புதிய ஏற்பாடு 2023
ஆகஸ்டு 21–27. 1 கொரிந்தியர் 1–7: “சீர்பொருந்தியிருங்கள்”


“ஆகஸ்டு 21–27. 1 கொரிந்தியர் 1–7: ‘சீர்பொருந்தியிருங்கள்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“ஆகஸ்டு 21–27. 1 கொரிந்தியர் 1–7,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
பூர்வகால கொரிந்து

கொரிந்து, தென் கிரீஸ், போரம் மற்றும் சமூக மையம், பலாகேயின் ஓவியம் Balogh/www.ArchaeologyIllustrated.com

ஆகஸ்டு 21–27

1 கொரிந்தியர் 1–7

“சீர்பொருந்தியிருங்கள்”

1 கொரிந்தியர் 1–7 நீங்கள் வாசிக்கும்போது, உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும். இந்த எண்ணங்களில் ஒரு கருத்தை மேலும் படிக்க, நீங்கள் கற்கும் ஒன்றை பிறருடன் பகிர்ந்துகொள்ள அல்லது உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் செய்வது உள்ளிட்ட தூண்டுதல்கள் இருக்கலாம்.

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

கொரிந்துவில் பவுல் செலவிட்ட மாதங்களில், “கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றார்கள்” (அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:8). அவன் இல்லாதபோது, “இவ்வுலகத்தின் ஞானத்துக்கு” செவிகொடுக்கத் தொடங்கி, கொரிந்திய பரிசுத்தவான்களுக்கு மத்தியில் “பிரிவினைகளும்” “வாக்குவாதங்களும்” உண்டென்று பல ஆண்டுகளுக்குப்பிறகு கேள்விப்படுவது பவுலுக்கு இருதயத்தை நொறுக்குவதாக இருந்திருக்க வேண்டும். (1 கொரிந்தியர் 1:10–11, 20). பதிலாக, நாம் இப்போது 1 கொரிந்தியர் என அழைக்கிற நிருபத்தை பவுல் எழுதினான். இது ஆழமான கோட்பாடுகள் நிறைந்தது, ஆனால் அதே நேரத்தில், அவன் அவர்களுக்கு கொடுக்க விரும்பிய கோட்பாடு அனைத்தையும் பரிசுத்தவான்கள் பெற ஆயத்தமாயில்லை என்பதால் பவுல் ஏமாற்றமடைந்ததுபோல் தோன்றுகிறது. “நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாய் இருக்கிறபடியால்,” “சகோதரரே, உங்களை ஆவிக்குரியவர்களென்றெண்ணி உங்களோடு பேச முடியவில்லை” என அவன் புலம்பினான் (1 கொரிந்தியர் 3:1–3). பவுலின் வார்த்தைகளை நீங்கள் வாசிக்க ஆயத்தப்படும்போது, நமது சக பரிசுத்தவான்களுடனும், தேவனுடனும் ஆவிக்கு செவிகொடுக்க நமது சித்தம் மற்றும் நமது குடும்பங்களுக்குள் ஒற்றுமைக்காக முயலுதல் உட்பட, சத்தியத்தைப் பெற நமது சொந்த ஆயத்தத்தை பரிசோதிப்பது உதவிகரமாயிருக்கும்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

1 கொரிந்தியர் 1:10–17; 3:1–11

கிறிஸ்துவின் சபையார் ஒன்றுபட்டிருக்க முயற்சிக்கிறார்கள்.

கொரிந்திய பரிசுத்தவான்கள் மத்தியிலே இருந்த ஒற்றுமைக்குறைவைப்பற்றிய விவரங்களை நாம் அறியவில்லை, ஆனால் நமது சொந்த உறவுகளில் ஒற்றுமைக் குறைவைப்பற்றி நாம் அறிவோம். அதிக ஒற்றுமை மூலம் ஆதாயமடையக்கூடிய உங்கள் வாழ்க்கையிலுள்ள உறவைப்பற்றி நினையுங்கள், பின்பு 1 கொரிந்தியர் 1:10–17; 3:1–11ல் கொரிந்திய பரிசுத்தவான்கள் மத்தியில் ஒற்றுமைக் குறைவைப்பற்றி பவுல் போதித்ததை தேடுங்கள். பிறருடன் அதிக ஒற்றுமையை எப்படி மேம்படுத்துவது என்பதைப்பற்றி நீங்கள் என்ன உள்ளுணர்வுகள் பெற முடியும்?

மோசியா 18:21; 4 நேபி 1:15–17; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:23–27; 105:1–5; “Unity,” Gospel Topics, topics.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

1 கொரிந்தியர் 1:17–312

தேவனின் பணியை நிறைவேற்ற எனக்கு தேவ ஞானம் தேவை.

