புதிய ஏற்பாடு 2023
ஜூலை 31–ஆகஸ்டு 6. அப்போஸ்தலருடைய நடபடிகள் 22–28: “ஒரு ஊழியக்காரனும் ஒரு சாட்சியும்”


“ஜூலை 31–ஆகஸ்டு 6. அப்போஸ்தலருடைய நடபடிகள் 22–28: ‘ஒரு ஊழியக்காரனும் ஒரு சாட்சியும்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“ஜூலை 31–ஆகஸ்டு 6. அப்போஸ்தலருடைய நடபடிகள் 22–28” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
பவுல் சிறைச்சாலையில்

ஜூலை 31–ஆகஸ்டு 6

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22–28

“ஒரு ஊழியக்காரனும் ஒரு சாட்சியும்”

பரிசுத்த ஆவியிடமிருந்து வருகிற எண்ணங்கள் வழக்கமாக மென்மையாகவும் சிலநேரங்களில் விரைவில் மறைவதாயுமிருக்கும். உங்கள் எண்ணங்களை பதிவுசெய்தல், அவைகளை மிக ஆழமாக சிந்திக்க உங்களை அனுமதிக்கிறது. அப்போஸ்தலருடைய நடபடிகள் 22–28 ஐ நீங்கள் வாசிக்கும்போது உங்களுக்கு வருகிற சிந்தனைகளையும் உணர்வுகளையும் எழுதி, அவைகளைப்பற்றி தியானிக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

“நாம் கர்த்தருடைய பணியிலிருக்கும்போது, கர்த்தருடைய உதவிக்கு நாம் பாத்திரப்பட்டவர்களாயிருக்கிறோம்” என தலைவர் தாமஸ் எஸ். மான்சன் வாக்களித்தார் (“To Learn, to Do, to Be,” Liahona, Nov. 2008, 62). நாம் பாத்திரப்பட்டவர்களல்ல, ஆயினும் ஒரு மிருதுவான சாலைக்கும் முடிவற்ற வெற்றிகளுக்கும் பாத்திரப்பட்டவர்கள். இதற்கு நிருபணமாக, அப்போஸ்தலனாகிய பவுலைவிட நாம் கூடுதலாக பார்க்க வேண்டியதில்லை. “புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிப்பதே” (அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:15) இரட்சகரிடமிருந்து வருகிற அவருடைய பணி. இந்த பணியை நிறைவேற்றுவதில், சங்கிலிகள், சிறையிருப்பு, சரீர நிந்தனை, கப்பல் சேதம், ஒரு சர்ப்பத்தின் தாக்குதலும் போன்ற பெரிய எதிர்ப்புகளை பவுல் எதிர்கொண்டதை அப்போஸ்தலருடைய நடபடிகள், அதிகாரங்கள் 22–28ல் நாம் பார்க்கிறோம். ஆனால், இயேசு “அவனருகில் நின்று பவுலே திடன்கொள் எனச் சொல்லியதையும்” (அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:11) நாம் பார்க்கிறோம். “களிகூருதலின் சத்தத்துடன் [அவருடைய] சுவிசேஷத்தை அறிவிக்கவும்” என்ற கர்த்தரின் அழைப்பு இந்த வாக்குறுதியுடன் வருகிறது என்பதை பவுலின் அனுபவங்கள் ஒரு ஊக்கமளிக்கும் நினைவூட்டலாக இருக்கின்றன: “உங்கள் இருதயங்களை உயர்த்தி, மகிழ்ச்சியாக இருங்கள், ஏனென்றால் நான் உங்கள் நடுவில் இருக்கிறேன்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:4–5; மத்தேயு 28:19–20ஐயும் பார்க்கவும்).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:1–21; 26:1–29

இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் தைரியமாக தங்களுடைய சாட்சியைப் பகிர்ந்துகொண்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22 மற்றும் 26ல் எழுதப்பட்டுள்ள வல்லமைமிக்க சாட்சிகளை பவுல் வழங்கியபோது, ரோம சேனை வீரர்களால் அவன் சிறைபிடிக்கப்பட்டிருந்தான். அவனுக்கு மரணதண்டனை வழங்க, அவன் பேசிய ஜனங்களுக்கு அதிகாரமிருந்தது. இருந்தும், இயேசு கிறிஸ்துவைக் குறித்தும், அவன் பெற்ற பரலோக தரிசனத்தைக் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:19) குறித்தும் தைரியமாக சாட்சி கொடுக்க அவன் தேர்ந்தெடுத்தான். அவனுடைய வார்த்தைகளைப்பற்றிய எது உங்களுக்கு உணர்த்துகிறது? உங்களுடைய சாட்சியைப் பகிர்ந்துகொள்ள உங்களுக்கிருக்கிற வாய்ப்புகளைக் கருத்தில் கொள்ளவும். உதாரணமாக, இயேசு கிறிஸ்துவைப்பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று உங்கள் நண்பர்களுக்குத் தெரியுமா? உதாரணமாக, சுவிசேஷத்தைப்பற்றிய உங்களுடைய சாட்சியை நீங்கள் எவ்வாறு பெற்றீர்கள் என்பதைப்பற்றி உங்களுடைய குடும்பம் அல்லது மற்றவர்களுக்கு நீங்கள் சொன்ன கடைசி நேரம் எப்போது?

