புதிய ஏற்பாடு 2023
செப்டம்பர் 18–24. 2 கொரிந்தியர் 8–13: “உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்”


“செப்டம்பர் 18–24. 2 கொரிந்தியர் 8–13: ‘உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“செப்டம்பர் 18–24. 2 கொரிந்தியர் 8–13,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

இயேசு சிறுபிள்ளையுடன் பேசுதல்

செப்டம்பர் 18–24

2 கொரிந்தியர் 8–13

“உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்”

ஆவிக்குரிய எண்ணங்களை பதிவுசெய்தல் வேதப் படிப்பின்போது நீங்கள் கற்றுக்கொள்பனவற்றை நினைவுகூர உங்களுக்கு உதவும். நீங்கள் ஒரு படிப்பு இதழில் எழுதலாம், உங்கள் வேதங்களின் பக்கவாட்டில் குறிப்பெழுதலாம், உங்கள் Gospel Library appல், குறிப்பெழுதலாம் அல்லது உங்கள் எண்ணங்களைப்பற்றிய ஒலிப்பதிவுகளைச் செய்யலாம்.

உங்கள் எண்ணங்களை பதிவுசெய்யவும்

மற்றொரு பகுதியில் பரிசுத்தவான்களின் ஒரு சபை வறுமையில் போராடிக்கொண்டிருக்கின்றனர் என நீங்கள் கேள்விப்பட்டால் என்ன செய்வீர்கள்? 2 கொரிந்தியர் 8–9ல் பவுல் விவரித்த கொரிந்திய பரிசுத்தவான்களின் சூழ்நிலை இதுதான். தேவையிலிருந்த பரிசுத்தவான்களுக்கு தங்கள் அதிகத்தை நன்கொடையளிக்குமாறு வற்புறுத்தலாம் என அவன் நம்பினான். நன்கொடை கொடுக்கும்படி கேட்பதற்கும் அப்பால், கொடுப்பதைப்பற்றிய ஆழமான சத்தியங்களை பவுலின் வார்த்தைகள் அடக்கியுள்ளன: “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனத்தில் நியமித்தபடியே கொடுக்கக் கடவன், உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரிந்தியர் 9:7). நமது நாளிலும், உலகமெங்கும் உதவி தேவைப்படுகிற பரிசுத்தவான்கள் இன்னமும் இருக்கிறார்கள். சில சமயங்களில் அவர்களுக்காக அதிகமாக நாம் செய்யக்கூடியது, உபவாசமிருந்து உபவாசக் காணிக்கைகளை நன்கொடையளிப்பதாகும். பிற விஷயங்களில் நாம் கொடுப்பது அதிகமாக நேரடியானதாயும் தனிப்பட்டதாயும் இருக்கலாம். நமது தியாகங்கள் என்ன வடிவத்திலிருந்தாலும், கொடுப்பதற்கான நமது தூண்டுதல்களை சோதிப்பது தகுதியானதே. நமது தியாகங்கள் அன்பின் வெளிப்பாடுகளா? ஆயினும், கொடுப்பவரை உற்சாகமாக்குவது அன்பே.

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

2 கொரிந்தியர் 8:1–15; 9:5–15

வறியவரையும் தேவையிலிருப்போரையும் ஆசீர்வதிக்க என்னிடம் இருப்பதை நான் உற்சாகமாக பகிர்ந்துகொள்ள முடியும்.

உலகமெங்கும் தேவையிலிருக்கும் அநேக ஜனங்கள் இருக்கிறார்கள். நாம் எப்படி வித்தியாசத்தை சாத்தியப்படுத்தலாம்? மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் இந்த ஆலோசனையைக் கொடுத்தார்: “பணக்காரனோ அல்லது ஏழையோ, பிறர் தேவையிலிருக்கும்போது, ‘நம்மால் இயன்றதை’ நாம் செய்ய வேண்டும் [மாற்கு 14:6, 8 பார்க்கவும்]. … மீண்டும் மீண்டும் அவர் நமக்குக் கொடுத்த கட்டளைகளைக் கைக்கொள்ள, நீங்கள் மனமுவந்து விரும்பி, ஜெபித்து, வழிகளை நீங்கள் தேடிக்கொண்டிருந்தால், [தேவன்] சீஷத்துவத்தின் மனதுருக்கமான வழிகளில் உங்களுக்கு உதவி வழிநடத்துவார்“(“Are We All Not Beggars?” Liahona, Nov. 2014, 41).

