புதிய ஏற்பாடு 2023
மே 8–14. மத்தேயு 19–20; மாற்கு 10; லூக்கா 18: “இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன?”


“மே 8–14. மத்தேயு 19–20; மாற்கு 10; லூக்கா 18: ‘இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன ’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“மே 8–14. மத்தேயு 19–20; மாற்கு 10; லூக்கா 18,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிப்பட்டவர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
திராட்சைத் தோட்டத்தில் வேலைக்காரர்கள்

மே 8–14

மத்தேயு 19–20; மாற்கு 10; லூக்கா 18

“இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன ?”

மத்தேயு 19–20; மாற்கு 10; மற்றும் லூக்கா 18ஐ வாசித்து தியானித்து, நீங்கள் பெறுகிற உணர்த்துதல்களுக்கு கவனம் செலுத்தவும். அந்த உணர்த்துதல்களை குறித்து வைத்து, அவற்றில் நீங்கள் எவ்வாறு செயல்படுவீர்களென தீர்மானிக்கவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

ஒரு கேள்வியை இரட்சகரிடத்தில் கேட்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது எதுவாயிருக்கும்? ஒரு குறிப்பிட்ட இளம் ஆஸ்திமான் முதன்முறையாக இரட்சகரை சந்தித்தபோது, “நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையை செய்யவேண்டும்?” என அவன் கேட்டான் (மத்தேயு 19:16). அந்த இளம் ஆஸ்திமான் ஏற்கனவே செய்த நன்மையான காரியங்களுக்காக பாராட்டுதலையும், இன்னமும் அதிகமாய் செய்வதற்காக அன்பான ஊக்குவித்தல் இரண்டையும் இரட்சகரின் பதில் காட்டியது. நித்திய ஜீவனுக்கான சாத்தியத்தைப்பற்றி நாம் தியானிக்கும்போது, நாம் செய்யவேண்டிய அதிகமானதிருக்கிறதா என நாம் இதைப்போன்று வியப்புறலாம். நமது சொந்த வழியில் “இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன?” என நாம் கேட்கும்போது. (மத்தேயு 19:20), அந்த இளம் ஆஸ்திமானுக்கு அவருடைய பதிலைப்போலவே கர்த்தர் நமக்கும் தனிப்பட்ட முறையில் பதிலளிக்க முடியலாம். நாம் செய்யவேண்டுமென கர்த்தர் நம்மிடம் எதைக் கேட்டாலும் நமது நீதியைவிட அதிகமாக அவரை நம்புகிறோம் என்ற அவருடைய பதிலின்படி செயல்படுவது (லூக்கா 18:9–14 பார்க்கவும்) மற்றும் “சிறுபிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்வது” எப்போதுமே அவசியமாயிருக்கிறது (லூக்கா 18:17; 3 நேபி 9:22 ஐயும் பார்க்கவும்).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

மத்தேயு 19:3–9; மாற்கு 10:2–12

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான திருமணம் தேவனால் நியமிக்கப்பட்டது.

இரட்சகருக்கும் பரிசேயருக்குமிடையிலான இந்த உரையாடல், குறிப்பாக திருமணத்தைப்பற்றி இரட்சகர் போதித்த சில பதிவுகளில் ஒன்றாகும். மத்தேயு 19:3–9 மற்றும் மாற்கு 10:2–12, வாசித்த பின்பு, திருமணத்தைப்பற்றி கர்த்தருடைய பார்வைகளை தொகுக்க நீங்கள் உணரும்படி பல்வேறு வாசகங்களை ஒரு பட்டியலாக்கவும். பின்பு “Marriage” (Gospel Topics, topics.ChurchofJesusChrist.org)ல், காணப்படுகிற சில ஆதாரங்களைப் படித்து, உங்கள் பட்டியலுக்கு கூடுதல் வாசகங்களைச் சேர்க்கவும். பிதாவின் இரட்சிப்பின் திட்டத்தைப்பபற்றிய உங்கள் அறிவு திருமணத்தைப்பற்றி நீங்கள் நினைக்கும் மற்றும் உணரும் விதத்தை எவ்வாறு பாதிக்கிறது?

மத்தேயு 19:3–9; மாற்கு 10:2–12

விவாகரத்து ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறதில்லை அல்லது விவாகரத்து செய்துகொண்டவர்கள் மறுதிருமணம் செய்துகொள்ளக்கூடாது என இயேசு போதித்தாரா?

