புதிய ஏற்பாடு 2023
மே 29– ஜூன் 4. மத்தேயு 26; மாற்கு 14; யோவான் 13: “நினைவாக”


“மே 29–ஜூன் 4. மத்தேயு 26; மாற்கு 14; யோவான் 13: ‘நினைவாக’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“மே 29–ஜூன் 4. மத்தேயு 26; மாற்கு 14; யோவான் 13,” என்னைப் பின்பற்றி வாருங்கள் —தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும், புதிய ஏற்பாடு: 2023

கடைசி இராப்போஜனம்

என் நினைவாக–வால்ட்டர் ரானே

மே 29–ஜூன் 4

மத்தேயு 26; மாற்கு 14; யோவான் 13

“நினைவாக”

மத்தேயு 26; மாற்கு 14; மற்றும் யோவான் 13ல், விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் பெறும் எந்த எண்ணங்களுக்கும் கவனம் செலுத்தவும், குறிப்பாக அந்த எண்ணங்கள் இயேசு கிறிஸ்துவின் மீதான உங்கள் விசுவாசத்தையும், அவருக்கான உங்கள் அர்ப்பணிப்பையும் ஆழமாக்கும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

தாம் மரிப்பதற்கு முந்தைய நாள், இயேசு தம்முடைய சீஷர்களுக்கு தம்மை நினைவுகூர சிலவற்றைக் கொடுத்தார். “அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்” (மத்தேயு 26:26–28).

இது சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, நம்மில் பெரும்பாலோர் ஒருபோதும் பார்க்காத இடத்தில், நம்மில் சிலருக்கு புரியும் மொழியில். ஆனால் இப்போது, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், நம்முடைய சொந்த கூடுமிடங்களில், ஆசாரியத்துவம் தரித்தவர்கள், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செயல்படுவதற்கு, அவர் முன்பு செய்ததைச் செய்ய அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அப்பத்தையும் தண்ணீரையும் எடுத்து, அதை ஆசீர்வதித்து, அவருடைய சீஷர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கிறார்கள். இது ஒரு எளிய செயல், அப்பம் மற்றும் தண்ணீர் அருந்துவதை விட எளிமையான, அடிப்படையான எதுவும் இருக்க முடியுமா? ஆனால் அந்த அப்பமும் தண்ணீரும் நமக்கு பரிசுத்தமானவை, ஏனென்றால் அவை அவரை நினைவில் கொள்ள உதவுகின்றன. “நான் அவரை ஒருபோதும் மறக்க மாட்டேன்” என்று சொல்லும் நமது வழி அவை. “அவரது போதனைகள் மற்றும் அவரது வாழ்க்கையைப்பற்றி நான் படித்ததை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.” மாறாக, “அவர் எனக்காகச் செய்ததை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்” என்று நாம் கூறுகிறோம். “நான் உதவிக்காக கூக்குரலிட்டபோது அவர் என்னை எப்படி காப்பாற்றினார் என்பதை என்னால் மறக்க முடியாது.” மேலும் “அவர் என்னிடம் செய்த அர்ப்பணிப்பையும், அவருக்கான எனது அர்ப்பணிப்பையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன், என்பது நாம் செய்து கொண்ட உடன்படிக்கை.”

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

மத்தேயு 26:6–13; மாற்கு 14:3–9

“ அவள் … என்னை அடக்கம்பண்ணுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச வந்தாள்.”

இந்த வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ள பெண் ஒரு தாழ்மையான வழிபாட்டின் செயலால், இயேசு யார் என்றும் அவர் என்ன செய்யப் போகிறார் என்றும் தனக்குத் தெரியும் என்பதைக் காட்டினாள்.(மத்தேயு 26:12 பார்க்கவும்). அவளுடைய செயல்கள் இரட்சகருக்கு மிகவும் அர்த்தமுள்ளவைகளாக இருந்தன என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? (வசனம் 13 பார்க்கவும்). இந்தப்பெண் மற்றும் அவளது விசுவாசத்தைப்பற்றி உங்களைக் கவர்வது எது? அவளுடைய முன்மாதிரியை நீங்கள் எவ்வாறு பின்பற்றலாம் என்று சிந்தியுங்கள்.

யோவான் 12:1–8 ஐயும் பார்க்கவும்.

மத்தேயு 26:20–22; மாற்கு 14:17–19

“ஆண்டவரே நானோ?”

