புதிய ஏற்பாடு 2023
ஜூலை 24–30. அப்போஸ்தலருடைய நடபடிகள் 16–21: “சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்திருக்கிறார்”


“ஜூலை 24–30. அப்போஸ்தலருடைய நடபடிகள் 16–21: ‘சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்திருக்கிறார்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“ஜூலை 24–30. அப்போஸ்தலருடைய நடபடிகள் 16–21,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
பவுல் குன்றின் மேல் போதித்தல்

ஜூலை 24–30

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16–21

“சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்திருக்கிறார்”

சுவிசேஷத்தை அறிவிக்க பவுலின் முயற்சிகளைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, எண்ணங்கள் அல்லது உணர்வுகளால் பரிசுத்த ஆவி உங்களைத் தூண்டலாம். இந்த தூண்டுதல்களை எழுதி வைத்துக்கொண்டு, அவற்றின்படி செயல்பட திட்டமிடவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

தன் அப்போஸ்தலர்களுக்கு கர்த்தரின் கடைசி வார்த்தைகளில் இக்கட்டளை இருந்தது, “ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” (மத்தேயு 28:19–20). அப்போஸ்தலர்கள் எல்லா தேசங்களையும் அடையாவிட்டாலும், சபையை ஸ்தாபிப்பதில் பவுலும் அவனது தோழர்களும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தார்கள் என அப்போஸ்தலருடைய நடபடிகள் 16–21 காட்டுகிறது. அவர்கள் போதித்து, ஞானஸ்நானம் கொடுத்து, பரிசுத்த ஆவியை அருளினார்கள். அவர்கள் அற்புதங்கள் செய்தார்கள், மரித்தோரிலிருந்து ஒருவனை உயிரோடெழுப்பினார்கள், மகா மதமாறுபாட்டை முன்னறிவித்தார்கள் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:7–12, 28–31). அவர்கள் தொடங்கிய பணி ஜீவிக்கிற அப்போஸ்தலர்களால் பவுல் ஒருபோதும் கற்பனை செய்வதற்கு முடியாத வழிகளில் இரட்சகரின் ஆணையை நிறைவேற்ற உதவுகிற உங்களைப் போன்ற அர்ப்பணிப்புடைய சீஷர்களோடு இன்று தொடர்கிறது, ஒருவேளை, தங்கள் பரலோக பிதாவையோ அல்லது அவரது சுவிசேஷத்தையோ அறியாத ஜனங்களை நீங்கள் அறியலாம். ஒருவேளை அவரைப்பற்றி நீங்கள் அறிந்தவற்றை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள “[உங்களில்] பரிசுத்த ஆவி வைராக்கியத்தை” உணர்ந்திருக்கலாம் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:16). சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுவதில் தாழ்மையிலும் தைரியத்திலும் பவுலின் எடுத்துக்காட்டை நீங்கள் பின்பற்றினால், “அவரது இருதயத்தை கர்த்தர் திறந்திருக்கிற” ஒருவரை நீங்கள் காணலாம் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:14).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16–21

சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள எனது முயற்சிகளில் ஆவியானவர் என்னை வழிநடத்துவார்.

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் அறிவித்தார், “பரிசுத்த ஆவி இல்லாமல் எந்த மனிதனும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முடியாது”(Teachings of Presidents of the Church: Joseph Smith [2007], 332). நீங்கள் அப்போஸ்தலருடைய நடபடிகள் 16–21 வாசிக்கும்போது, தீர்க்கதரிசியின் வாசகம் ஏன் உண்மையாயிருக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ளவும். பவுலுக்கும் அவனுடைய தோழர்களுக்கும் ஆவியானவர் உதவிய நிகழ்வுகளைக் கவனியுங்கள். அவர்கள் ஆவியானவரைப் பின்பற்றியதால் என்ன ஆசீர்வாதங்கள் வந்தன? சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள உங்கள் முயற்சிகளில் ஆவியின் தூண்டுதல்களை நீங்கள் எப்போது உணர்ந்திருக்கிறீர்கள்?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16–21

அனைத்து சூழ்நிலைகளிலும் நான் சுவிசேஷத்தை அறிவிக்க முடியும்.

சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததற்காக சிறையில் போடப்படுவது, பிரசங்கிப்பதை நிறுத்த புரிந்துகொள்ளக்கூடிய ஒரு காரணம் போல தோன்றலாம். ஆனால் பவுலுக்கும் சீலாவுக்கும், சிறைச்சாலைக்காரனை மனமாற்ற அது ஒரு வாய்ப்பானது (அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:16–34 பார்க்கவும்). அப்போஸ்தலருடைய நடபடிகள் 16–21 முழுவதிலும், ஒவ்வொருவருடனும் அவனது சாட்சியை பகிர்ந்துகொள்ள பவுல் விருப்பமாயிருந்த பிற எடுத்துக்காட்டுகளைத் தேடவும். அவன் மிகத் தைரியமாயும் பயமற்றவனாயும் இருந்தான் என ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்? பவுலின் எடுத்துக்காட்டிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16–21ல் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுவதைப்பற்றிய அநேக பல செய்திகள் இருக்கின்றன. இந்த அதிகாரங்களை நீங்கள் படிக்கும்போது, குறிப்பாக உங்களுக்குப் பொருந்தக்கூடிய சிலவற்றைத் தேடுங்கள்.

Dieter F. Uchtdorf, “Missionary Work: Sharing What Is in Your Heart,” Liahona, May 2019, 15–18 ஐயும் பார்க்கவும்.

படம்
குழந்தையை வைத்திருத்தல்

நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய பிள்ளை.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:16–34

“நாம் தேவனின் சந்ததியாக இருக்கிறோம்.”

வித்தியாசமான அபிப்பிராயங்களும் மத கண்ணோட்டங்களும் உடைய ஜனத்தை அத்தனேயில் பவுல் கண்டான். அவர்கள் எப்போதும் “நவமான காரியங்களைக் கேட்க” நாடினார்கள், பவுல் அவர்களுக்கு கொடுத்தது நிச்சயமாக அவர்களுக்கு புதியதாக இருந்தது (அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:19–21 பார்க்கவும்). “அறியப்படாத தேவன்” என அவர்கள் அழைத்த தேவர்கள் உள்ளிட்ட, அநேக தேவர்களை அவர்கள் ஆராதித்தார்கள்,(அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:23), ஆனால் தேவர்கள் வல்லமைகள் அல்லது சக்திகள் கொண்டவர்கள், ஜீவனுள்ளவர்களல்ல, ஆளுமைமிக்கவர்களல்ல, நிச்சயமாக நமது பிதாவல்ல என அவர்கள் நம்பினார்கள். தேவனை அறிந்துகொள்ள அவர்களுக்கு உதவ பவுல் சொன்னதை சிந்தியுங்கள். “தேவனின் சந்ததியாயிருப்பது” என்றால் உங்களுக்கு என்ன அர்த்தமாகிறது (அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:29). உங்கள் அபிப்பிராயத்தில், தேவனின் பிள்ளையாயிருப்பது அவரது சிருஷ்டிகளில் ஒருவராக மட்டுமே இருப்பதிலிருந்து எப்படி வித்தியாசமாக இருக்கிறது? இந்த உண்மையைப் புரிந்துகொள்வது நீங்கள் உங்களிலும் மற்றவர்களிலும் எவ்வாறு செல்வாக்கு ஏற்படுத்துகிறது?

அவன் சாட்சியளிக்கும்போது பவுலுக்கருகில் நீங்கள் நின்றிருந்தால், நமது பரலோக பிதாவைப்பற்றி பூர்வ கால கிரேக்கர்களுக்கு நீங்கள் என்ன சொல்லியிருப்பீர்கள்? உங்கள் சாட்சியைக் கேட்பதிலிருந்து ஆதாயமடையக் கூடிய ஒருவரை நீங்கள் அறிவீர்களா?

