“மார்ச் 27–ஏப்ரல் 2. மத்தேயு 14; மாற்கு 6; யோவான் 5–6: ‘பயப்படாதிருங்கள்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)
“மார்ச் 27–ஏப்ரல் 2. மத்தேயு 14; மாற்கு 6; யோவான் 5–6,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023
மார்ச் 27–ஏப்ரல் 2
மத்தேயு 14; மாற்கு 6; யோவான் 5–6
“பயப்படாதிருங்கள்”
நீங்கள் மத்தேயு 14; மாற்கு 6; யோவான் 5–6, வாசிக்கும்போது, உங்களுக்கு அர்த்தமுள்ளவைகளாகத் தோன்றுபவனவற்றைத் தேடுங்கள். “இந்த அதிகாரங்களிலுள்ள விவரங்கள் எனக்கு எப்படி பொருந்துகின்றன?” என்பது போன்ற கேள்விகளை உங்களுக்குள்ளே கேட்கலாம். “நான் என் வாழ்க்கைக்காக என்ன செய்திகளைக் காண்கிறேன்” அல்லது “என் குடும்பத்துடன் அல்லது பிறருடன் நான் என்ன பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்?”
உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்
அந்த கொந்தளிப்பான புயலின்போது, கலிலேயா கடலின் மத்தியில் பாதுகாப்பான படகை விட்டுச் செல்ல பேதுருவை எது உணர்த்தியிருக்க வேண்டும்? இயேசு தண்ணீர் மீது நடக்க முடியுமானால், அவனாலும் முடியும் என நம்ப அவனை வழிநடத்தியது எது? நாம் உறுதியாக அறிய முடியாது, ஆனால் ஜனங்களுக்காக அற்புதமான காரியங்கள் செய்ய மட்டுமே தேவ குமாரன் வரவில்லை, ஆனால் பேதுரு போன்றோரும் அற்புதமான காரியங்களை செய்யும் வல்லமை கொடுக்கவே வந்தார் என ஒருவேளை பேதுரு புரிந்திருக்கலாம். இயேசுவின் அழைப்பு “என் பின்னே வா” என்பதே (லூக்கா 18:22). இந்த அழைப்பை பேதுரு ஒருமுறை ஏற்றிருக்கிறான், அவன் அதை மீண்டும் ஏற்க வாஞ்சையாயிருந்தான், அது தன் பயங்களை எதிர்கொள்வதாயிருந்தாலும், முடியாத ஒன்றை செய்வதாயிருந்தாலும் கூட. ஒருவேளை புயலின் மத்தியில் படகை விட்டு இறங்குமாறு கர்த்தர் நம்மைக் கேட்க மாட்டார், அல்லது ஆயிரக்கணக்கானோர் சாப்பிட வேண்டியிருக்கும்போது, நமது அற்ப ரொட்டியை நன்கொடையளிக்க சொல்ல மாட்டார், ஆனால் நாம் அவற்றை முற்றிலுமாக புரிந்துகொள்ளாவிட்டாலும்கூட வழிகாட்டுதல்களை ஏற்றுக் கொள்ள அவர் நம்மைக் கேட்கலாம். நமக்கு அவரது அழைப்பு எதுவானாலும், அவை சில சமயங்களில் ஆச்சரியமூட்டுவதாகவோ பயமூட்டுவதாகவோ கூட தோன்றுகின்றன. ஆனால் பேதுருவைப் போல, நமது பயங்களையும், சந்தேகங்களையும், நமது குறைவான புரிதலையும் ஒதுக்கிவைத்துவிட்டு, விசுவாசத்தோடு அவரைப் பின்பற்றினால் அற்புதங்கள் நடக்கலாம்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
இயேசு கிறிஸ்து தன் பிதாவை கனம் பண்ணுகிறார்.
