புதிய ஏற்பாடு 2023
மே 1–7. லூக்கா 12–17; யோவான் 11: “காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடு கூடச் சந்தோஷப்படுங்கள்”


“மே 1–7. லூக்கா 12–17; யோவான் 11: ‘காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடு கூடச் சந்தோஷப்படுங்கள்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“மே 1–7. லூக்கா 12–17; யோவான் 11,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
தன் மகனைத் தழுவிக்கொள்ளும் மனிதன்

கெட்ட குமாரன்–லிஸ் லெமன் ஸ்விண்டில்

மே 1–7

லூக்கா 12–17; யோவான் 11

“காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடு கூடச் சந்தோஷப்படுங்கள்”

நீங்கள் லூக்கா 12–17 மற்றும் யோவான் 11 வாசிக்கும்போது, நீங்கள் எதை அறியவும் செய்யவும் பரலோக பிதா விரும்புகிறார் என ஜெபத்துடன் தேடவும். இந்த அதிகாரங்களை நீங்கள் படிப்பது, உங்களுக்காக மட்டுமே இருக்கிற செய்திகளுக்கு உங்கள் இருதயத்தை திறக்கும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

பல சூழ்நிலைகளில், 100க்கு 90 பேர் சிறப்பானவர்களாக கருதப்படுவார்கள், ஆனால் அந்த எண்ணிக்கைகள் தேவனுடைய அன்பு பிள்ளைகளுக்காக நிற்கும்போது இருப்பதில்லை (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:10 பார்க்கவும்). அந்த விதத்தில், காணாமற்போன ஆட்டின் உவமையில் இரட்சகர் போதித்தது போல, “[நாம்] கண்டுபிடிக்கும்வரை” (லூக்கா 15:4), விரக்தியுடன் தேடுவதற்கு ஒரு ஆத்துமா கூட தகுதி பெற்றிருந்தால் கூட. பின்பு களிகூருதல் தொடங்கலாம், “மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும், மனந்திரும்புகிற ஒரு பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்” (லூக்கா 15:7). அது நியாயமற்றது என தோன்றினால், “மனந்திரும்ப அவசியமில்லாத” ஒருவரும் இல்லை என்பதை உண்மையாகவே நினைவுகூருவது உதவிகரமாக இருக்கும். நம் அனைவருக்கும் மீட்பு தேவை. மற்றும் இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாவினிமித்தமும் ஒன்றாக களிகூர்ந்து, அந்த மீட்பில் நாம் அனைவரும் பங்கேற்கலாம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:15–16 பார்க்கவும்).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

லூக்கா 12; 14–16

நான் நித்திய காரியங்களில் என் இருதயத்தை வைத்திருப்பதால் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

தன் பிரயாசத்தின் கனிகளால் பெரிய களஞ்சியங்களைக் கட்டி நிரப்பிய வெற்றிபெற்ற மனிதனை தேவன் ஏன் “மதிகேடனே” என சொல்ல வேண்டும்? (லூக்கா 12:16–21 பார்க்கவும்). லூக்காவிலுள்ள இந்த அதிகாரங்களில் லௌகீகத்துக்கு அப்பால் நித்தியத்துக்கு நம்மை உயர்த்துகிற பல உவமைகளை இரட்சகர் போதிக்கிறார். இந்த உவமைகளில் சில இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் செய்தியையும் நீங்கள் எவ்வாறு சுருக்கி சொல்வீர்கள்? கர்த்தர் உங்களுக்கு என்ன சொல்கிறார் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

மத்தேயு 6:19–34; 2 நேபி 9:30; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:10 ஐயும் பார்க்கவும்.

லூக்கா 15

காணாமற்போனவர்கள் கண்டுபிடிக்கப்படும்போது, பரலோக பிதா களிகூர்கிறார்.

லூக்கா 15ல், இயேசு போதித்த உவமைகளை நீங்கள் வாசிக்கும்போது, பாவஞ்செய்தவர்கள் அல்லது வேறுவிதத்தில் “காணாமற்போனவர்களைப்பற்றி” பரலோக பிதா எப்படி உணர்கிறார் என்பதுபற்றி என்ன கற்கிறீர்கள்? ஒரு ஆவிக்குரிய தலைவர், அல்லது நம்மில் யாராவது, அவர்களைப்பற்றி எப்படி நினைக்க வேண்டும்? பரிசேயர்களும் வேதபாரகர்களும் இந்தக் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளித்திருப்பார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவும் (லூக்கா 15:1–2 பார்க்கவும்). லூக்கா 15ல் இயேசுவின் பதிலை மூன்று உவமைகளில் காணலாம். நீங்கள் வாசிக்கும்போது, இயேசு இந்த உவமைகளுடன் வேதபாரகர்களுக்கும் பரிசேயர்களுக்கும் என்ன கற்பித்தார் என்று சிந்தியுங்கள்.

