புதிய ஏற்பாடு 2023
ஏப்ரல் 3–9. ஈஸ்டர்: “பாதாளமே உன் ஜெயம் எங்கே?”


“ஏப்ரல் 3–9. ஈஸ்டர்: ‘பாதாளமே உன் ஜெயம் எங்கே?,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“ஏப்ரல் 3–9. ஈஸ்டர்”, என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
கல்லறைத் தோட்டம்

ஏப்ரல் 3–9

ஈஸ்டர்

“பாதாளமே உன் ஜெயம் எங்கே?”

இந்த குறிப்பில் இரட்சகரின் உயிர்த்தெழுதலைப்பற்றிய சாட்சியங்களை நீங்கள் வாசிக்கும்போது, பரிசுத்த ஆவியிடமிருந்து வருகிற உணர்வுகளையும் எண்ணங்களையும் குறித்து வைக்கவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

இரட்சகரின் வாழ்க்கையின் கடைசி வாரத்தின்போது அவரைச் சுற்றியிருந்த அநேக யூதர்கள் பஸ்கா பண்டிகையின் பாரம்பரியங்களில் பங்கேற்றுக்கொண்டிருந்தனர். எகிப்தியர்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் வீட்டாரின் விடுதலையை நினைவுகூர, அவர்கள் உணவை ஆயத்தப்படுத்தி, பாடல்களைப் பாடி ஒன்றுகூடினார்கள். அவர்களுடைய வீட்டுக் கதவுகளில் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைத் தெளித்திருந்த அவர்களுடைய முன்னோர்களின் வீடுகளைக் கடந்து சென்ற சங்காரத்தூதுவனின் கதையை குடும்பங்கள் கேட்டனர். மிகவும் வளமையான விடுதலையின் அடையாளத்துடனான இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாவற்றிற்கும் மத்தியில், அவருடைய பாடுகள், அவருடைய மரணம் மற்றும் அவருடைய உயிர்த்தெழுதல் மூலமாக, தேவ ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்து பாவத்தின் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிக்கவிருக்கிறாரென்பதை ஒப்பீட்டளவில் சிலர் அறிந்திருந்தனர். அப்படியிருந்தும், தங்களுடைய வாக்களிக்கப்பட்ட மேசியாகவும், தங்களுடைய நித்திய விடுவிப்பவராகவும் இயேசுவை அடையாளங்கண்டவர்களும் அங்கிருந்தனர். “கிறிஸ்துவானவர் நமது பாவங்களுக்காக மரித்தார், அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்” (1 கொரிந்தியர் 15:3–4) என அந்த நாளிலிருந்து இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் உலகமுழுவதிலும் சாட்சி பகர்ந்தார்கள்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

மத்தேயு 21–28

இயேசு கிறிஸ்து என்னை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிக்கிறார், என் பலவீனங்களில் என்னை பலப்படுத்துகிறார், என் சோதனைகளில் என்னை ஆறுதல்படுத்துகிறார்.

இயேசுவின் வாழ்க்கையின் கடைசி வாரத்தைப்பற்றி வாசிக்க ஒவ்வொரு நாளும் நேரத்தைச் செலவழிப்பது, இந்த வாரத்தில், இரட்சகரின் பாவநிவர்த்தியின் ஆசீர்வாதங்களுக்கு கவனம் செலுத்த ஒரு வழி (சாத்தியமான வாசிப்பிற்கான அட்டவணை பின்வருகிறது). இரட்சகரின் அன்பை நீங்கள் உணர உதவுகிற எதை இந்த அதிகாரங்களில் நீங்கள் காண்கிறீர்கள்? பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும், பாடுகளிலிருந்தும், பலவீனங்களிலிருந்தும் உங்களை விடுவிக்க அவருடைய வல்லமையைப்பற்றி இந்த அதிகாரங்கள் உங்களுக்கு கற்பிப்பதை சிந்தியுங்கள். அவருடைய விடுதலையின் வல்லமையில் நீங்கள் எவ்வாறு விசுவாசத்தை பயன்படுத்துகிறீர்கள்?