அதை எங்கு காண முடிந்தாலும் ஞானத்தைத் தேடுவது நல்லதாயிருந்தாலும், ஊக்குவிக்கப்பட்டிருந்தாலும் கூட (2 நேபி 9:29; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:118 பார்க்கவும்), “உலகத்தின் ஞானம்” என அவன் அழைத்த தவறான மனுஷ ஞானத்தைப்பற்றி தடித்த வார்த்தைகளுள்ள எச்சரிக்கையை பவுல் கொடுத்தான். 1 கொரிந்தியர் 1:17–25 நீங்கள் வாசிக்கும்போது, இந்த சொற்றொடர் என்னவாக இருக்க முடியும் என சிந்திக்கவும். “தேவ ஞானம்” என பவுல் சொன்னதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தேவனின் பணியை நிறைவேற்ற நமக்கு தேவ ஞானம் ஏன் தேவை?

தேவனின் பணியை நிறைவேற்றும் உங்கள் பொறுப்புக்களை நிறைவேற்றும் உங்கள் முயற்சிகளில், கொரிந்திய பரிசுத்தவான்களுக்கு பவுல் போதித்தபோது உணர்ந்த “பயத்தோடும் … அதிக நடுக்கத்தோடும் ” என்பதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? (1 கொரிந்தியர் 2:3). 1 கொரிந்தியர் 2:1–5, உங்களுக்கு தைரியம் கொடுக்கிற எதை நீங்கள் காண்கிறீர்கள்? “மனுஷனின் ஞானத்தை”விட “தேவ வல்லமையை” நீங்கள் நம்புகிறீர்கள் என எவ்வாறு காட்டுவது என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:17–28 ஐயும் பார்க்கவும்.

1 கொரிந்தியர் 2:9–16

தேவ காரியங்களை அறிய எனக்கு பரிசுத்த ஆவி தேவை.

தானியங்கி இயக்கங்கள் அல்லது மத்திய கால கட்டிடக்கலை போன்ற எதையாவது நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால் அதை எப்படி செய்வீர்கள்? 1 கொரிந்தியர் 2:9–16ன்படி, “தேவனுக்குரியவைகளைக்” கற்றுக்கொள்ளுதல் “மனுஷனுக்குரியவைகளைக்” கற்றுக்கொள்வதிலிருந்து எவ்வாறு வித்தியாசமாயிருக்கிறது? தேவனுக்குரியவைகளைப் புரிந்துகொள்ள நாம் ஏன் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்க வேண்டும்? இந்த வசனங்களை வாசித்தபிறகு, ஆவிக்குரியவைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள நீங்கள் என்ன செய்ய வேண்டும் என உணர்கிறீர்கள்? அவன் அல்லது அவளது சாட்சியோடு போராடிக்கொண்டிருக்கிற ஒருவருக்கு பவுலின் வார்த்தைகள் எவ்வாறு உதவக்கூடும்?

1 கொரிந்தியர் 6:13–20

என்னுடைய சரீரம் பரிசுத்தமானது.

கொரிந்துவிலிருந்த அநேக ஜனங்கள் பாலின ஒழுக்கமின்மை ஏற்றுக்கொள்ளக்கூடியது மற்றும் அவர்களது சரீரங்கள் முக்கியமாக இன்பத்துக்காக உண்டாக்கப்பட்டது என உணர்ந்தனர். வேறுவார்த்தைகளிலெனில், கொரிந்து இன்றைய உலகத்திலிருந்து மாறுபட்டதல்ல. 1கொரிந்தியர் 6:13–20ல் பவுல் போதித்த எது நீங்கள் ஏன் கற்புள்ள வாழ்க்கை வாழ விரும்புகிறீர்கள் என பிறருக்கு விளக்க உங்களுக்கு உதவக்கூடும்?

பவுலைப் போலவே, சகோதரி வெண்டி டபிள்யூ. நெல்சன் பரிசுத்தவான்களை தூய்மையாக இருக்க ஊக்குவித்தார்; அவருடைய செய்தியைப் பார்க்கவும் “Love and Marriage” (worldwide devotional for young adults, Jan. 8, 2017, broadcasts.ChurchofJesusChrist.org). சகோதரி நெல்சனின் கூற்றுப்படி, அன்பு மற்றும் நெருக்கம்பற்றிய கர்த்தரின் தராதரங்களின்படி வாழ்வதால் என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

1 கொரிந்தியர் 7:29–33.

விவாகம் செய்வதைவிட விவாகம் செய்யாமலிருப்பது சிறந்தது என பவுல் போதித்தானா?