பரலோக பிதா மற்றும் அவரது ஒவ்வொரு பிள்ளையுடனான உறவு பரிசுத்தமாயிருக்க வேண்டியதாகும். இந்த வசனங்களில், பரலோக பிதாவுடன் நமது உறவுகளில் ஒரு உணர்த்துதலான மாதிரியை இயேசு நமக்கு கொடுத்தார். யோவான் 5:16–47 வாசித்து, பிதா என்ற வார்த்தை வரும் ஒவ்வொரு தருணத்தையும் அடையாளமிடவும் அல்லது குறியிடவும். குமாரன் எவ்வாறு பிதாவைக் கனம் பண்ணுகிறார், நீங்கள் எப்படி அவரது எடுத்துக்காட்டைப் பின்பற்ற முடியும்? குமாரனைப்பற்றி பிதா என்ன உணருகிறார் என்பதைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்? உங்கள் பரலோக பிதாவுடனான உங்கள் உறவை வலுப்படுத்த நீங்கள் என்ன செய்ய உணர்த்தப்படுகிறீர்கள்?
யோவான் 17; Jeffrey R. Holland, “The Grandeur of God,” Liahona, Nov. 2003, 70–73 ஐயும் பார்க்கவும்.
மத்தேயு 14:15–21; மாற்கு 6:33–44; யோவான் 6:5–14
அவரது நோக்கங்களை அடைய என் தாழ்மையான காணிக்கைகளை இரட்சகர் சிறப்பாக்க முடியும்.
உங்கள் வீடுகளிலும், உறவுகளிலும், அல்லது உங்கள் சமூகத்திலும் உங்களைச் சுற்றிலும் நீங்கள் பார்க்கிற எல்லா தேவைகளையும் போதுமானதில்லை என எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? ஐந்தாயிரத்துக்கும் அதிகமான பசியோடிருந்தவர்களுக்கு உணவளிக்குமாறு அவர் சொன்னபோது, அங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் மட்டுமே இருந்தபோது, இயேசுவின் சீஷர்கள் போதுமானதாக இல்லை என உணர்ந்திருக்கலாம். அடுத்து நடந்த அற்புதத்தை பார்க்கும்போது, உங்களைச் சுற்றிலுமிருப்போரை ஆசீர்வதிக்க உங்கள் தாழ்மையான சேவையின் காணிக்கைகளை தேவன் எப்படி பயன்படுத்த முடியும் என சிந்திக்கவும். நீங்கள் சபையில் சேவை செய்தபோது, உங்கள் முயற்சிகளை அவர் எப்படி சிறப்பாக்கியிருக்கிறார்? சகோதரி மைக்கேல் டி. கிரெய்க்கின் இந்த வாசகத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்: “நீங்களும் நானும் கிறிஸ்துவிடம் நம்மிடம் உள்ளதை கொடுக்கலாம், அவர் நம்முடைய முயற்சிகளைப் பெருகப் பண்ணுவார். உங்கள் மனித குறைகள் மற்றும் பலவீனங்களுடன் கூட நீங்கள் தேவனின் கிருபையை சார்ந்திருந்தால் நீங்கள் வழங்க வேண்டியது போதுமானதை விட அதிகமானது” (“Divine Discontent,” Liahona, Nov. 2018, 54).
மத்தேயு 14:22–33; மாற்கு 6:45–52; யோவான் 6:15–21
என் பயங்களையும் சந்தேகங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு, அவரில் விசுவாசத்தைப் பயன்படுத்த இயேசு கிறிஸ்து என்னை அழைக்கிறார்.
மத்தேயு 14:22–33; மாற்கு 6:45–52; மற்றும் யோவான் 6:15–21ல் விவரிக்கப்பட்டுள்ள காட்சியை உங்கள் மனதில் வையுங்கள். பேதுருவும் பிற சீஷர்களும் எப்படி உணர்ந்தார்கள் என கற்பனை செய்யவும். இந்த வசனங்களிலுள்ள இரட்சகரின் வார்த்தைகள் மற்றும் செயல்களிலிருந்து சீஷத்துவத்தைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்? பேதுருவின் வார்த்தைகள் மற்றும் செயல்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்? (1 நேபி 3:7 ஐயும் பார்க்கவும்.) படகிலிருந்து வெளியே வருவது போன்ற எதைச் செய்ய கர்த்தர் நம்மை அழைக்கிறார்? இயேசு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை பயன்படுத்த உங்களுக்கு தைரியம் கொடுக்கிற எதை இந்த வசனங்களில் காண்கிறீர்கள்?