இந்த வசனங்களில் கர்த்தரிடம் கேட்ட சீஷர்களைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? அவர்கள் அதை ஏன் கேட்டார்கள் என நினைக்கிறீர்கள்? “ஆண்டவரே நானோ?” என நீங்கள் எப்படி கேட்பீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

Dieter F. Uchtdorf, “Lord, Is It I?,” Liahona, Nov. 2014, 56–59 ஐயும் பார்க்கவும்.

மத்தேயு 26:26–29; மாற்கு 14:22–25

திருவிருந்து, இரட்சகரை நினைவுகூறுவதற்கான ஒரு வாய்ப்பு.

இரட்சகர் தம் சீஷர்களுக்கு திருவிருந்தை அறிமுகப்படுத்தியபோது, அவர்களுக்கு என்ன எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் இருந்திருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்கிறீர்கள்? மத்தேயு 26:26–29 மற்றும் மாற்கு 14:22–25ல் இந்த அனுபவத்தைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது இதைப்பற்றி சிந்தியுங்கள். அவரை நினைவுகூர இயேசு ஏன் இந்த வழியைத் தேர்ந்தெடுத்தார் என்று நினைக்கிறீர்கள்? திருவிருந்தின் போது நீங்கள் பெற்ற அனுபவங்களைப்பற்றியும் நீங்கள் சிந்திக்கலாம். உங்கள் அனுபவத்தை மிகவும் பரிசுத்தமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்ற நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா?

இந்த வசனங்களை வாசித்து சிந்தித்த பிறகு, இரட்சகரைப்பற்றி நினைவில் கொள்ள உணர்த்தப்பட்ட சில காரியங்களை நீங்கள் எழுதலாம். நீங்கள் அடுத்த முறை திருவிருந்தை எடுக்கும்போது இந்த காரியங்களை மறுபரிசீலனை செய்யலாம். “”எப்போதும் அவரை நினைவில் கொள்வதற்கு” ஒரு வழியாக நீங்கள் மற்ற நேரங்களில் அவற்றை மதிப்பாய்வு செய்யலாம். (மரோனி 4:3).

லூக்கா 22:7–39; 3 நேபி 18:1–13; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:76–79; Gospel Topics, “Sacrament,” topics.ChurchofJesusChrist.org; “Always Remember Him” (video), ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

யோவான் 13:1–17

பிறருக்கு தாழ்மையாக சேவை செய்வதற்கு இரட்சகர் நமது உதாரணம்.

இயேசுவின் காலத்தில், மற்றொரு நபரின் கால்களைக் கழுவுவது வேலைக்காரர்களின் பணியாக இருந்தது, தலைவர்களின் பணி அல்ல. ஆனால் இயேசு தம்முடைய சீஷர்கள் வழிநடத்துதல் மற்றும் சேவை செய்வது என்றால் என்ன என்பதைப்பற்றி வித்தியாசமாக சிந்திக்க வேண்டும் என்று விரும்பினார். யோவான் 13:1–17லிலுள்ள இரட்சகரின் வார்த்தைகள் மற்றும் செயல்களிலிருந்து நீங்கள் என்ன செய்திகளைக் காண்கிறீர்கள்? உங்கள் கலாச்சாரத்தில், மற்றவர்களின் கால்களைக் கழுவுவது சேவை செய்வதற்கான வழக்கமான வழியாக இருக்காது. ஆனால் இரட்சகரின் தாழ்மையான சேவையின் முன்மாதிரியைப் பின்பற்ற நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

அவருடைய அப்போஸ்தலர்களுடனான இந்த பரிசுத்தமான நேரத்தில் இயேசு அறிந்த மற்றும் உணர்ந்த விஷயங்களைக் கவனிப்பது சுவாரஸ்யமாக இருக்கலாம் (வசனங்கள் 1 மற்றும் 3 பார்க்கவும்). இந்த உள்ளுணர்வுகள் இரட்சகரைப்பற்றி என்ன புரிந்துகொள்ள உங்களுக்கு உதவுகின்றன?

லூக்கா 22:24–27 ஐயும் பார்க்கவும்.

யோவான் 13:34–35

நான் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர் என்பதற்கான அடையாளம், மற்றவர்கள் மீது எனக்குள்ள அன்பு.

முன்பு, “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக,” என்று இயேசு கட்டளையிட்டிருந்தார். (மத்தேயு 22:39). இப்போது அவர் “ஒரு புதிய கட்டளையை” கொடுத்தார். இயேசு உங்களை நேசிப்பது போல் மற்றவர்களை நேசிப்பதன் அர்த்தம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ( 13:34 பார்க்கவும்).

