புதிய ஏற்பாடு 2023
ஜூலை 17–23. அப்போஸ்தலருடைய நடபடிகள் 10–15: “தேவ வசனம் வளர்ந்து பெருகிற்று”


“ஜூலை 17–23. அப்போஸ்தலருடைய நடபடிகள் 10–15: ‘தேவ வசனம் வளர்ந்து பெருகிற்று’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“ஜூலை 17–23. அப்போஸ்தலருடைய நடபடிகள் 10–15” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
பேதுரு கொர்நேலியுவுடன் பேசுதல்

ஜூலை 17–23

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10–15

“தேவ வசனம் வளர்ந்து பெருகிற்று”

எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுடன் பரிசுத்த ஆவியானவர் உங்களைத் தூண்ட நேரம் அனுமதித்து, அப்போஸ்தலருடைய நடபடிகள் 10–15 கவனமாக வாசிக்கவும். இந்த அதிகாரங்களில் நீங்கள் கற்றுக்கொள்வதற்கு என்ன இருக்கிறது?

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

அவருடைய பூலோக ஊழியத்தின் போது, இயேசு கிறிஸ்து மக்களின் நீண்டகால மரபுகள் மற்றும் நம்பிக்கைகளைக்குறித்து அடிக்கடி சவால் விட்டார். அவர் பரலோகத்திற்கு ஏறிய பிறகும் இது நிற்கவில்லை, ஏனெனில் அவர் தனது சபையை வெளிப்படுத்துவதன் மூலம் தொடர்ந்து வழிநடத்தினார். உதாரணமாக, இயேசு ஜீவித்தபோது, அவரது சீஷர்கள் சுவிசேஷத்தை சில சக யூதர்களுக்கு மட்டுமே பிரசங்கித்தனர். ஆனால் இரட்சகர் மரித்து, சபையின் தீர்க்கதரிசியாக பேதுரு ஆன பிறகு, யூதரல்லாதோருக்கும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க அதுதான் சரியான நேரம் என பேதுருவுக்கு கிறிஸ்து வெளிப்படுத்தினார். புறஜாதியாருடன் சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளும் கருத்து இன்று ஆச்சரியமாகத் தோன்றவில்லை, ஆகவே இந்த விவரத்தில் நமக்கு என்ன பாடம் இருக்கிறது? ஒரு வேளை ஒரு பாடமாவது, பூர்வகால மற்றும் தற்கால சபையிலும், அவரது தெரிந்துகொள்ளப்பட்ட தலைவர்களை இரட்சகர் வழிநடத்துகிறார் என்ற கொள்கை மற்றும் செயலை மாற்றுகிற பாடம், . (ஆமோஸ் 3:7; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:38 பார்க்கவும்). தொடர்ந்த வெளிப்படுத்தல் இயேசு கிறிஸ்துவின் உண்மையான ஜீவிக்கும் சபையின் முக்கிய அடையாளமாகும். பேதுருவைப் போல, “தேவ இராஜ்யத்துக்கு சம்மந்தப்பட்ட,” “[அவர்] வெளிப்படுத்தியுள்ளவைகளையும், அவர் இப்போது வெளிப்படுத்துபவைகளையும்,” அவர் இன்னும் வெளிப்படுத்தப்போகிற “அநேக மாபெரும் முக்கியமானவைகள்” (லூக்கா 4:4), உள்ளிட்ட தொடரும் வெளிப்படுத்தலை ஏற்றுக்கொள்ள வாஞ்சையாயிருந்து தேவனுடைய “ஒவ்வொரு வார்த்தையின்படியும்” வாழ வேண்டும்.(விசுவாசப் பிரமாணங்கள் 1:9).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10

“தேவன் பட்சபாதமுள்ளவரல்ல.”

பல தலைமுறைகளாக “ஆபிரகாமின் சந்ததியாய்,” அல்லது ஆபிரகாமின் உண்மையான சந்ததியாக இருப்பது, தேவனால் ஒருவர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தெரிந்துகொள்ளப்படுவதாகும் என யூதர்கள் நம்பினர் (லூக்கா 3:8 பார்க்கவும்). தேவனால் ஏற்றுக்கொள்ளப்படாத எவரும் “சுத்தமற்ற” புறஜாதியான் என கருதப்பட்டான். அப்போஸ்தலருடைய நடபடிகள் 10ல் “அவருக்கு உகந்தவன்” என்பதைப்பற்றி கர்த்தர் பேதுருவுக்கு என்ன போதித்தார்?(அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:35). கர்த்தருக்கு உகந்த நீதியான வாழ்க்கையை கொர்நேலியு வாழ்ந்தான் என இந்த அதிகாரத்தில் நீங்கள் என்ன முகாந்திரம் காண்கிறீர்கள்? “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல,” எனும் வாசகத்தின் அர்த்தம் என்னவென சிந்தியுங்கள் (வசனம் 34; 1 நேபி 17:35 ஐயும் பார்க்கவும்). இந்த சத்தியங்களைப்பற்றி அறிந்து கொள்வது உங்களுக்கு ஏன் முக்கியம்?

