புதிய ஏற்பாடு 2023
ஜூன் 5–11. யோவான் 14–17: “என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்”


“ஜூன் 5–11. யோவான் 14–17: ‘என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“ஜூன் 5–11. யோவான் 14–17” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

கடைசி இராப்போஜனம்

கடைசி இராப்போஜனம்–வில்லியம் ஹென்றி மார்கட்சன்

ஜூன் 5–11

யோவான் 14–17

“என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்”

யோவான் 14–17ல், இரட்சகரின் போதனைகளை நீங்கள் வாசிக்கும்போது, உங்களுக்காக செய்திகளை அடையாளம் காண பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவுவார். நீங்கள் பெறும் எண்ணங்களைப் பதிவு செய்யவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

இன்று நாம் இதை “கடைசி இராப்போஜனம்” என அழைக்கிறோம், ஆனால் வருடாந்திர பஸ்கா விருந்துக்கு அவர்கள் கூடியபோது, அவரது மரணத்துக்கு முன்பு தங்கள் போதகரின் கடைசி உணவாக இது இருக்கும் என சீஷர்கள் முற்றிலுமாக உணர்ந்தார்களா என நமக்குத் தெரியாது. எனினும், இயேசு “தம்முடைய வேளை வந்ததென்று அறிந்திருந்தார்” (யோவான் 13:1). கெத்செமனேயின் பாடுகளையும், அவரது நெருங்கிய நண்பர்களால் காட்டிக்கொடுக்கப்படுவதையும், மறுதலிப்பையும், சிலுவையில் வியாகுல மரணத்தையும் அவர் விரைவில் எதிர்கொள்வார். இவை யாவும் அவர் முன்பு இருந்தாலும், இயேசுவின் கவனம் அவர்மீது இல்லை, ஆனால் தமது சீஷர்கள் மீது இருந்தது. வரும் நாட்களில் மற்றும் வருடங்களில் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? யோவான் 14–17ல் இயேசுவின் மென்மையான போதனைகள், அன்றும் இன்றும் அவருடைய சீஷர்களைப்பற்றி அவர் எப்படி உணருகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. அவர் பகிர்ந்துகொண்ட பல ஆறுதலான சத்தியங்களில், ஒரு வகையில், அவர் நம்மை விட்டுப் போகமாட்டார் என்ற உறுதியும் இருந்தது. “நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்” (யோவான் 15:10).

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

யோவான் 14–15

அவரது கட்டளைகளைக் கைக்கொண்டு, இயேசு கிறிஸ்துவுக்கு நான் என் அன்பை தெரிவிக்கிறேன்.

யோவான் 14–15ஐ நீங்கள் வாசிக்கும்போது, அன்பு என்னும் வார்த்தையின் ஒவ்வொரு பிரயோகத்தையும் நீங்கள் குறிக்கலாம் அல்லது அடையாளமிடலாம். கட்டளைகள் என்ற வார்த்தை இந்த அதிகாரங்களில் அன்பு என்ற வார்த்தையோடு தொடர்புடன் அடிக்கடி திரும்ப வருவதை நீங்கள் கவனிக்கலாம். இரட்சகரின் போதனைகளிலிருந்து, அன்பு மற்றும் கட்டளைகளுக்கு இடையே உள்ள தொடர்பைப்பற்றி நீங்கள் என்ன கற்கலாம்? இந்த அதிகாரங்களில் அன்பு என்ற வார்த்தையுடன் தொடர்புடைய திரும்ப வருகிற எந்த வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் காண்கிறீர்கள்?

இரட்சகரின் அன்பு உங்களில் எவ்வாறு செல்வாக்கு ஏற்படுத்தியது என்று சிந்தியுங்கள்.

யோவான் 13:34–35; D. Todd Christofferson, “Abide in My Love,” Liahona, Nov. 2016, 48–51ஐயும் பார்க்கவும்.

இயேசு சீஷர்களுடன் பேசுகிறார்

கடைசி இராப்போஜனம்–க்ளார்க் கெல்லி ப்ரைஸ்

யோவான் 14–16

இயேசு கிறிஸ்துவின் சீஷனாக என் நோக்கத்தை நிறைவேற்ற பரிசுத்த ஆவியானவர் எனக்கு உதவுகிறார்.

