“ஜூன் 19–25. மத்தேயு 27; மாற்கு 15; லூக்கா 23; யோவான் 19: ‘முடிந்தது’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)
“ஜூன் 19–25. மத்தேயு 27; மாற்கு 15; லூக்கா 23; யோவான் 19,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023
ஜூன் 19–25
மத்தேயு 27; மாற்கு 15; லூக்கா 23; யோவான் 19
“முடிந்தது”
மத்தேயு 27; மாற்கு 15; லூக்கா 23; யோவான் 19 இரட்சகரின் அநித்திய ஜீவியத்தின் கடைசி மணிகளின் விவரங்களைக் கொண்டுள்ளது. அவரது பலி மற்றும் மரணத்தைப்பற்றி நீங்கள் படிக்கும்போது, உங்கள் மீது அவரது அன்பை உணர்வதை நாடவும்.
உங்கள் எண்ணங்களை பதிவு செய்யவும்
ஒவ்வொரு வார்த்தையிலும் செயலிலும், அப்போஸ்தலனாகிய பவுல் தயாளம் என அழைத்த, பரிசுத்தமான அன்பை இயேசு கிறிஸ்து, எடுத்துக்காட்டினார் (1 கொரிந்தியர் 13 பார்க்கவும்). இரட்சகரின் அநித்திய ஜீவியத்தின் கடைசி மணி நேரங்களைவிட எப்போதும் இது அதிக தெளிவாக இல்லை. பொய்யான குற்றச்சாட்டுகளின்போது அவரது கண்ணியமான மௌனம் அவர் “எளிதில் சினமடையமாட்டார்” என காட்டியது.(1 கொரிந்தியர் 13:5). தன் சித்திரவதைகளை முடிக்க தம் வல்லமையை அடக்கி, வாரினாலடிக்கப்படவும், கேலிசெய்யப்படவும், சிலுவையிலறையப்படவும் தாழ்த்த அவர் சித்தமாயிருந்தது அவர் “நீடிய சாந்தமுடையவர்” மற்றும் “சகலத்தையும் சகிப்பவர்” என காட்டியது (1கொரிந்தியர் 13:4, 7). அவரது சொந்த ஒப்பில்லாத பாடுகளின்போதும், அவரது தாயிடம் அவரது மனதுருக்கம் மற்றும் அவரை சிலுவையிலறைந்தவர்கள் மீது அவரது இரக்கம் அவர் [தன்] சொந்த “தற்பொழிவை நாடவில்லை” என காட்டியது (1 கொரிந்தியர் 13:5). பூமியில் அவரது கடைசி தருணங்களின்போது, அவரது அநித்திய ஊழியத்தின்போது அவர் செய்ததை இயேசு செய்து, நமக்கு காட்டுவதில் நமக்கு போதித்தார். உண்மையில் தயாளம் “கிறிஸ்துவின் பரிசுத்தமான அன்பு” (மரோனி 7:47).
தனிப்பட்ட வேதப் படிப்புக்கான ஆலோசனைகள்
மத்தேயு 27; மாற்கு 15; லூக்கா 23; யோவான் 19
பாடனுபவிக்க இயேசு கிறிஸ்து சித்தமாயிருந்தது, பிதா மீதும் நம் அனைவர் மீதும் அவரது அன்பை காட்டுகிறது.
“திரளான தூதர்களை” (மத்தேயு 26:53), அழைக்க இரட்சகர் வல்லமை பெற்றிருந்தாலும், அநீதியான விசாரணைகளையும், கொடிய கேலியையும், கற்பனை செய்ய முடியாத சரீர வேதனையையும் அவர் மனமுவந்தே சகித்திட தேர்ந்தெடுத்தார். அவர் ஏன் இதைச் செய்தார்? “அவரது அன்பான தயவினிமித்தமும்” “மனுபுத்திரர் மீதுள்ள நீடிய பொறுமையினிமித்தமும்” என நேபி சாட்சியளித்தான் (1 நேபி 19:9).
1 நேபி 19:9 வாசித்து, இரட்சகரின் கடைசி மணி நேரங்களைப்பற்றிய படிப்பை நீங்கள் தொடங்கலாம். மத்தேயு 27; மாற்கு 15; லூக்கா 23; மற்றும் யோவான் 19ல், இயேசு பாடனுபவிப்பார் என நேபி சொன்ன ஒவ்வொன்றுக்கும் நீங்கள் உதாரணம் காண்கிறீர்களா?
