புதிய ஏற்பாடு 2023
மே 22–28. ஜோசப் ஸ்மித்—மத்தேயு 1; மத்தேயு 24–25; மாற்கு 12–13; லூக்கா 21; “மனுஷ குமாரன் வருவார்”


“மே 22–28. ஜோசப் ஸ்மித்—மத்தேயு 1; மத்தேயு 24–25; மாற்கு 12–13; லூக்கா 21: ‘மனுஷ குமாரன் வருவார்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“மே 22–28. ஜோசப் ஸ்மித்—மத்தேயு 1; மத்தேயு 24–25; மாற்கு 12–13; லூக்கா 21,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
இரண்டாம் வருகை

இரண்டாம் வருகை–ஹாரி ஆண்டர்சன்

மே 22–28

ஜோசப் ஸ்மித்—மத்தேயு 1; மத்தேயு 24–25; மாற்கு 12–13; லூக்கா 21

“மனுஷ குமாரன் வருவார்”

ஜோசப் ஸ்மித்—மத்தேயு 1; மத்தேயு 24–25; மாற்கு 12–13 லூக்கா 21, நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் கேட்கலாம், “எனக்கும், என் குடும்பத்துக்கும், என் அழைப்புக்கும், இந்த அதிகாரங்களில் என்ன செய்திகள் இருக்கின்றன?”

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

அவரது தீர்க்கதரிசனம் வியப்பூட்டுவதாக இயேசுவின் சீஷர்கள் கண்டிருக்கலாம்: பராக்கிரமமான எருசலேம் தேவாலயம், யூத ஜனத்தின் ஆவிக்குரிய மற்றும் கலாச்சார மையம், “ ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு” முற்றிலுமாக அழிக்கப்படும். இயற்கையாகவே சீஷர்கள் அதிகம் அறிய விரும்பினர். “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்?” அவர்கள் கேட்டனர். “ உமது வருகைக்கு அடையாளம் என்ன?” (ஜோசப் ஸ்மித்—மத்தேயு 1:2–4 ). கி.பி 70ல் நிறைவேறிய தீர்க்கதரிசனமான எருசலேமுக்கு வரவிருந்த மிகுந்த அழிவு, கடைசி நாட்களில் அவரது வருகையின் அடையாளங்களோடு ஒப்பிட்டால் சிறியதாயிருக்கும், என்பதை இரட்சகரின் பதில்கள் வெளிப்படுத்தின. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், தேசங்கள் மற்றும் சமுத்திரம் ஆகியன எருசலேமிலுள்ள ஆலயத்தை விட உறுதியானவைகளாக தோன்றுபவை, தற்காலிகமானவை என நிரூபிக்கும். “வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்” (ஜோசப் ஸ்மித்—மத்தேயு 1:33). நாம் ஆவிக்குரியவிதமாக விழிப்புடன் இருந்தால், உண்மையாகவே நிரந்தரமான ஒன்றில் நமது நம்பிக்கையை வைக்க இந்த குழப்பம் நமக்கு போதிக்க முடியும். இயேசு வாக்களித்தபடி, “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. … என் வார்த்தையை பொக்கிஷப்படுத்துவோர் ஏமாற்றப்படுவதில்லை” (ஜோசப் ஸ்மித்—மத்தேயு 1:35, 37).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

ஜோசப் ஸ்மித்—மத்தேயு என்றால் என்ன?

விலையேறப்பெற்ற முத்தில் இடம்பெற்றுள்ள ஜோசப் ஸ்மித்—மத்தேயு, மத்தேயு 23ன் கடைசி வசனம் மற்றும் மத்தேயு 24ல் அனைத்துமான, ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பாகும். ஜோசப் ஸ்மித்தின் உணர்த்தப்பட்ட திருத்தங்கள் காணாமற்போன அருமையான சத்தியங்களை மறுஸ்தாபிதம் செய்கிறது. வசனங்கள் 12–21 பூர்வ காலத்தில் எருசலேமின் அழிவை குறிக்கின்றன, வசனங்கள் 21–55 கடைசி நாட்களைக் குறித்த தீர்க்கதரிசனங்களைக் கொண்டுள்ளன.

ஜோசப் ஸ்மித்—மத்தேயு 1:21–37 ; மாற்கு 13:21–37; லூக்கா 21:25–38

இரட்சகரின் இரண்டாம் வருகையைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள் வருங்காலத்தை விசுவாசத்துடன் எதிர்கொள்ள எனக்கு உதவ முடியும்.

