புதிய ஏற்பாடு 2023
செப்டம்பர் 4–10. 1 கொரிந்தியர் 14–16: “தேவன் கலகத்திற்கு தேவனாயில்லாமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்”


“செப்டம்பர் 4–10. 1கொரிந்தியர் 14–16: ‘தேவன் கலகத்திற்கு தேவனாயில்லாமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிப்பட்ட நபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“செப்டம்பர் 4–10. 1 கொரிந்தியர் 14–16,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

ஆலய ஞானஸ்நான தொட்டி

செப்டம்பர் 4–10

1 கொரிந்தியர் 14–16

“தேவன் கலகத்திற்கு தேவனாயில்லாமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்”

1 கொரிந்தியர் 14–16ஐ நீங்கள் படிக்கும்போது உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும். பரிசுத்த ஆவி உங்களுக்குப் போதித்ததைப்பற்றி ஜெபித்து நீங்கள் கற்றுக்கொள்ள அவர் விரும்புவது இன்னும் அதிகமாயிருக்கிறதா என பரலோக பிதாவிடம் கேளுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

கொரிந்துவில் சபையும் அதன் கோட்பாடுகளும் ஒப்பீட்டளவில் புதிதாயிருந்ததால் கொரிந்திய பரிசுத்தவான்கள் குழப்பத்தைக் கண்டார்களென்பது புரிந்துகொள்ளக்கூடியது. சுவிசேஷத்தின் அடிப்படை சத்தியத்தை அவர்களுக்கு பவுல் போதித்திருந்தான்: “கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்து … அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார்”(1 கொரிந்தியர் 15:3–4). ஆனால், “மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று” விரைவிலேயே சில அங்கத்தினர்கள் போதிக்க ஆரம்பித்தார்கள் (1 கொரிந்தியர் 15:12). அவர்களுக்குப் போதிக்கப்பட்ட சத்தியங்களை “நினைவுகொள்ளும்படி” பவுல் அவர்களை மன்றாடினான் (1 கொரிந்தியர் 15:2). சுவிசேஷ சத்தியங்களைப்பற்றி முரண்பட்ட கருத்துக்களை நாம் எதிர்கொள்ளும்போது, “தேவன் கலகத்திற்கு தேவனாயில்லாமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்” என்பதை நினைவுகொள்ளுவது நல்லது (1 கொரிந்தியர் 14:33). கர்த்தருடைய நியமிக்கப்பட்ட ஊழியக்காரர்களுக்குச் செவிகொடுத்து, அவர்கள் மீண்டும் மீண்டும் போதிக்கிற எளிய சத்தியங்களைப் பற்றிக்கொள்ளுதல் சமாதானத்தைக் காணவும், “விசுவாசத்திலே நிலைத்திருக்கவும்” நமக்கு உதவும் (1 கொரிந்தியர் 16:13).

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

1 கொரிந்தியர் 14

தீர்க்கதரிசன வரத்தை என்னால் நாடமுடியும்

தீர்க்கதரிசன வரம் என்றால் என்ன? இது, வருங்காலத்தைப்பற்றி முன்னறிவிக்கும் திறமையா? இது தீர்க்கதரிசிகளுக்கு மட்டுமா? அல்லது இந்த வரத்தை யாராலும் பெறமுடியுமா?

1 கொரிந்தியர் 14:3, 31, 39–40 நீங்கள் படிக்கும்போது, இக்கேள்விகளைப்பற்றி சிந்திக்கவும். வெளிப்படுத்தின விசேஷம் 19:10 மற்றும் “Prophecy, Prophesy” in Guide to the Scriptures (scriptures.ChurchofJesusChrist.org) ஐயும் நீங்கள் வாசிக்கலாம். நீங்கள் கற்பனவற்றின் அடிப்படையில், கர்த்தர் கொடுக்கிற ஞானத்தை நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்? “தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுவதற்கு” கொரிந்தியர்களை பவுல் அழைத்தபோது அதற்கு அவன் என்ன சொல்லியிருப்பான்? 1 கொரிந்தியர் 14:39. இந்த அழைப்பை நீங்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்?

யோவேல் 2:28–29; ஆல்மா 17:3; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11:23–28 ஐயும் பார்க்கவும்.

1 கொரிந்தியர் 14:34–35.

இந்த வசனங்களில் பெண்களைப்பற்றிய கூற்று இன்று எவ்வாறு பொருந்தும்?

