புதிய ஏற்பாடு 2023
ஜூலை 3–9. அப்போஸ்தலருடைய நடபடிகள் 1–5: “நீங்கள் எனக்கு சாட்சியாயிருப்பீர்கள்”


“ஜூலை 3–9. அப்போஸ்தலருடைய நடபடிகள் 1–5: ‘நீங்கள் எனக்கு சாட்சியாயிருப்பீர்கள்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“ஜூலை 3–9. அப்போஸ்தலருடைய நடபடிகள் 1–5,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

ஆற்றங்கரையில் திரளான ஜனங்கள், ஆற்றில் ஞானஸ்நானம் கொடுக்கப்படுதல்

பெந்தெகொஸ்தே நாள்–சிட்னி கிங்

ஜூலை 3–9

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1–5

“நீங்கள் எனக்கு சாட்சியாயிருப்பீர்கள்”

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1–5 நீங்கள் படிக்கும்போது, உங்கள் வாழ்க்கைக்கு பொருத்தமான சத்தியங்களைக் காண பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உணர்த்தலாம். உங்களை கவர்கிற வசனங்களின் குறிப்பு எடுத்து, நீங்கள் கற்பதை பகிர சந்தர்ப்பங்களைத் தேடவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

இயேசு தன் பிதாவினிடத்துக்கு ஏறிப்போனபோது, பிற அப்போஸ்தலர்களுடன் பேதுரு “வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில்,” அவன் என்ன நினைத்தான், உணர்ந்தான் என எப்போதாவது வியந்திருக்கிறீர்களா? (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:10). தேவ குமாரனால் ஸ்தாபிக்கப்பட்ட சபை இப்போது பேதுருவின் கவனிப்பில் இருக்கிறது. “சகல தேசங்களுக்கும்” போதிக்கும் முயற்சியை வழிநடத்துவது இப்போது அவனிடம் உள்ளது (மத்தேயு 28:19). ஆனால் குறைந்தவனாகவோ பயந்தவனாகவோ உணர்ந்திருந்ததாக, அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகத்தில் நாம் எந்த ஆதாரத்தையும் காணவில்லை. பயமற்ற சாட்சி மற்றும் மனமாற்றம், அற்புதமான குணமாக்குதல்கள், ஆவிக்குரிய வெளியரங்கங்கள், மற்றும் சபையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு நாம் காண்பன உதாரணங்கள். இது இன்னும் இரட்சகரின் சபையாக இருந்தது, இன்னும் அவரால் வழிநடத்தப்பட்டது. உண்மையில், அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் இயேசு கிறிஸ்து, அப்போஸ்தலர்கள் மூலம் செய்த செயல்கள் என்றும் அழைக்கப்படலாம். பொழிகிற ஆவியால் வழிநடத்தப்பட்டு, பேதுரு கலிலேயா கடற்கரையில் இயேசு கண்டுபிடித்த இன்னமும் படிக்காத மீனவனாக இல்லை. அல்லது நாசரேத்தின் இயேசுவை அவனுக்குத் தெரியவே தெரியாது என மறுத்ததால் மனங்கசந்து சில வாரங்களுக்கு முன் அழுத துயரமிக்க மனுஷனாக அவன் இல்லை.

அப்போஸ்தலருடைய நடபடிகள் ர் புஸ்தகத்தில் இயேசு கிறிஸ்து மற்றும் அவரது சுவிசேஷத்தைப்பற்றிய வல்லமைமிக்க அறிவிப்புகளை நீங்கள் வாசிப்பீர்கள். நீங்கள் உள்ளிட்ட ஜனங்களை அவர்கள் இருக்க முடிகிறபடி தேவன் அறிகிற பராக்கிரமிக்க சீஷர்களாக சுவிசேஷம் மாற்ற முடிவதை நீங்கள் பார்ப்பீர்கள்.

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:1–8, 15–26; 2:1–42; 4:1–13, 31–33

பரிசுத்த ஆவி மூலம் தன் சபையை இயேசு கிறிஸ்து நடத்துகிறார்.

இரட்சகர் பரமேறிய பிறகு இயேசு கிறிஸ்துவின் சபையை ஸ்தாபிக்க அப்போஸ்தலர்களின் முயற்சிகளை அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகம் பதிவு செய்கிறது. இப்போது இயேசு கிறிஸ்து பூமியில் இல்லாவிட்டாலும், பரிசுத்த ஆவியின் மூலம் வெளிப்படுத்தலால் அவர் தம் சபையை நடத்தினார். பின்வரும் பக்கங்களை நீங்கள் பரிசீலிக்கும்போது கிறிஸ்துவின் சபையின் புதிய தலைவர்களை பரிசுத்த ஆவியானவர் எப்படி வழிநடத்தினார் என்பதைக் கருத்தில் கொள்ளவும்: அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:1–8, 15–26; 2:1–42; 4:1–13, 31–33.

