புதிய ஏற்பாடு 2023
ஜூன் 12–18. லூக்கா 22; யோவான் 18: “என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது”


“ஜூன் 12–18. லூக்கா 22; யோவான் 18: ‘என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“ஜூன் 12–18. லூக்கா 22; யோவான் 18,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
கெத்செமனேயில் கிறிஸ்துவும் சீஷர்களும்

கெத்சமனே தோப்பு– டெரிக் ஹெக்ஸ்டட்

ஜூன் 12–18

லூக்கா 22; யோவான் 18

“என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது”

லூக்கா 22 மற்றும் யோவான் 18ஐ இந்த வாரத்தில் வாசிக்க நேரம் எடுத்துக் கொள்ளவும். நீங்கள் வாசித்ததைப்பற்றி சிந்தித்து ஜெபிக்கவும். இதைச் செய்வதன் மூலம், வேதவாக்கியங்கள் உண்மை என்று உங்கள் இருதயத்திற்கு சாட்சியாக ஆவியானவருக்கு வாய்ப்பளிக்க முடியும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

கெத்செமனே தோட்டத்தில் இயேசு கிறிஸ்துவின் பாடுகளுக்கு மூன்று சாட்சிகள் மட்டுமே இருந்தனர் மற்றும் அதிகமான நேரத்தில் அவர்கள் தூங்கினர். தோட்டத்திலும் பின்னர் சிலுவையிலும், அந்த சமயத்தில் கிட்டத்தட்ட உயிரோடிருந்தவர்களில் ஒருவரும் என்ன நடக்கிறது என அறியாவிட்டாலும், எப்போதும் வாழ்ந்திருக்கிற ஒவ்வொருவரின் பாவங்களையும், வேதனைகளையும், பாடுகளையும், இயேசு தன் மீது எடுத்துக் கொண்டார். நித்தியத்தின் மிக முக்கிய நிகழ்வுகள் உலகத்தின் அதிக கவனமின்றி கடந்து செல்கிறது. ஆனால் பிதாவாகிய தேவன் அறிவார். அவரது விசுவாசமிக்க குமாரனின் விண்ணப்பத்தை அவர் கேட்டார்: “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கும்படிச் செய்யும் ஆயினும் என்னுடைய சித்தப்படியல்ல, உம்முடைய சித்தப்படியே ஆகக்கடவது. அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பெலப்படுத்தினான்” (லூக்கா 22:42–43). இந்த தன்னலமற்ற செயல் மற்றும் கீழ்ப்படிதலை பார்க்க நாம் நேரில் அங்கிருக்கவில்லையானாலும், ஒரு வகையில் நாம் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்திக்கு சாட்சிகளாக இருக்கிறோம். நாம் மனந்திரும்பி நமது பாவங்களுக்காக மன்னிப்பு பெறும் ஒவ்வொரு முறையும் இரட்சகரின் பெலப்படுத்தும் வல்லமையை நாம் உணரும் ஒவ்வொரு முறையும், கெத்செமனே தோட்டத்தில் நடந்த உண்மையைப்பற்றி நாம் சாட்சியளிக்க முடியும்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

லூக்கா 22:31–34, 54–62; யோவான் 18:17–27

மனமாற்றம் என்பது ஒரு நடந்து கொண்டிருக்கும் முறை.

இரட்சகருடன் பேதுரு பெற்ற அனுபவங்கள், அவன் கண்ட அற்புதங்கள் மற்றும் அவன் கற்ற கோட்பாட்டைப்பற்றி சிந்திக்கவும். அப்படியானால் இரட்சகர் பேதுருவிடம் “நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” என ஏன் சொல்ல வேண்டும்? (லூக்கா 22:32; சாய்வெழுத்து சேர்க்கப்பட்டது). இதை நீங்கள் சிந்திக்கும்போது, சாட்சி பெறுவது மற்றும் உண்மையாகவே மனமாறுவதற்கும் இடையே உள்ள வித்தியாசமே மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் போதித்ததை கருத்தில் கொள்வது உதவக்கூடும்(“Converted unto the Lord,” Liahona, Nov. 2012, 106–9 பார்க்கவும்).