  • ஞாயிற்றுக் கிழமை: எருசலேமிற்குள் வெற்றிகரமான பிரவேசம் (மத்தேயு 21:6–11)

  • திங்கட் கிழமை: ஆலயத்தைச் சுத்தப்படுத்துதல் (மத்தேயு 21:12–16)

  • செய்வாய் கிழமை: எருசலேமில் போதித்தல் (மத்தேயு 21–23)

  • புதன் கிழமை: போதித்தலை தொடருதல் (மத்தேயு 24–25)

  • வியாழக் கிழமை: பஸ்கா பண்டிகையும் கெத்செமனே தோட்டத்தில் கிறிஸ்துவின் பாடுகளும் (மத்தேயு 26)

  • வெள்ளிக் கிழமை: வழக்கு, சிலுவையிலறையப்படுதல், அடக்கம் (மத்தேயு 27:1–61)

  • சனிக் கிழமை: ஆவி உலகத்தில் அவர் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, கிறிஸ்துவின் சரீரம் கல்லறையில் வைக்கப்படுதல் (மத்தேயு 27:62–66) (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138)

  • ஞாயிற்றுக்கிழமை: இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலும் அவரது சீஷர்களுக்கு தோன்றுதலும் (மத்தேயு 28:1–10)

Easter.ComeuntoChrist.org ஐயும் பார்க்கவும்.

படம்
சிலுவையில் கிறிஸ்து

சிலுவையிலறைதல்–லூயிஸ் பார்க்கர்

மத்தேயு 28:1–10; லூக்கா 24:13–35; யோவான் 20:19–29; 1 கொரிந்தியர் 15:1–8, 55

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அநேக சாட்சிகள் சாட்சி கொடுத்தனர்.

இயேசு பரியாசம் செய்யப்பட்டு, மோசமாக நடத்தப்பட்டு, சிலுவையிலறைப்படுதலைக் கவனிக்க சீஷர்களுக்கு எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் அவருடைய வல்லமையைப் பார்த்தவர்கள், அவருடைய போதனைகளின் சத்தியத்தை உணர்ந்தவர்கள், அவர் தேவகுமாரனாயிருந்தாரென விசுவாசம் வைத்திருந்தவர்கள். அவருடைய மரணத்தைப் பார்த்தது அவருடைய சீடர்களுக்கு வருத்தத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவருடைய உயிர்த்தெழுதலின் மகா அற்புதத்தைக் கண்டு விரைவிலேயே அவர்கள் சாட்சிகளாக மாறினார்கள்.

உயிர்த்தெழுந்த இரட்சகரைக் கண்டவர்களின் விவரத்திலிருந்து உங்களால் எதைக் கற்றுக்கொள்ள முடியும்? மத்தேயு 28:1–10; லூக்கா 24:13–35; யோவான் 20:19–29; மற்றும் 1 கொரிந்தியர் 15:1–8, 55ல் ஒவ்வொரு நபரின் அனுபவத்தை அடையாளப்படுத்தவும் அல்லது குறிக்கவும். (3 நேபி 11; மார்மன் 1:15; ஏத்தேர் 12:38–39; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:19–24; 110:1–10; மற்றும் ஜோசப் ஸ்மித்— வரலாறு 1:15–17ல் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பிற சாட்சிகள் காணப்படலாம்) இந்த சாட்சிகளின் சாட்சியங்களில் உங்களைக் கவர்ந்தது எது? இரட்சகரின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், மற்றவர்கள் உயிர்த்தெழுந்து அநேகருக்கு காணப்பட்டார்கள் (மத்தேயு 27:52–53; 3 நேபி 23:9 பார்க்கவும்). இரட்சகர் மீதான உங்கள் விசுவாசம் உயிர்த்தெழுதலின் வாக்குறுதியும் நீங்கள் வாழும் முறையை எவ்வாறு பாதிக்கிறது?

“Jesus Is Resurrected,” “The Risen Lord Appears to the Apostles,” “Blessed Are They That Have Not Seen, and Yet Have Believed” (videos, ChurchofJesusChrist.org) ஐயும் பார்க்கவும்

1பேதுரு 1:3–11

இயேசு கிறிஸ்து எனக்கு நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் கொடுக்கிறார்.

1 பேதுரு 1:3–11 லிலுள்ள என்ன வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள், இயேசு கிறிஸ்துவால் உங்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது? அந்த நம்பிக்கையை நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள்?

மூத்த கெரிட் டபிள்யூ. காங் உயிர்த்தெழுதலைப்பற்றி சாட்சியமளித்தார் “கைகால்களை இழந்தவர்களுக்கு; பார்க்கும், கேட்கும் அல்லது நடக்கும் திறனை இழந்தவர்களுக்கு; அல்லது இடைவிடாத நோய், மனநோய் அல்லது பிற குறைக்கப்பட்ட திறனை இழந்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. அவர் நம்மைக் கண்டுபிடிக்கிறார். அவர் நம்மை சொஸ்தமாக்குகிறார். … [மேலும்,] ‘தேவன் தாமே இவ்வுலகின் பாவங்களுக்காக பாவநிவர்த்தி செய்தார்’ [ஆல்மா 42:15], … அவர் நம்முடைய உடல்நலக்குறைவுக்கேற்ப இரக்கத்துடன் நமக்கு உதவ முடியும். … நாம் மனந்திரும்பி நம்மால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். அவர் நம்மை நித்தியமாக ‘அவருடைய அன்பின் கரங்களில்’ அணைக்கிறார்[2 நேபி 1:15]” (“Hosanna and Hallelujah—The Living Jesus Christ: The Heart of Restoration and Easter,” Liahona, May 2020, 54).