-
“[அவர்கள்] அவரை ஒரு அற்பமான பொருள் என நியாயந்தீர்த்தார்கள்”
-
“அவரை வாரினால் அடித்தார்கள்”
-
“அவரை அடித்தார்கள்”
-
“அவர் மேல் துப்பினார்கள்”
எந்த பாகங்கள் உங்கள் மேல் பரலோக பிதா மற்றும் இயேசுவின் “அன்பான தயவை” உணர உதவுகின்றன? நீங்கள் இந்த விவரங்களைப் படிக்கும்போது என்ன எண்ணங்களையும் உணர்வுகளையும் பெறுகிறீர்கள்? அவற்றை எழுதுவதை அல்லது ஒருவருடன் பகிர்வதைக் கருத்தில் கொள்ளவும்.
“Jesus Is Condemned before Pilate” மற்றும் “Jesus Is Scourged and Crucified” (videos, ChurchofJesusChrist.org) ஐயும் பார்க்கவும்.
மத்தேயு 27:27–49, 54; மாற்கு 15:16–32; லூக்கா 23:11, 35–39; யோவான் 19:1–5
கிண்டல் பண்ணுதல் சத்தியத்தை மாற்ற முடியாது.
அவரது ஊழியம் முழுவதிலும் கிண்டலை இயேசு சகித்தபோது, அவரை வாரினால் அடித்தபோதும், சிலுவையிலறைந்தபோதும் அது அதிகமானது. ஆனால் இந்த கிண்டல் சத்தியத்தை மாற்ற முடியவில்லை: இயேசுவே தேவ குமாரன். இயேசு சகித்த சிறுமைப்படுத்தலைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, இன்று அவரது பணி எதிர்நோக்குகிற எதிர்ப்பு மற்றும் கிண்டல் பண்ணப்படுதலைப்பற்றி சிந்தியுங்கள். எதிர்ப்பை சகிப்பதைப்பற்றிய எந்த உள்ளுணர்வுகளை நீங்கள் பெறுகிறீர்கள்? மத்தேயு 27:54லிலுள்ள நூற்றுக்கதிபதியின் வார்த்தைகளில் எது உங்களைக் கவர்கிறது?
இயேசு கிறிஸ்து தனியாக பாடுபட்டார் அதனால் நான் பாடுபட வேண்டியதில்லை.
சிலுவையில் அவருடைய மிகக் கடுமையான தருணங்களில் ஒன்றின் போது, எப்பொழுதும் தம்முடைய பரலோக பிதாவை நம்பியிருந்த இயேசு, திடீரென்று கைவிடப்பட்டதாக உணர்ந்தார். இதைப்பற்றி வாசிப்பது, தேவனிடத்திலிருந்து நீங்கள் தூர விலகியிருந்ததாக உணர்ந்த நேரங்கள்பற்றி சிந்திக்க உங்களைத் தூண்டலாம். சிலுவையில் இரட்சகரின் பலி, அந்த தூரத்தை நீங்கள் எப்படி கடக்க உங்களுக்கு சாத்தியப்படுத்துகிறது என்பதை நீங்கள் சிந்திக்கலாம். மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் சாட்சியமளித்தபடி, “இவ்வளவு நீண்ட, தனிமையான பாதையில் இயேசு தனியாக நடந்து சென்றதால், நாம் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. … கல்வாரி உச்சியில் இருந்து எக்காளமிட்டது, சில சமயங்களில் நாம் இருக்கிறோம் என்று உணர்ந்தாலும், நாம் ஒருபோதும் தனியாகவோ உதவியின்றியோ விடப்பட மாட்டோம் என்பது உண்மை.(“None Were with Him,” Liahona, May 2009, 88). மூப்பர் ஹாலண்டின் மீதமுள்ள செய்தியைப் படிக்கும்போது, தனிமையைக் கடக்க இரட்சகர் உங்களுக்கு எப்படி உதவ முடியும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
இரட்சகர் மன்னிப்பின் நமது உதாரணம்.
