புதிய ஏற்பாடு 2023
ஆகஸ்டு 14–20. ரோமர் 7–16: “தீமையை நன்மையினாலே வெல்லு”


“ஆகஸ்டு 14–20. ரோமர் 7–16: ‘தீமையை நன்மையினாலே வெல்லு’”}என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“ஆகஸ்டு 14–20. ரோமர் 7–16,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
பழங்கால எருசலேமின் அழிவுகள்

ஆகஸ்டு 14–20

ரோமர் 7–16

“தீமையை நன்மையினாலே வெல்லு”

ரோமர் 7–16லிலுள்ள ஒரு சில சுவிசேஷக் கொள்கைகளை மட்டுமே இந்தக் குறிப்பில் சேர்த்துக்கொள்ள முடியும், ஆகவே இங்கே குறிக்கப்பட்டுள்ளவற்றுக்கு உங்களை நீங்கள் மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டாம். நீங்கள் படிக்கும்போது நீங்கள் பெறுகிற உணர்த்துதலுக்கு கவனம் செலுத்தவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்.

ரோமர்களுக்கு அவன் தன்னுடைய நிருபத்தை ஆரம்பித்தபோது, “பரிசுத்தவான்களாயிருக்க அழைக்கப்பட்ட” ரோமிலுள்ள சபை அங்கத்தினர்களை “தேவபிரியர்கள்” என பவுல் அழைத்து அவர்களை அவன் வாழ்த்தினான். அவர்களுடைய “விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாயிருந்ததாக” (ரோமர் 1:7–8) அவன் குறிப்பிட்டான். பொய்யான கருத்துக்களையும், தவறான நடத்தைகளையும் திருத்துவதில் அவனுடைய அநேக நிருபத்தை பவுல் செலவழித்தாலும்கூட, தேவபிரியர்களாயிருந்த அவர்கள் உண்மையிலேயே பரிசுத்தவான்களாயிருந்தனர் என இந்த புதிய கிறிஸ்தவ மனமாறியவர்களுக்கு அவன் உறுதியளிக்கவும் விரும்பியதாகவும் தோன்றுகிறது. தேவனின் அன்பை உணர போராடும் மற்றும் ஒரு பரிசுத்தவானாக மாறுவது அடைய முடியாததாக உணரக்கூடிய நம் அனைவரையும் அவனுடைய மென்மையான ஆலோசனை ஆசீர்வதிக்கிறது. தாழ்மையான பச்சாதாபத்தில், சிலநேரங்களில் “நிர்பந்தமான மனிதனாக” அவன் உணர்ந்ததாக பவுல் ஒப்புக்கொண்டான் (ரோமர் 7:24), ஆனால் பாவத்தை மேற்கொள்ள இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் அவனுக்கு வல்லமையைக் கொடுத்தது (ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, ரோமர்7:22–27 [in the Bible appendix] பார்க்கவும்). இரட்சகரின் மீட்கும் வல்லமையாகிய, அந்த வல்லமையால், நாம் “தீமையை”, உலகில் உள்ள தீமையையும், நம்மில் உள்ள தீமையையும்-“நன்மையால்” வெல்ல முடியும் (ரோமர் 12:21).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

ரோமர் 7–8

ஆவியானவரைப் பின்பற்றுபவர்கள் “கிறிஸ்துவுடன் சுதந்தரர்” ஆக முடியும்.

ஞானஸ்நான நியமத்தின் மூலமாக “புதிதான ஜீவனுக்குள்” பிரவேசித்த பின்னரும்(ரோமர் 6:4) ஒருவேளை, உள்ளான மனுஷனுக்கும் நமது நீதியான வாஞ்சைகளுக்குமிடையில் “போராட்டம்” என பவுல் ரோமர் 7ல் விவரித்த உள்மோதலை நீங்கள் உணர்ந்தீர்கள் (ரோமர் 7:23). ஆனால், ரோமர் 8:23–25ல் பவுல் நம்பிக்கையைப்பற்றியும் பேசினான். அதிகாரம் 8ல் இந்த நம்பிக்கைக்கான என்ன காரணங்களை நீங்கள் காண்கிறீர்கள்? “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருப்பதிலிருந்து” (ரோமர் 8:9) வருகிற ஆசீர்வாதங்களுக்காகவும் நீங்கள் தேடக்கூடும். உங்களுடைய வாழ்க்கையில் மிகமுற்றிலுமாக பரிசுத்த ஆவியின் தோழமையை நீங்கள் எவ்வாறு நாடமுடியும்?

ரோமர் 8:16–39

நித்திய மகிமையின் பரிசு பூமியில் என் சோதனைகளை விட அதிகமாக உள்ளது.