இன்று கிறிஸ்துவின் சபையின் உறுப்பினர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுத்தும் பணியில் பங்கு கொள்ள வேண்டும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழவும், தேவைப்படுபவர்களைக் கவனித்து, கிறிஸ்துவிடம் வர மற்றவர்களை அழைக்கவும், குடும்பங்களை நித்தியமாக ஒன்றிணைக்கவும் (General Handbook1.2 பார்க்கவும்). உங்களை வழிநடத்த நீங்கள் எப்படி பரிசுத்த ஆவியை சார்ந்திருக்க முடியும் என்பதைப்பற்றிய இந்த முற்கால அப்போஸ்தலர்களின் அனுபவங்களிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

Bible Dictionary, “Holy Ghost,” ஐயும் பார்க்கவும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:36–47; 3:12–21

சுவிசேஷத்தின் கொள்கைகளும் நியமங்களும் கிறிஸ்துவண்டை வர எனக்கு உதவுகின்றன.

பெந்தெகொஸ்தே நாளில் யூதர்களைப் போல “இருதயத்தில் குத்தப்பட்டவர்களாக,” எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? (அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:37). மனம் வருந்தும்படி எதாவது நீங்கள் செய்திருக்கலாம் அல்லது உங்கள் வாழ்க்கையை மாற்ற மட்டும் நீங்கள் விரும்பியிருக்கலாம். இந்த எண்ணங்களை நீங்கள் பெறும்போது, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38ல் காணப்படும் யூதர்களுக்கான பவுலின் ஆலோசனை. (விசுவாசம், மனந்திரும்புதல், ஞானஸ்நானம் மற்றும் பரிசுத்த ஆவியின் வரம், அல்லது கிறிஸ்துவின் கோட்பாடு என சில சமயங்களில் குறிப்பிடப்படுகிறவை உள்ளிட்டவை) சுவிசேஷத்தின் முதல் கொள்கைகள் மற்றும் நியமங்கள் என அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:37–47ல் பதிவு செய்யப்பட்டபடி இந்த மனமாறியவர்களை எவ்வாறு பாதித்ததென கவனிக்கவும்.

நீங்கள் ஏற்கனவே ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றிருக்கலாம், ஆகவே கிறிஸ்துவின் கோட்பாடுகளை எவ்வாறு தொடர்ந்து பயன்படுத்துகிறீர்கள்? மூப்பர் டேல் ஜி. ரென்லண்டின் இந்த வார்த்தைகளை கருத்தில் கொள்ளவும்: “நாம் [கிறிஸ்துவில்] விசுவாசத்தைப் பிரயோகப்படுத்தி, மனந்திரும்பி, ஞானஸ்நான உடன்படிக்கைகளையும் ஆசீர்வாதங்களையும் புதுப்பிக்க திருவிருந்தில் பங்கேற்று, பெருமளவில் பரிசுத்த ஆவியை தொடர்ந்த தோழனாக பெற்று, … மீண்டும் மீ்ண்டும் பூரணப்பட்டிருக்கலாம். நாம் அப்படிச் செய்யும்போது, நாம் அதிகமாக கிறிஸ்து போலாகி, உரிமைப்பட்ட அனைத்துடனும் நாம் முடிவுபரியந்தம் நிலைத்திருக்க முடிகிறது” (“Latter-day Saints Keep on Trying,” Liahona, May 2015, 56).

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:19–21

“இளைப்பாறுதலின் காலங்கள்” மற்றும் “எல்லாம் நிறைவேறித்தீரும் காலங்கள்” யாவை?

“இளைப்பாறும் காலங்கள்” இயேசு கிறிஸ்து திரும்ப வருகிற ஆயிரம் வருஷ அரசாட்சியைக் குறிக்கிறது. “எல்லாம் நிறைவேறித்தீரும் காலங்கள்” சுவிசேஷம் மறுஸ்தாபிதம் செய்யப்படுவதைக் குறிக்கிறது, அது ஆயிரம் வருஷ அரசாட்சிக்கு உலகத்தை ஆயத்தப்படுத்துகிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3; 4:1–31; 5:12–42

இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் அவரது நாமத்தில் அற்புதங்களை நிறைவேற்ற வல்லமை கொடுக்கப்படுகிறார்கள்.

