புதிய ஏற்பாடு 2023
மார்ச் 20–26. மத்தேயு 13; லூக்கா 8; 13: “கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்”


“மார்ச் 20–26. மத்தேயு 13; லூக்கா 8; 13: ‘கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“மார்ச் 20–26. மத்தேயு 13; லூக்கா 8; 13,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023

படம்
அறுவடைக்கு ஆயத்தமாயிருக்கிற கோதுமை

மார்ச் 20–26

மத்தேயு 13; லூக்கா 8; 13

“கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்”

நீங்கள் மத்தேயு 13 மற்றும் லூக்கா 8; 13, வாசிக்கும்போது, இந்த உவமைகளில் இரட்சகரின் போதனைகளை “கேட்கவும்” பாராட்டவும், நீங்கள் எவ்விதம் உங்களை ஆயத்தப்படுத்துவீர்கள் என்பதைப்பற்றி சிந்திக்கவும். இந்த போதனைகளை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்த நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

இரட்சகரின் மிகவும் நினைவுகூரத்தக்க போதனைகள் உவமைகள் என்றழைக்கப்பட்ட எளிய கதைகள் வடிவத்தில் இருந்தன. இவை சாதாரண பொருட்கள் அல்லது நிகழ்ச்சிகளைப்பற்றிய ரசிக்கத்தக்க கதைகளை விட உயர்வானவை. ஆவிக்குரிய பிரகாரமாக ஆயத்தப்பட்டவர்களுக்காக, தேவ இராஜ்யத்தைப்பற்றிய ஆழமான சத்தியங்களைக் கொண்டுள்ளன. புதிய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் உவமைகளில் ஒன்று, (மத்தேயு 13:3–23 பார்க்கவும்) தேவ வார்த்தையைப் பெற நமது ஆயத்தத்தை ஆராய நம்மை அழைக்கிறது. ஏனெனில் பெறுகிறவன் எவனோ அவனுக்கு கொடுக்கப்படும், அவன் ஏராளமாய்ப் பெறுவான் என இயேசு அறிவித்தார் (ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, மத்தேயு 13:10 [மத்தேயு 13:12ல், அடிக்குறிப்பு a]). ஆகவே இரட்சகரின் உவமைகளை, அல்லது அவரது போதனைகள் எதையாவது நீங்கள் படிக்க ஆயத்தப்படும்போது, தாராளமாக நம்மையும் நமது குடும்பங்களையும் ஆசீர்வதிக்க வளர்கிற, பூக்கிற, தழைக்கிற மற்றும் கனிகொடுக்கிற, நல்ல நிலத்தை தேவ வார்த்தைக்கு நாம் கொடுக்கிறோமா என நமது இருதயங்களை ஆராய்ந்து, தீர்மானித்து தொடங்க நல்ல இடம் (மத்தேயு 13:8).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

மத்தேயு 13:3–23; லூக்கா 8:4–15 13:6–9

தேவ வார்த்தையைப் பெற என் இருதயம் ஆயத்தப்படுத்தப்பட வேண்டும்.

சில சமயங்களில் நமது இருதயங்கள் சத்தியங்களை ஏற்கிறபோது, மற்ற நேரங்களில் ஏன் அதை எதிர்க்க தூண்டப்படுகிறது? விதைப்பவனின் உவமையை வாசிப்பது, கர்த்தரிடமிருந்து நீங்கள் எவ்வாறு சத்தியத்தை நன்கு பெறுகிறீர்கள் என்பதைப்பற்றி சிந்திக்க நல்ல சந்தர்ப்பம் கொடுக்கும். வசனங்கள் 18–23ல் கொடுக்கப்பட்டுள்ள வியாக்கியானங்களுடன், மத்தேயு 13ன் 3–8 வசனங்களை இணைப்பது உதவிகரமாக இருக்கும். உங்களில் “நல்ல நிலத்தை” பண்படுத்த நீங்கள் என்ன செய்ய முடியும்? தேவ வார்த்தைக்கு உண்மையாகவே செவிகொடுத்து, பின்பற்றுவதிலிருந்து உங்களைத் தடுக்கிற “முட்கள்” எவையாக இருக்கலாம்? இந்த மனநிலையை நீங்கள் எப்படி மேற்கொள்ள முடியும்?