லூக்கா 22:31–34, 54–62ல் (யோவான் 18:17–27 ஐயும் பார்க்கவும்),பேதுருவின் அனுபவங்களைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, உங்கள் சொந்த மனமாற்றத்தைப்பற்றி சிந்திக்கவும். பேதுரு போலவே, நீங்கள் எப்போதாவது, “[இரட்சகரோடு] சிறைக்குச் செல்லவும், மரணம் அடையவும் தயாராக இருக்கிறீர்கள்” என்று நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? (லூக்கா 22:33). அந்த உணர்வுகள் ஏன் சில சமயங்களில் மங்குகின்றன? இரட்சகரை மறுக்கவோ அல்லது சாட்சியாக்கவோ தினசரி வாய்ப்புகள் உள்ளன; அவருக்கு தினசரி சாட்சியாக இருக்க நீங்கள் என்ன செய்வீர்கள்? பேதுருவின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன பிற பாடங்களைக் கற்றுக்கொள்கிறீர்கள்?

புதிய ஏற்பாட்டை நீங்கள் தொடர்ந்து படிக்கும்போது, பேதுருவின் தொடர்ச்சியான மனமாற்றத்திற்கான ஆதாரங்களைக் கவனியுங்கள். “உன் சகோதரர்களைப் பலப்படுத்த” கர்த்தரின் கட்டளையை அவன் ஏற்றுக்கொண்ட விதங்களையும் கவனியுங்கள். (லூக்கா 22:32; அப்போஸ்தலருடைய நடபடிகள் 3–4 பார்க்கவும்).

மாற்கு 14:27–31 ஐயும் பார்க்கவும்.

லூக்கா 22:39–46

இரட்சகர் கெத்செமனேயில் எனக்காக பாடனுபவித்தார்.

தலைவர் ரசல் எம். நெல்சன், “இரட்சகர் மற்றும் அவரது பாவநிவர்த்தியைப்பற்றி கற்றுக்கொள்ள நேரம் ஒதுக்க” நம்மை அழைக்கிறார் (“Drawing the Power of Jesus Christ into Our Lives,” Liahona, May 2017, 40).

தலைவர் நெல்சனின் அழைப்பை ஏற்க நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவும். இந்த வசனங்களில் விவரிக்கப்பட்டபடி கெத்செமனேயில் இரட்சகரின் பாடுகளைப்பற்றி ஜெபத்துடன் சிந்தித்து, மனதில் வருகிற எண்ணங்களையும் கேள்விகளையும் எழுதி நீங்கள் தொடங்கலாம்.

இரட்சகர் மற்றும் அவரது பாவநிவர்த்தியைப்பற்றிய இன்னும் ஆழமான படிப்புக்கு, இதுபோன்ற கேள்விகளின் பதில்களுக்கு பிற வசனங்களை தேட முயலவும்:

கெத்செமனே தோட்டத்தில் என்ன நடந்தது என நீங்கள் கற்கும்போது, கெத்செமனே ஒலிவ மரங்களின் தோட்டம், விளக்குக்கும், உணவுக்கும், குணப்படுத்தலுக்கும் கூட பயன்படுத்தப்பட ஒலிவ பழங்களை நசுக்கி எண்ணெய் பிழிகிற ஒரு ஒலிவ ஆலையும் இருந்தது என அறிவது மகிழ்ச்சியளிக்கும் (லூக்கா 10:34 பார்க்கவும்). ஒலிவ எண்ணெயைப் பிரித்தெடுக்கும் செயல்முறை கெத்செமனேயில் இரட்சகர் நமக்காகச் செய்ததை எவ்வாறு அடையாளப்படுத்தலாம்? சில ஆலோசனைகளுக்கு, D. Todd Christofferson, “Abide in My Love,” Liahona, Nov. 2016, 50–51 பார்க்கவும்.

மத்தேயு 26:36–46; மாற்கு 14:32–42 ஐயும் பார்க்கவும்.

யோவான் 18:28–38

இரட்சகரின் “இராஜ்யம் இவ்வுலகத்துக்கு உரியதல்ல.”

