புதிய ஏற்பாடு 2023
ஆகஸ்டு 28–செப்டம்பர் 3. 1 கொரிந்தியர் 8–13: “நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறீர்கள்”


“ஆகஸ்டு 28–செப்டம்பர் 3. 1 கொரிந்தியர் 8–13: ‘நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறீர்கள்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“ஆகஸ்டு 28–செப்டம்பர் 3. 1கொரிந்தியர் 8–13,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிப்பட்ட நபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

திருவிருந்துக் கூட்டம்

ஆகஸ்டு 28–செப்டம்பர் 3

1 கொரிந்தியர் 8–13

“நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறீர்கள்”

1 கொரிந்தியர் 8–13ஐ நீங்கள் ஜெபத்துடன் வாசிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் உங்களோடு நுட்பமான வழிகளில் பேசலாம் (1 இராஜாக்கள் 19:11–12 பார்க்கவும்). இந்த எண்ணங்களைப் பதிவுசெய்தல், உங்களுடைய படிப்பின்போது உங்களுக்கிருந்த உணர்வுகளையும் சிந்தனைகளையும் நினைத்துப் பார்க்க உங்களுக்குதவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

பவுலின் காலத்தில், ரோமானிய சாம்ராஜ்யம் முழுவதிலும் வசிப்பவர்களுக்கு, கொரிந்து ஒரு செல்வந்த வணிக மையமாயிருந்தது. பட்டணத்தில் மிக அநேக வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுடன், கொரிந்துவிலுள்ள சபை அங்கத்தினர்கள் ஒற்றுமையைத் தக்கவைத்துக்கொள்ள போராடினார்கள், ஆகவே, கிறிஸ்து மீதான நம்பிக்கையில் ஒற்றுமையைக் காண பவுல் அவர்களுக்கு உதவ முயன்றான். அமைதியான சகவாழ்வை விட இந்த ஒற்றுமை அதிகமாக இருக்க வேண்டும், வெறுமனே ஒருவருக்கொருவரின் வேறுபாடுகளைப் பொறுத்துக்கொள்ளும்படி பவுல் அவர்களைக் கேட்கவில்லை. மாறாக, இயேசு கிறிஸ்து சபையில் நீங்கள் சேரும்போது, “ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு” மற்றும் ஒவ்வொரு சரீர அவயவங்களும் தேவையாயிருக்கிறது (1 கொரிந்தியர் 12:13). ஒரு அங்கத்தினர் காணாமற்போகும்போது, அது ஒரு காலை இழப்பது போலாகி, அதன் விளைவாக சரீரம் பலவீனமாகிறது. ஒரு அங்கத்தினர் பாதிக்கப்படும்போது, அதை நாமனைவரும் உணர்ந்து அதை நிவர்த்தியாக்க நம் பங்கைச் செய்யவேண்டும். இந்த வகையான ஒற்றுமையில் வேறுபாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை ஆனால் போற்றப்படுகிறது, ஏனெனில் மாறுபட்ட வரங்களும் திறன்களும் கொண்ட அங்கத்தினர்களில்லாமல், உடல் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஆகவே நீங்கள் எப்போதும் சபையிலிருக்கும்போது, வீட்டிலிருப்பதைப்போல உணருகிறீர்களோ அல்லது நீங்கள் உண்மையிலேயே சொந்தமானவர்களாக காணப்படுவதாக வியப்புறுகிறீர்களோ, ஒற்றுமை என்பது ஒரே தன்மையானதல்ல என்பதே உங்களுக்கான பவுலின் செய்தி. உங்களுக்கு உங்கள் சக பரிசுத்தவான்கள் வேண்டும், உங்கள் சக பரிசுத்தவான்களுக்கு நீங்கள் வேண்டும்.

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

1 கொரிந்தியர் 10:1–13

சோதனையிலிருந்து தப்புவிக்க ஒரு வழியை தேவன் வழங்குகிறார்.

“மனிதனுக்கு நேரிடுகிற” (1 கொரிந்தியர் 10:13) சோதனைகளிலிருந்து, ஆவிக்குரிய அனுபவங்கள், அற்புதங்களும்கூட நம்மைத் தவிர்க்காது. மோசேயின் நாளில் இஸ்ரவேலர்கள் வல்லமையான அற்புதங்களைக் கண்டிருந்தும் அவர்கள் எவ்வாறு சோதனைகளுடன் போராடினார்கள் என்பதைப்பற்றி பவுல் எழுதியதற்கு இது ஒரு காரணமாயிருக்கலாம் (யாத்திராகமம் 13:21; 14:13–31 பார்க்கவும்). 1 கொரிந்தியர் 10:1–13ஐ நீங்கள் வாசிக்கும்போது இஸ்ரவேலர்களின் அனுபவங்களில் என்ன எச்சரிக்கைகள் உங்களுக்குப் பொருத்தமாயிருப்பதாகத் தோன்றுகிறது? சோதனையிலிருந்து என்ன வகையான “தப்புவித்தலை” பரலோக பிதா உங்களுக்காக வழங்கினார்? (ஆல்மா 13:27–30; 3 நேபி 18:18–19ஐயும் பார்க்கவும்).

