புதிய ஏற்பாடு 2023
ஆகஸ்டு 7–13. ரோமர் 1–6: “இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலன்”


“ஆகஸ்டு 7–13. ரோமர் 1–6: ‘இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலன்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“ஆகஸ்டு 7–13. ரோமர் 1–6,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
பவுல் ஒரு நிருபத்தை எழுதிக்கொண்டிருத்தல்

ஆகஸ்டு 7–13

ரோமர் 1–6

“இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலன்”

பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு என்ன போதித்துக்கொண்டிருக்கிறார் என்பதை நினைவுகூர உணர்த்துதல்களை பதிவுசெய்தல் உங்களுக்கு உதவும். இந்த உணர்த்துதல்களைப்பற்றி நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள் என பதிவுசெய்வதையும் கருத்தில் கொள்ளவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

யூதர்கள் மற்றும் புறஜாதியாரின் ஒரு மாறுபட்ட குழுவாயிருந்த ரோம சபை அங்கத்தினர்களுக்கு பவுல் அவனுடைய நிருபத்தை எழுதிய நேரத்தில், கலிலேயாவிலிருந்த விசுவாசிகளின் ஒரு சிறிய குழுவுக்கும் அப்பால் இயேசு கிறிஸ்துவின் சபை வளர்ந்தது. இரட்சகரின் உயிர்த்தெழுதலுக்கு சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரு வல்லமைமிக்க சாம்ராஜ்யத்தின் தலைநகரான ரோமையும் சேர்த்து, நியாயமான முறையில் அப்போஸ்தலர் பயணித்த ஏறக்குறைய எல்லா இடங்களிலும் கிறிஸ்தவர்களின் சபைகள் இருந்தன. இருப்பினும், ரோமானியப் பேரரசின் பரந்த தன்மையுடன் ஒப்பிடுகையில், சபை சிறியதாக இருந்தது மற்றும் பெரும்பாலும் துன்புறுத்தலுக்கு உட்பட்டது. இத்தகைய சூழ்நிலைகளில், சிலர் “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப்பற்றி வெட்கப்படுவார்கள்” - ஆனால், நிச்சயமாக, பவுல் அல்ல. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் உண்மையான சக்தி, “இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலன்” என்று அவன் அறிந்திருந்தான் மற்றும் சாட்சியமளித்தான் (ரோமர் 1:16).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

நிருபங்கள் எவை, அவைகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டன?

உலகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பரிசுத்தவான்களுக்கு சபைத் தலைவர்களால் எழுதப்பட்ட கடிதங்களே நிருபங்கள். ரோமரில் ஆரம்பித்து எபிரெயர்வரை புதிய ஏற்பாட்டில் அநேக நிருபங்களை பவுல் எழுதியிருந்தான். அவனது நிருபங்கள் எபிரெயர் தவிர, நீளத்தால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன, (Bible Dictionary, “Pauline Epistles” பார்க்கவும்). புதிய ஏற்பாட்டில் ரோமர் முதல் நிருபமாயிருந்தாலும்கூட, உண்மையில், பவுலின் ஊழியப் பயணத்தின் முடிவுக்கருகில் இது எழுதப்பட்டது.

ரோமர் 1–6

“விசுவாசத்தினாலே நீதிமான பிழைப்பான்.”

ரோமர்களுக்கு எழுதப்பட்ட நிருபத்தை சிறப்பாகப் புரிந்துகொள்ள பின்வரும் விளக்கங்கள் உங்களுக்கு உதவலாம்:

நியாயப்பிரமாணம்.“நியாயப்பிரமாணத்தைப்பற்றி” பவுல் எழுதும்போது மோசேயின் நியாயப்பிரமாணத்தை அவன் குறிப்பிட்டான். பவுலின் எழுத்துக்களில் “கிரியைகள்” என்ற வார்த்தை மோசேயின் நியாயப்பிரமாணத்துடன் தொடர்புடைய வெளிப்புற செயல்களைக் குறிக்கிறது. ரோமர் 3:23–31 மோசேயின் நியாயப்பிரமாணமும் அதன் கீழ் தேவைப்படும் செயல்களும் விவரிக்கப்பட்டுள்ள “விசுவாச நியாயப்பிரமாணத்திலிருந்து” எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைக் கவனியுங்கள்.

