புதிய ஏற்பாடு 2023
ஏப்ரல் 24–30. யோவான் 7–10: “நானே நல்ல மேய்ப்பன்”


“ஏப்ரல் 24–30. யோவான் 7–10: ‘நானே நல்ல மேய்ப்பன்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“ஏப்ரல் 24–30. யோவான் 7–10” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
இயேசு தரையில் விழுந்த பெண்ணுடன்

நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை–ஈவா குலேவா டிமோத்தி

ஏப்ரல் 24–30

யோவான் 7–10

“நானே நல்ல மேய்ப்பன்”

யோவான் 7–10ஐ நீங்கள் வாசிக்கும்போது, இந்த அதிகாரங்களில் கோட்பாட்டு கொள்கைகளைப்பற்றி பரிசுத்த ஆவியானவரிடமிருந்து எண்ணங்களை நீங்கள் பெறலாம். அவற்றின்படி செயல்பட திட்டத்தை வகுக்க உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்தல் உங்களுக்கு உதவமுடியும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

“சமாதானமும் மனுஷர்மேல் பிரியத்தையும்” (லூக்கா 2:14), கொண்டுவர கிறிஸ்து வந்தாலும்கூட, “அங்கே அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று” (யோவான் 7:43). இதே நிகழ்வுகளைக் கண்ட ஜனங்களுக்கு இயேசு யாரென்பதைப்பற்றி மிக வித்தியாசமான முடிவுகள் வந்தன. “சிலர் அவர் நல்லவர்” என்றார்கள், வேறு சிலர் அப்படியல்ல “அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன்”என்று சொல்லிக்கொண்டார்கள்(யோவான் 7:12). ஓய்வுநாளில் ஒரு குருடனை அவர் சுகமாக்கியபோது, “அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல” என்றார்கள், வேறு சிலர் “பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அதிசயங்களை எப்படிச் செய்வான்?” என சிலர் கேட்டனர். (யோவான் 9:16). அநேக குழப்பங்களிலிருந்த போதிலும், சத்தியத்தை தேடினவர்கள், “அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை” (யோவான் 7:46) என்ற அவருடைய வார்த்தைகளில் வல்லமையைக் கண்டடைந்தார்கள். அவர் கிறிஸ்துவா என தங்களுக்குத் “தெளிவாகச் சொல்லும்படி” யூதர்கள் இயேசுவைக் கேட்டபோது, தவறிலிருந்து சத்தியத்தை அடையாளம்காண நமக்கு உதவக்கூடிய ஒரு கொள்கையை அவர் வெளிப்படுத்தினார்: “என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவிகொடுக்கிறது, நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின் செல்லும்” என சொன்னார் (யோவான் 10:24, 27).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

யோவான் 7:14–17

இயேசு கிறிஸ்துவால் போதிக்கப்பட்ட சத்தியங்களின்படி நான் வாழும்போது, அவைகள் சத்தியமென நான் அறிந்துகொள்வேன்.

யூதர்கள், இவர் கல்லாதவராயிருந்தும், குறைந்த பட்சம் அவர்கள் அறிந்த வழிகளில்லாது, எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள் (வசனம் 15 பார்க்கவும்) இயேசுவின் பதிலில் கல்வி அல்லது பின்னணியைப் பொருட்டின்றி எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய சத்தியத்தை அறிந்துகொள்ள வேறு வழியை அவர் போதித்தார். யோவான் 7:14–17ன் படி, இயேசு போதித்த கொள்கை சத்தியமென எவ்வாறு உங்களால் அறிந்துகொள்ள முடியும்? சுவிசேஷத்தைப்பற்றிய உங்களுடைய சாட்சியை மேம்படுத்த எவ்வாறு இந்த செயல்முறை உங்களுக்குதவியது?

யோவான் 8:2–11

இரட்சகரின் இரக்கம் எல்லோருக்கும் கிடைக்கக்கூடியது.