1கொரிந்தியர் 10:16–17; 11:16–30

கிறிஸ்துவின் சபையாராக திருவிருந்து நம்மை ஒன்றிணைக்கிறது.

திருவிருந்து உங்களுக்கும் கர்த்தருக்கும் இடையிலான தனிப்பட்ட ஒப்புக்கொடுத்தலை உள்ளடக்கியது என்றாலும், இது நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அனுபவமாகும். பரிசுத்தவான்களின் அமைப்பாக நாம் எப்போதும் ஒன்றாகவே திருவிருந்தில் பங்கு கொள்கிறோம். திருவிருந்தைப்பற்றி பவுல் போதித்ததை வாசித்து, கிறிஸ்துவில் “ஒரே சரீரமாக” மாற இந்த பரிசுத்த நியமம் எவ்வாறு “அநேகருக்கு” உதவுகிறதென்பதைப்பற்றி சிந்திக்கவும் (1 கொரிந்தியர் 10:17). திருவிருந்தில் பங்குகொள்வது எப்படி கிறிஸ்துவுடனும் மற்ற விசுவாசிகளுடனும் நெருக்கமாக உணர உதவுகிறது? இந்த வசனங்கள் திருவிருந்துபற்றிய உங்கள் உணர்வுகளையும் அதற்கு நீங்கள் தயாராகும் விதத்தையும் எவ்வாறு பாதிக்கிறது?

1 கொரிந்தியர் 11:11

தேவனின் திட்டத்தில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒருவருக்கொருவர் தேவை.

1 கொரிந்தியர் 11:4–15ல், இன்று நாம் பின்பற்றாத கலாச்சார பழக்கவழக்கங்களைப்பற்றி பவுல் குறிப்பிடுகிறான். இருப்பினும், என்றென்றும் பொருந்தக்கூடிய ஒரு முக்கியமான சத்தியத்தையும் பவுல் போதித்தான், இது வசனம் 11ல் காணப்படுகிறது. இந்த வசனத்தின் அர்த்தம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள், அது ஏன் முக்கியமானது? மூப்பர் டேவிட் ஏ. பெட்னார், “ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவரிடமிருந்து கற்றுக் கொள்ளவும், பலப்படுத்தவும், ஆசீர்வதிக்கவும், நிறைவு செய்யவும் நோக்கம் கொண்டவர்கள்” என்று போதித்தார் (“We Believe in Being Chaste,” Liahona, May 2013, 42). இந்த சத்தியம் திருமணத்தை எவ்வாறு பாதிக்க வேண்டும்? சபையில் நாம் சேவை செய்யும் விதத்தை அது எவ்வாறு பாதிக்க வேண்டும்?

Jean B. Bingham, “United in Accomplishing God’s Work,” Liahona, May 2020, 60–63 ஐயும் பார்க்கவும்.

1 கொரிந்தியர் 12–13

பரலோக பிதாவின் பிள்ளைகள் அனைவரும் பலன் பெற ஆவிக்குரிய வரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1 கொரிந்தியர் 12–13லிலுள்ள ஆவிக்குரிய வரங்களின் பட்டியல் நீண்டதல்ல. ஆனால், பரலோக பிதா உங்களுக்குக் கொடுத்திருக்கிற ஆவிக்குரிய வரங்களை நீங்கள் அடையாளம்கண்டு சிந்திக்கும்போது ஆரம்பிக்க அது ஒரு நல்ல இடம். “Spiritual Gifts” in Gospel Topics (topics.ChurchofJesusChrist.org) எனும் கட்டுரை இந்த வரங்களை நீங்கள் சிறப்பாகப் புரிந்துகொள்ள உங்களுக்குதவலாம். பவுலின் வரங்களின் பட்டியலை நீங்கள் வாசிக்கும்போது, மற்றவர்களிடமோ, உங்களிடமோ அல்லது வேதத்தில் உள்ளவர்களிடமோ நீங்கள் கவனித்த சிலவற்றைச் சேர்க்கலாம். உங்களுக்கு கோத்திரத் தலைவனின் ஆசீர்வாதமிருந்தால், உங்களுடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் சிலவற்றை அதுவும் குறிப்பிடலாம் மற்றவர்களை ஆசீர்வதிக்க இந்த வரங்கள் உங்களுக்கு எப்படி உதவுகின்றன? “முக்கியமான வரங்களை சிரத்தையுடன்” (1 கொரிந்தியர் 12:31) நாட நீங்கள் என்ன செய்வீர்களென்பதைக் கருத்தில்கொள்ளவும்.