நீங்கள் இயேசு கிறிஸ்துவின் சீஷர் என்பதை மற்றவர்கள் எப்படி அறிவார்கள் என்பதையும் நீங்கள் சிந்திக்கலாம். ஒரு கிறிஸ்தவராக அன்பு உங்கள் வரையறுக்கும் பண்பு என்பதை நீங்கள் எப்படி உறுதிப்படுத்திக் கொள்ளலாம்?

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

மத்தேயு 26:26–29; மாற்கு 14:22–25ஒவ்வொரு வாரமும் திருவிருந்தின்போது உங்கள் குடும்ப அனுபவம் எதைப் போலிருந்தது? முதல் திருவிருந்தைப்பற்றி வாசிப்பது திருவிருந்தின் முக்கியத்துவம் மற்றும் தங்கள் ஆராதனையை அதிக அர்த்தமுள்ளதாக குடும்பத்தினர் ஆக்கக்கூடிய வழிகளைப்பற்றியும் ஒரு கலந்துரையாடல் செய்ய உணர்த்தலாம். Passing the Sacrament (Gospel Art Book, no. 108) படத்தை பார்வைக்கு வைத்து திருவிருந்துக்கு முன்பு, அப்போது மற்றும் பிறகு நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைப்பற்றி கருத்துக்களை ஒருவருக்கொருவருடன் பகிர்ந்துகொள்ளவும்.

பெண் திருவிருந்து எடுத்தல்

இயேசு கிறிஸ்துவை நினைவில் கொள்ள திருவிருந்து நமக்குதவுகிறது.

மத்தேயு 26:30.இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் செய்ததைப் போல ஒரு பாடலை, ஒருவேளை ஒரு திருவிருந்துப் பாடலைப் பாடுவதைக் கருத்தில் கொள்ளவும், . அந்தச் சமயத்தில் இயேசுவுக்கும் அவருடைய அப்போஸ்தலர்களுக்கும் ஒரு பாடலைப் பாடுவது எப்படி ஆசீர்வாதமாக இருந்திருக்கும்? பாடல்கள் நமக்கு எவ்விதம் ஆசீர்வாதமாக இருக்கின்றன?

யோவான் 13:1–17.நீங்கள் இந்த வசனங்களைப் படிக்கும்போது, இந்த குறிப்பின் முடிவில் உள்ள படத்தை உங்கள் குடும்பத்தினருக்குக் காட்ட விரும்பலாம். இரட்சகர் தனது செயல்களால் என்ன சத்தியங்களைக் கற்பித்தார்? இந்த உண்மைகளைப் புரிந்துகொள்ள படத்தில் உள்ள என்ன விவரங்கள் உதவுகின்றன? இந்தச் சத்தியங்களின்படி வாழ்வது தங்களுக்கு எப்படி மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்பதை ஒருவேளை குடும்ப அங்கத்தினர்கள் பகிர்ந்துகொள்ளலாம் (யோவான் 13:17 பார்க்கவும்).

யோவான் 13:34–35.இந்த வசனங்களை வாசித்த பின்னர், நீங்கள் இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் என்பதை மற்றவர்கள் எப்படி அறிவார்கள் என்பதைப்பற்றி நீங்கள் ஒன்றாகப் பேசலாம். தம்மைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறியப்பட வேண்டும் என்று இரட்சகர் விரும்புகிறார்? இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள் என்று மற்றவர்களிடம் அன்பு காட்டும் நபர்களைப்பற்றி பேசும்படி குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் கேட்கலாம். ஒரு குடும்பமாக நீங்கள் அதிக அன்பைக் காட்டுவதற்கான வழிகளையும் நீங்கள் விவாதிக்கலாம்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Love One Another,” Children’s Songbook, 136.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

சிந்திக்கவும். வேதங்களில் மற்ற வாசிப்பு புத்தகங்களைப் போலவே நாம் மிகவும் சாதாரணமாகப் படித்தால் நாம் தவறவிடக்கூடிய ஆவிக்குரிய அர்த்தங்கள் வேதங்களில் உள்ளன. ஒரு அத்தியாயத்தை முடிக்க அவசரப்பட வேண்டாம். நீங்கள் படிப்பதைப்பற்றி ஆழமாக சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள்.

இயேசு சீஷர்களின் கால்களைக் கழுவுதல்

ராஜ்யத்தில் மிகப்பெரியவன்- ஜே கிர்க் ரிச்சர்ட்ஸ்