இளம் ஜோசப் ஸ்மித் தனது முதல் தரிசனத்தைப்பற்றிச் சொன்னதற்காக கேலி செய்யப்பட்டபோது, பவுல் தனது தரிசனம் குறித்து சாட்சியமளித்த விதத்தால் அவர் ஈர்க்கப்பட்டார் (ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:24–25. பார்க்கவும்). ஜோசப் ஸ்மித் பவுலிடமிருந்து கற்றுக்கொண்டதை நீங்கள் எவ்வாறு சுருக்கமாகக் கூறுவீர்கள்? இயேசு கிறிஸ்துவின் இந்த இரண்டு சாட்சிகளிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

Neil L. Andersen, “We Talk of Christ,” Liahona, Nov. 2020, 88–91 ஐயும் பார்க்கவும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:10–11; 27:13–25, 40–44

அவருக்கு சேவை செய்ய முயற்சிக்கிறவர்களோடு கர்த்தர் நிற்கிறார்.

பவுலின் ஊழியம் தெளிவாக காட்டுகிறதைப்போல, நமது வாழ்க்கையிலுள்ள பிரச்சினைகள், நாம் செய்துகொண்டிருக்கிற பணியை தேவன் அங்கீகரிக்கவில்லை என்பதற்கான ஒரு அடையாளமில்லை. உண்மையில் சிலநேரங்களில், பிரச்சினைகளின்போதுதான் அவருடைய ஆதரவை மிக வலுமையாக நாம் உணருகிறோம். பவுலின் ஊழியத்தைப்பற்றி மிக சமீபத்தில் நீங்கள் வாசித்ததை மறுபரிசீலனை செய்வதும், அவன் சகித்துக்கொண்டவற்றைப் பட்டியலிடுவதும் மிக ரசிக்கத்தக்கதாக இருக்கக்கூடும் (உதாரணமாக, அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:19–20; 16:19–27; 21:31–34; 23:10–11; 27:13–25, 40–44 பார்க்கவும்). கர்த்தர் அவருக்கு எப்படி துணை நின்றார்? அவர் உங்களுக்கு எப்படி துணை நின்றார்?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:24–27; 26:1–3, 24–2927

தேவனின் ஊழியர்களின் வார்த்தைகளுக்கு செவிசாய்ப்பதில் பாதுகாப்பும் சமாதானமும் இருக்கிறது.

அவனுடைய ஊழியம் முழுவதிலும், இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய சுவிசேஷத்தைப்பற்றி பவுல் ஆற்றல்மிக்க சாட்சியை பகிர்ந்தான். அநேக ஜனங்கள் அவனுடைய சாட்சியை ஏற்றுக்கொண்டார்கள், ஆனால் எல்லோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:24–27 மற்றும் அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:1–3, 24–29ஐ நீங்கள் வாசிக்கும்போது, பவுலின் போதனைகளுக்கு பின்வரும் யூதேயாவின் ரோம ஆட்சியாளர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதைக் காட்டுகிற வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் எழுதவும்.

  • பேலிக்ஸ்

  • பெஸ்து

  • அகிரிப்பா இராஜா

சீஸரால் விசாரிக்கப்பட ரோமுக்கு கப்பல் யாத்திரை செய்துகொண்டிருந்தபோது, கப்பலுக்கும் யாத்திரை செய்கிறவர்களுக்கும் “வருத்தமும் மிகுந்த சேதமும்” உண்டாயிருக்கும் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:10) என பவுல் தீர்க்கதரிசனமுரைத்தான். அவனுடைய எச்சரிக்கைகளுக்கு பவுலின் சகபயணிகள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதைக் கண்டுபிடிக்க அதிகாரம் 27 ஐ வாசிக்கவும். அவர்களுடைய அனுபவத்தில் உங்களுக்காக நீங்கள் ஏதாவது பாடங்களைக் கண்டீர்களா?

சபைத் தலைவர்களின் போதனைகளை நீங்கள் கேட்டபோது, இந்த ஜனங்களைப் போன்று எப்போதாவது நீங்கள் நடந்துகொண்டீர்களா? இந்த வழிகளில் நடந்துகொள்ளுதலின் சாத்தியமான விளைவுகள் எவை? அவருடைய ஊழியக்காரர்கள் மூலமாக கர்த்தருடைய ஆலோசனைக்குச் செவிகொடுத்தலைப்பற்றி இந்த விவரங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?