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு வழிநடத்துகிற நிகழ்வுகளைப்பற்றி வாசிப்பது நிறைவற்றதாயிருக்கும். ஆனால் இயேசு இந்த நிகழ்ச்சிகளைப்பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தபோது, “கலங்காதிருங்கள்” என தன் சீஷர்களிடம் சொன்னார் (ஜோசப் ஸ்மித்—மத்தேயு 1:23). பூகம்பங்கள், யுத்தங்கள், ஏமாற்றுதல்கள் மற்றும் பஞ்சங்களைப்பற்றி நீங்கள் கேள்விப்படும்போது, நீங்கள் எப்படி “கலங்காதிருக்க” முடியும்? இந்த வசனங்களை நீங்கள் வாசிக்கும்போது, இக்கேள்விகளைப்பற்றி சிந்தியுங்கள். நீங்கள் காண்கிற எந்த உறுதியளிக்கும் ஆலோசனையையும் குறியிடுங்கள் அல்லது குறிப்பெடுங்கள்.

Gospel Topics, “Second Coming of Jesus Christ,” topics.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

ஜோசப் ஸ்மித்—மத்தேயு 1:26–27, 38–55; மத்தேயு 25:1–13; லூக்கா 21:29–36

இரட்சகரின் இரண்டாம் வருகைக்காக நான் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

“மனுஷ குமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது” தேவன் இன்னும் வெளிப்படுத்தவில்லை” (மத்தேயு 25:13). ஆனால் அந்த நாள் நினையாத நேரத்தில் வருவதை அவர் விரும்பவில்லை (லூக்கா 21:34), ஆகவே எவ்வாறு ஆயத்தப்படுவது என்பதைப்பற்றி அவர் நமக்கு ஆலோசனை கொடுத்திருக்கிறார்.

இந்த வசனங்களை நீங்கள் வாசிக்கும்போது, அவரது இரண்டாம் வருகைக்காக ஆயத்தமாயிருக்க எப்போதும் நமக்கு போதிக்க இரட்சகர் பயன்படுத்திய உவமைகளையும் பிற ஒப்பீடுகளையும் அடையாளம் காணவும். அவற்றிலிருந்து நீங்கள் என்ன கற்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்ய உணர்த்தப்பட்டிருக்கிறீர்கள்?

இரட்சகர் எவ்வாறு உலகை அவருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படுத்த உதவ வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம். இரட்சகர் வரும்போது அவரை வரவேற்க ஆயத்தமாக இருப்பதன் அர்த்தம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? மூப்பர் டி. டாட் கிறிஸ்டாபர்சனின் செய்தி “Preparing for the Lord’s Return” (Liahona, May 2019, 81–84) இதைப்பற்றி சிந்திக்க உங்களுக்கு உதவக்கூடும்.

Russell M. Nelson, “The Second Great Commandment,” Liahona, Nov. 2020, 73–76 ஐயும் பார்க்கவும்.

மத்தேயு 25:14–30

அவரது வரங்களை ஞானமாக நான் பயன்படுத்த தேவன் எதிர்பார்க்கிறார்.

இரட்சகரின் உவமையில், “தாலந்து” பணத்தைக் குறித்தது. ஆனால், தாலந்துகளின் உவமை, பணத்தை மட்டுமல்ல, நம்முடைய எந்த ஆசீர்வாதத்தையும் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப்பற்றி சிந்திக்கத் தூண்ட முடியும். நீங்கள் இந்த உவமையை வாசித்த பிறகு, பரலோக பிதா உங்களுக்குக் கொடுத்துள்ள சில ஆசீர்வாதங்களையும் பொறுப்புகளையும் பட்டியலிடலாம். இந்த ஆசீர்வாதங்களைக் கொண்டு நீங்கள் என்ன செய்ய வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார்? இந்த வரங்களை அதிக ஞானமாக நீங்கள் எப்படி பயன்படுத்த முடியும்?

மத்தேயு 25:31–46

நான் பிறருக்கு சேவை செய்யும்போது, நான் தேவனுக்கு சேவை செய்கிறேன்.

உங்கள் வாழ்க்கையை கர்த்தர் எப்படி நியாயந்தீர்ப்பார் என நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்பட்டால், செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளின் உவமையை வாசிக்கவும். தேவைப்படுபவர்களைக் கவனித்துக்கொள்வது தேவனுடைய “ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதற்கு” உங்களை ஆயத்தப்படுத்த உதவும் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?