ஒரு அரசியல் தலைவராக, பொந்தியு பிலாத்து இந்த உலகின் வல்லமை மற்றும் ராஜ்யங்களை நன்கு அறிந்திருந்தான். ஆனால் இயேசு மிகவும் வித்தியாசமான ராஜ்யத்தைப்பற்றி பேசினார். இரட்சகரின் வாழ்க்கையைப்பற்றி நீங்கள் படித்ததைத் திரும்பிப் பார்க்கும்போது, அவருடைய “ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல” என்பதற்கு என்ன ஆதாரத்தை நீங்கள் காண்கிறீர்கள்? (யோவான் 18:36). இந்த காரியங்களை அறிந்துகொள்வது உங்களுக்கு ஏன் முக்கியமானதாக இருக்கிறது? பிலாத்துவிடம் இயேசு சொன்ன வார்த்தைகளில் உங்களுக்கு வேறு என்ன முக்கியமானதாக இருக்கிறது?

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

லூக்கா 22:31–32. இயேசு தனக்காகவும் தன் விசுவாசத்திற்காகவும் ஜெபித்தார் என்பதை பேதுரு அறிந்து எப்படி உணர்ந்திருப்பான்? “[அவர்களது] விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு” யாருக்காக நாம் ஜெபிக்க முடியும்? (வசனம் 32).

லூக்கா 22:39–46. கெத்செமனேயில் இரட்சகரின் துன்பத்தைப்பற்றி அறிந்துகொள்வது உங்கள் குடும்பத்திற்கு ஒரு பரிசுத்த அனுபவமாக இருக்கும். ஒரு சுவிசேஷம் கற்பவர் மற்றும் ஆசிரியராக உங்கள் முயற்சிகளை மேம்படுத்த நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைக் கருத்தில் கொள்ளவும் லூக்கா 22:39–46. இரட்சகரைப்பற்றிய உங்கள் குடும்பத்திற்குப் பிடித்த சில பாடல்கள் அல்லது பிள்ளைகளின் பாடல்களை நீங்கள் ஒன்றாக இசைக்கலாம் அல்லது பாடலாம். நீங்கள் தொடர்புடைய கலைப்படைப்புகளைப் பார்க்கலாம் அல்லது “The Savior Suffers in Gethsemane” (ChurchofJesusChrist.org) போன்ற காணொலி பார்க்கலாம். நீங்கள் வசனங்களைப் படிக்கும்போது, குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு குறிப்பாக அர்த்தமுள்ள பாகங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்—ஒருவேளை இரட்சகரின் அன்பை உணர உதவும் ஒரு பாகம் (மத்தேயு 26:36–46; மாற்கு 14:32–42 ஐயும் பார்க்கவும்). இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய உயிர்த்தெழுதலைப்பற்றிய தங்களுடைய சாட்சிகளைப் பகிர நீங்கள் அழைக்கலாம்.

லூக்கா 22:42.“என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என சொல்ல அவர்கள் கற்றபோது அனுபவங்களை குடும்பத்தினர் பகிரலாம்.

லூக்கா 22:50–51; யோவான் 18:10–11.இந்த வசனங்களிலிருந்து இயேசுவைப்பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்?

படம்
கிறிஸ்து போர்சேவகனின் காதை குணமாக்குதல்

இதற்காகவே பாடுபட்டீர்–வால்ட்டர் ரானே

யோவான் 18:37–38.“சத்தியமாவது என்ன?” எனும் பிலாத்துவின் கேள்விக்கு நாம் எப்படி பதிலளிக்கலாம் (வசனம் 38). சில ஆலோசனைகளுக்கு, யோவான் 8:32; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:45; 93:23–28; மற்றும் “Oh Say, What Is Truth?,” Hymns, no. 272 பார்க்கவும்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I Stand All Amazed,” Hymns, no. 193.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

பிற்கால தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் வார்த்தைகளைப் படியுங்கள். வேதங்களில் நீங்கள் காணும் சத்தியங்களைப்பற்றி பிற்கால தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் போதித்தவற்றை வாசிக்கவும். உதாரணமாக Liahonaவின் மிக அண்மை பொது மாநாட்டு பிரசுரத்தில் “Atonement” (Teaching in the Savior’s Way, 21 பார்க்கவும்) தலைப்பு அட்டவணையில் நீங்கள் தேடலாம்.

படம்
கெத்செமனேயில் கிறிஸ்து

என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே–வால்ட்டர் ரானே

அச்சிடவும்