2 நேபி 33:1–2; D. Todd Christofferson, “The Voice of Warning,” Liahona, May 2017, 108–11; “Follow the Living Prophet,” Teachings of Presidents of the Church: Ezra Taft Benson (2014), 147–55 ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:16.அவனுடைய மனமாற்றத்திற்கு முன்பு, தேவனுக்கு எதிரான குற்றங்களின் நீண்ட வரலாறு பவுலுக்கிருந்தது. ஆனால் அவன் மனந்திரும்ப மனமுள்ளவனாயிருந்ததால், “எப்போதுமே, தேவனுக்கும் எல்லா மனுஷருக்கும் முன்பாக குற்றமற்ற மனசாட்சியை உடையவனாயிருக்கிறேன் என இங்கே நான் எனக்குள்ளே செயல்படுத்துகிறேன்” என அவனால் சொல்ல முடிந்தது. (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 135:4–5 ஐயும் பார்க்கவும்). தேவனுக்கும் மற்றவர்களுக்கும் முன்பாக நாம் எவ்வாறு குற்றமுள்ள மனசாட்சியிலிருந்து விடுபடமுடியும்?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:16–18.இந்த வசனங்களில், எதைச் செய்ய பவுலை கர்த்தர் அழைத்தார்? இதைப்போன்ற காரியங்களைச் செய்ய நமக்கு என்ன வாய்ப்புகளிருக்கின்றன?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:1–9.உங்கள் குடும்பத்தில் யாராவது சர்ப்பங்களைப் போலிருக்கிறார்களா? அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:1–9ல் காணப்படுகிற கதைகளைக்கூற அந்த நபரை அல்லது மற்றொரு குடும்ப அங்கத்தினரைக் கேட்க நீங்கள் விரும்பலாம். இந்தக் கதைகளின் படங்களை வரைவதில் அல்லது அவைகளை நடித்துக்காட்ட உங்கள் பிள்ளைகள் விரும்பலாம். இந்த விவரங்களிலிருந்து நம்மால் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளமுடியும்? அவருடைய ஊழியக்காரர்களுக்கு அவருடைய வாக்குத்தத்தங்களை கர்த்தர் நிறைவேற்றுகிறார் என்பது ஒன்றாக இருக்கலாம். உதாரணமாக, மாற்கு 16:18ல் செய்யப்பட்ட வாக்குத்தத்தங்கள், பவுலின் அனுபவங்களில் அவைகள் நிறைவேற்றப்பட்டதுடன் நீங்கள் ஒப்பிடமுடியும். சமீபத்திய ஒரு பொது மாநாட்டின் உரையில், கர்த்தருடைய ஊழியக்காரர் ஒருவரால் கொடுக்கப்பட்ட ஒரு வாக்களிப்பையும்கூட நீங்கள் காணலாம், ஒருவேளை ஒன்று உங்கள் குடும்பத்துக்கு அர்த்தமுள்ளதாயிருக்கும், அதை உங்கள் வீட்டில் காட்சியாக வைக்கவும். இந்த வாக்களிப்பு நிறைவேற்றப்படும் என்ற நமது விசுவாசத்தை எவ்வாறு நாம் காட்டமுடியும்?

படம்
விஷமுள்ள சர்ப்பம்

ஒரு விஷமுள்ள சர்ப்பம் அவனைக் கடித்தபோது பவுலை தேவன் பாதுகாத்தார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:22–24.பவுலின் நாளைப்போல இன்றைய சபை அடிக்கடி “எதிராகப் பேசுகிறது.”(called a “sect” in வசனம் 22), இரட்சகருக்கும் அவருடைய சபைக்கும் எதிராக ஜனங்கள் பேசியபோது அதற்கு பவுல் எவ்வாறு பதிலளித்தான்? பவுலின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “My Redeemer Lives,” Hymns, no. 135.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்கிற கொள்கைகளுக்கு கவனம் செலுத்தவும். வேதங்களை நீங்கள் படிக்கும்போது, “குறிப்பாக என்னுடைய குடும்பத்திற்கு அர்த்தமுள்ளதாயிருக்கிற எதை நான் இங்கே காண்கிறேன்?” என உங்களையே நீங்கள் கேட்கவும் (Teaching in the Savior’s Way, 17 பார்க்கவும்.)

படம்
அகிரிப்பா இராஜாவுக்கு முன்பாக பவுல்

அகிரிப்பா இராஜாவுக்கு முன்பாக பவுல். இயேசு கிறிஸ்துவின் சாட்சியில் வீரம்– டானியேல் எ. லூயிஸ்.

அச்சிடவும்