1 கொரிந்தியர் 14; மரோனி 10:8–21, 30; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 46:8–26; விசுவாசப் பிரமாணங்கள் 1:7 ஐயும் பார்க்கவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

1 கொரிந்தியர் 9:24–27.சுவிசேஷத்தின்படி வாழுதலை ஓட்டப் பந்தயத்திற்கு பவுல் ஒப்பிட்டதால், அவனுடைய கருத்தை சித்தரிக்க ஒரு குடும்ப ஓட்டப் பந்தயத்தை நீங்கள் நடத்தலாம். ஓட்டப் பந்தயத்தை முடிக்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும் கிரீடம் ஒன்றை பரிசளித்து, இந்த வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் அனைவரும் எவ்வாறு “அழிவில்லாத” பரிசைப் பெறுவார்கள் என்பதைக் கலந்துரையாடவும் (1 கொரிந்தியர் 9:25; 2 தீமோத்தேயு 4:7–8ஐயும் பார்க்கவும்). ஓட்டப் பந்தயத்திற்கு ஆயத்தப்பட ஓட்டக்காரன் என்ன செய்யக்கூடும்? அதைப்போன்றே, பரலோக பிதாவிடத்திற்கு திரும்ப ஆயத்தப்பட நாம் என்ன செய்யமுடியும்?

ஓட்டப்பாதையில் ஓடுபவர்கள்

சுவிசேஷத்தின்படி வாழுதலை ஓட்டப் பந்தயத்திற்கு பவுல் ஒப்பிட்டான்.

1 கொரிந்தியர் 12:1–11.இந்த வசனங்களை ஒன்றாக வாசித்த பிறகு, மற்றொரு குடும்ப அங்கத்தினரின் பெயர் மேலே இருக்கும்படியான ஒரு துண்டுக் காகிதத்தை ஒவ்வொருவருக்கும் கொடுப்பதைக் கருத்தில்கொள்ளவும். அவர்கள் கவனித்த அந்த நபரிடமுள்ள ஆவிக்குரிய வரங்களைப் பட்டியலிட ஒவ்வொருவரையும் கேட்கவும். ஒவ்வொரு குடும்ப அங்கத்தினர்களின் வரங்களைப்பற்றி எழுத ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்வரை ஒரு வட்டத்தில் காகிதங்களை நீங்கள் கடத்தலாம்.

1 கொரிந்தியர் 12:3.ஏன், இயேசு கிறிஸ்துவைப்பற்றிய ஒரு சாட்சியைப்பெற பரிசுத்த ஆவியானவர் அவசியமாயிருக்கிறார்? அவரைக் குறித்த நமது சாட்சிகளைப் பெலப்படுத்த பரிசுத்த ஆவியானவரை அழைக்க நம்மால் என்ன செய்யமுடியும்?

1 கொரிந்தியர் 12:12–27.குடும்ப ஒற்றுமையை விவாதிக்க சரீரத்தைப்பற்றிய பவுலின் ஒப்புமை ஒரு மறக்கமுடியாத வழியாயிருக்கமுடியும். உதாரணமாக, கண்களால் அல்லது காதுகளால் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு உடலை வரைய குடும்ப அங்கத்தினர்கள் முயற்சிக்கலாம் (வசனம் 17 பார்க்கவும்). ஒவ்வொருவரையும், எவ்வாறு குடும்ப அங்கத்தினர்களாக நடத்தவேண்டுமென்பதைப்பற்றி இந்த வசனங்கள் எதை ஆலோசனையளிக்கிறது?

1 கொரிந்தியர் 13:4–8.தயாளத்தைக் குறித்த பவுலின் விளக்கம் உங்கள் குடும்பத்தினருக்கு ஒரு எழுச்சியூட்டும் குறிக்கோளாக அமையக்கூடும். வசனங்கள் 4–8ல் ஒரு சொற்றொடரைப் படிக்க குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவரையும் நீங்கள் நியமித்து, விளக்கங்கள், எடுத்துக்காட்டுகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களைப் பயன்படுத்துதல் என்றால் அர்த்தமென்னவென எஞ்சிய குடும்பத்தினருக்கு போதிக்கவும். இந்த பண்புகளுக்கு இரட்சகர் எவ்வாறு ஒரு எடுத்துக்காட்டாயிருக்கிறார்? இந்த சொற்றொடர்கள் ஒவ்வொன்றிற்காகவும் ஒன்று சேர்ந்து சுவரொட்டிகளையும் நீங்கள் செய்து உங்கள் வீடு முழுவதிலும் அவைகளை காட்சிப்படுத்துங்கள். ஆக்கப்பூர்வமாயிருங்கள்!

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Love Is Spoken Here,” Children’s Songbook, 190– 91.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

ஒரு வசனத்தை காட்சிப்படுத்தவும். அர்த்தமுள்ளதாக நீங்கள் காண்கிற ஒரு வசனத்தை, குடும்ப அங்கத்தினர்கள் அதை அடிக்கடி பார்க்கக்கூடிய ஒரு இடத்தில் காட்சியாக வைக்கவும். காட்சிப்படுத்த ஒரு வேத வசனத்தை தேர்ந்தெடுப்பதில் முறை எடுக்க பிற குடும்ப அங்கத்தினர்களை அழைக்கவும்.

திருவிருந்துக் கூட்டம்

“நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால் நாம் ஒரே சரீரமாயிருக்கிறோம்” (1 கொரிந்தியர் 10:16–17)