ஆபிரகாமின் சந்ததியில்லாதவர்களை கீழ்த்தரமாக பார்த்த யூதர்களைப் போல, உங்களைவிட வித்தியாசமான ஒருவரைப்பற்றிய அன்பற்ற அல்லது ஆதாரமற்ற கற்பனைகளை நீங்கள் செய்திருக்கிறீர்களா? இந்த மனநிலையை நீங்கள் எப்படி மேற்கொள்ள முடியும்? அடுத்த சில நாட்களில் ஒரு எளிய பயிற்சி மூலம் முயற்சிப்பது ரசிக்கத் தக்கதாக இருக்கும்: நீங்கள் ஒருவருடன் தொடர்புகொள்ளும்போது, “இவர் தேவனின் பிள்ளை” என உங்களையே நினைக்க முயலுங்கள். இதை நீங்கள் செய்யும்போது, பிறரைப்பற்றி நீங்கள் நினைக்கும் மற்றும் தொடர்புகொள்ளும் விதத்தில் மாற்றங்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

1 சாமுவேல் 16:7; 2 நேபி 26:13, 33; Russell M. Nelson, “Let God Prevail,” Liahona, Nov. 2020, 92–95; “Peter’s Revelation to Take the Gospel to the Gentiles” (video), ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10; 11:1–18; 15

வெளிப்படுத்தல் மூலம் வரிவரியாக பரலோக பிதா எனக்கு போதிக்கிறார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10ல் விவரிக்கப்பட்டுள்ள தரிசனத்தை பேதுரு பார்த்தபோது, முதலில் அதைப்புரிந்துகொள்ள போராடினான் மற்றும் “தரிசனத்தைக் குறித்து தனக்குள்ளே சந்தேகப்பட்டான்” (வசனம் 17). ஆயினும் பேதுரு நாடியபடி கர்த்தர் பேதுருவுக்கு பெரும் புரிதலைக் கொடுத்தார். அப்போஸ்தலருடைய நடபடிகள் 10, 11, மற்றும் 15, நீங்கள் வாசிக்கும்போது, தன் தரிசனம் குறித்த பேதுருவின் புரிதல் எவ்வாறு காலப்போக்கில் ஆழமானது என்பதைக் கவனிக்கவும். உங்களுக்குக் கேள்விகள் இருக்கும்போது, தேவனிடமிருந்து மிகுந்த புரிதலை எவ்வாறு நாடினீர்கள்?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10, 11, மற்றும் 15 வெளிப்படுத்தல் மூலம் தன் ஊழியக்காரர்களை கர்த்தர் வழிநடத்திய தருணங்களை நினைவுகூரவும். நீங்கள் இந்த அதிகாரங்களை வாசிக்கும்போது, வெளிப்படுத்தலைப்பற்றி நீங்கள் கற்பதை பதிவு செய்ய இது உங்களுக்கு உதவும். பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் என்ன விதங்களில் பேசுகிறார்?

Gospel Topics, “Revelation,” topics.ChurchofJesusChrist.org; Quentin L. Cook, “The Blessing of Continuing Revelation to Prophets and Personal Revelation to Guide Our Lives,” Liahona, May 2020, 96–100; “The Jerusalem Conference” (video), ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:26

நான் இயேசு கிறிஸ்துவை நம்பி பின்பற்றுகிறதால் நான் ஒரு கிறிஸ்தவன்.

ஒருவர் கிறிஸ்தவர் என அழைக்கப்படுவது என்ன விசேஷமானது? (அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:26 பார்க்கவும்). கிறிஸ்தவனாக அறியப்படுவது என்றால் உங்களுக்கு என்ன அர்த்தமாகிறது? பெயர்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளவும். உதாரணமாக உங்கள் குடும்ப பெயர் என்றால் என்ன? சபையின் பெயர் ஏன் உங்களுக்கு முக்கியமாக இருக்கிறது? ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 115:4 பார்க்கவும்). உடன்படிக்கையின் மூலம் இயேசு கிறிஸ்துவின் பெயரை நீங்களே எடுத்துக்கொள்வது என்பதன் அர்த்தம் என்ன? ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77பார்க்கவும்).