ஆல்மா 27:28; 36:1–24; 3 நேபி 9:11–17; மரோனி 7:40–41 ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

ComeuntoChrist.org.Easter.ComeuntoChrist.org இரட்சகரின் வாழ்க்கையின் கடைசி வாரத்தின் ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது என்பதற்கான காலவரிசை மற்றும் விளக்கத்தைக் கொண்டுள்ளது. இந்த நாளில் இரட்சகர் என்ன செய்தார் என்பதைப் பார்க்க வாரத்தின் ஒவ்வொரு நாளும் உங்கள் குடும்பம் இந்த விளக்கங்களை மறுபரிசீலனை செய்யமுடியும், அல்லது வேதங்களில் அவருடைய கடைசி வாரத்தைப்பற்றி ஒரு குடும்பமாக நீங்கள் வாசிக்கலாம் (“தனிப்பட்ட வேத படிப்பிற்கான ஆலோசனைகள்” பகுதியில் ஆலோசிக்கப்பட்ட பட்டியலைப் பார்க்கவும்).

Hymns and Children’s Songbook.உங்களுக்கு சிறிதே பரிச்சயமான ஒருவரையும் சேர்த்து இந்த வாரத்தின்போது இரட்சகரின் பாவநிவர்த்தி மற்றும் உயிர்த்தெழுதலைப்பற்றி ஒன்றுசேர்ந்து பாடல்களைப் பாடுவதைக் கருத்தில் கொள்ளவும். (Hymns அல்லது Children’s Songbook, “பாவநிவர்த்தி,” “ஈஸ்டர்,” அல்லது “உயிர்த்தெழுதல் போன்ற தலைப்புக்களில் தலைப்பு அட்டவணை பார்க்கவும்”) பாடல்களைக் கற்றுக்கொள்ள குடும்ப அங்கத்தினர்களுக்குதவ வார்த்தைகளுடன் பொருந்துகிற படங்களை நீங்கள் காட்டமுடியும்.

Gospel Libraryல் “Jesus Christ” தொகுப்பு.Jesus Christ” என்ற தலைப்பில் உள்ள Gospel Library தொகுப்பில் இந்த ஈஸ்டரில் உங்கள் குடும்பம் இரட்சகரின் உயிர்த்தெழுதலைக் கொண்டாட உதவும் காணொலிகள், கலைப்படைப்புகள் மற்றும் இசை ஆகியவை அடங்கும்.

“ஜீவிக்கும் கிறிஸ்து: அப்போஸ்தலர்களின் சாட்சி”குடும்பமாக, “The Living Christ: The Testimony of the Apostles” (ChurchofJesusChrist.org) வாசிக்கவும். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த சாட்சியத்திலிருந்து ஈஸ்டர் செய்தியை எடுக்க ஒவ்வொரு குடும்ப உறுப்பினரையும் அழைக்கவும். உதாரணமாக, சமுக ஊடகத்தில், உங்களுடைய முன் கதவில், அல்லது உங்களுடைய வீட்டில் காட்சிப்படுத்த சுவரொட்டிகளை உருவாக்கவும்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Jesus Has Risen,” Children’s Songbook, 70.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

சமாளிக்கக்கூடிய இலக்குகளை அமைக்கவும். வேதங்களை படிக்க ஒரு நாளில் ஒரு சில நிமிடங்களை செலவழிப்பதுவும்கூட உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிக்க முடியும். ஒவ்வொரு நாளும் படிப்பதற்கு ஒப்புக்கொடுக்க, உங்களுடைய ஒப்புக்கொடுத்தலை நீங்களே நினைவுபடுத்த ஒரு வழியைக் கண்டுபிடித்து அவற்றைப் பின்பற்ற உங்களால் முடிந்த சிறந்ததைச் செய்யவும் நீங்கள் மறந்துவிட்டால், விட்டு விடாதீர்கள். மீண்டும் தொடங்கவும்.

படம்
கெத்செமனேயில் கிறிஸ்து

கெத்செமனே–ஆடம் ஆப்ராம்

அச்சிடவும்