புதிய ஏற்பாடு 2023
ஜூன் 26–ஜூலை 2. மத்தேயு 28; மாற்கு 16; லூக்கா 24; யோவான் 20–21: “அவர் உயிர்த்தெழுந்தார்”


“ஜூன் 26–ஜூலை 2. மத்தேயு 28; மாற்கு 16; லூக்கா 24; யோவான் 20–21: ‘அவர் உயிர்த்தெழுந்தார்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“ஜூன் 26–ஜூலை 2. மத்தேயு 28; மாற்கு 16; லூக்கா 24; யோவான் 20–21,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

இயேசு கடற்கரையில் பேதுருவோடு பேசுதல்

என் ஆடுகளை மேய்ப்பாயாக–காமில்லி கோரி

ஜூன் 26–ஜூலை 2

மத்தேயு 28; மாற்கு 16; லூக்கா 24; யோவான் 20–21

“அவர் உயிர்த்தெழுந்தார்”

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவினிமித்தம் நீங்கள் பெற்றிருக்கிற மகிழ்ச்சியைப்பற்றி நினைத்து, மத்தேயு 28; மாற்கு 16;லூக்கா 24;யோவான் 20–21, ஜெபத்துடன் வாசியுங்கள். இந்நிகழ்ச்சியைப்பற்றிய உங்கள் சாட்சியைக் கேட்பதால் யார் ஆசீர்வதிக்கப்படக் கூடும்?

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

அநேக பார்வையாளர்களுக்கு, நாசரேத்தின் இயேசுவின் மரணம் ஒரு விசேஷித்த வாழ்க்கைக்கு மாறுபாடான முடிவாகத் தெரிந்திருக்கலாம். மரித்தோரிலிருந்து லாசருவை உயிரோடெழுப்பியவர் இவரல்லவா? அவ்வப்போது பரிசேயர்களின் கொலைமிரட்டல்களுக்குத் தப்பியவர் இவரல்லவா? குருட்டுத் தன்மையையும், தொழுநோயையும், பக்கவாதத்தையும் குணமாக்கும் வல்லமையை இவர் காட்டினார். காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிந்தன. இருப்பினும் சிலுவையில் தொங்கி, “முடிந்தது” என அறிவித்த பின்பும், அவர் இங்கிருக்கிறார் (யோவான் 19:30). “மற்றவர்களை இரட்சித்தான் தன்னை இரட்சித்துக்கொள்ள திராணியில்லை”, என்ற கேலிப்பேச்சுகளுக்கு உண்மையான ஆச்சரியங்கள் இருந்திருக்கக்கூடும் (மத்தேயு 27:42). ஆனால் இயேசுவின் மரணம் கதையின் முடிவல்ல என நமக்குத் தெரியும். கல்லறையின் அமைதி தற்காலிகமானதென்றும், கிறிஸ்துவின் இரட்சிப்புப் பணி ஆரம்பம்தான் என்றும் நமக்குத் தெரியும். அவர் இன்று “மரித்தோரிடையே” காணப்படவில்லை, ஆனால் உயிரோடிருப்பவர்களிடையே காணப்படுகிறார் (லூக்கா 24:5). அவரது உபதேசங்கள் அமைதியாக்கப்படாது, ஏனெனில் அவரது உண்மையுள்ள சீஷர்கள், “உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் [அவர்களுடனே] இருப்பேன்” என்ற வாக்குத்தத்தத்தை நம்பி, “சகல ஜாதிகளுக்கும்” சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பார்கள் (மத்தேயு 28:19–20).

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

மத்தேயு 28; மாற்கு 16; லூக்கா 24; யோவான் 20

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்.

இந்த பாகங்களில், மனித சரித்திரத்தில் மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றை நீங்கள் வாசிப்பீர்கள்: இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல். நீங்கள் வாசிக்கும்போது, உயிர்த்தெழுதலை சுற்றியுள்ள நிகழ்வுகளைப் பார்த்த ஜனங்களின் இடத்தில் உங்களை வையுங்கள். அவர்களது அனுபவங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?

இரட்சகரின் உயிர்த்தெழுதலைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்? உங்களையும், வாழ்க்கையைப்பற்றிய உங்களது பார்வையையும், பிறருடன் உங்கள் உறவையும், கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தையும், பிற சுவிசேஷ சத்தியங்களில் உங்கள் விசுவாசத்தையும் எவ்வாறு பாதித்திருக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

Bible Dictionary, “Resurrection”; Gospel Topics, “Resurrection,” topics.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

லூக்கா 24:13–35

“என்னோடிருக்க” நான் இரட்சகரை அழைக்க முடியும்.