திருமண உறவு நித்தியத்துக்குமானது என்பதை பரலோக பிதா விரும்புகிறாரென விவாகரத்தைக் குறித்துப் பேசும்போது, தலைவர் டாலின் எச். ஓக்ஸ் போதித்தார். இருப்பினும், விவாகரத்து சில நேரங்களில் அவசியம் என்பதை தேவன் புரிந்துகொள்கிறார். “உயர் நியாயப்பிரமாணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற ஒழுக்கக்கேட்டின் கறையில்லாமல் விவாகரத்தான நபர்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ள கர்த்தர் அனுமதிக்கிறார் என தலைவர் ஓக்ஸ் விளக்கினார். விவாகரத்தான ஒரு அங்கத்தினர் மிகமோசமான மீறுதல்களைச் செய்யாதவரை, மற்ற அங்கத்தினர்களுக்கு பொருந்துகிறதைப்போல அதே தகுதி தரங்களின் கீழ் ஆலய பரிந்துரைக்கு அவன் அல்லது அவள் தகுதியுள்ளவராகிறார்” என தலைவர் ஓக்ஸ் விவரிக்கிறார். (“Divorce,” Liahona, May 2007, 70).

மத்தேயு 19:16–22; மாற்கு 10:17–22; லூக்கா 18:18–23

நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ள நான் என்ன செய்யவேண்டுமென நான் கர்த்தரிடம் கேட்டால் அவர் எனக்குப் போதிப்பார்.

இளம் ஆஸ்திமானின் விவரம் ஒரு விசுவாசமுள்ள, வாழ்நாள் சீஷனுக்குக்கூட இடைநிறுத்தம் கொடுக்கமுடியும். மாற்கு 10:17–22 ஐ நீங்கள் வாசிக்கும்போது இளம் ஆஸ்திமானின் விசுவாசத்திற்கும் நேர்மைக்கும் என்ன நிரூபணத்தை நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள்? இந்த வாலிபனைப்பற்றி கர்த்தர் எப்படி உணர்ந்தார்?

இந்த விவரம் “இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன?” என கேட்க உங்களைத் தூண்டலாம். (மத்தேயு 19:20). நம்மிடம் உள்ள குறையை ஈடுசெய்ய கர்த்தர் எவ்வாறு உதவுகிறார்? (ஏத்தேர் 12:27 பார்க்கவும்). அவருடைய திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும்போதும் நாம் முன்னேற முற்படும்போதும் நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள என்ன செய்ய முடியும்?

Larry R. Lawrence, “What Lack I Yet?,” Liahona, Nov. 2015, 33–35; S. Mark Palmer, “Then Jesus Beholding Him Loved Him,” Liahona, May 2017, 114–16 ஐயும் பார்க்கவும்.

மத்தேயு 20:1–16

அவர்கள் சுவிசேஷத்தை எப்போது ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது பொருட்டின்றி, நித்திய ஜீவனின் ஆசீர்வாதத்தை யாவரும் பெறமுடியும்.

திராட்சைத் தோட்டத்திலுள்ள வேலைக்காரர்களில் யாராவது ஒருவரின் அனுபவத்தை, உங்களால் சம்பந்தப்படுத்த முடியமா? இந்த பத்தியில் நீங்களாகவே என்ன பாடங்களை நீங்கள் கண்டுபிடித்தீர்கள்? இந்த உவமையை பயன்படுத்த புதிய வழிகளைப் பார்க்க, மூப்பர் ஜெப்ரி ஆர்.ஹாலண்டின் செய்தி “The Laborers in the Vineyard” (Liahona, May 2012, 31–33) உங்களுக்கு உதவக்கூடும் என்ன கூடுதலான உணர்த்துதல்களை பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்?

படம்
தாழ்மையான மனிதனும் பரிசேயனும்

ஆலயத்தில் மனந்திரும்பிய ஆயக்காரனும் சுயநீதிக்காரனான பரிசேயனும்–ப்ராங்க் ஆடம்ஸ்

லூக்கா 18:9–14

நான் என் சொந்த நீதியை அல்ல, தேவனின் இரக்கத்தை நம்ப வேண்டும்.

இந்த உவமையில் உள்ள இரண்டு ஜெபங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை நீங்கள் எவ்வாறு சுருக்கமாகக் கூறுவீர்கள்? இந்த கதையில் உள்ள ஆயக்காரனைப்போல அதிகமாகவும், பரிசேயனைப் போல குறைவாகவும் இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று சிந்தியுங்கள்.