ரோமர் 8:16; 1 யோவான் 5:2; “We Are the Offspring of God” (video, ChurchofJesusChrist.org)ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16–21.அப்போஸ்தலருடைய நடபடிகள் 16–21ஐப்பற்றிய உங்கள் குடும்பத்தின் புரிதலை ஆழமாக்க, இந்த அதிகாரங்களில் பவுல் சுவிசேஷத்தைப் பிரசங்கித்த நகரங்களைத் தேடுவதன் மூலம், இந்த குறிப்பின் முடிவில் வரைபடத்தைப் படிக்கலாம். அனைத்து நாடுகளுக்கும் நற்செய்தியைக் கொண்டு வருவதற்கு இன்று நம்மிடம் என்ன ஆதாரங்கள் உள்ளன?

சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள உங்கள் குடும்பத்தினரை ஊக்குவிக்க, நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட “Sharing the Gospel” section of the Gospel Library காணொலிகளைக் காட்டலாம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:10–12; 18:24–28இந்த வசனங்களிலுள்ள பரிசுத்தவான்களைப் போல அதிகமாக எப்படி ஆக முடியும்? “வார்த்தையை முழு மனதுடன் [ஏற்றுக்கொள்வது]” என்பதன் அர்த்தம் என்ன? (அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:11). “வேதங்களில் வல்லவனாக” இருக்க நாம் என்ன செய்ய முடியும் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:24).

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:1–7.ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்படுவதன் முக்கியத்துவத்தைப்பற்றி உங்கள் குடும்பத்தினர் கலந்துரையாடுவதற்கு இந்த வசனங்கள் உதவும். அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:1–7ல் உள்ள உண்மைகளை நன்றாகப் புரிந்துகொள்ள, பேட்டரி இல்லாத செல்போன் போன்ற வேறு எதுவும் இல்லாமல் பயனற்ற சில விஷயங்களை நீங்கள் விவாதிக்கலாம். அல்லது தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் இந்த போதனையை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்: “தண்ணீரால் ஞானஸ்நானம் பெறுவது பாதி ஞானஸ்நானம், மற்ற பாதி இல்லாமல் எதற்கும் நல்லது அல்ல, அதாவது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்” (Teachings: Joseph Smith95). பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறாமல் ஞானஸ்நானம் எடுப்பது ஏன் “எதற்கும் நல்லது அல்ல” (3 நேபி 27:19–20; மோசே 6:59–61 பார்க்கவும்).

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:18–20.அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:18–20, நீங்கள் வாசிக்கும்போது, மக்கள் சுவிசேஷத்தைத் தழுவுவதற்காக விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்த உடைமைகளின் மதிப்பைக் கவனியுங்கள் (வசனம் 19 பார்க்கவும்). பரலோக ஆசீர்வாதங்களை பெறும்படிக்கு நாம் விட்டுவிட வேண்டிய உலகப்பிரகார உடமைகள் மற்றும் செயல்கள் இருக்கின்றனவா?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:32–35.“வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” என்ற கிறிஸ்துவின் போதனையை உங்கள் குடும்பம் எப்போது அனுபவித்திருக்கிறது? (அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:35). உங்கள் குடும்பம் கொடுக்கக்கூடிய சேவை, நேரம் மற்றும் பரிசுகளால் ஆதாயப்படக்கூடிய ஒருவர் இருக்கிறாரா? குடும்பமாக, ஒருவருக்கு சேவை செய்ய சில கருத்துக்களை கலந்துரையாடி ஒரு திட்டமிடுங்கள். பிறருக்கு சேவை செய்யும்போது நாம் எப்படி உணர்கிறோம்? பெறுவதைப் பார்க்கிலும் கொடுப்பது ஏன் ஆசீர்வாதமானது?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I Am a Child of God,” Children’s Songbook, 2–3.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

எண்ணங்களைப் பதிவு செய்யவும். “ஆவிக்குரிய உள்ளுணர்வுகளை நீங்கள் பதிவு செய்யும்போது, அவரது வழிநடத்துதலை நீங்கள் மதிக்கிறீர்கள் மற்றும் அதிக அடிக்கடியான வெளிப்படுத்தல்களால் அவர் உங்களை ஆசீர்வதிப்பார்” (Teaching in the Savior’s Way, 12; பக்கம் 30 ஐயும் பார்க்கவும்).

படம்
பவுலின் ஊழியப் பயணங்களின் தேசப்படம்

அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியப் பயணங்கள்

அச்சிடவும்