2 கொரிந்தியர் 8:1–15; 9:6–15 வாசித்து, வறியோர் மற்றும் தேவையிலிருப்போரைக் கவனிப்பதைப்பற்றி பவுல் போதித்த கொள்கைகளைக் குறிப்பெடுக்கவும். பவுலின் ஆலோசனையில் எது உங்களை உணர்த்துகிறது? தேவையிலிருக்கும் ஒருவரை ஆசீர்வதிக்க நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைப்பற்றிய வழிநடத்துதலுக்காக நீங்கள் ஜெபிக்கலாம். நீங்கள் பெறும் எந்த எண்ணங்களையும் பதிவுசெய்து அவற்றின்படி செயல்படுவதை உறுதி செய்யவும்.

மோசியா 4:16–27; ஆல்மா 34:27–29; Russell M. Nelson, “The Second Great Commandment,” Liahona, Nov. 2019, 96–100; Henry B. Eyring, “Is Not This the Fast That I Have Chosen?,” Liahona, May 2015, 22–25 ஐயும் பார்க்கவும்.

2 கொரிந்தியர் 11:1–6, 13–15; 13:5-9

“நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்.”

இன்று, பவுலின் நாளில் இருந்ததைப் போலவே, “கிறிஸ்துவிலுள்ள உண்மையினின்று” நம்மை புறம்பே வழிநடத்த முற்படுபவர்களும் இருக்கிறார்கள் (2 கொரிந்தியர் 11:3). அந்த காரணத்திற்காக, பவுல் பரிந்துரைத்ததைச் செய்வது முக்கியம்: “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்.” (2 கொரிந்தியர் 13:5). “விசுவாசமுள்ளவர்களோவென்று” இதன் பொருள் என்ன என்பதைப்பற்றி சிந்தித்து இந்த செயல்முறையைத் தொடங்கலாம் உங்களுக்கு நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று எப்படி அறிகிறீர்கள்? உங்களை நீங்களே ஆய்வு செய்ய வேண்டிய வாய்ப்புகளைத் தேடுங்கள்.

“கிறிஸ்துவிலுள்ள்ள உண்மையினின்று” உங்கள் தேர்வின் ஒரு பகுதியாக, நீங்கள் இச்சொற்றொடரையும் சிந்திக்கலாம் (2 இராஜாக்கள் 11: 3). கிறிஸ்துவிலும் அவருடைய சுவிசேஷத்திலும் நீங்கள் எவ்வாறு எளிமையைக் கண்டீர்கள்? உங்கள் மனம் எப்படி “[அந்த] எளிமையிலிருந்து சிதைந்து” இருக்கலாம்? 2 கொரிந்தியர் 11:1–6, 13–15ல் நீங்கள் காண்கிற எந்த உதவிகரமான ஆலோசனையை நீங்கள் காண்கிறீர்கள்?

தலைவர் டியட்டர் எப். உக்டர்ப் வழங்கிய இந்த ஆலோசனையையும் கவனியுங்கள்: “சுவிசேஷம் உங்களுக்கு நன்றாக இல்லை என்று நீங்கள் எப்போதாவது நினைத்தால், நான் உங்களை பின்வாங்க அழைக்கிறேன், உங்கள் வாழ்க்கையை உயரமான நிலையில் இருந்து பார்த்து, சீஷராக உங்கள் அணுகுமுறையை எளிதாக்குங்கள். சுவிசேஷத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், கொள்கைகள் மற்றும் பயன்பாடுகளில் கவனம் செலுத்துங்கள். நிறைவான வாழ்க்கைக்கான உங்கள் பாதையில் தேவன் உங்களை வழிநடத்தி ஆசீர்வதிப்பார் என்று நான் உறுதியளிக்கிறேன், மேலும் சுவிசேஷம் நிச்சயமாக உங்களுக்கு சிறப்பாக செயல்படும். (“It Works Wonderfully!,” Liahona, Nov. 2015, 22).

2 கொரிந்தியர் 12:5–10

என் பெலவீனத்தில் பெலன் காண எனக்கு உதவ, இரட்சகரின் கிருபை போதுமானது.