பவுலின் காலத்தில், சபைக் கூட்டங்கள் உட்பட, சமூகத்தில் பெண்கள் எவ்வாறு பங்கு கொள்கிறார்கள் என்பது குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தன. பவுலின் நாளில் 1 கொரிந்தியர் 14:34–35 ல் உள்ள போதனைகள் என்னவாக இருந்தாலும், இன்று பெண்கள் சபையில் பேசவும் வழிநடத்தவும் முடியாது என அவர்கள் புரிந்து கொள்ளக்கூடாது (ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, 1 கொரிந்தியர் 14:34 ஐப் பார்க்கவும். 1 கொரிந்தியர் 14:34, அடிக்குறிப்பு b]). தலைவர் ரசல் எம். நெல்சன் இன்றைய சபையின் பெண்களிடம் கூறினார்: “எங்களுக்கு … உங்கள் பலம், உங்கள் மனமாற்றம், உங்கள் நம்பிக்கை, உங்கள் வழிநடத்தும் திறன், உங்கள் ஞானம் மற்றும் உங்கள் குரல்கள் தேவை. பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்து, அவற்றைக் கடைப்பிடிக்கும் பெண்கள், தேவனின் வல்லமை மற்றும் அதிகாரத்துடன் பேசக்கூடிய பெண்கள் இல்லாமல் தேவ ராஜ்யம் முழுமையடையாது! “A Plea to My Sisters,” Liahona, Nov. 2015, 96.

1 கொரிந்தியர் 15:1–34, 53–58

மரணத்தின்மேல் இயேசு கிறிஸ்து வெற்றி பெற்றார்.

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவத்திற்கு அடிப்படையாயிருக்கிறது, இது இல்லாமல் கிறிஸ்தவமில்லை என ஒருவர் சொல்லலாம், பவுலின் வார்த்தையைப் பயன்படுத்தினால், “எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா” (1 கொரிந்தியர் 15:14). இருந்தும், “மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லை” (1 கொரிந்தியர்15:12) என கொரிந்து பரிசுத்தவான்கள் சிலர் போதித்துக்கொண்டிருந்தனர். 1 கொரிந்தியர் 15ல் பவுலின் பதிலை நீங்கள் வாசிக்கும்போது, உயிர்த்தெழுதலை நீங்கள் நம்பவில்லையென்றால் உங்கள் வாழ்க்கை எப்படி வித்தியாசமாயிருக்கும் என சிந்திக்க ஒரு கணநேரம் எடுத்துக்கொள்ளுங்கள் (2 நேபி 9:6–19; ஆல்மா 40:19–23; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:33–34 பார்க்கவும்). “கிறிஸ்து எழுந்திராவிட்டால் உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்” என்ற வாக்கியம் உங்களுக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது? (வசனம் 17).

மரித்தவர்களுக்கான ஞானஸ்நானம் உயிர்த்தெழுதலின் உண்மைக்கு ஆதாரமாக பவுல் குறிப்பிட்டார் என்பதும் கவனிக்கத்தக்கது (1 கொரிந்தியர் 15:29 பார்க்கவும்). ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்றுப் பணிகள் எவ்வாறு உயிர்த்தெழுதல் கோட்பாட்டில் உங்கள் நம்பிக்கையை பலப்படுத்தியுள்ளன?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:11–37 ஐயும் பார்க்கவும்.

1 கொரிந்தியர் 15:35–54.

உயிர்த்தெழுந்த சரீரங்கள், அநித்திய சரீரங்களிலிருந்து வேறுபாடானது.

ஒரு உயிர்த்தெழுந்த சரீரம் எவ்வாறிருக்குமென எப்போதாவது நீங்கள் வியந்ததுண்டா? 1 கொரிந்தியர் 15:35ன்படி இதே காரியத்தைக்குறித்து சில கொரிந்தியர்கள் வியப்படைந்தார்கள். வசனங்கள் 36–54ல் பவுலின் பதிலை வாசித்து, அநித்திய சரீரங்களுக்கும் உயிர்த்தெழுந்த சரீரங்களுக்குமிடையிலுள்ள வித்தியாசங்களை விளக்குகிற வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் குறிக்கவும். நீங்கள் அதைச் செய்யும்போது, வசனங்கள் 40–42 உடன் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:50–112ஐ நீங்கள் ஒப்பிடலாம். தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு இந்த வெளிப்பாடு உங்கள் புரிதலுக்கு என்ன சேர்க்கிறது? (ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, 1 கொரிந்தியர் 15:40 [1 கொரிந்தியர் 15:40, அடிக்குறிப்பு a] ஐயும் பார்க்கவும்). இந்த சத்தியங்கள் உங்களுக்கு ஏன் விலைமதிப்பற்றவை?

லூக்கா 24:39; ஆல்மா 11:43-45; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:14–33ஐயும் பார்க்கவும்.