1 கொரிந்தியர் 7லுள்ள பல வசனங்கள் திருமணம் ஏற்றுக்கொள்ளத் தக்கதாயிருக்கும்போது, தனியாக இருப்பது மற்றும் பாலியல் உறவுகளிலிருந்து முற்றிலும் விலகியிருப்பது முன்னுரிமையளிக்கப்பட்டது என ஆலோசனையளிப்பதுபோல தோன்றலாம். எனினும், ஊழியங்களின் போது அவர்கள் தனிமையாயிருந்தால், தேவனுக்கு நன்கு சேவை செய்ய முடிந்தது என கவனித்து, முழு நேர ஊழியக்காரர்களாக அழைக்கப்பட்டவர்களை பவுல் குறிப்பிட்டான் என புரிந்துகொள்ள ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, 1 கொரிந்தியர் 7:29–33 (வேதாகம பிற்சேர்க்கை பார்க்கவும்) உதவுகிறது. திருமணம் அவரது நித்திய திட்டத்தில் முக்கிய பாகம், மேன்மைப்படுதலுக்கு அவசியமானது என பவுல் உள்ளிட்ட தனது ஊழியக்காரர்கள் மூலம் கர்த்தர் போதித்திருக்கிறார் (1 கொரிந்தியர் 11:11; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 131:1–4 பார்க்கவும்).

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

1 கொரிந்தியர் 1:10–17; 3:1–11.உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் இந்த வசனங்களை வாசிக்கும்போது, அவர்கள் அதிகமாக ஒன்றுபட்டிருக்க அவர்களுக்கு உதவக்கூடிய உள்ளுணர்வுகளை கண்டுபிடிக்க அவர்களை அழைக்கவும்.

1 கொரிந்தியர் 3:1–2.பால் மற்றும் இறைச்சி சாப்பிடும் போது இந்த வசனங்களை நீங்கள் வாசிக்கலாம். குழந்தைகள் பெரியவர்களாக வளரும் விதத்தையும் நாம் ஆவிக்குரிய ரீதியில் வளரும் விதத்தையும் நீங்கள் ஒப்பிடலாம்.

1 கொரிந்தியர் 3:4–9.தன் ஊழிய முயற்சிகளை பவுல் விதை விதைப்பதற்கு ஒப்பிட்டான். அவருடைய ஒப்பீடு சுவிசேஷத்தைப் பகிர்வதைப்பற்றி நமக்கு என்ன கற்பிக்கிறது?

1 கொரிந்தியர் 6:19–20.பவுல் செய்ததுபோல, நமது சரீரங்களுக்கு ஆலயங்களை ஒப்பிடுதல், நமது சரீரங்களின் பரிசுத்த தன்மையைப்பற்றி போதிப்பதற்கு ஆற்றல் மிக்க வழியாக இருக்க முடியும். இந்த குறிப்பை தொடர்கிறவை போன்ற ஆலயங்களின் படங்களை ஒருவேளை நீங்கள் காட்டலாம். ஆலயங்கள் ஏன் பரிசுத்தமானவை? நமது சரீரங்கள் எவ்வாறு ஆலயங்கள் போலிருக்கின்றன? நமது சரீரங்களை ஆலயங்கள் போல் பாவிக்க நாம் என்ன செய்ய முடியும்? (August 2020 special edition of the Liahona about sexuality ஐயும் பார்க்கவும்.)

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “The Lord Gave Me a Temple,” Children’s Songbook, 153.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

உங்களோடே பொறுமையாயிருங்கள். நாம் சுவிசேஷம் கற்றுக்கொள்ளும்போது, மாமிசத்துக்கு முன்னால் பால் வருகிறது என பவுல் போதித்தான் (1 கொரிந்தியர் 3:1–2 பார்க்கவும்). சில கோட்பாடுகள் புரிந்துகொள்ள கடினமாக இருப்பதாக நீங்கள் கண்டால், பொறுமையாயிருங்கள். நீங்கள் விசுவாசமுடன் கருத்தாய் படித்தால் பதில்கள் வரும் என நம்பவும்.

படம்
நான்கு ஆலயங்கள்

நமது சரீரங்களை ஆலயத்தின் பரிசுத்தத்துக்கு பவுல் ஒப்பிட்டான். மேல் இடது பக்கத்திலிருந்து வலபக்கமாக: குர்டிபா பிரேசில் ஆலயம், மெக்சிகோ சிட்டி மெக்சிகோ ஆலயம், டோக்கியோ ஜப்பான் ஆலயம், ஆக்ரா கானா ஆலயம்.

அச்சிடவும்