புதிய ஏற்பாடு 2023
மே 15–21. மத்தேயு 21–23; மாற்கு 11; லூக்கா 19–20; யோவான் 12: “இதோ, உன் இராஜா வருகிறார்”


“மே 15–21. மத்தேயு 21–23; மாற்கு 11; லூக்கா 19–20; யோவான் 12: ‘இதோ, உன் இராஜா வருகிறார்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“மே 15–21. மத்தேயு 21–23; மாற்கு 11; லூக்கா 19–20; யோவான் 12,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
இயேசு வரும்போது மரத்தில் ஒரு மனிதன்

காட்டத்தி மரத்தில் சகேயு–ஜேம்ஸ் டிஸ்ஸோ

மே 15–21

மத்தேயு 21–23; மாற்கு 11; லூக்கா 19–20; யோவான் 12

“இதோ, உன் இராஜா வருகிறார்”

இக்குறிப்பிலுள்ள ஆலோசனைகளை வாசிப்பதற்கு முன்பு மத்தேயு 21–23; மாற்கு 11; லூக்கா 19–20; மற்றும் யோவான் 12 வாசிக்கவும். உங்கள் குடும்பத்துடன் அல்லது சபை வகுப்புக்களில் நீங்கள் பகிர்ந்துகொள்ளக்கூடிய எண்ணங்களைப் பதிவு செய்யவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

பெத்தானியாவிலிருந்து எருசலேமுக்கு பிரயாணம் பண்ணிய பிறகு இரட்சகர் பசியோடிருந்தார், தூரத்திலிருந்த அத்திமரம் உணவுக்கு ஆதாரம் போல தோன்றியது. ஆனால் இயேசு மரத்தை நெருங்கியபோது, அந்த மரத்தில் கனி இல்லை என்பதைக் கண்டார் (மத்தேயு 21:17–20; மாற்கு 11:12–14, 20 பார்க்கவும்). ஒரு விதத்தில், அத்திமரம், எருசலேமிலிருந்த மாய்மால மத தலைவர்கள் போலிருந்தது: அவர்களுடைய வெற்று போதனைகளும் பரிசுத்தம்பற்றிய வெளியரங்கமான நடவடிக்கைகளும் ஆவிக்குரிய போஷிப்பை கொடுக்கவில்லை. பரிசேயரும் வேத பாரகர்களும் அநேக கட்டளைகளைக் கைக்கொள்ளுவதுபோல் தோன்றியது, இருப்பினும் இரண்டு மாபெரும் கட்டளைகளையும் விட்டுவிட்டனர்: தேவனை நேசிப்பது மற்றும் தன்னைப் போல பிறனை நேசிப்பது (மத்தேயு 22:34–40; 23:23 பார்க்கவும்).

மாறாக, அநேகர் இயேசுவின் போதனைகளில் நல்ல கனியை அடையாளம் கண்டனர். அவர் எருசலேமுக்கு வந்தபோது நீண்ட காலம் எதிர்பார்த்த, “உன் இராஜா வருகிறார்” என பூர்வகால தீர்க்கதரிசனம் சொன்னது போல, அவரது பாதையை அமைக்க மரங்களிலிருந்து வெட்டிய கிளைகளால் நிரப்பி அவரை வரவேற்று களிகூர்ந்தனர் (சகரியா 9:9). இந்த வாரம் நீங்கள் வாசிக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் இரட்சகரின் போதனைகள் மற்றும் பாவநிவாரண பலியின் கனிகளைப்பற்றியும், நீங்கள் எப்படி “மிகுந்த பலனைக்” கொடுக்க முடியும் என்பதைப்பற்றியும் சிந்திக்கவும் (யோவான் 12:24).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

லூக்கா 19:1–10

வெளித்தோற்றத்தைக் கொண்டு கர்த்தர் தீர்ப்பதில்லை, ஆனால் இருதயத்தின் வாஞ்சைகளினாலேயே.

இயேசுவின் நாளில் அநேகர், ஆயக்காரர் அல்லது வரி வசூலிப்போர் நேர்மையற்றவர்கள் மற்றும் ஜனங்களிடத்திலிருந்து திருடினார்கள் என கருதினர். அதினிமித்தம் சகேயு, பிரதான ஆயக்காரனாக, செல்வந்தனாக, மிகவும் சந்தேகத்துக்குரியவனாக இருந்திருக்கலாம். ஆனால் இயேசு, சகேயுவின் இருதயத்தைப் பார்த்தார். சகேயுவின் இருதயத்தைப்பற்றி லூக்கா 19:1–10 என்ன வெளிப்படுத்துகிறது? சகேயு இரட்சகர் மீது அர்ப்பணிப்பை காட்ட என்ன செய்தான் என விவரிக்கிற இந்த வசனத்தின் வார்த்தைகளை நீங்கள் குறிக்கலாம். உங்கள் இருதயத்தின் வாஞ்சைகள் யாவை? சகேயு செய்தது போல இரட்சகரை தேட நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137:9 ஐயும் பார்க்கவும்.

