“செப்டம்பர் 11–17. 2 கொரிந்தியர் 1–7: ‘தேவனோடே ஒப்புரவாகுங்கள்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)
“செப்டம்பர் 11–17. 2 கொரிந்தியர் 1–7,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023
செப்டம்பர் 11–17
2 கொரிந்தியர் 1–7
“தேவனோடே ஒப்புரவாகுங்கள்”
கொரிந்தியர்களுக்கு பவுல் எழுதிய நிருபங்களை நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் காண்கிற சில சுவிசேஷ கொள்கைகளை எழுதி, உங்கள் வாழ்க்கையில் அவற்றை எப்படி பயன்படுத்துவது என சிந்திக்கவும்.
உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்
சில சமயங்களில் சபைத் தலைவராயிருந்தால் சில கடின சொற்களைச் சொல்ல வேண்டியதிருக்கும். இன்றுபோல பவுலின் நாளிலும் இதுவே உண்மையாக இருந்தது. ஆகவே கொரிந்திய பரிசுத்தவான்களுக்கு ஒரு முந்திய நிருபம் கடிந்துகொள்ளுதலைக் கொண்டிருந்ததால், காயப்படுத்தும் உணர்வுகளை ஏற்படுத்தியது. 2 கொரிந்தியர் ஆகிய நிருபத்தில், தன் கடினமான வார்த்தைகளை எது தூண்டியது என விளக்க அவன் முயற்சித்தான்: “நீங்கள் துக்கப்படும்படிக்கு எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே மிகுந்த வியாகுலமும் மனஇடுக்கமும் அடைந்தவனாய், அதிகக் கண்ணீரோடே எழுதினேன்” (2 கொரிந்தியர் 2:4). ஒரு தலைவரிடமிருந்து சில திருத்தங்களின் முடிவில் நீங்கள் கேள்வி கேட்கப்படும்போது, கிறிஸ்து போன்ற அன்பால் அது உணர்த்தப்பட்டது என அறிவது கண்டிப்பாக உதவும். அப்படியில்லாத நேரங்களிலும்கூட, பவுல் உணர்ந்தது போன்ற அன்புடன் பிறரை நீங்கள் பார்க்க சித்தமாயிருந்தால், எந்த தாக்குதலுக்கும் பொருத்தமானபடி பதிலளிப்பது எளிது. மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் போதித்ததுபோல, “தன்னார்வ, அநித்திய மனுஷர் மற்றும் பெண்களால் வழிநடத்தப்படுகிற சபையில் உங்களோடும், உங்களோடு ஊழியம் செய்வோரோடும் கூட, மனித பலவீனத்தைப் பொறுத்தவரையில் தயவாயிருங்கள். தன் பரிபூரண நேச குமாரனின் காரியத்தைத் தவிர, தேவன் எப்போதும் பரிபூரணமற்றவர்களுடன்தான் பிரயாசப்பட வேண்டியதாயிற்று” (“Lord, I Believe,” Liahona, May 2013, 94).
குடும்ப வேதப் படிப்புக்கான ஆலோசனைகள்
2 கொரிந்தியர் 1:3–7; 4:6–10, 17–18; 7:4–7
எனது பாடுகள் ஆசீர்வாதங்களாக முடியக்கூடும்.
தன் ஊழியத்தில் பவுல் எதிர்கொண்ட பாடுகளைப் பொறுத்தவரையில், பாடுகளின் நோக்கங்கள் மற்றும் ஆசீர்வாதங்களைப்பற்றி அவன் அதிகம் எழுதியது ஆச்சரியமல்ல. 2 கொரிந்தியர் 1:3–7; 4:6–10, 17–18; 7:4–7, உங்கள் பாடுகள் ஆசீர்வாதமாக இருக்கும் வழிகளைப்பற்றி சிந்தியுங்கள். உதாரணமாக, தேவன் எப்படி “[உங்கள்] எல்லா உபத்திரவங்களிலும் [உங்களுக்கு] ஆறுதலளிக்கிறார்” மற்றும் உங்கள் சந்தர்ப்பத்தில் நீங்கள் எப்படி “உபத்திரவத்திலாகிலும் அகப்படுபவர்களுக்கு ஆறுதலளிப்பது” என சிந்திக்கலாம் (2 கொரிந்தியர் 1:4). அல்லது நீங்கள் “துன்பப்படுத்தப்பட்டும்,” “கைவிடப்பட்டும்” இருக்கும்போது, உங்கள் இருதயங்களிலே “பிரகாசித்த” இயேசு கிறிஸ்துவின் ஒளியில் கவனம் செலுத்தலாம் (2 கொரிந்தியர் 4:6,8).