இந்த நிருபத்தை பவுல் எழுதிய சில ஆண்டுகளுக்குப் பின்னர், ரோமிலுள்ள பரிசுத்தவான்கள் கொடூரமான துன்புறுத்தல்களை அனுபவித்தார்கள். துன்புறுத்தல்கள் வந்தபோது இந்த பரிசுத்தவான்களுக்கு உதவியிருக்கக்கூடிய எதை நீங்கள் ரோமர் 8:16–39ல் காண்கிறீர்கள்? உங்களுக்கும் தற்போது நீங்கள் எதிர்கொள்கிற சோதனைகளுக்கும் இந்த வார்த்தைகள் எவ்வாறு பொருந்தக்கூடும்?

இந்த வசனங்களுக்கும் சகோதரி லின்டா எஸ். ரீவ்ஸின் இந்த ஆலோசனைக்குமிடையில் தொடர்புகளைத் தேடுங்கள்: “நமக்கிருக்கிற அநேக சோதனைகள் ஏன் நமக்கிருக்கவேண்டுமென எனக்குத் தெரியவில்லை, ஆனால் பலன் மிகப்பெரியதாயிருக்கிறது, மிக நித்தியமாகவும் என்றென்றைக்குமாயிருக்கிறது, மிக மகிழ்ச்சியானதும், ‘தேவையானது அனைத்தும் இதுதானா?’ என நமது இரக்கமுள்ள, அன்பான பிதாவிடத்தில் பிரதிபலனின் அந்த நாளில் நாம் கேட்க நினைக்கலாமென்ற நமது புரிந்துகொள்ளுதலுக்கும் அப்பால் இது என்னுடைய தனிப்பட்ட உணர்வு. நமக்காக நமது பரலோக பிதாவும் நமது இரட்சகரும் கொண்டிருக்கிற அந்த அன்பின் ஆழத்தை நாம் தினமும் நினைவுகூர்ந்து, அடையாளம்கண்டால், நித்தியமாக அவர்களுடைய அன்பால் சூழப்பட்டு மீண்டும் அவர்களுடைய சமூகத்திற்கு திரும்பிப்போக எதையும் செய்ய நாம் விருப்பமுள்ளவர்களாயிருப்போம். நமது பிதாவுடனும் இரட்சகருடனும் தேவ இராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனுக்காவும் மேன்மையடைதலுக்காகவும் நம்மை தகுதிபடுத்துகிற அதே காரியங்களான அந்த சோதனைகள், முடிவில் இங்கே நாம் அனுபவிக்கிறதாயிருந்தால் … அதைப் பொருட்படுத்த தேவையில்லை ” (“Worthy of Our Promised Blessings,” Liahona, Nov. 2015, 11). உங்களுக்கான தேவனுடைய அன்பை “தினமும் நினைவுகூரவும் அடையாளம்காணவும்” நீங்கள் என்ன செய்வீர்களென தீர்மானிக்கவும்.

ரோமர் 8:29–30; 9–11

“முன்குறித்தல்”, “அழைத்தல்”, “முன்னறிதல்” என்பதற்கு பவுல் என்ன சொன்னான்?

இந்த வாழ்க்கைக்கு முன், தேவன் தம்முடைய உடன்படிக்கையின் மக்களாகிய இஸ்ரவேலின் ஒரு பகுதியாக இருக்க தம்முடைய பிள்ளைகளில் சிலரைத் தேர்ந்தெடுத்தார் என்று கற்பிக்க, பவுல் “முன்குறித்தல்,” “அழைத்தல்” மற்றும் “முன்னறிதல்” என்ற சொற்களைப் பயன்படுத்தினான். இதன் பொருள் அவர்கள் சிறப்பு ஆசீர்வாதங்களையும் பொறுப்புகளையும் பெறுவார்கள், அதனால் அவர்கள் உலக மக்கள் அனைவரையும் ஆசீர்வதிக்க முடியும் (Guide to the Scriptures, “Election,” scriptures.ChurchofJesusChrist.org பார்க்கவும்). இருப்பினும், ரோமர் 9–11ல் பவுல் வலியுறுத்தினான், தேவனின் பிள்ளைகள் அனைவரும் அவருடைய உடன்படிக்கை ஜனமாக மாற முடியும், மேலும் நாம் அனைவரும் நித்திய ஜீவனை ஒரே வழியில் பெறுகிறோம்— இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் மற்றும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம்.

எபேசியர் 1:3–4; 1 பேதுரு 1:2; ஆல்மா 13:1–5; Gospel Topics, “Foreordination,” topics.ChurchofJesusChrist.org.

ரோமர் 12–16 ஐயும் பார்க்கவும்.

இயேசு கிறிஸ்துவின் ஒரு உண்மையான பரிசுத்தவானாக, பின்பற்றுபவனாக மாற பவுல் என்னை அழைக்கிறான்.

ரோமர் கடைசி ஐந்து அதிகாரங்களில், பரிசுத்தவான்கள் எவ்வாறு வாழவேண்டுமென்பதைப்பற்றி டஜன் கணக்கான குறிப்பிடப்பட்ட அறிவுரைகள் அடங்கியிருக்கின்றன. இந்த அறிவுரைகளைப் படிப்பதற்கான ஒரு வழி, மீண்டும் மீண்டும் வரும் தலைப்புகளைத் தேடுவது. பவுலின் ஆலோசனையை நீங்கள் எவ்வாறு சுருக்கமாகக் கூறுவீர்கள்?