விருத்தசேதனம், விருத்தசேதனமில்லாமை.பண்டைக்காலத்தில், ஆபிரகாமுடன் தேவன் செய்த உடன்படிக்கையின் சின்னமாக அல்லது அடையாளமாக விருத்தசேதனமிருந்தது. யூதர்களைக் குறிக்க “விருத்தசேதனம்” என்ற பதத்தை பவுல் பயன்படுத்தினான் மற்றும் புறஜாதியரைக் (உடன்படிக்கையின் ஜனம்) குறிக்க விருத்தசேதனமில்லாமை பயன்படுத்தப்பட்டது. தேவனின் உடன்படிக்கையின் ஜனமாக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை ரோமர் 2:25–29 போதிக்கிறது என்பதை சிந்திக்கவும். விருத்தசேதனம் என்பது தேவ ஜனத்துடன் செய்த உடன்படிக்கையின் ஒரு சின்னமாக இனிமேலும் இருக்காது என்பதை நினைவில் கொள்ளவும் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:23–29 பார்க்கவும்).

நியாயந்தீர்த்தல், நியாயந்தீர், நியாயந்தீர்க்கப்பட்ட.இந்த பதங்கள் பாவத்தின் மீட்பை, அல்லது மன்னித்தலைக் குறிக்கிறது. நாம் நியாயந்தீர்க்கப்படும்போது, நாம் மன்னிக்கப்படுகிறோம், மாசற்றவர்களாக அறிவிக்கப்படுகிறோம், நமது பாவங்களுக்காக நித்திய தண்டனையிலிருந்து விடுதலை பெறுகிறோம். இந்த பதங்களை நீங்கள் பார்க்கும்போது, நியாயப்படுத்துவதை சாத்தியமாக்குவதுபற்றி பவுல் என்ன கற்பித்தான் என்பதைக் கவனியுங்கள் (Guide to the Scriptures, “Justification, Justify,” scriptures.ChurchofJesusChrist.org; D. Todd Christofferson, “Justification and Sanctification,” Ensign, June 2001, 18–25 ஐயும் பார்க்கவும்). ரோமரில் நீதிமான் மற்றும் நீதியாயிருத்தல் போன்ற வார்த்தைகள் நியாயம் மற்றும் நியாயந்தீர்க்கப்படுதல் போன்ற வார்த்தைகளுக்கு ஒத்தவைகளாகக் காணப்படலாம்.

கிருபை.கிருபை என்பது “தெய்வீகம் … இயேசு கிறிஸ்துவின் அளவிடமுடியாத இரக்கம் மற்றும் அன்பின் மூலமாக கொடுக்கப்பட்ட உதவி அல்லது பெலம்.” கிருபையின் மூலமாக சகல ஜனங்களும் உயிர்த்தெழுந்து அழியாமையைப் பெறுவார்கள். கூடுதலாக, “ஆண்களும் பெண்களும் அவர்களுடைய சொந்த சிறந்த முயற்சிகளை செய்த பின்னர் நித்திய ஜீவனையும் மேன்மையடைதலையும் பற்றிப்பிடித்திருக்க அவர்களை அனுமதிக்கிற, கிருபை செயல்படுத்தும் வல்லமையாயிருக்கிறது.” நமது முயற்சிகளால் கிருபையை நாம் சம்பாதிக்கிறதில்லை, மாறாக, “[நம்மால்] பராமரிக்க இயலாததாகிய நன்மையான காரியங்களைச் செய்ய பெலத்தையும் உதவியையும்” நமக்குக் கொடுக்கிற இது கிருபையாயிருக்கிறது (Bible Dictionary, “Grace”; 2 நேபி 25:23; Dieter F. Uchtdorf, “The Gift of Grace,” Liahona, May 2015, 107–10; Brad Wilcox, “His Grace Is Sufficient,” Liahona, Sept. 2013, 43–45). நீங்கள் ரோமர் வாசிக்கும்போது, இரட்சகரின் கிருபையைப்பற்றி நீங்கள் கற்றுக்கொள்வதைப் பதிவு செய்யுங்கள்.

ரோமர் 2:17–29

என்னுடைய செயல்கள், மனமாற்றத்தை பிரதிபலித்து அதை அதிகரிக்க வேண்டும்.

மோசேயின் நியாயப்பிரமாணத்தின் சடங்குகளும் சடங்காச்சாரங்களும் இரட்சிப்பைக் கொண்டு வந்தது என, ரோமில், யூத கிறிஸ்தவர்களில் சிலர் இன்னமும் நம்பிக்கொண்டிருந்தனர். மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி நாம் வாழாதவரை, இனியும் அவை பொருந்தாது போன்று இது ஒரு பிரச்சினையாகத் தோன்றலாம். ஆனால், குறிப்பாக ரோமர் 2:17–29ல் பவுலின் எழுத்துக்களை நீங்கள் வாசிக்கும்போது, சுவிசேஷத்தின்படி வாழுவதற்கு உங்களுடைய முயற்சிகளைப்பற்றி சிந்திக்கவும். திருவிருந்தை எடுத்துக்கொள்ளுதல், அல்லது ஆலயத்திற்குச் செல்லுதல் போன்ற உங்களுடைய வெளிப்புறமான நடத்தைகள், மனமாற்றத்திற்கு உங்களை நடத்தி கிறிஸ்துவில் உங்களுடைய விசுவாசத்தைப் பெலப்படுத்துகிறதா? (ஆல்மா 25:15–16 பார்க்கவும்). உங்களுடைய வெளிப்புறமான செயல்கள் ஒரு இருதய மாற்றத்திற்கு வழிநடத்திக் கொண்டிருக்கிற ஏதாவது இருக்கிறதா?