ஆலயத்துக்கு வருவோரிடத்திலிருந்து பணம் பெற சப்பாணி நம்பினான். ஆனால் கர்த்தரின் ஊழியக்காரர்கள் அவனுக்கு மிக அதிகமாய் கொடுத்தார்கள். நீங்கள் அப்போஸ்தலருடைய நடபடிகள் 3; 4:1–31; மற்றும் 5:12–42 வாசிக்கும்போது, அதன் பின்வந்த அற்புதம் இந்த ஜனங்களை எவ்வாறு பாதித்தது என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

  • சப்பாணி

  • பேதுருவும் யோவானும்

  • ஆலயத்தில் சாட்சிகள்

  • பிரதான ஆசாரியரும் ஆளுகை செய்வோரும்

  • பிற பரிசுத்தவான்கள்

பேதுரு ஒருவனைக் குணமாக்குதல்

என்னிடத்திலுள்ளதை உனக்குத்தருவேன்–வால்ட்டர் ரானே

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:21–26.அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:21–26 வாசித்தல், இன்று பூமியில் அப்போஸ்தலர்கள் இருப்பதால் கிடைக்கும் ஆசீர்வாதங்களைப்பற்றி உங்கள் குடும்பம் விவாதிக்க உதவலாம். இன்றைய அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் தேவனால் அழைக்கப்பட்டவர்கள் என்பதற்கு அவர்கள் எவ்வாறு சாட்சியைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை குடும்ப உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ளலாம். இந்த சாட்சியைப் பெறுவது ஏன் முக்கியமாகும்?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:37.“இருதயத்தில் குத்தப்பட்டவர்களாக” என்ற சொற்றொடருக்கு அர்த்தம் என்னவாயிருக்கலாம்? இதே போன்ற ஒன்றை நாம் எப்போது உணர்ந்தோம்? அப்படிப்பட்ட உணர்வுகளை நாம் பெறும்போது “நாம் என்ன செய்வது” என சொல்வது ஏன் முக்கியமாகும்?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:1–10.இந்த வசனங்களிலுள்ள கதையை நடித்து உங்கள் குடும்பம் மகிழலாம். அல்லது நீங்கள் “Peter and John Heal a Man Crippled Since Birth” (ChurchofJesusChrist.org) காணொலி பார்க்கலாம். அவன் எதிர்பார்த்ததை விட ஆலயத்திலிருந்த மனுஷன் எப்படி வித்தியாசமாக ஆசீர்வதிக்கப்பட்டான்? பரலோக பிதாவின் ஆசீர்வாதங்கள் எவ்வாறு எதிர்பாராத விதங்களில் நமக்கு வந்ததை நாம் பார்த்திருக்கிறோம்?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:12–26; 4:1–21; 5:12–42பேதுரு மற்றும் யோவானின் உண்மைத்தன்மையில் உங்களைக் கவர்ந்தது எது?(“Peter Preaches and Is Arrested” on ChurchofJesusChrist.org காணொலியையும் பார்க்கவும்). இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நமது சாட்சியில் நாம் எவ்வாறு தைரியமாக இருக்க முடியும்? இளம் பிள்ளைகள் தங்கள் சாட்சியங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு உதவுவதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:315:4.அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:31–37ல் நம் குடும்பம், தொகுதி அல்லது சமூகம் விவரிக்கப்பட்டுள்ளதைப் போலவே இருக்க நாம் எவ்வாறு உதவலாம்? “ஒரே இருதயமும் ஒரே மனதும்” என்பதன் அர்த்தம் என்ன? எந்த வழிகளில் நாம் சில நேரங்களில் நமது நன்கொடைகளின் “ பாகத்தை [வைத்துக்]” கொள்கிறோம்? அதைச் செய்வது எவ்வாறு “தேவனிடத்தில் [பொய் சொல்வது] போலிருக்கிறது”? (அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:2, 4). நேர்மையற்ற தன்மை நம்மை ஆவிக்குரிய பிரகாரமாக எவ்வாறு பாதிக்கிறது?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Let the Holy Spirit Guide,” Hymns, no. 143.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

ஒரு தலைப்பை தேர்ந்தெடுங்கள். ஒன்றாக படிக்க அப்போஸ்தலருடைய நடபடிகள் 1–5லிருந்து ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து, குடும்ப அங்கத்தினர்கள் முறை எடுக்கவிடவும்.

மேல்நோக்கிச் சுட்டிக்காட்டும் இரண்டு தேவதூதர்களைச் சுற்றி அப்போஸ்தலர்கள்

பரமேறுதல்– ஹாரி ஆண்டர்சன்