடு 2023
மார்ச் 13–19. மத்தேயு 11–12; லூக்கா 11: “நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”


“மார்ச் 13–19. மத்தேயு 11–12; லூக்கா 11: ‘நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“மார்ச் 13–19. மத்தேயு 11–12; லூக்கா 11,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

இயேசு மேகங்களிடையே நின்றிருத்தல்

பயப்படாதிருப்பாயாக —மைக்கல் மால்ம்

மார்ச் 13–19

மத்தேயு 11–12; லூக்கா 11

“நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”

தலைவர் டாலின் எச். ஓக்ஸ் போதித்தார்: “கடந்த காலத்தின் வெளிப்பாடுகளான வேதங்கள், நிகழ்கால வெளிப்பாடுகளுக்கு வெளிப்படையாக இல்லாமல் புரிந்து கொள்ள முடியாது. … வேதங்களைப் படிப்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெளிப்பாடுகளைப் பெற உதவுகிறது” (“Scripture Reading and Revelation,” Ensign, Jan. 1995, 7).

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

பல வழிகளில், பரிசேயர்களும் வேதபாரகர்களும் யேகோவாவை வணங்குவது சுமையாக ஆக்கினர். நித்திய சத்தியங்கள் மீது கடுமையான விதிகளை அவர்கள் அடிக்கடி வலியுறுத்தினர். ஓய்வெடுக்கும் நாளாகக் கருதப்பட்ட ஓய்வுநாளைப்பற்றிய விதிகளே பெரும் சுமையாக இருந்தன.

பின்னர், யேகோவாவே தம் மக்களிடையே வந்தார். மதத்தின் உண்மையான நோக்கம் சுமைகளை உருவாக்குவது அல்ல, ஆனால் அவற்றை விடுவிப்பது என்று அவர் அவர்களுக்குப் போதித்தார். தேவன் நமக்கு கட்டளைகளைக் கொடுக்கிறார், ஓய்வுநாளைக் கனம்பண்ணுவது உட்பட, நம்மை ஒடுக்குவதற்கு அல்ல, நம்மை ஆசீர்வதிக்கவே அவர் போதித்தார். ஆமாம், தேவனிடத்துக்குச் செல்லும் பாதை இடுக்கமான மற்றும் குறுகலானது, ஆனால் நாம் தனியாக நடக்க வேண்டியதில்லை என்று கர்த்தர் அறிவிக்க வந்தார். “என்னிடத்தில் வாருங்கள்,” அவர் கெஞ்சினார். எக்காரணம் கொண்டும் “வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களாக” உணரும் அனைவருக்கும் அவரது அழைப்பு, அவருக்கு அருகில் நிற்கவும், நம்மை அவரிடம் பிணைத்துக்கொள்ளவும், நம் சுமைகளை அவர் பகிர்ந்து கொள்ளவும்தான். அவருடைய வாக்குறுதி “உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” தனியாகத் தொடர முயற்சிப்பது அல்லது உலகப்பிரகார தீர்வுகளை சார்ந்திருப்பது, போன்ற மாற்றுகளுடன் ஒப்பிடும்போது, “அவருடைய நுகம் மெதுவாயும், [அவரது] சுமை இலகுவாயும் இருக்கிறது.” (மத்தேயு 11:28–30.)

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

மத்தேயு 11:28–30

இயேசு கிறிஸ்துவை நான் சார்ந்திருக்கும்போது, அவர் எனக்கு இளைப்பாறுதல் கொடுப்பார்.

நாம் அனைவரும் பாரங்களைச் சுமக்கிறோம், அவைகளில் சில நமது சொந்த பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் விளைகிறவை, சில மற்றவர்களின் தேர்ந்தெடுப்புகளினால் ஏற்படுகிறவை, சில யாருடைய தவறினாலுமல்ல ஆனால் பூமியின் வாழ்க்கையின் பகுதியாயிருக்கின்றன. நமது போராட்டங்களுக்கான காரணங்கள் எதுவாயிருந்தாலும், நமது பாரங்களைச் சுமக்கவும் நிவாரணத்தைக் காணவும் அவர் நமக்குதவும்படியாக அவரண்டைவர இயேசு நம்மிடம் கெஞ்சுகிறார் (மோசியா 24ஐயும் பார்க்கவும்). “பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்வதும் கைக்கொள்ளுவதும் இயேசு கிறிஸ்துவுடன், நம்மை இணைக்கிறது” என மூப்பர் டேவிட் எ. பெட்னார் போதித்தார் (“Bear Up Their Burdens with Ease,” Liahona May 2014, 88). இந்த வசனங்களிலுள்ள இரட்சகரின் வார்த்தைகளை சிறப்பாகப் புரிந்துகொள்ள, இதை மனதில் வைத்து பின்வருபவன போன்ற கேள்விகளை சிந்திக்கவும்: “இரட்சகரிடத்திலும் இரட்சகருடனும் என்னுடைய உடன்படிக்கைகள் எவ்வாறு பிணைக்கும்?” கிறிஸ்துவிடத்தில் வர நான் என்ன செய்யவேண்டும்? என்ன அர்த்தத்தில் இரட்சகரின் நுகம் இலகுவாயிருக்கும், அவருடைய சுமை லேசாயிருக்கும்?”