மோசியா 24:13–17; Henry B. Eyring, “Tested, Proved, and Polished,” Liahona, Nov. 2020, 96–99; Gospel Topics, “Adversity,” topics.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.
மன்னிப்பு என்பது நான் கொடுக்கக்கூடிய மற்றும் பெறக்கூடிய ஒரு ஆசீர்வாதம்.
2 கொரிந்தியர் 2:5–11ல் பவுல் குறிப்பிட்ட மனுஷனைப்பற்றி நமக்கு அதிகம் தெரியாது, அவன் மீறுதல் செய்தான் என்பது மட்டுமே (வசனங்கள் 5–6 பார்க்கவும்) தெரியும், மற்றும் பரிசுத்தவான்கள் அவனை மன்னிக்க வேண்டும் எனவும் பவுல் விரும்பினான் (வசனங்கள் 7–8 பார்க்கவும்). நம்மை காயப்படுத்திய ஒருவரிடத்தில் “[நமது] அன்பை காண்பிக்க” சில சமயங்களில் நாம் ஏன் தவறிவிடுகிறோம்? (வசனம் 8). மன்னிப்பை நாமே வைத்துக்கொள்வது பிறரையும் நம்மையும் எப்படி காயப்படுத்துகிறது? (வசனங்கள் 7, 10–11 பார்க்கவும்). மன்னிப்பைத் தடுப்பது எப்படி “சாத்தானாலே நாம் மோசம் போக” அவனுக்கு சாதகமாகிறது? (வசனம் 11).
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:9–11ஐயும் பார்க்கவும்.
இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் நான் தேவனோடு ஒப்புரவாகலாம்.
யாரையும்போல, “புதிய சிருஷ்டி” ஆவது என்றால் என்ன என பவுல் அறிந்திருந்தான் (2 கொரிந்தியர் 5:17). கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துபவனிலிருந்து, கிறிஸ்துவுக்காக போராடுபவனாக மாறினான். 2 கொரிந்தியர் 5:14–21 நீங்கள் வாசிக்கும்போது, இதுபோன்ற கேள்விகள்பற்றி சிந்திக்கவும்: ஒப்புரவாகுதல் என்றால் என்ன? தேவனுடன் ஒப்புரவாகுதல் என்பதற்கு அர்த்தமென்ன? தேவனிடமிருந்து உங்களை எது பிரிக்க முடியும் என்பதைப்பற்றி சிந்திக்கவும். அவரோடு முழுவதுமாக ஒப்புரவாக நாம் என்ன செய்ய வேண்டும்? இரட்சகர் நமக்கு அதை எவ்வாறு சாத்தியமாக்குகிறார்?
“ஒப்புரவாக்குதலின் ஊழியத்தில்” “கிறிஸ்துவுக்காக ஸ்தானாதிபதிகளாயிருந்து” என்றால் என்ன என்பதை நீங்கள் சிந்திக்கலாம். (வசனம் 18, 20). மூப்பர் ஜெஃப்ரி ஆர். ஹாலண்டின் செய்தியிலிருந்து நீங்கள் என்ன உள்ளுணர்வுகளைப் பெறுகிறீர்கள் “The Ministry of Reconciliation”? (Liahona, Nov. 2018, 77-79.
2 நேபி 10:23–25 ஐயும் பார்க்கவும்.
தேவ துக்கம் மனந்திரும்புதலுக்கு வழிநடத்துகிறது.