உயிர்த்தெழுந்த இரட்சகரை சந்தித்த அந்த இரண்டு பிரயாணிகளான சீஷர்களின் அனுபவத்தை நீங்கள் வாசிக்கும்போது, கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக உங்கள் அனுபவத்துக்கு இணையாக இருக்கலாம். இன்று அவருடன் நடந்து சிறிது நீண்டநேரம் “தங்க” எவ்வாறு அவரை அழைக்கலாம். (லூக்கா 24:29). உங்கள் வாழ்க்கையில் அவரது பிரசன்னத்தை எப்படி அடையாளம் காண்பீர்கள்? இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தைப்பற்றி உங்களுக்கு பரிசுத்த ஆவியானவர் எந்த வழிகளில் சாட்சியளித்திருக்கிறார்?

Abide with Me; ’Tis Eventide,” “Abide with Me!,” Hymns, nos. 165–66 ஐயும் பார்க்கவும்.

லூக்கா 24:36–43; யோவான் 20

உயிர்த்தெழுதல் என்பது ஆவி சரீரத்துடன் நிரந்தரமாக மீண்டும் இணைவதாகும்.

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் விவரங்கள் உயிர்த்தெழுதல் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும். உதாரணமாக, லூக்கா 24:36–43 மற்றும் யோவான் 20ல் உயிர்த்தெழுந்த சரீரங்கள்பற்றி என்ன சத்தியங்களைக் காண்கிறீர்கள்? 1 கொரிந்தியர் 15:35–44; பிலிப்பியர் 3:20–21; 3 நேபி 11:13–15; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:27–31; 110:2–3; 130:1, 22 போன்றவற்றில் உயிர்த்தெழுதல்பற்றிய பிற வசனங்களையும் நீங்கள் ஆய்வு செய்யலாம்.

யோவான் 20:19–29

“காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்”

“ நான் கண்டாலொழிய … , விசுவாசிக்கமாட்டேன் என்றான்,” என்று சொன்ன, தோமாவைப் போல சில சமயங்களில் சிலர் உணரலாம் (யோவான் 20:25). உங்கள் கருத்துப்படி, பார்க்காமல் நம்புவது ஏன் ஆசீர்வாதமாக இருக்கிறது? (யோவான் 20:29 பார்க்கவும்). நீங்கள் பார்க்க முடியாத காரியங்களை நம்பியதற்காக நீங்கள் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்? நீங்கள் அவரைப் பார்க்க முடியாத போதும் இரட்சகரில் விசுவாசம் கொள்ள எது உதவுகிறது? “காணப்படாதவைகளிலும் மெய்யானவைகளில்” எப்படி உங்கள் விசுவாசத்தை தொடர்ந்து பெலப்படுத்துவீர்கள் (ஆல்மா 32:16–21; ஏத்தேர் 12:6 பார்க்கவும்). இயேசு கிறிஸ்துவை நம்ப உங்களுக்கு உதவிய அனுபவங்களை குறிப்பிதழில் பதிவு செய்வதை கருத்தில் கொள்ளவும் அல்லது நீங்கள் அறிந்த ஒருவரிடம் அதைப் பகிர்ந்துகொள்ளவும்.

யோவான் 21:1–17

அவரது ஆடுகளை மேய்க்க இரட்சகர் என்னை அழைக்கிறார்.

யோவான் 21ல் தம்முடைய அப்போஸ்தலர்களுடன் இரட்சகரின் உரையாடலை, லூக்கா 5:1–11ல் பதிவு செய்யப்பட்டுள்ள தங்கள் மீன்பிடிக்கும் வலைகளை விட்டுவிட அவர்களை முதலில் கட்டளையிட்டதுடன் ஒப்பிடுவது ரசிக்கத்தக்கதாயிருக்கும். என்ன ஒற்றுமைகளையும் வித்தியாசங்களையும் நீங்கள் காண்கிறீர்கள்? சீஷத்துவத்தைப்பற்றிய என்ன உள்ளுணர்வுகளை நீங்கள் காண்கிறீர்கள்?

யோவான் 21:15–17லிலுள்ள பேதுருவிடம் இரட்சகரின் வார்த்தைகள் உங்களுக்கு எவ்வாறு பொருந்தும் என்பதைக் கருத்தில் கொள்ளவும். கர்த்தருடைய மந்தைக்கு ஊழியம் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்கிற எதாவது இருக்கிறதா? “என்னை நேசிக்கிறாயா?” என உங்களை கர்த்தர் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும். கர்த்தரிடத்தில் உங்கள் அன்பை நீங்கள் எவ்வாறு காட்டுவதென சிந்திக்கவும்.