இயேசு கிறிஸ்துவின் சீஷனாக செய்வதற்கு கடினமாக இருந்தாலும், சத்தியத்தை நம்பவும் ஏற்றுக்கொள்ளவும் நான் வாஞ்சையாயிருக்க வேண்டும்.
இயேசு தன்னை “ஜீவ அப்பம்” என்று குறிப்பிட்டபோது (யோவான் 6:48), பலர் இதை “கடினமான உபதேசம்” என்று கருதினர் (யோவான் 6:60). யோவான் 6:68–69 ல் உள்ள பேதுருவின் வார்த்தைகள் இரட்சகரின் கோட்பாட்டை ஏற்றுக்கொள்வது அல்லது வாழ்வது கடினமாகத் தோன்றும் சமயங்களில் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்? பேதுருவுடைய சாட்சியைக் குறித்து உங்களைக் கவர்வது என்ன? இரட்சகரைப் பின்பற்ற ஒப்புக்கொடுக்க உங்களுக்கு உதவுகிற “நித்திய ஜீவ வார்த்தைகள்”(யோவான் 6:68) சில யாவை?
M. Russell Ballard, “To Whom Shall We Go?” Liahona, Nov. 2016, 90–92 ஐயும் பார்க்கவும்.
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
மத்தேயு 14:15–21.ஐயாயிரம் பேரை போஷிக்க நீங்கள் எவ்வளவு ரொட்டியும் மீனும் தேவை என கற்பனை செய்ய உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் எப்படி உதவ முடியும் என்பதைக் கருத்தில் கொள்ளவும். இரட்சகரைப்பற்றி மத்தேயு 14:15–21 ல் உள்ள அற்புதம் நமக்கு என்ன போதிக்கிறது? உங்களிடம் வழங்க போதுமானதாக இல்லை என்று நீங்கள் உணர்ந்தபோது இரட்சகர் உங்கள் முயற்சிகளைப் பெருகப்பண்ணிய ஒரு அனுபவத்தைப் பகிர்வதைக் கருத்தில் கொள்ளவும்.
-
மத்தேயு 14:22–33.இந்த வசனங்களிலுள்ள கதையை திரும்ப நடித்து உங்கள் குடும்பம் மகிழலாம். சீஷர்கள் ஏன் பயந்திருக்க வேண்டும்? பேதுரு தன் பயத்தை மேற்கொண்டு படகை விட்டு ஏன் வெளியே வர முடிந்தது? அவன் மூழ்கத் தொடங்கிய போதும் அவன் தன் விசுவாசத்தை எப்படி காட்டினான்? சிலசமயங்களில் நாம் எவ்வாறு பேதுரு போல இருக்கிறோம்?
-
யோவான் 5:1–16.இந்த வசனங்களில் சொஸ்தமானான் என்ற சொற்றொடர் வரும் இடங்களை குறிக்குமாறு உங்கள் குடும்ப அங்கத்தினர்களை அழைக்கவும். எந்த விதங்களில் இயேசு கிறிஸ்து ஜனங்களை சொஸ்தமாக்க முடியும்? அவர் எப்போது எவ்வாறு நம்மை சொஸ்தமாக்கி இருக்கிறார்?
-
யோவான் 6:28–58.குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு துண்டு ரொட்டி கொடுத்து ரொட்டி மற்றும் பிற ஆரோக்கியமான உணவுகளிலிருந்து நாம் பெறும் பலன்களை விவாதிக்கவும். இயேசு கிறிஸ்து தம்மை ஜீவ அப்பம் என ஏன் அழைத்தார் என தேடி, பின்னர் ஒன்றுசேர்ந்து இந்த வசனங்களை தேடவும் (யோவான் 6:35). வாழ்க்கையின் ரொட்டியை “சாப்பிடு” என்றால் என்ன அர்த்தமாகலாம்? (D. Todd Christofferson, “The Living Bread Which Came Down from Heaven,” Liahona, Nov. 2017, 36–39 பார்க்கவும்).
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “How Great the Wisdom and the Love,” Hymns, no. 195.