நீங்கள் படிக்கும்போது என்ன வேறு பிற கேள்விகள் உங்கள் மனதில் வருகிறது? அவைகளை பதிவுசெய்து, இந்த வாரத்தில் வேதங்களில் பதில்களையும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையும் தேடவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூப்பர் டேவிட் எ. பெட்னாரின் செய்தியில் உங்களுடைய சில கேள்விகளுக்கு நீங்கள் பதில்களைக் காணலாம்.

John A. McCune, “Come unto Christ—Living as Latter-day Saints,” Liahona, May 2020, 36–38; Lawrence E. Corbridge, “The Way,” Liahona, Nov. 2008, 34–36 ஐயும் பார்க்கவும்.

கோதுமை வயல் வழியாக நடந்து செல்லும் சீடர்களைப் பார்க்கும் மனிதர்கள்

சீஷர்கள் ஓய்வுநாளில் கோதுமை சாப்பிடுதல்–ஜேம்ஸ் டிஸ்ஸோ

மத்தேயு 12:1–13

“ஓய்வுநாட்களில் சிறப்பாகச் செய்யுங்கள்.”

பரிசேயர்களின் போதனைகள் இரட்சகரிடமிருந்து பல வழிகளில் வேறுபடுகின்றன, ஆனால் குறிப்பாக ஓய்வுநாளை எவ்வாறு ஆசரிக்க வேண்டும் என்பதில். நீங்கள் மத்தேயு 12:1–13, வாசிக்கும்போது, ஓய்வுநாளைப்பற்றிய உங்கள் அணுகுமுறைகளும் செயல்களும் இரட்சகரின் போதனைகளுடன் எவ்வளவு ஒத்துப்போகின்றன என்பதை நீங்கள் கருத்தில் கொள்ளலாம். இதைச் செய்ய நீங்கள் இதுபோன்ற கேள்விகளைச் சிந்திக்கலாம்.

  • “பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்” (வசனம் 7; ஓசியா 6:6 பார்க்கவும்).

  • “மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்” (வசனம் 8).

  • “ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயந்தான்” (வசனம் 12).

இந்த போதனைகள் நீங்கள் ஓய்வுநாளை அணுகும் விதத்தை எவ்வாறு பாதிக்கலாம்?

மாற்கு 2:233:5; Gospel Topics, “Sabbath Day,” topics.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

மத்தேயு 12:34–37; லூக்கா 11:33–44

என் வார்த்தைகள் மற்றும் செயல்கள் என் இருதயத்தில் இருப்பதை பிரதிபலிக்கின்றன.

பரிசேயர்களைப்பற்றிய இரட்சகரின் முக்கிய விமர்சனங்களில் ஒன்று அவர்கள் நீதிமான்களாக தோன்ற முயன்றனர் ஆனால் அவர்களின் நோக்கங்கள் தூய்மையானவை அல்ல. மத்தேயு 12:34–37 மற்றும் லூக்கா 11:33–44ல் உள்ள பரிசேயர்களுக்கு இரட்சகரின் எச்சரிக்கைகளை நீங்கள் படிக்கும்போது, நமது இருதயங்களுக்கும் செயல்களுக்கும் உள்ள தொடர்பைப்பற்றி சிந்தியுங்கள். “இருதயமாகிய நல்ல பொக்கிஷம்” என்ற சொற்றொடர் உங்களுக்கு என்ன அர்த்தம் கொடுக்கிறது? (மத்தேயு 12:35). நம் வார்த்தைகள் நம்மை எப்படி நியாயப்படுத்துகின்றன அல்லது கண்டிக்கின்றன? (மத்தேயு 12:37 பார்க்கவும்). உங்கள் கண் “தெளிவாயிருந்தால்” என்றால் என்ன அர்த்தம்? (லூக்கா 11:34). இரட்கரின் வல்லமையால் “வெளிச்சமாக” நீங்கள் எப்படி ஆக முடியும் என சிந்தியுங்கள் (லூக்கா 11:36).