இந்த அறிவுரைகள் அனைத்தையும் நீங்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாமல் போகலாம், ஆனால் இன்று நீங்கள் செயல்படத் தொடங்கக்கூடிய ஒன்று அல்லது இரண்டு கொள்கைகளைக் கண்டறிய ஆவியானவர் உங்களுக்கு உதவுவார். ஜெபத்தில் உங்கள் பரலோக பிதாவிடம் உங்கள் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், மேலும் அவருடைய உதவியைக் கேளுங்கள்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

ரோமர் 8:31–39.பரலோக பிதாவும் இயேசுவும் நம்மைப்பற்றி எப்படி உணருகிறார்கள் என்பதைக் கற்பிக்கும் ரோமர் 8:31–39 ல் நாம் எதைக் காண்கிறோம்? தேவனின் அன்பை நாம் எப்போது உணர்ந்தோம்?

வசனங்கள் 38–39ஐ, விளக்குவதற்கு, குடும்ப உறுப்பினர்கள் நம்மையும் தேவனின் அன்பையும் பிரிக்க முடியாத காரியங்களின் உதாரணங்களைக் காணலாம்.

படம்
தகப்பனும் மகளும் நடனமாடுதல்

“சுவிசேஷத்தின் இசை [ஒரு]சந்தோஷமான ஆவிக்குரிய உணர்வு” என மூப்பர் வில்போர்ட் டபுள்யு. ஆன்டர்சன் போதித்தார்.

ரோமர் 9:31–32.மூப்பர் வில்போர்ட் டபுள்யு. ஆன்டர்சனின் செய்தி, “The Music of the Gospel” (Liahona, May 2015, 54–56; ChurchofJesusChrist.orgல் காணொலியையும் பார்க்கவும்) நியாயப்பிரமாணம், கிரியைகள் மற்றும் விசுவாசத்தைப்பற்றி பவுல் என்ன கற்பிக்கிறான் என்பதை விளக்க உதவலாம். அவருடைய செய்தியைக் கலந்தாலோசித்த பிறகு, உங்கள் குடும்பத்தினர் இசையுடன் நடனமாட முயற்சி செய்யலாம். சுவிசேஷத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்க விசுவாசம் எவ்வாறு நமக்கு உதவும்?

ரோமர் 10:17.தேவனுடைய வார்த்தையின் ஆதாரங்களுடன் (வேதங்கள், தனிப்பட்ட வெளிப்பாடு மற்றும் பொது மாநாடு போன்றவை) பல கோப்பைகள் தண்ணீரை பெயரிடுங்கள். ஒவ்வொரு கோப்பையும் “விசுவாசம்” என்று பெயரிடப்பட்ட ஒரு கோப்பையில் ஊற்றும்போது, தேவனின் வார்த்தை நம் விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கிறது என்பதைப்பற்றி கலந்துரையாடவும்.

ரோமர் 12.“பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமான, ஜீவபலியாக” நம்மை மாற்றிக்கொள்ளுதல் என்றால் அர்த்தம் என்ன? (வசனம் 1).

ரோமர் 14:13–21.மற்றவர்களின் தனிப்பட்ட விருப்பங்களைப்பற்றி நியாயந்தீர்ப்பதையும் விவாதிப்பதையும்பற்றி பவுலின் ஆலோசனையை படிப்பதிலிருந்து உங்கள் குடும்பத்தினர் பலனடையக்கூடும். குடும்ப உறுப்பினர்கள் உட்பட மற்றவர்கள் உங்களிடமிருந்து வேறுபட்ட தேர்வுகளைச் செய்யும்போது பதிலளிப்பதற்கான பொருத்தமான வழிகளைப்பற்றி நீங்கள் கலந்துரையாடலாம். நாம் எவ்வாறு “சமாதானத்தை உண்டாக்கும் காரியங்களைப் பின்பற்றலாம்”? (வசனம் 19).

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I Feel My Savior’s Love,” Children’s Songbook, 74–75.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

பிள்ளைகள் தங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்தட்டும். “சுவிசேஷக் கொள்கை ஒன்றிற்கு சம்பந்தப்பட்ட ஒன்றை உருவாக்க பிள்ளைகளை நீங்கள் அழைக்கும்போது, கொள்கையை சிறப்பாகப் புரிந்துகொள்ள நீங்கள் அவர்களுக்கு உதவுங்கள். … கட்டவும், வரையவும், வண்ணமிடவும், எழுதவும், உருவாக்கவும் அவர்களை அனுமதிக்கவும்” (Teaching in the Savior’s Way, 25).

படம்
கரங்களை நீட்டியபடி கிறிஸ்து

என்னோடிரும்–டெல் பார்சன்

அச்சிடவும்