இந்த உவமையைப்பற்றிய உங்கள் படிப்பு லூக்கா 13:6–9லுள்ள உவமையை நீங்கள் எவ்வாறு வாசிக்கிறீர்கள் என்பதைப் பாதிக்கலாம். கர்த்தர் நம்மிடம் தேடும் “கனி” எது? நாம் கனி கொடுக்கும்படிக்கு, நமது நிலத்தை எப்படி பண்படுத்துவோம்.

மோசியா 2:9; ஆல்மா 12:10–11; 32:28–43; Dallin H. Oaks, “The Parable of the Sower,” Liahona, May 2015, 32–35 ஐயும் பார்க்கவும்.

மத்தேயு 13:24–35, 44–52; லூக்கா 13:18–21

இயேசுவின் உவமைகள் அவரது சபையின் வளர்ச்சி மற்றும் இலக்கை புரிந்து கொள்ள எனக்கு உதவுகின்றன.

மத்தேயு 13லுள்ள உவமைகள் பிற்காலத்தில் சபையின் வளர்ச்சியையும் இலக்கையும் விவரிக்கிறது என தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் போதித்தார். Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 293–303, கர்த்தருடைய சபையைப்பற்றி பின்வரும் உவமைகள் உங்களுக்கு என்ன கற்பிக்கின்றன என்பதை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, தீர்க்கதரிசியின் வார்த்தைகளை நீங்கள் மறுபரிசீலனை செய்யலாம்:

  • கோதுமையும் களைகளும் (13:24–30, 36–43)

  • கடுகு விதை (13:31–32)

  • புளித்த மாவு (13:33)

  • மறைக்கப்பட்ட பொக்கிஷமும் விலையேறப்பெற்ற முத்தும் (13:44–46)

  • வலை (13:47–50)

  • வீட்டெஜமான் (13:52)

இந்த உவமைகளைப்பற்றி சிந்தித்த பிறகு, கிறிஸ்துவின் பிற்கால சபையின் பணியில் முழுமையாக பங்கேற்க என்ன செய்ய வேண்டுமென உணர்த்தப்படுகிறீர்கள்?

Guide to the Scriptures, “Kingdom of God or Kingdom of Heaven,” “Parable,” scriptures.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

படம்
முத்து

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் ஒரு “விலையேறப்பெற்ற முத்து” (மத்தேயு 13:46).

மத்தேயு 13:24–30, 36–43

துன்மார்க்கர் மத்தியில் உலகத்தின் இறுதிபரியந்தம் நீதிமான்கள் வளர வேண்டும்.

இதன் படத்தை வரைந்து, மத்தேயு 13:36–43 மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 86:1–7லுள்ள வியாக்கியானங்களுடன் குறிப்பிடுவது, இந்த உவமையை ஆராயும் ஒரு வழி. களை என்பது “அது வளரும்வரை கோதுமை போலவே தோற்றமளிக்கிற விஷசெடி” ஆகும் (Bible Dictionary, “Tares”). உலகத்தில் துன்மார்க்கம் இருப்பினும் விசுவாசமாயிருக்க இந்த உவமையிலுள்ள என்ன சத்தியங்கள் உங்களை உணர்த்துகிறது?

லூக்கா 8:1–3

எந்த வழிகளில் “குறிப்பிட்ட ஸ்திரீகள்” இரட்சகருக்கு ஊழியம் செய்தார்கள்?

“இயேசுவோடும் பன்னிருவருடனும் ஆவிக்குரியவற்றை [இயேசுவிடமிருந்து]” கற்றும், உலகப்பிரகாரமாக அவருக்கு சேவை செய்தும் பெண் சீஷர்கள் அவரோடு பயணித்தனர். … இயேசுவின் ஊழியத்தைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அவருடைய சுவிசேஷத்தின் நற்செய்தியும் அவருடைய குணப்படுத்தும் வல்லமையின் ஆசீர்வாதங்களையும், இந்தப் பெண்கள் அவருக்குப் பணிவிடை செய்து, தங்கள் பொருளையும் அர்ப்பணிப்பையும் அளித்தனர்” (Daughters in My Kingdom [2017], 4). அவரைப் பின்தொடர்ந்த பெண்கள் இயேசுவைப்பற்றி வல்லமையான சாட்சியைப் பகிர்ந்தனர் (Linda K. Burton, “Certain Women,” Liahona, May 2017, 12–15 பார்க்கவும்).