பவுலின் “மாம்சத்திலே ஒரு முள்” என்னவென்று நமக்குத் தெரியாது, ஆனால் நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய சொந்த முட்கள் உள்ளன, அதை தேவன் நம் வாழ்விலிருந்து அகற்ற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். 2 கொரிந்தியர் 12:5–10ஐப் படிக்கும்போது உங்கள் முட்களைப்பற்றி சிந்தியுங்கள், மேலும் இந்த வசனங்களில் இயேசு கிறிஸ்துவைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள் என்று சிந்தியுங்கள். பாடுகள் மற்றும் பலவீனம்பற்றி பவுல் இந்த வசனங்களில் என்ன கற்பித்தான்? உங்களுக்கு தேவனின் கிருபை போதுமானது என்றால் என்ன அர்த்தம்?

மோசியா 23:21–24; 24:10–15; ஏத்தேர் 12:27; மரோனி 10:32–33 ஐயும் பார்க்கவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

2 கொரிந்தியர் 8–9.ஏழைகளிடமும் தேவையிலிருப்போரிடமும் செல்ல உங்கள் குடும்பத்துக்கு உணர்த்துகிற எதை இந்த அதிகாரங்களில் நீங்கள் காண்கிறீர்கள் ? தேவையிலிருக்கும் ஒருவருக்கு குடும்பமாக ஒரு சேவையின் செயலை செய்ய இதுவே நல்ல நேரமாயிருக்கும்.

2 கொரிந்தியர் 9:6–7.“உற்சாகமாய்க் கொடுக்கிறவர்” என விவரிக்கப்படக்கூடிய ஒருவரை உங்கள் குடும்பத்தார் அறிவார்களா? பிறருக்கு நமது சேவையை எவ்வாறு மிக உற்சாகமுள்ளதாக நாம் ஆக்க முடியும்? இளம் குடும்ப உறுப்பினர்கள் “நான் உற்சாகமாய்க் கொடுப்பவன்” என்று அடையாள அட்டைகளை உருவாக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் சேவை செய்வதைப் பார்க்கும் போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கலாம்.

2 கொரிந்தியர் 10:3–7.துன்மார்க்கத்துக்கு எதிரான நமது “யுத்தத்தைப்பற்றி” உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் எவ்வாறு கற்பிக்க முடியும்? நாற்காலிகளுடனும் போர்வைகளுடனும் ஒரு சுவர் அல்லது கோட்டையைக் கட்டுவதை உங்கள் குடும்பத்தினர் ரசிப்பார்களா? தேவனிடமிருந்து நம்மை புறம்பே நடத்துகிற, “கிறிஸ்துவுக்கு கீழ்ப்படியும் ஒவ்வொரு சிந்தனையையும் சிறைத்தனத்துக்குள்ளே கொண்டுசெல்லும்” காரியங்களை எப்படி அகற்றுவது என இது ஒரு கலந்துரையாடலுக்கு வழிநடத்தும். நமது சிந்தனைகளைக் கட்டுப்படுத்த நாம் பயன்படுத்தும் ஆவிக்குரிய ஆயுதங்கள் எவை? (எபேசியர் 6:11–18 பார்க்கவும்).

2 கொரிந்தியர் 11:3.“கிறிஸ்துவிலுள்ள எளிமையில்” அதிக கவனம் செலுத்த உங்கள் குடும்பம் என்ன செய்யலாம்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “‘Give,’ Said the Little Stream,” Children’s Songbook, 236.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

எண்ணங்களைப் பதிவு செய்யவும். மூப்பர் ரிச்சர்ட் ஜி. ஸ்காட் சொன்னார்: “கவனமாக பதிவு செய்யப்பட்ட அறிவு, தேவையான நேரத்தில் கிடைக்கிற அறிவாகும். … [ஆவிக்குரிய வழிநடத்துதலை பதிவுசெய்தல்] நீங்கள் அதிக ஒளியைப் பெறும் சாத்தியத்தை அதிகரிக்கிறது” (“Acquiring Spiritual Knowledge,” Ensign, Nov. 1993, 88; Teaching in the Savior’s Way, 1230ஐயும் பார்க்கவும்).

இளைஞர்கள் சேவைத் திட்டத்திற்கு உதவுதல்

“அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன், உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரிந்தியர் 9:7).