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணுடன் இரட்சகரின் உரையாடல்பற்றி பேசும்போது, மூப்பர் டேல் ஜி. ரென்லண்ட் சொன்னார்: “நிச்சயமாக இரட்சகர் விபச்சாரத்தை மன்னிக்கவில்லை. ஆனால் அவர் அந்த பெண்ணையும் கண்டனம் செய்யவில்லை. அவளுடைய வாழ்க்கையை சீர்திருத்த அவளை அவர் ஊக்குவித்தார். அவருடைய மனதுருக்கத்தாலும் இரக்கத்தாலும் மாறுவதற்கு அவள் உந்தப்பட்டாள். ஜோசப் ஸ்மித்தின் வேதாகம மொழிபெயர்ப்பு அதன் விளைவாக வந்த அவளுடைய சீஷத்துவத்தை உறுதிப்படுத்துகிறது: ‘அந்த பெண் தேவனை மகிமைப்படுத்தி அந்த மணிநேரத்திலிருந்து அவருடைய நாமத்தில் நம்பிக்கை வைத்தாள்’ [யோவான் 8:11, அடிக்குறிப்பு c]” (“Our Good Shepherd,” Liahona, May 2017, 30 பார்க்கவும்).

இரட்சகரிடமிருந்து கண்டனத்துக்குப் பதிலாக இரக்கத்தைப் பெறுவதில் அந்த பெண்ணைப்போல எப்போது நீங்கள் உணர்ந்தீர்கள்? நீங்கள் பாவமில்லாமல், இல்லாமலிருக்கும்போதும்கூட மற்றவர்கள்மீது குற்றம் சாட்டுதல் தீர்ப்பளித்தலில் வேதபாரகர்களையும் பரிசேயர்களையும் போல நீங்கள் எப்போது இருந்திருக்கிறீர்கள்? (யோவான் 8:7 பார்க்கவும்). வேதபாரகர்களுடனும் பரிசேயர்களுடனும், விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணுடனும் இரட்சகர் இணைந்து செயல்பட்ட வழியிலிருந்து உங்களால் எதையெல்லாம் கற்றுக்கொள்ள முடிந்தது? இந்த வசனங்களை நீங்கள் வாசிக்கும்போது இரட்சகரின் மன்னிப்பைப்பற்றி நீங்கள் எதைக் கற்கிறீர்கள்?

“Go and Sin No More” (video), ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

யோவான் 9

நமக்கு விசுவாசமிருந்தால் நமது கஷ்டங்களில் தேவன் தம்மை வெளிப்படுத்த முடியும்.

யோவான் 9:1–3 வாழ்க்கையின் சவால்களையும் கஷ்டங்களையும்பற்றி உங்களுக்கு என்ன கற்பிக்கிறது? யோவான் 9 ஐ நீங்கள் வாசிக்கும்போது, குருடனாகப் பிறந்த மனுஷனின் வாழ்க்கையில் “தேவனுடைய கிரியை எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டது” என்பதைப்பற்றி சிந்திக்கவும். உங்கள் துன்பங்கள் உட்பட உங்கள் வாழ்க்கையில் அவை எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன?

யோவான் 10:1–30

இயேசு கிறிஸ்துதான் நல்ல மேய்ப்பன்.

உங்களுக்கு ஆட்டையும் ஆடு மேய்ப்பதைப்பற்றியும் தெரிந்திருக்காவிட்டாலும், யோவான் 10, வாசிப்பதில் இரட்சகர் சொல்கிற, “நானே நல்ல மேய்ப்பன்,” என்பது அவரைப்பற்றிய முக்கியமான சத்தியங்களை உங்களுக்குக் கற்பிக்க முடியும். இந்த சத்தியங்களைக் கண்டறிய, ஒரு நல்ல மேய்ப்பன் எப்படிப்பட்டவர் என்பதை விவரிக்கும் சொற்றொடர்களைத் தேடுங்கள், பின்னர் அந்த சொற்றொடர்கள் இரட்சகருக்கு எவ்வாறு பொருந்தும் என்று சிந்தியுங்கள். இங்கே சில எடுத்துக்காட்டுகள்:

  • வசனம் 3: “அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர் சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டு போகிறான்.”

  • வசனம் 11: அவன் “ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.”

  • வசனம் 16: “அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.”

இந்த அதிகாரத்தைப்பற்றி சிந்திக்க உதவும் சில கூடுதல் கேள்விகள் இதோ: இயேசு எப்படி ஒரு கதவைப் போன்றவர்? ( வசனம் 7–9 பார்க்கவும்). “ஜீவன் … பரிபூரணப்பட” அவர் உங்களுக்கு எவ்வாறு கொடுத்திருக்கிறார்? (வசனம் 10). அவர் உங்களை தனிப்பட்ட முறையில் அறிவார் என்று நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள்? (வசனம் 14 பார்க்கவும்). நல்ல மேய்ப்பனின் குரலை எப்படி அடையாளம் காண்கிறீர்கள்? (வசனம் 27 பார்க்கவும்).