இரட்சகரோடு தங்களுடைய காலம் ஏறக்குறைய முடிந்துவிட்டதைக் கேட்ட சீஷர்களுக்கு மனவேதனையாக இருந்திருக்க வேண்டும். அவர் இல்லாமல் எப்படி வாழப்போகிறோம் என்று அவர்கள் கவலைப்பட்டிருக்கலாம். யோவான் 14–16 நீங்கள் வாசிக்கும்போது, அவர்களுக்கு உறுதியளிக்க இரட்சகர் சொன்னதைத் தேடவும். குறிப்பாக, பரிசுத்த ஆவியைப்பற்றி அவர் அவர்களுக்குக் போதித்ததைக் கவனியுங்கள். பின்வரும் வசனங்களிலுள்ள இரட்சகரின் வார்த்தைகளிலிருந்து பரிசுத்த ஆவியைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?

பரிசுத்த ஆவியிடமிருந்து இப்படிப்பட்ட உதவி ஏன் சீஷர்களுக்கு தேவைப்பட்டது? உங்கள் வாழ்க்கையில் இந்த பாத்திரங்களை பரிசுத்த ஆவியானவர் எப்படி நிறைவேற்றியிருக்கிறார்? உங்கள் வாழ்க்கையில் அவருடைய செல்வாக்கு வலுவாக இருக்க நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

3 நேபி 19:9; 27:20; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11:12–14; மோசே 6:61; Michelle D. Craig, “Spiritual Capacity,” Liahona, Nov. 2019, 19–21 ஐயும் பார்க்கவும்.

யோவான் 15:1–8

நான் கிறிஸ்துவில் நிலைத்திருக்கும்போது, நான் நல்ல கனிகளைக் கொடுப்பேன்.

[கிறிஸ்துவில்] “நிலைத்திருப்பது” என்றால் என்ன அர்த்தம் என நினைக்கிறீர்கள்? (யோவான் 15:4). இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிற திராட்சைக் கொடியில் நீங்கள் சேர்ந்திருக்கிறீர்கள் என எந்த “கனி” காட்டுகிறது?

யோவான் 17

இயேசு கிறிஸ்து தன் சீஷர்களுக்காக பரிந்து பேசுகிறார்.

யோவான் 17ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகள் பரிந்து பேசும் ஜெபம் என அறியப்படுகிறது. இந்த ஜெபத்தில் இயேசு தன் அப்போஸ்தலர்களுக்காகவும், “இவர்களுடைய வார்த்தையினால் [அவரை] விசுவாசிக்கிறவர்களுக்காகவும்” ஜெபித்தார் (யோவான் 17:20). அதாவது அவர் உங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருந்தார். உங்களுக்காகவும் எல்லா பிற விசுவாசிகளுக்காகவும் தன் பிதாவிடமிருந்து இயேசு என்ன வேண்டினார்? உங்களுக்காக அவருடைய உணர்வுகளைப்பற்றி அது உங்களுக்கு என்ன கற்பிக்கிறது?

இந்த ஜெபம் ஆழமான நித்திய சத்தியங்களையும் போதிக்கிறது. என்ன சத்தியங்களை நீங்கள் காண்கிறீர்கள்? இந்த அதிகாரத்தைப் படிக்கும்போது, பின்வருவதுபற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

  • ஜெபம்

  • இரட்சகரின் பிதாவுடனான அவருடைய உறவு

  • அவரது சீஷர்களுடன் இரட்சகரின் உறவு

  • சீஷர்கள் உலகத்திலிருந்து எப்படி வித்தியாசமாக இருக்க வேண்டும்

  • உங்களுக்கு பிடித்த மற்ற சத்தியங்கள்

யோவான் 17:11, 21–23

பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் பரிபூரணமாக இணைந்திருக்கின்றனர்.

யோவான் 17ல் அவரது ஜெபத்தில் பிதாவுடன் அவரது ஒற்றுமையை இயேசு வலியுறுத்தினார். எந்த வழிகளில் பிதாவும் குமாரனும் “ஒன்றாக” இருக்கிறார்கள்? (யோவான் 17:11, 21–23). இரட்சகர் தம் சீஷர்கள் ஒன்றாக, அல்லது அவரும் அவருடைய பிதாவும் ஒன்றாக இருக்கிறது “போல” அதே வழியில் இருக்க வேண்டும் என்று ஜெபித்தார் என்பதை கவனியுங்கள், (யோவான் 17:22). அது உங்களுக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது? உங்கள் உறவுகளைப்பற்றி சிந்தியுங்கள்—உதாரணமாக, உங்கள் மனைவி அல்லது மற்ற குடும்ப உறுப்பினர்களுடன், தொகுதி உறுப்பினர்களுடன், மற்றும் சக கிறிஸ்தவர்களுடன். பிதாவுடன் இயேசு கொண்டிருக்கும் ஒற்றுமையை நோக்கி நீங்கள் எவ்வாறு செயல்படலாம்?