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

மத்தேயு 13.இரட்சகரின் உவமைகளை உங்கள் குடும்பத்தினர் வாசிக்கும்போது, அவர்களுக்கு பரிட்சயமான பொருட்களையும் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, பரலோக இராஜ்யத்தைப்பற்றிய (சபை) அதே சத்தியங்களை போதிக்கிற தங்கள் சொந்த உவமைகளைப்பற்றி சிந்தித்து அவர்கள் மகிழ முடியும்.

மத்தேயு 13:3–23; லூக்கா 8:4–15விதைப்பவரின் உவமையை ஒன்றாகப் படித்த பிறகு, உங்கள் குடும்பம் இது போன்ற கேள்விகளைப் பற்றி விவாதிக்கலாம்: நமது “நிலத்தை” (நம் இருதயங்கள்) “கல்லாக” அல்லது “நெருக்கச்” செய்வது எது? நமது நிலம் நல்லதாகவும் பலனளிக்கும் வகையிலும் இருப்பதை எப்படி உறுதி செய்வது?

உங்கள் குடும்பத்தில் சிறு பிள்ளைகள் இருந்தால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என பிறர் ஊகிக்கும்போது, தேவ வார்த்தையை கேட்க நமது இருதயங்களை ஆயத்தப்படுத்த பல்வேறு வழிகளைப்பற்றி குடும்ப உறுப்பினர்களை நடிக்க அழைப்பது வேடிக்கையாக இருக்கும்.

மத்தேயு 13:13–16.கிறிஸ்துவின் வார்த்தையை நாமாகவே ஏற்பதன் முக்கியத்துவத்தை குடும்பத்தினர் புரிந்துகொள்ள நீங்கள் எப்படி உதவ முடியும்? மத்தேயு 13:13–16 நீங்கள் அமைதியாக வாசிக்கும்போது, குடும்ப அங்கத்தினர் ஒருவரின் காதுகளை “காதுகள் [கேட்க] மந்தமானவை” என்பதை நிரூபிக்க, நீங்கள் மூடலாம். இந்த வசனங்களிலிருந்து அந்த குடும்ப அங்கத்தினர் எவ்வளவு புரிந்துகொண்டார்? தேவ வார்த்தைக்கு நமது கண்களையும் காதுகளையும் இருதயங்களையும் எந்த வழிகளில் நாம் திறக்க முடியும்?

மத்தேயு 13:44–46.இந்த உவமையிலுள்ள இரு மனிதர்களிடத்தில் பொதுவாக இருப்பது எது? நமது வாழ்க்கையில் தேவ இராஜ்யத்தை முதன்மையாக வைக்க, தனிநபர்களாகவும், குடும்பமாகவும் நாம் செய்துகொண்டிருக்கவேண்டிய கூடுதலான காரியங்கள் ஏதாவதிருக்கிறதா?

லூக்கா 13:11–17. குடும்ப உறுப்பினர்களுக்கு “தங்களை உயர்த்திக் கொள்ள” முடியாது என்று உணரும் அனுபவங்கள் இருந்ததா? இப்படி உணரும் வேறு யாரையாவது நமக்குத் தெரியுமா? நாம் எப்படி உதவ முடியும்? இரட்சகர் எப்படி நம் உடல்நலக்குறைவிலிருந்து நம்மை “விடுவிக்கிறார்”?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “We Are Sowing,” Hymns, no. 216.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

ஒரு வசனத்தை மனப்பாடம் செய்யுங்கள். உங்கள் குடும்பத்துக்கு குறிப்பாக அர்த்தமிக்கதாக இருக்கிற வேத பாகத்தை தேர்ந்தெடுத்து, அதை மனப்பாடம் செய்ய குடும்பத்தை அழைக்கவும். மூப்பர் ரிச்சர்ட் ஜி. ஸ்காட் போதித்தார், “மனப்பாடம் செய்த ஒரு வேதபகுதி காலப்போக்கில் பலவீனம் அடையாத ஒரு இணை பிரியா நண்பன் ஆகிறது” (“The Power of Scripture,” Liahona, Nov. 2011, 6)

படம்
விதைகளை விதைக்கும் மனிதன்

விதைப்பவனின் உவமை–ஜார்ஜ் சோப்பர்

அச்சிடவும்