மத்தேயு 23; லூக்கா 20:45–47

இயேசு மாய்மாலத்தைக் கடிந்து கொள்கிறார்.

வேத பாரகர் மற்றும் பரிசேயருடன் இரட்சகரின் உரையாடல், சகேயுவுடன் அவரது உரையாடலிலிருந்து ரசிக்கத்தக்க மாறுபாடாயிருந்தது. தலைவர் உக்டர்ப் விளக்கியதுபோல, “அவர்கள் ஆசீர்வதித்திருக்கக்கூடிய ஜனங்களை எப்போதும் ஒடுக்கி, உலகத்தின் புகழ், செல்வாக்கு மற்றும் செல்வத்தைப் பெறும்படிக்கு நீதிமான்கள் போல தோற்றமளிக்கிற, வேத பாரகர், பரிசேயர் , சதுசேயர் போன்ற மாய்மாலக்காரர்களுக்கு எதிராக நியாயமான கோபத்துடன் [இயேசு] எழுந்தார்” (“On Being Genuine,” Liahona, May 2015, 81).

மத்தேயு 23ல் மாய்மாலத்தை விவரிக்க பல உருவகங்களை இரட்சகர் பயன்படுத்தினார். இந்த உருவகங்களை குறியிட்டு அல்லது பட்டியலிட்டு, மாய்மாலத்தைப்பற்றி அவை போதிப்பதை குறித்துக்கொள்வதைக் கருத்தில் கொள்ளவும். சுவிசேஷத்தின்படி வாழ முயற்சிக்கும்போது நாம் அனைவரும் கையாளும் மாய்மாலத்திற்கும் மனித பலவீனங்களுக்கும் என்ன வித்தியாசம்? இரட்சகரின் போதனைகள் நிமித்தம் வித்தியாசமாக என்ன செய்ய நீங்கள் உணர்த்தப்படுகிறீர்கள்?

Bible Dictionary, “Hypocrite” ஐயும் பார்க்கவும்.

மத்தேயு 21:1–11; மாற்கு 11:1–11; லூக்கா 19:29–44; யோவான் 12:1–8, 12–16

இயேசு கிறிஸ்து என் இராஜா.

இயேசு தனது பாவநிவர்த்தியை நிறைவேற்றுவதற்கு சில நாட்களுக்கு முன்பு எருசலேமுக்கு வந்தபோது, எருசலேமுக்குச் செல்லும் அவரது பாதையில் வஸ்திரங்களையும், கிளைகளையும் போட்டு, வாழ்த்துப்பாடி, தங்கள் இராஜா என அடையாளம் கண்டவர்கள் அவரை அபிஷேகித்து அவரிடம் தங்கள் அர்ப்பணிப்பைத் தெரிவித்தார்கள். இரட்சகரின் வாழ்க்கையில் கடைசி வாரத்தில் தொடங்கிய நிகழ்ச்சிகளைப்பற்றிய உங்கள் புரிதலை பின்வரும் ஆதாரங்கள் எவ்வாறு ஆழப்படுத்துகின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

  • ஒரு இராஜாவை அபிஷேகிக்கும் பூர்வகால எடுத்துக்காட்டு: 2 இராஜாக்கள் 9:1–6, 13

  • வெற்றி சிறந்த பிரவேசத்தின் பூர்வகால தீர்க்கதரிசனம்: சகரியா 9:9

  • ஓசன்னா என்ற வார்த்தையின் அர்த்தம்: “Hosanna” in Guide to the Scriptures (scriptures.ChurchofJesusChrist.org)

  • இரட்சகர் திரும்பவும் வருவார் என்ற தீர்க்கதரிசனங்கள்: வெளிப்படுத்தின விசேஷம் 7:9–12

உங்கள் இராஜாவாகவும் கர்த்தராகவும் இரட்சகரை நீங்கள் எவ்வாறு கனம்பண்ணலாம், ஏற்றுக்கொள்ளலாம்?

Gerrit W. Gong, “Hosanna and Hallelujah—The Living Jesus Christ: The Heart of Restoration and Easter,” Liahona, May 2020, 52–55; “The Lord’s Triumphal Entry into Jerusalem” (video), ChurchofJesusChrist.org பார்க்கவும்.

மத்தேயு 22:34–40

தேவனை நேசிப்பதும், என்னைப்போல பிறனையும் நேசிப்பதுமே இரு மாபெரும் கட்டளைகள்.

நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முயலும்போது, அழுத்தப்பட்டதாக எப்போதாவது உணர்ந்தால், மத்தேயு 22ல் நியாய சாஸ்திரிக்கு இரட்சகரின் வார்த்தைகள் உங்கள் சீஷத்துவத்தை எளிதாக்கவும் கவனிக்கவும் உதவ முடியும். இதைச் செய்ய ஒரு வழி உள்ளது: கர்த்தரின் கட்டளைகள் பலவற்றை பட்டியலிடவும். உங்கள் பட்டியலிலுள்ள ஒவ்வொன்றும் இரு மாபெரும் கட்டளைகளுக்கு எவ்வாறு தொடர்பு ஏற்படுத்துகிறது? இரு மாபெரும் கட்டளைகளுக்கு கவனம் செலுத்துவது மற்றவைகளை காத்துக்கொள்ள உங்களுக்கு எப்படி உதவுகிறது?

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

மத்தேயு 21:12–14.மத்தேயு 21:12–14 ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளும் செயல்களும் ஆலயத்தைப்பற்றி அவர் எப்படி உணர்ந்தார் என்பதைக் காட்டுகிறது? ஆலயத்தைப்பற்றி நாம் எவ்வாறு உணர்கிறோம் என்பதை நாம் எவ்வாறு காட்டுகிறோம்? நம் வீட்டை இன்னும் ஆலயம்போல அதிகமாக ஆக்குவதற்கு, நம் வாழ்க்கையிலிருந்து எதை “துரத்தலாம்” (வசனம் 12) “I Love to See the Temple” (Children’s Songbook, 95) போன்ற ஆலயத்தைப்பற்றிய பாடலைப் பாடுவதைக் கருத்தில் கொள்ளவும்.

மத்தேயு 21:28–32.இரண்டு மகன்கள் உள்ள மனிதனின் உவமையிலிருந்து என்ன பாடங்கள் உங்கள் குடும்பத்துக்கு உதவக்கூடும்? உதாரணமாக, உண்மையான கீழ்ப்படிதல் மற்றும் மனந்திரும்புதலின் முக்கியத்துவத்தை கலந்துரையாட இக்கதையை நீங்கள் உபயோகிக்கலாம். ஒருவேளை உவமையை நாடகமாக்க உங்கள் குடும்பத்தினர் வசனம் எழுதலாம், பல்வேறு வேடங்களில் நடிக்க முறை எடுக்கலாம்.

மத்தேயு 22:15–22; லூக்கா 20:21–26பிள்ளைகள் இயேசுவின் “உருவமும் மேலெழுத்தும்” கொண்ட போலி நாணயங்களை உருவாக்கி மகிழலாம். நாம் அவருக்குக் கொடுக்கக்கூடிய சில “தேவனுடையதை” (மத்தேயு 22:21) நாணயங்களின் பின்புறத்தில் அவர்கள் எழுதலாம். இரட்சகரின் “உருவம் மற்றும் மேலெழுத்து” நம்மேல் என்றால் என்ன என்பதைப்பற்றியும் நீங்கள் பேசலாம் (மத்தேயு 22:20; மோசியா 5:8; ஆல்மா 5:14 ஐயும் பார்க்கவும்).

யோவான் 12:1–8.இரட்சகர் மீது அவளது அன்பை மரியாள் எப்படி காட்டினாள்? அவர் மீது நமது அன்பை நாம் எப்படி காட்டுகிறோம்?

படம்
இயேசுவின் பாதங்களை தன் முடியால் ஒரு பெண் துடைத்தல்

இயேசுவின் பாதங்களை கழுவுதல்–ப்ரியன் கால்

யோவான் 12:42-43.கிறிஸ்துவில் நமது நம்பிக்கையை தெரிவித்தல் அல்லது காத்தலிலிருந்து சில சமயங்களில் நம்மை அதைரியப்படுத்துகிற சமூக விளைவுகள் என்ன? சமூக அழுத்தத்துக்கு இடங்கொடுக்காத ஜனங்களின் எடுத்துக்காட்டுக்கு, தானியேல் 1:3–20; 3; 6; யோவான் 7:45–53; 9:1–38; மற்றும் மோசியா 17:1–4 பார்க்கவும். தங்கள் மத நம்பிக்கைகளை அவர்கள் தெரிவிக்கும்போது, அல்லது காத்துக்கொள்ளும்போது, பிறரிடம் நாம் எப்படி மரியாதை காட்ட முடியும்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Rejoice, the Lord Is King!,” Hymns, no. 66.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

குடும்ப அங்கத்தினர்களை ஈடுபடுத்த கலையை பயன்படுத்தவும். “The Gospel Art Book மற்றும் Gospel Media Library ChurchofJesusChrist.org கொள்கைகள் அல்லது நிகழ்வுகளை [உங்கள் குடும்பத்தினர்] கற்பனை செய்ய உதவுகிற பல படங்களும் காணொலிகளும் கொண்டுள்ளது” (Teaching in the Savior’s Way, 22).

படம்
கிறிஸ்துவின் வெற்றி சிறந்த பிரவேசம்

வெற்றி சிறந்த பிரவேசம்–வால்ட்டர் ரானே

அச்சிடவும்