Quentin L. Cook, “Hearts Knit in Righteousness and Unity,” Liahona, Nov. 2020, 18–22; Sharon Eubank, “By Union of Feeling We Obtain Power with God,” Liahona, Nov. 2020, 55–57 ஐயும் பார்க்கவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

யோவான் 14:5–6.குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குடும்பத்தை ஒரு பாதையில் ஒரு நடைக்கு அழைத்துச் செல்வதில் முறை எடுக்க மகிழ்ச்சியடையலாம். இயேசு எவ்வாறு “வழியாக” இருக்கிறார்? அவர் நம்மை எங்கு வழிநடத்துகிறார்?

யோவான் 14:26–27.“உலகம் கொடுக்கிற” விதமானதிலிருந்து இயேசுவின் சமாதானம் எவ்வாறு வித்தியாசமாயிருக்கிறது? குடும்ப உறுப்பினர்கள் பரிசுத்த ஆவியின் மூலம் சமாதானத்தையும் ஆறுதலையும் பெற்ற வழிகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

யோவான் 15:1–8.ஒரு திராட்சைக் கொடி, ஒரு மரம் அல்லது மற்றொரு செடி அருகில் வெளியில் வாசிப்பது வேடிக்கையாக இருக்கலாம். ஒரு கிளையை செடியிலிருந்து அகற்றினால் என்ன நடக்கும்? நாம் எப்படி கிளைகளைப் போல் இருக்கிறோம் என்பதையும், இரட்சகரிடம் “நிலைத்திருப்பது” மற்றும் “கனி கொடுப்பது” என்றால் என்ன என்பதையும் நீங்கள் பேசலாம்.

யோவான் 15:17–27; 16:1–7இயேசு கிறிஸ்து துன்புறுத்தலைப்பற்றி தன் சீஷர்களை ஏன் எச்சரித்தார் என நினைக்கிறீர்கள்? கிறிஸ்துவின் சீஷர்கள் எவ்வாறு இன்று துன்புறுத்தப்படுகிறார்கள்? இந்த வார்த்தைகளிலுள்ள இரட்சகரின் ஆலோசனை துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நமக்கு எப்படி உதவ முடியும்?

யோவான் 16:33.கிறிஸ்து உலகத்தை எப்படி மேற்கொண்டார்? அவரது பாவ நிவர்த்தி நமக்கு எவ்வாறு சமாதானமும் உற்சாகமும் கொண்டு வந்தது? (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68:6 ஐயும் பார்க்கவும்).

யோவான் 17:21–23.இயேசு கிறிஸ்து மற்றும் பரலோக பிதாவைப் போல எப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை உங்கள் குடும்பம் கற்றுக்கொள்ள எது உதவும்? உங்களுக்குப் பிடித்த விளையாட்டுக் குழுவைப்பற்றியும், பொதுவான இலக்கை நோக்கி அவர்கள் எவ்வாறு இணைந்து செயல்படுகிறார்கள் என்பதைப்பற்றியும் நீங்கள் பேசலாம். அல்லது நீங்கள் ஒரு இசைக்குழு அல்லது வாத்தியக்குழுவைக் கேட்கலாம் மற்றும் அழகான இசையை உருவாக்க இசைக்கலைஞர்கள் ஒன்றிணைவதைப்பற்றி விவாதிக்கலாம்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில்,என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “The Holy Ghost,” Children’s Songbook, 105.

நமது கற்பித்தலை மேம்படுத்துதல்

ஒலிநாடா பதிவுகளை பயன்படுத்தவும். வேதங்களை உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கற்பிக்கும்போது, ChurchofJesusChrist.org அல்லது Gospel Library appல் காணப்படுகிற வேதங்களின் ஒலி வடிவத்தைக் கேட்பதைக் கருத்தில் கொள்ளவும். யோவான் 14–17 கேட்பது, குறிப்பாக வல்லமையானதாக இருக்கும், ஏனெனில் இந்த அதிகாரங்கள் இரட்சகரின் அநேக வார்த்தைகளைக் கொண்டுள்ளது.

திராட்சைக் கொடியில் திராட்சைப்பழங்கள்

இயேசு போதித்தார், “நானே திராட்சைச் செடி, நீங்கள் கொடிகள்” (யோவான் 15:5).