இந்த உவமைகளுக்கிடையே உள்ள ஒற்றுமைகளையும் வித்தியாசங்களையும் பட்டியலிடுவதை கருத்தில் கொள்ளவும். உதாரணமாக, என்ன, ஏன் காணாமற்போனது, எப்படி கண்டுபிடிக்கப்பட்டது, அது கண்டுபிடிக்கப்பட்டபோது ஜனங்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என நீங்கள் பார்க்கலாம். தாங்கள் காணாமற்போனதாக நினைக்காதவர்கள் உள்ளிட்ட, காணாமற்போனவர்களுக்கு இயேசு என்ன செய்திகள் வைத்திருந்தார்? காணாமற்போனவர்களை தேடுகிறவர்களுக்கு அவர் என்ன செய்தி வைத்திருந்தார்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:10–16; Jeffrey R. Holland, “The Other Prodigal,” Ensign, May 2002, 62–64 ஐயும் பார்க்கவும்.

படம்
காசு தேடும் பெண்

காணாமற்போன வெள்ளிக்காசு–ஜேம்ஸ் டிஸ்ஸோ

லூக்கா 16:1–12

அநீதியான உக்கிராணக்காரனின் உவமையில் கிறிஸ்து என்ன போதித்தார்?

இந்த உவமையிலிருந்து நாம் கற்கக் கூடிய ஒரு பாடத்தை மூப்பர் ஜேம்ஸ் ஈ. டால்மேஜ் விளக்கினார்: “கருத்தாயிருங்கள்; ஏனெனில் உங்கள் உலகப்பிரகார ஐஸ்வர்யங்களைப் பயன்படுத்தும் நாள் சீக்கிரத்தில் கடந்து போகும். நேர்மையற்றோர் மற்றும் தீயவர்களிடமிருந்தும் கூட பாடம் படியுங்கள்; அவர்கள் நினைக்கிற வருங்காலத்துக்கு மட்டும் சேமிக்க அவர்கள் புத்தியுள்ளவர்களாக இருந்தால், நீங்கள் எவ்வளவு அதிகமாய் இருக்க வேண்டும், நித்திய வருங்காலத்தை நம்புகிறவர்கள் அதற்காக சேமிக்க! ‘அநீதியான உலகப்பொருளை’ பயன்படுத்துவதில் நீங்கள் ஞானமும் புத்தியும் கற்றுக்கொள்ளாவிட்டால், அதிகமாக நிலைத்திருக்கக்கூடிய ஐஸ்வர்யங்களில் நீங்கள் எப்படி நம்பப்பட முடியும்? (Jesus the Christ, [1916] 464). இந்த உவமையில் என்ன பிற பாடங்களை நீங்கள் காண்கிறீர்கள்?

லூக்கா 17:11–19

என்னுடைய ஆசீர்வாதத்தைப்பற்றிய நன்றியுணர்வு என்னை தேவனுக்கு நெருக்கமாய் கொண்டு வரும்.

பத்து குஷ்டரோகிகளில் நீங்கள் ஒருவராய் இருந்திருந்தால், இரட்சகருக்கு நன்றி சொல்ல நீங்கள் திரும்ப வந்திருப்பீர்களா? அவன் நன்றி தெரிவித்ததால் நன்றியுணர்வுள்ள குஷ்டரோகி, என்ன கூடுதல் ஆசீர்வாதங்களைப் பெற்றான்?

இரட்சகரின் வார்த்தைகளையும் நீங்கள் சிந்திக்கலாம், “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது ” (வசனம் 19). உங்கள் கருத்துப்படி, நன்றியும் விசுவாசமும் எவ்வாறு தொடர்புடையது? சுகமடைய இரண்டும் நமக்கு எவ்வாறு உதவுகின்றன? “President Russell M. Nelson on the Healing Power of Gratitude” (ChurchofJesusChrist.org) காணொலி இக்கேள்விகளைப்பற்றி சிந்திக்க நமக்கு உதவ முடியும்.