Dallin H. Oaks, “The Challenge to Become,” Ensign, Nov. 2000, 32–34ஐயும் பார்க்கவும்.

ரோமர் 3:10–315

இயேசு கிறிஸ்துவின் மூலமாக என்னுடைய பாவங்களுக்காக நான் மன்னிக்கப்படமுடியும்.

“நீதிமான் ஒருவனாகிலும் இல்லை” (ரோமர் 3:10) என்ற பவுலின் தைரியமான அறிவிப்பினால் சில ஜனங்கள் ஊக்கமிழப்பதாக உணரலாம். ஆனால் ரோமரில் நம்பிக்கையான செய்திகளும் உள்ளன. அதிகாரங்கள் 3 மற்றும் 5ல் அவைகளைத் தேடி இயேசு கிறிஸ்துவின் மூலமாக “நம்பிக்கையிலே மேன்மைபாராட்ட” கற்றுக்கொள்வதற்கு (ரோமர் 3:23) ஒரு முக்கியமான படியாயிருக்கிறது (ரோமர் 5:2).

ரோமர் 6

“புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு,” இயேசு கிறிஸ்து என்னை அழைக்கிறார்.

நாம் வாழுகிற விதத்தை இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மாற்றவேண்டும் என பவுல் போதித்தான். “புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடக்க” (வசனம் 4) சுவிசேஷம் எவ்வாறு உங்களுக்குதவியதென ரோமர் 6 லிலுள்ள எந்த வாசகங்கள் விவரிக்கிறது?

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

ரோமர் 1:16–17.“கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நாம் வெட்கப்படவில்லை” என்பதை நாம் எவ்வாறு காட்டமுடியும்?

ரோமர் 3:23–28.இந்த வசனங்களை நீங்கள் வாசிக்கும்போது, தேவனின் கிருபையை “சம்பாதிப்பதற்கு” உள்ள வித்தியாசத்தை நீங்கள் விவாதிக்கலாம், அதை நாம் ஒருபோதும் செய்ய முடியாது, அதைப் பெற்று, அதை நாம் செய்ய வேண்டும். தேவ கிருபையை நாம் எப்போது உணர்ந்தோம்? அதை நாம் எவ்வாறு மிக முழுமையாக பெற முடியும்?

ரோமர் 5:3–5.என்ன துன்புறுத்தல்களை நாம் அனுபவித்தோம்? பொறுமை, அனுபவம், நம்பிக்கையை மேம்படுத்த இந்த துன்புறுத்தல்கள் எவ்வாறு நமக்கு உதவின?

ரோமர் 6:3–6.ஞானஸ்நானத்தின் குறியீட்டைப்பற்றி இந்த வசனங்களில் பவுல் என்ன சொல்கிறான்? ஒருவேளை வரவிருக்கிற ஒரு ஞானஸ்நானத்தில் கலந்துகொள்ள உங்கள் குடும்பம் திட்டமிட முடியும். அல்லது, உங்கள் குடும்பத்திலுள்ள ஒருவர் அவன் அல்லது அவளுடைய ஞானஸ்நானத்தின் படங்களை அல்லது நினைவுகளை பகிர்ந்துகொள்ள முடியும். “புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு,” நமது ஞானஸ்நான உடன்படிக்கைகளைச் செய்தலும் கைக்கொள்ளுதலும் எவ்வாறு நமக்குதவுகிறது?

படம்
ஒரு ஏரியில் ஒரு மனிதன் மற்றொருவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தல்

கிறிஸ்துவின் ஒரு சீஷனாக ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பித்தலை ஞானஸ்நானம் குறியிடுகிறது.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “When I Am Baptized,” Children’s Songbook, 103.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

நீங்கள் படிக்கும்போது கேள்விகளைக் கேட்கவும் வேதங்களை நீங்கள் படிக்கும்போது, கேள்விகள் மனதில் வரக்கூடும். இந்தக் கேள்விகளை சிந்தித்து பதில்களைத் தேடுங்கள். உதாரணமாக, “கிருபை என்றால் என்ன?” என்ற கேள்விக்கு ரோமர் 1–6ல் நீங்கள் பதில்களைத் தேடலாம்

படம்
ஒரு நீரோடையிலிருந்து ஒரு சிறுமியை கிறிஸ்து தூக்குதல்

பயப்படாதிருப்பாயாக —க்ரெக் கே. ஓல்சன்

அச்சிடவும்