வழக்கமாக துக்கத்தை நல்ல காரியமாக நாம் நினைப்பதில்லை, ஆனால் மனந்திரும்புதலின் தேவையான பாகமாக “தேவ துக்கமாக” (2 கொரிந்தியர் 7:10) பவுல் பேசினான். பின்வருவனவற்றிலிருந்து தேவ துக்கத்தைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்: 2 கொரிந்தியர் 7:8–11; ஆல்மா 36:16–21; மார்மன் 2:11–15; and Sister Michelle D. Craig’s message “Divine Discontent” (Liahona, Nov. 2018, 52–55). நீங்கள் தேவதுக்கத்தை உணர்ந்தபோது, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன தாக்கம் பெற்றீர்கள்?
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
2 கொரிந்தியர் 3:1–3.உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் ஒரு வேலைக்காக அல்லது பள்ளி விண்ணப்பத்துக்காக பரிந்துரை கடிதத்தை எழுதுமாறு யாரையாவது கேட்டிருக்கிறார்களா? இந்த அனுபவத்தைப்பற்றி அவர்கள் பேசுமாறு கேட்கவும். கிறிஸ்துவிடமிருந்து சுவிசேஷமே, “மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினால் எழுதப்பட்டது,” என்பதால் பரிசுத்தவான்களின் வாழ்க்கையே பரிந்துரை கடிதங்கள் போன்றவை என பவுல் போதித்தான். நீங்கள் 2 கொரிந்தியர் 3:1–3 ஒன்றாகப் வாசிக்கும்போது, சுவிசேஷத்தின் சத்தியத்தையும் மதிப்பையும் நிரூபிக்கும் வகையில், “எல்லா மனிதர்களாலும் அறிந்து வாசிக்கப்பட்டிருக்கிற” கடிதங்களைப் போன்ற நமது உதாரணங்கள் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி விவாதிக்கவும். இயேசு கிறிஸ்துவின் சீஷனாக நல்ல எடுத்துக்காட்டாக மற்றொரு குடும்ப அங்கத்தினர் எவ்வாறு இருந்திருக்கிறார் என விளக்கி ஒருவேளை ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் ஒரு கடிதம் அல்லது “நிருபம்” எழுதலாம். அவர்கள் குடும்பத்தினருக்கு தங்கள் கடிதங்களை வாசித்து, எழுதப்பட்ட குடும்ப அங்கத்தினருக்கு கொடுக்கலாம். நமது வாழ்க்கைகள் “கிறிஸ்துவின் நிருபங்கள்” என புரிந்துகொள்வது ஏன் முக்கியமாகும்?
-
2 கொரிந்தியர் 5:6–7.“தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடப்பது” என்றால் என்ன? நாம் காண முடியாவிட்டாலும் நம்புகிறோம் என காட்ட நாம் என்ன செய்கிறோம்?
-
2கொரிந்தியர் 5:17.விசேஷித்த மாற்றங்கள் அடைந்து புதிய சிருஷ்டிகளானவற்றின் தன்மைகளின் உதாரணங்களை உங்கள் குடும்பத்தினர் நினைக்கவோ அல்லது காணவோ முடியுமா? (இந்த குறிப்புடன் வருகிற படங்களைப் பார்க்கவும்). இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் எவ்வாறு நம்மை எப்படி மாற்ற முடியும்?
-
2 கொரிந்தியர் 6:1–10.2 கொரிந்தியர் 6:1–10ன்படி, “தேவ ஊழியக்காரர்கள்” என்பதன் அர்த்தம் என்ன? (வசனம் 4). தேவ ஊழியக்காரன் என்ன குணங்களைப் பெற்றிருக்கிறான்?
-
2 கொரிந்தியர் 6:14–18.நம்மைச் சுற்றிலுமிருப்பவர்களை நேசிக்கும்போதே, “நீங்கள் அவர்கள் [அவிசுவாசிகள்] நடுவிலிருந்து புறப்பட்டு பிரிந்து போய்” என்ற பவுலின் ஆலோசனையை நாம் எப்படி பின்பற்ற முடியும்?
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Help Me, Dear Father,” Children’s Songbook, 99.