Dale G. Renlund, “Consider the Goodness and Greatness of God,” Liahona, May 2020, 41–44 ஐயும் பார்க்கவும்.

யோவான் 11:1–46

இயேசு கிறிஸ்துவே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார்.

மரித்தோரிலிருந்து லாசருவை எழுப்பிய அற்புதம் இயேசு உண்மையாகவே தேவ குமாரன் என்பதற்கும், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மேசியா என்பதற்கும் வல்லமையான மற்றும் மறுக்கமுடியாத சாட்சி. யோவான் 11:1–46 லுள்ள எந்த வார்த்தைகள், சொற்றொடர்கள் அல்லது விவரங்கள், இயேசு கிறிஸ்து “உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார்” என்ற உங்கள் விசுவாசத்தை பெலப்படுத்துகிறது? இயேசு “உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார்” என்றால் என நீங்கள் நினைக்கிறீர்கள்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

லூக்கா 15:1–10.ஒன்றை இழப்பது அல்லது காணாமற்போவது எப்படி இருக்கும் என உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் புரிந்துகொள்கிறார்களா? காணாமற்போன ஆடு மற்றும் காணாமற்போன காசு உவமைகளைப்பற்றிய அவர்களது அனுபவங்களைப்பற்றி பேசுவது ஒரு கலந்துரையாடலை தொடங்கும். ஒருவர் ஒளிவது, பிற குடும்ப அங்கத்தினர்கள் அவனை அல்லது அவளை கண்டுபிடிக்க முயற்சிக்கிற ஒரு விளையாட்டை நீங்கள் விளையாடலாம். இந்த உவமைகளைப் புரிந்துகொள்ள இந்த பயிற்சி உங்களுக்கு எப்படி உதவுகிறது?

லூக்கா 15:11–32. காணாமற் போனவர்கள் நமக்கு இருக்கும்போது இக்கதையில் உள்ள தகப்பனைப் போல நாம் எப்படி இருக்க முடியும்? கிறிஸ்துவைப் போல அதிகமாக நாம் ஆக உதவக்கூடிய மூத்த மகனின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்? இந்த உவமையிலுள்ள தகப்பன் எந்த வழிகளில் நமது பரலோக பிதா போலிருக்கிறார்?

லூக்கா 17:11–19. பத்து குஷ்டரோகிகளின் விவரத்தை குடும்பத்தினர் பயன்படுத்த உதவ, ஒருவருக்கொருவர் நன்றியுணர்வைப்பற்றிய இரகசிய குறிப்புகளை அவர்கள் எழுதி, வீடு முழுவதும் அவைகளை வைக்க சொல்லவும். நீங்கள் ஒன்றாக “Count Your Blessings,” (Hymns, no. 241), பாடி உங்கள் குடும்பம் பெற்றிருக்கிற ஆசீர்வாதங்களைக் கணக்கிடவும்.

யோவான் 11:1–46.“லாசரு மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப்படுதல்” (ChurchofJesusChrist.org) காணொலியை குடும்ப அங்கத்தினர்கள் பார்த்து, இயேசு கிறிஸ்துவைப்பற்றிய தங்கள் சாட்சியைப் பகிரலாம்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில்,என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Dear to the Heart of the Shepherd,” Hymns, no. 221.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

சுவிசேஷக் கொள்கைகளைப் போதிக்க கதைகளையும் எடுத்துக்காட்டுகளையும் பயன்படுத்தவும். கதைகளையும் உவமைகளையும் பயன்படுத்தி, இரட்சகர் அடிக்கடி சுவிசேஷக்கொள்கைகளைப் போதித்தார். உங்கள் குடும்பத்துக்கு ஒரு சுவிசேஷக் கொள்கையை உயிரோட்டமுள்ளதாக்கக்கூடிய உங்கள் சொந்த வாழ்க்கை எடுத்துக்காட்டுகளையும் கதைகளையும் சிந்திக்கவும் (Teaching in the Savior’s Way, 22 பார்க்கவும்).

படம்
நன்றியோடு இயேசுவுக்கு முன் மனிதன் மண்டியிடுதல்

ஒன்பது பேர் எங்கே–லிஸ் லெமன் ஸ்விண்டில்

அச்சிடவும்