ஆல்மா 12:12–14; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:67–68 ஐயும் பார்க்கவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

மத்தேயு 11:28–30.முதலில் அவர்களாகவும் பின்னர் உதவியுடன் கனத்த ஏதோ ஒன்றை இழுக்க முயற்சித்தலில் அவர்கள் முறை வைப்பதால் இந்த வசனங்களில் இரட்சகரின் போதனைகளைக் காண உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் உதவலாம். நாம் சுமக்கும் சில பாரங்கள் எவை? கிறிஸ்துவினுடைய நுகத்தை நம்மீதே எடுத்துக்கொள்வதென்றால் அர்த்தமென்ன? ஒரு நுகம் என்றால் என்னவென விளக்க இந்த குறிப்புடன் இணைந்திருக்கிற படம் உங்களுக்கு உதவமுடியும்.

மத்தேயு 12:10–13.ஓய்வுநாளில் இயேசு ஒரு மனிதனை குணப்படுத்துவதைப்பற்றி நீங்கள் படிக்கும்போது, இரட்சகரால் நாம் எவ்வாறு “சொஸ்தமாகலாம்” என்று உங்கள் குடும்பத்தினர் பேசலாம். ஓய்வுநாள் நமக்கு எவ்விதம் குணப்படுத்தும் நாளாக இருக்க முடியும்?

இந்த வசனங்களில் இரட்சகரின் உதாரணத்தால் ஈர்க்கப்பட்டு, உங்கள் குடும்பம் நீங்கள் “ஓய்வுநாளில் நன்மை செய்யும்” வழிகளின் பட்டியலை உருவாக்கலாம். (வசனம் 12). மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்புகளைச் சேர்ப்பதை உறுதி செய்யவும். உங்கள் பட்டியலை வைத்து எதிர்கால ஞாயிற்றுக்கிழமைகளில் அதைப் பார்ப்பது உதவியாக இருக்கும்.

லூக்கா 11:33–36. “வெளிச்சமாயிருக்கும்” என்றால் என்ன என்பதை உங்கள் குடும்பத்திற்கு எப்படி கற்பிக்கலாம் என்று சிந்தியுங்கள் (வசனங்கள் 34, 36). ஒரு பொருள்சார் பாடம் உதவுமா? இரட்சகரின் ஒளியை நம் வாழ்விலும், நமது வீட்டிலும், உலகிலும் கொண்டு வருவதற்கான வழிகளை நீங்கள் கலந்துரையாடலாம். ஆலோசனைகளுக்கு, “The Light That Shineth in Darkness,” ChurchofJesusChrist.org காணொலி பார்க்கவும்.

2:19

லூக்கா 11:37–44. ஒருவேளை ஒன்றாக பாத்திரங்களை கழுவும் போது உங்கள் குடும்பத்தினர் இந்த வசனங்களைப்பற்றி கலந்துரையாடலாம். கிண்ணங்கள் மற்றும் கோப்பைகள் போன்றவற்றின் வெளிப்புறங்களை மட்டும் கழுவுவது ஏன் மோசமான யோசனை என்பதைப்பற்றி நீங்கள் பேசலாம். நமது வெளிப்புற செயல்களில் மட்டுமல்ல, நம் உள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளிலும் நீதியாக இருக்க வேண்டியதன் அவசியத்துடன் இதை நீங்கள் தொடர்புபடுத்தலாம்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “How Gentle God’s Commands,” Hymns, no. 125.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

சீராக இருங்கள். நீங்கள் எதிர்பார்த்ததை விட வேதத்தை படிப்பது மிகவும் கடினமாக அல்லது குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் நாட்கள் உங்களுக்கு இருக்கலாம். விட்டு விடாதீர்கள். மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் போதித்தார், “சிறிய விஷயங்களாகத் தோன்றுகிறவைகளைச் செய்வதில் நமது நிலைத்தன்மை குறிப்பிடத்தக்க ஆவிக்குரிய முடிவுகளுக்கு வழிவகுக்கும்” (“More Diligent and Concerned at Home,” Liahona, Nov. 2009, 20).

நுகத்தால் பிணைக்கப்பட்ட இரண்டு காளைகள்

“நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியாயுமிருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் (மத்தேயு 11:29). புகைப்படம் © iStockphoto.com/wbritten