மத்தேயு 25 இந்த உவமை மற்ற இரண்டையும் எவ்வாறு ஒத்திருக்கிறது? மூன்றுக்கும் பொதுவான செய்திகள் என்ன இருக்கின்றன?

மோசியா 2:17; 5:13ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

ஜோசப் ஸ்மித்—மத்தேயு.இந்த அதிகாரத்தை உங்கள் குடும்பம் ஆராய உதவ, அவரது இரண்டாம் வருகைக்கு நாம் எவ்வாறு ஆயத்தப்படலாம் என்பதைப்பற்றிய இரட்சகரின் போதனைகளைத் தேட அவர்களை அழைக்கவும் (உதாரணமாக வசனங்கள் 22–23, 29–30, 37, 46–48 பார்க்கவும்). இந்த ஆலோசனையைப் பின்பற்ற நாம் என்ன செய்யலாம்? “When He Comes Again” (Children’s Songbook, 82–83) பாடி மற்றும் இரட்சகரின் இரண்டாம் வருகை எப்படி இருக்கும் என்று அவர்கள் கற்பனை செய்கிறார்கள் என்பதைப்பற்றிய படங்களை வரைந்து உங்கள் குடும்பத்தினர் மகிழலாம்.

ஜோசப் ஸ்மித்—மத்தேயு 1:22, 37.தேவனுடைய வார்த்தையை பொக்கிஷப்படுத்துவது என்றால் என்ன? தனிப்பட்டவராகவும் ஒரு குடும்பமாகவும் இதை நாம் எப்படி செய்யலாம்? அப்படிச் செய்வது ஏமாற்றப்படாமலிருப்பதைத் தவிர்க்க நமக்கு எப்படி உதவுகிறது?

மத்தேயு 25:1–13.மத்தேயு 25:1–13 கலந்துரையாட இந்தக் குறிப்போடு வருகிற பத்து கன்னிகைகள் படத்தை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ள படத்தில் குடும்பத்தினர் என்ன விவரங்களைப் பார்க்கின்றனர்?

நீங்கள் எண்ணெய் துளிகள் வடிவில் காகிதத்தை வெட்டி உங்கள் வீட்டைச் சுற்றி துளிகளை மறைக்கலாம். வேதங்கள் அல்லது ஆலயத்தின் படம் போன்ற பொருட்களுடன் நீங்கள் சொட்டுகளை இணைக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் துளிகளைக் கண்டறிந்தால், இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்பட இவை எவ்வாறு உதவுகின்றன என்பதை நீங்கள் விவாதிக்கலாம்.

மாற்கு 12:38–44; லூக்கா 21:1–4.நம் காணிக்கைகளை இரட்சகர் எவ்வாறு பார்க்கிறார் என்பதைப்பற்றி இந்த வசனங்கள் என்ன கற்பிக்கின்றன? தசமபாகம் மற்றும் உபவாச காணிக்கைகளை கர்த்தருக்கு எவ்வாறு செலுத்துவது என்பதை உங்கள் குடும்பத்தினருக்குக் காட்டுங்கள். தேவ இராஜ்ஜியத்தைக் கட்ட இந்த காணிக்கைகள் எவ்வாறு உதவும்? “[நம்மிடம்] உள்ள அனைத்தையும்” கர்த்தருக்குச் செலுத்தக்கூடிய வேறு சில வழிகள் யாவை? (மாற்கு 12:44).

படம்
பெட்டியில் நாணயத்தை பெண் போடுதல்

விதவையின் காசு–சாண்ட்ரா ராஸ்ட்

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “When He Comes Again,” Children’s Songbook, 82–83.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

உங்கள் சுற்றுப்புறத்தை ஆயத்தம் செய்யவும். “சத்தியத்தை கற்றுக்கொள்ளவும் உணரவும் நமது திறமையை நமது சுற்றுச்சூழல்கள் ஆழமாகப் பாதிக்கமுடியும்,”(Teaching in the Savior’s Way, 15). பரிசுத்த ஆவியானவரின் செல்வாக்கை வரவேற்கிற வசனங்களைப் படிக்க ஒரு இடத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கவும். எழுச்சியூட்டும் இசையும் படங்களும் பரிசுத்த ஆவியை வரவழைக்க முடியும்.

படம்
பெண் விளக்கை பிடித்திருத்தல்

அவர்களில் ஐவர் புத்திசாலிகள்–வால்ட்டர் ரானே

அச்சிடவும்