சூரியஉதயம்

“சூரியனுடைய மகிமை வேறே” (1 கொரிந்தியர் 15:41).

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

1கொரிந்தியர் 15:29.இன்று நாம் சபையில் செய்கிறதைப்போல, மரித்தவர்களுக்கான ஞானஸ்நானங்களில் பண்டைக்கால பரிசுத்தாவன்கள் பங்கேற்றார்கள் என வசனம் 29லிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். நம் முன்னோர்களுக்காக நாம் ஏன் ஞானஸ்நானம் எடுக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு நாம் எப்படி விளக்குவது? (“What Are Baptisms for the Dead?,” [video], ChurchofJesusChrist.org பார்க்கவும்). மரித்த நம் முன்னோர்களுக்கு ஆலய நியமங்கள் தேவைப்படுபவர்களுக்கு வழங்க குடும்பமாக நாம் என்ன செய்கிறோம்? சுவிசேஷ தலைப்புகள் ஆதாரங்களில் இந்த தலைப்பில் கூடுதல் ஆதாரங்களை நீங்கள் காணலாம் “Baptisms for the Dead” (topics.ChurchofJesusChrist.org) and at FamilySearch.org.

1 கொரிந்தியர் 15:35–54.அநித்திய சரீரங்கள் எவ்வாறு உயிர்த்தெழுந்த சரீரங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது என விளக்க பவுல் பயன்படுத்துகிற சில பதங்களை உங்கள் குடும்பம் புரிந்துகொள்ள உதவ என்ன பொருட்களை அல்லது படங்களை உங்களால் காட்டமுடியும்? உதாரணமாக, அழிவுள்ளதற்கும் அழிவில்லாததற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைக் காட்ட(வசனங்கள் 52–54 பார்க்கவும்) துருப்பிடிக்கிற உலோகத்தையும் துருப்பிடிக்காத உலோகத்தையும் நீங்கள் காட்டலாம். அல்லது, பலவீனமான ஒன்றுடன் சக்திவாய்ந்த ஒன்றை நீங்கள் வேறுபாடாக்கலாம் (வசனம் 43 பார்க்கவும்).

1 கொரிந்தியர் 15:55–57.மரித்துப்போன ஒருவரை உங்கள் குடும்பத்துக்குத் தெரிந்திருந்தால், விசேஷமாக இந்த வசனங்களைப்பற்றிய ஒரு கலந்துரையாடல் அர்த்தமுள்ளதாயிருக்கும். “மரணத்தின் கூரை” (வசனம் 56) எவ்வாறு இயேசு கிறிஸ்து எடுத்துப்போட்டார் என குடும்ப அங்கத்தினர்கள் சாட்சி பகரலாம்.

1கொரிந்தியர் 16:13.இந்த வசனத்தை சம்பந்தப்படுத்த உங்கள் குடும்பத்துக்குதவ, தரையில் ஒரு வட்டத்தை வரைந்து, வட்டத்திலிருந்து மற்றவர்கள் அவன் அல்லது அவளை வெளியே அகற்ற முயற்சி செய்யும்போது, கண்கட்டப்பட்ட ஒரு குடும்ப அங்கத்தினர் வட்டத்திற்குள் “உறுதியாய் நிற்க” நீங்கள் அவரை அறிவுறுத்தலாம். பின்னர் மற்றவர்கள் அவரை அல்லது அவளை வட்டத்திலிருந்து தள்ள அல்லது இழுக்க முயற்சி செய்யலாம். வட்டத்திலுள்ள குடும்ப அங்கத்தினர் கண்கட்டப்படாமல், “கவனிக்க” முடிகிறபோது அது என்ன வேறுபாட்டை உண்டாக்கும்? தவறான தேர்வுகளை செய்ய ஆசைப்படும்போது, “பலமாக நிற்க” நாம் என்ன செய்யலாம்? (“Stay in the Boat and Hold On!,” [video], ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்).

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “He Is Risen!Hymns, no. 199.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

மாதிரிகளைத் தேடுங்கள். கர்த்தர் அவருடைய பணியை எவ்வாறு செய்கிறார் என்பதைக் காட்டுகிற மாதிரிகளை நாம் வேதங்களில் காண்கிறோம். ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி செய்வதென்றும் புரிந்துகொள்ள நமக்குதவுகிற என்ன மாதிரிகளை 1 கொரிந்தியர் 14 ல் நீங்கள் காண்கிறீர்கள்?

கல்லறைத் தோட்டத்தில் மரியாளுக்கு கிறிஸ்து தோன்றுதல்

நீ ஏன் அழுகிறாய்–சைமன் டிவே 2021. Used with permission from Altus Fine Art/www.altusfineart.com