மோசியா 5:7–15; ஆல்மா 46:13–15; 3 நேபி 27:3–8; Russell M. Nelson, “The Correct Name of the Church,” Liahona, Nov. 2018, 87–90 ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:17, 20.நாம் எப்போதாவது ஆவிக்குரிய அனுபவங்கள் பெற்று பின்னர் நாம் உணர்ந்ததை அல்லது கற்றுக்கொண்டதைப்பற்றி சந்தேகப்பட்டிருக்கிறோமா? நமது சந்தேகங்களை மேற்கொள்ள உதவக்கூடிய என்ன அறிவுரையை ஒருவருக்கொருவர் கொடுக்க முடியும்? (Neil L. Andersen, “Spiritually Defining Memories,” Liahona, May 2020, 18–22 பார்க்கவும்.)

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34–35.“தேவன் பட்சபாதமுள்ளவரல்ல” என்பதை உங்கள் குடும்பத்தாருக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்? (அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34). உங்கள் குடும்பத்தினர் இந்த வசனங்களைப் படிக்கும்போது வெவ்வேறு பின்னணிகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களின் படங்களை ஒருவேளை நீங்கள் காண்பிக்கலாம். இந்த வசனங்களில் உள்ள உண்மைகள் நம் செயல்களை எவ்வாறு பாதிக்க வேண்டும்? (உதாரணமாக, “I’ll Walk with You” [Children’s Songbook, 140–41] பார்க்கவும்).

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:1–17.பேதுரு சிறையில் தள்ளப்பட்டதையும், சபை உறுப்பினர்கள் ஒன்று கூடி அவருக்காக ஜெபிப்பதையும் உங்கள் குடும்பத்தினர் நடித்துக் காட்டலாம். நீங்கள் எப்போது ஜெபத்தால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்? ஒரு சபைத்தலைவர் அல்லது அன்புக்குரியவர் போன்றவருக்காக ஜெபிக்க உங்கள் குடும்பத்தில் யாராவது உணர்த்தப்பட்டார்களா? “ஊக்கத்தோடே” ஜெபிப்பது என்றால் என்ன? அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:5; ஆல்மா 34:27 ஐயும் பார்க்கவும்.

படம்
பேதுரு சிறையிலிருந்து விடுவிக்கப்படுதல்

பேதுரு சிறையிலிருந்து விடுவிக்கப்படுதல்–ஏ.எல். நோக்ஸ்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14.இந்த அதிகாரத்தை நீங்கள் ஒன்றாக வாசிக்கும்போது, சில குடும்ப உறுப்பினர்கள் சீஷர்களுக்கும் சபைக்கும் வந்த ஆசீர்வாதங்களைப்பற்றிக் குறிப்பிடலாம். சீஷர்கள் அனுபவித்த எதிர்ப்பு அல்லது பாடுகளை மற்ற குடும்ப அங்கத்தினர்கள் கவனிக்கலாம். நீதிமான்களுக்கு நடக்கக்கூடிய கடினமான காரியங்களை தேவன் ஏன் அனுமதிக்கிறார்?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:1–21.இந்த வசனங்கள், விருத்தசேதனம் உட்பட மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்க மதம் மாறியவர்களுக்கு அவசியமா என்பது குறித்து சபையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை விவரிக்கிறது. இந்த கருத்து வேறுபாட்டிற்கு அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள்? சபைத் தலைவர்கள் சபையின் வேலையை எவ்வாறு வழிநடத்துகிறார்கள் என்பதைப்பற்றி இந்த உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I’ll Walk with You,” Children’s Songbook, 140–41.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

ஒரு படம் வரையவும். வேத போதனைகள் மற்றும் கதைகளை கற்பனை செய்ய குடும்பத்தினருக்கு இப்படங்கள் உதவ முடியும். அப்போஸ்தலருடைய நடபடிகள் 10ல் பேதுருவின் தரிசனம் போன்ற நீங்கள் வாசிப்பவைபற்றிய படங்களை வரைய குடும்பத்தினரை நீங்கள் அழைக்கலாம்.

படம்
பேதுருவும் கொர்நேலியுவும்

பேதுரு மற்றும் கொர்நேலியுவின் அனுபவங்கள் “தேவன் பட்சபாதமாமுள்ளவரல்ல” என காட்டுகிறது (அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34).

அச்சிடவும்