லூக்கா 23:34ல் இரட்சகரின் வார்த்தைகளை நீங்கள் வாசிக்கும்போது, எவ்வாறு உணர்கிறீர்கள்? (அடிக்குறிப்புc)ல் ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பால் கொடுக்கப்பட்ட உள்ளுணர்வைப் பார்க்கவும். இரட்சகரின் வார்த்தைகளைக் குறிப்பிட்டு, தலைவர் ஹென்றி பி. ஐரிங் போதித்தார்: “நாம் மன்னிக்கவேண்டும், நம்மைக் காயப்படுத்துகிறவர்கள் மீது எந்த வெறுப்பும் வைத்திருக்கக்கூடாது. இரட்சகர் சிலுவையிலிருந்து எடுத்துக்காட்டை ஏற்படுத்தினார். … நம்மைக் காயப்படுத்தியவர்களின் இருதயத்தை நாம் அறியவில்லை” (“That We May Be One,”Ensign, May 1998, 68). ஒருவரை மன்னிப்பதில் உங்களுக்குப் பிரச்சினை இருந்தால் இந்த வசனம் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
மத்தேயு 27; மாற்கு 15; லூக்கா 23; யோவான் 19.இந்த அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளைப்பற்றி உங்கள் குடும்பத்தினர் அறிந்துகொள்ள, நீங்கள் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் “Chapter 52: The Trials of Jesus” and “Chapter 53: Jesus Is Crucified” (New Testament Stories, 133–38ல், அல்லது ChurchofJesusChrist.org லுள்ள தொடர்பான காணொலிகள்). அல்லது இந்த நிகழ்வுகளை சித்தரிக்கும் காணொலிகளை நீங்கள் ஒன்றாக பார்க்கலாம்: “Jesus Is Condemned before Pilate” and “Jesus Is Scourged and Crucified” (ChurchofJesusChrist.org). கதைகளை அவர்களின் சொந்த வார்த்தைகளில் மீண்டும் சொல்ல நீங்கள் பிள்ளைகளை அழைக்கலாம். இரட்சகர் நமக்காக அவர் அனுபவித்தவற்றின் காரணமாக குடும்ப அங்கத்தினர்கள் அவரைப்பற்றி எப்படி உணருகிறார்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளலாம்.
-
மத்தேயு 27:11–26; மாற்கு 15:1–15; லூக்கா 23:12–25; யோவான் 19:1–16இயேசு மாசற்றவர் என அவன் அறிந்தாலும் இயேசு சிலுவையிலறையப்பட ஏன் பிலாத்து விட்டுவிட்டான்? நாம் அறிவது சரி என்பதற்காக நிற்பதைப்பற்றி பிலாத்துவின் அனுபவத்திலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்கிறோம்? சரியானதற்காக நிற்பதை பயிற்சி செய்ய அவர்களை அனுமதிக்கிறதை நாடகமாக நடிப்பது உங்கள் குடும்பத்துக்கு உதவியாக இருக்கலாம்.
-
மத்தேயு 27:46; லூக்கா 23:34, 43, 46; யோவான் 19:26–28, 30ஒவ்வொரு குடும்ப அங்கத்தினருக்கும் இந்த வசனங்களில் காணப்படுகிற, இரட்சகர் சிலுவையில் சொன்ன ஒன்று அல்லது அதிக வாசகங்களை ஒருவேளை நீங்கள் கொடுத்து பணிக்கலாம். இரட்சகர் மற்றும் அவரது ஊழியத்தைப்பற்றி இந்த வசனங்களிலிருந்து அவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள் என பகிர்ந்துகொள்ள அவர்களிடம் கேட்கவும்.
-
மாற்கு 15:39.சிலுவையிலறைதலைப்பற்றி வாசிப்பது எப்படி இயேசு “தேவ குமாரன்” என்ற உங்கள் சாட்சியைப் பெலப்படுத்தியிருக்கிறது?
-
யோவான் 19:25–27.குடும்ப அங்கத்தினர்களை நாம் எப்படி நேசித்து ஆதரிக்க வேண்டும் என்பதைப்பற்றி இந்த வசனங்களிலிருந்து நாம் என்ன கற்கிறோம்?
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Upon the Cross of Calvary,” Hymns, no. 184.