1 பேதுரு 5:2–4, 8; Jeffrey R. Holland, “The First Great Commandment,” Liahona, Nov. 2012, 83–85 ஐயும் பார்க்கவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

லூக்கா 24:5–6.லூக்கா 24:5–6 பற்றி தலைவர் தாமஸ் எஸ். மான்சன் சொன்னார், “எனக்கு கிறிஸ்தவத்தில் எந்த வார்த்தையும் இல்லை” (“He Is Risen!,” Liahona, May 2010, 89). உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இந்த வார்த்தைகள் என்ன அர்த்தம் கொடுக்கின்றன?

மத்தேயு 28; மாற்கு 16; லூக்கா 24; யோவான் 20–21.இந்த அதிகாரங்களை உங்கள் குடும்பத்தினர் வாசிக்கும்போது, ஒவ்வொரு விவரத்திலும் இயேசுவோடு உரையாடிய ஜனங்களைக் கவனிக்கவும். உதாரணமாக, இரட்சகரின் கல்லறைக்கு சென்ற ஜனங்கள்பற்றிய எது உங்களைக் கவர்கிறது? மற்றொரு சமயம் எம்மாவுக்கு போகும் வழியில் அப்போஸ்தலர்கள் அல்லது சீஷர்களின் வார்த்தைகள் அல்லது செயல்களிலிருந்து நீங்கள் என்ன கற்கிறீர்கள்?

Did Jesus Really Live Again?” (Children’s Songbook, 64) ஒன்றாக பாடுவதைக் கருத்தில் கொள்ளவும். மரித்துப்போன உங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒருவரைப்பற்றிப் பேசுங்கள், மற்றும் இந்தப் பாடலில் உள்ள உண்மைகள் எப்படி ஆறுதலளிக்கின்றன என்பதைப்பற்றி விவாதிக்கவும்.

இயேசு இரண்டு மனுஷருடன் எம்மாவுக்குச் செல்லும் சாலையில் நடத்தல்

எம்மாவுக்கு செல்லும் சாலை–வெண்டி கெல்லர்

மத்தேயு 28:16–20; மாற்கு 16:14–20; லூக்கா 24:44–53இந்த வசனங்களில், தன் அப்போஸ்தலர்களை எதைச் செய்ய கர்த்தர் அழைத்தார்? இந்த பணியை நிறைவேற்ற நாம் எப்படி உதவ முடியும்? அவருடைய நோக்கங்களை நிறைவேற்ற “கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பிக்கிறார்,” என்று குடும்ப உறுப்பினர்கள் உணர்ந்தபோது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் (மாற்கு 16:20).

யோவான் 21:15–17.ஒன்றாக உண்ணும்போது இந்த வசனங்களை வாசிப்பதை கருத்தில் கொள்ளவும். “என் ஆடுகளை மேய்ப்பாயாக” என்ற இரட்சகரின் வார்த்தைக்கு இது அர்த்தம் சேர்க்கும். புதிய ஏற்பாட்டில் ஆடுகளைப்பற்றி இயேசு போதித்ததின் அடிப்படையில் (உதாரணமாக மத்தேயு 9:35–36; 10:5–6; 25:31–46; லூக்கா 15:4–7; யோவான் 10:1–16 பார்க்கவும்), ஆடுகளை மேய்ப்பது ஏன் தேவ பிள்ளைகளைக் கவனித்து போஷிப்பதற்கு சிறந்த விதமாக இருக்கிறது? பரலோக பிதாவும் இயேசுவும் நம்மைப்பற்றி என்ன உணர்கிறார்கள் என்பதைப்பற்றி இந்த ஒப்புமை என்ன போதிக்கிறது?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Did Jesus Really Live Again?,” Children’s Songbook, 64.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

பரிசுத்த ஆவியை அழைக்கவும் கோட்பாட்டைக் கற்றுக்கொள்ளவும் இசையைப் பயன்படுத்தவும்.He Is Risen!” போன்ற பாடல்களைக் கேட்டல் அல்லது பாடுதல் (Hymns, no. 199) ஆவியானவரை வரவழைத்து, இரட்சகரின் உயிர்த்தெழுதலைப்பற்றி அறிய உங்களுக்கு உதவ முடியும்.

கல்லறையருகே உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை பெண் பார்த்தல்

உயிர்த்தெழுந்த கிறிஸ்து–வால்ட்டர் ரானே