சங்கீதம் 23; எசேக்கியேல் 34; ஆல்மா 5:37–39; 3 நேபி 15:21–16:5; Gerrit W. Gong, “Good Shepherd, Lamb of God,” Liahona, May 2019, 97–101 ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

யோவான் 7:24.யோவான் 7:24, லிலுள்ள இயேசுவின் போதனையை உங்கள் குடும்பத்தினர் புரிந்துகொள்ள உதவுவதற்காக, நீங்கள் அவர்களுக்கு வெளியே ஒரு வழியைக் காட்டும் ஆனால் உள்ளே வித்தியாசமாக இருக்கும் ஒன்றை காட்டலாம். அல்லது குடும்ப உறுப்பினர்கள் வெளிப்புற தோற்றத்தால் தீர்ப்பளிக்க வேண்டாம் என்று கற்பித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் கண்ணுக்குத் தெரியாத குணங்களையும் நீங்கள் பட்டியலிடலாம் (1 சாமுவேல் 16:7; Thomas S. Monson, “See Others as They May Become,” Liahona, Nov. 2012, 68–71 ஐயும் பார்க்கவும்).

யோவான் 8:31–36.“பாவத்தின் ஊழியன்” என்றால் என்ன அர்த்தம்? ( மரோனி 7:11 ஐயும் பார்க்கவும்). இயேசு போதித்த எந்த சத்தியங்கள் நம்மை விடுவிக்கமுடியும்?

படம்
ஒரு குருடனை கிறிஸ்து சுகமாக்குதல்

குருடனை கிறிஸ்து சுகமாக்குதல்–கார்ல் ஹெய்ன்ரிச் பிளாக்

யோவான் 9.யோவான் 9ல் இயேசு குணமாக்குகிற ஒரு குருடனான மனிதனின் விவரத்தை உங்கள் குடும்பம் மனக்கண்ணில் பார்க்க எவ்வாறு நீங்கள் உதவமுடியும்? இந்தக் கதையை நீங்கள் நடித்துக்காட்டலாம் அல்லது (ChurchofJesusChrist.org)ல் “Jesus Heals a Man Born Blind” என்ற காணொலியைக் காட்டவும். யோவான் 9லிருந்து தொடர்புடைய வசனங்களை குடும்ப அங்கத்தினர்கள் வாசிக்கும்படியாக அவ்வப்போது கதையை நிறுத்துங்கள். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு மனமாறுதலாயிருப்பது என்றால் என்ன என்பது போன்று, விவரத்திலிருந்து அவர்கள் கற்றுக்கொள்கிற எதாவது பாடங்களை குறித்துக்கொள்ள அவர்களை அழைக்கவும்.

யோவான் 10:1–18, 27–29.நல்ல மேய்ப்பனின் உவமையிலிருந்து கற்றுக்கொள்ளுதலில் குடும்ப அங்கத்தினர்களை ஈடுபடுத்த, பின்வரும் ஒன்றை படமாக வரைய அவர்கள் ஒவ்வொருவரையும் கேட்கவும்: ஒரு திருடன், ஒரு கதவு, ஒரு மேய்ப்பன், ஒரு கூலியாள் (ஒரு கூலித் தொழிலாளி) ஒரு நரி, ஒரு ஆடு. யோவான் 10:1–18, 27–29ஐ வாசிக்க அவர்களை அழைத்து, பின்னர், அவர்கள் வரைந்த காரியங்களைப்பற்றி இரட்சகர் என்ன போதித்தார் என ஒரு குடும்பமாக கலந்துரையாடவும்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “The Lord Is My Shepherd,” Hymns, no. 108.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

உணர்த்துதலான வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் தேடவும். நீங்கள் வாசிக்கும்போது, உங்களை உணர்த்தவும், உங்களை உந்துவதற்கும் அல்லது உங்களுக்காகவே எழுதப்பட்டிருப்பதாக தோன்றும்படியாகவும் உங்கள் கவனத்திற்கு குறிப்பிட்ட வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் பரிசுத்த ஆவி கொண்டுவரக்கூடும். யோவான் 7–10ல் உங்களை உணர்த்துகிற எந்த வார்த்தைகளை அல்லது சொற்றொடர்களைக் குறித்து வைப்பதைக் கருத்தில்கொள்ளவும்.

படம்
கிறிஸ்து ஒரு ஆட்டுக்குட்டியுடன்

காணாமற் போவது இனி இல்லை –க்ரெய்க் கே. ஓல்சன்

அச்சிடவும்