பிலிப்பியர் 4:11–13; ஆல்மா 31:12–23 ; 32:12–16 ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

மாற்கு 10:13–16, லூக்கா 18:15–17.இந்த வசனங்களில் குடும்ப உறுப்பினர்கள் விவரத்தைச் சிந்திக்க உதவ, “I Think When I Read That Sweet Story” (Children’s Songbook, 56) நீங்கள் இதுபோன்ற ஒரு தொடர்புடைய பாடலை ஒன்றாகப் பாடலாம் . இயேசு ஆசீர்வதித்த பிள்ளைகளிடையே இருப்பது போல இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? “சிறுபிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்வது” என்றால் என்ன? (மாற்கு 10:15).

மாற்கு 10:23–27.ஆஸ்திகளை வைத்திருப்பதற்கும் ஆஸ்திகளில் நம்பிக்கை வைத்திருப்பதற்கும் இடையில் என்ன வித்தியாசமிருக்கிறது? (மாற்கு 10:23–24 பார்க்கவும்). வசனம் 27 நீங்கள் வாசிக்கும்போது ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பை சுட்டிக்காட்ட நீங்கள் விரும்பலாம்: “ஆஸ்திகளில் நம்பிக்கை வைத்திருக்கிற மனிதர்களுக்கு இது கூடாத காரியம், ஆனால் தேவனில் நம்பிக்கை வைத்து, என்னிமித்தம் எல்லாவற்றையும் விட்டு வருகிற மனிதர்களுக்கு கூடாத காரியமல்ல, ஏனெனில் இத்தகைய காரியங்கள் எல்லாம் கூடும்” (மாற்கு 10:27, அடிக்குறிப்பு a). ஒரு குடும்பமாக, பொருள்சார்ந்த காரியங்களை விட நாம் தேவனை அதிகம் நம்புகிறோம் என்பதை எப்படி காட்டுகிறோம்?

(மத்தேயு 20:1–16).மத்தேயு 20:1–16லிலுள்ள கொள்கைகளை விளக்க, சிறியதூர ஓட்டம் போன்ற ஒரு எளிய போட்டியை நீங்கள் வைக்கலாம். போட்டியை எல்லோரும் முடித்த பின்பு, போட்டியை கடைசியாக முடித்த நபருடன் ஆரம்பித்து, முதலாவதாக முடித்த நபரோடு முடித்து ஒரே மாதிரியான பரிசை எல்லோருக்கும் வழங்கவும். பரலோக பிதாவின் திட்டத்திலுள்ள நித்திய ஜீவனின் ஆசீர்வாதங்களை யார் பெறுகிறார்கள் என்பதைப்பற்றி இது நமக்கு என்ன போதிக்கிறது?

மத்தேயு 20:25–28; மாற்கு 10:42–45“உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்” என்ற சொற்றொடரின் அர்த்தம் என்ன? (மத்தேயு 20:27). இந்த கொள்கைக்கு இயேசு கிறிஸ்து எவ்வாறு எடுத்துக்காட்டாயிருந்தார்? நமது குடும்பத்தில், நமது தொகுதியில் அல்லது கிளையில், நமது அண்டைவீட்டாரிடத்தில் அவருடைய எடுத்துக்காட்டை நாம் எவ்வாறு பின்பற்றமுடியும்?

லூக்கா 18:1–14.இந்த வசனங்களிலுள்ள இரண்டு உவமைகளிலிருந்து ஜெபத்தைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Dearest Children, God Is Near You,” Hymns, no. 96.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

உங்களுக்கு பொருந்துகிற நேரத்தை கண்டறியவும். தடங்கலில்லாமல் எப்போது உங்களால் வேதங்களைப் படிக்க முடியுமென்பதை அறிந்துகொள்வது வழக்கமாக எளிதாயிருக்கும். உங்களுக்கு பொருந்துகிற நேரத்தை கண்டறியவும், அந்த நேரத்தில் தொடர்ந்து படிக்க உங்களால் முடிந்த சிறந்ததைச் செய்யவும்.

படம்
கிறிஸ்துவும் இளம் ஆஸ்திமானும்

கிறிஸ்துவும் இளம் ஆஸ்திமானாகிய ஆட்சியாளன் – ஹெய்ன்ரிச் ஹோப்மான்

அச்சிடவும்