“செப்டம்பர் 25–அக்டோபர் 1. கலாத்தியர்: ‘ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)
“செப்டம்பர் 25–அக்டோபர் 1. கலாத்தியர்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023
செப்டம்பர் 25–அக்டோபர் 1
கலாத்தியர்
“ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள்”
நீங்கள் கலாத்தியர் வாசிக்கும்போது, நீங்கள் பெறுகிற எண்ணங்களைப் பதிவு செய்யவும். அப்படிச் செய்வது வருங்காலத்தில் அவற்றை நினைவுகூர்ந்து சிந்திக்க உங்களுக்கு உதவும்.
உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் ஆவிக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கொடுக்கிறது. ஆனால், சில சமயங்களில் சுவிசேஷத்தின் விடுதலையை அனுபவித்தவர்கள், அதிலிருந்து பாதை மாறி, “மறுபடியும் அடிமைப்படும்படி விரும்புகிறார்கள்” (கலாத்தியர் 4:9). இதைத்தான் சில கலாத்திய பரிசுத்தவான்கள் செய்துகொண்டிருந்தார்கள், கிறிஸ்து அவர்களுக்கு கொடுத்திருந்த சுதந்திரத்திலிருந்து திரும்பியிருந்தார்கள் (கலாத்தியர் 1:6 பார்க்கவும்). அப்போது கலாத்தியருக்கு பவுல் எழுதிய நிருபம், “கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைக்குத்” திரும்பிவர ஒரு அவசர அழைப்பு (கலாத்தியர் 5:1). இந்த அழைப்பு நாம் கேட்டு செவிசாய்க்க வேண்டிய ஒன்று, ஏனெனில் சூழ்நிலைகள் மாறும்போது, சுதந்திரத்துக்கும் அடிமைத்தனத்துக்கும் இடையிலான யுத்தம் நிரந்தரமானது. பவுல் போதித்தபடி, “சுயாதீனத்துக்கு அழைக்கப்படுவது” போதாது (கலாத்தியர் 5:13); கிறிஸ்துவைச் சார்ந்திருந்து நாம் அதில் நிலைகொண்டிருக்க வேண்டும் (கலாத்தியர் 5:1).
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
கிறிஸ்துவின் நியாயப்பிரமாணம் என்னை விடுதலையாக்குகிறது.
அவர்கள் கள்ள போதனைகளால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என அவன் அறிந்தபோது, பவுல் கலாத்திய பரிசுத்தவான்களுக்கு எழுதினான் (கலாத்தியர் 1:6–9 பார்க்கவும்). இந்த போதனைகளில் ஒன்று, இரட்சிக்கப்படும்படியாக சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்ட புறஜாதியார் விருத்தசேதனம் செய்து, மோசேயின் நியாயப்பிரமாண பாரம்பரியங்களை கடைபிடிக்க வேண்டும் (கலாத்தியர் 2 பார்க்கவும்). பவுல் இந்த பாரம்பரியங்களை “அடிமைத்தனத்தின் நுகத்தடி” என அழைத்தான் (கலாத்தியர் 5:1). கலாத்தியருக்கு பவுல் கொடுத்த அறிவுரையை நீங்கள் வாசிக்கும்போது, உண்மையான சுதந்திரம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவும் கொள்கைகளைத் தேடுங்கள். உங்கள் வாழ்க்கையில் என்ன விதமான பொய்யான பாரம்பரியங்கள் அல்லது அடிமைத்தன நுகங்கள் இருக்கலாம் என நீங்கள் சிந்திக்கலாம். சுவிசேஷம் கொடுக்கிற சுதந்திரத்தை அனுபவிப்பதைத் தடுக்கிற எதாவது இருக்கிறதா? கிறிஸ்துவும் அவரது சுவிசேஷமும் எவ்வாறு [உங்களை] “விடுதலையாக்கி இருக்கிறது” (கலாத்தியர் 5:1).
2 நேபி 2:27; 9:10–12 ஐயும் பார்க்கவும்.
ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆசீர்வாதங்களுக்கு நான் வாரிசு.
அவர்கள் உண்மையான ஆபிரகாமின் சந்ததி (“வித்து”) இல்லை என்பதால், மேன்மைப்படுதல் உள்ளிட்ட ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெற மாட்டார்கள் என சில கலாத்திய பரிசுத்தவான்கள் கவலை கொண்டிருந்தனர். கலாத்தியர் 3:7–9, 13–14, 27–29ன் படி, “ஆபிரகாமின் பிள்ளைகளாயிருக்க” ஒருவரை எது தகுதியாக்குகிறது?
ஆபிரகாமுக்கு வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களையும் அவருடைய சந்ததியாக நாம் பெறக்கூடிய ஆசீர்வாதங்களையும்பற்றி அறிந்துகொள்ள, கற்றுக்கொள்ள, Gospel Topics, “Abrahamic Covenant,” topics.ChurchofJesusChrist.org பார்க்கவும். ஆபிரகாமுக்கு வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் உங்களுக்கு ஏன் முக்கியமானவைகளாக இருக்கின்றன?
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஆபிரகாம் பெற்றிருந்தானா?
தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் விளக்கினார்: “பலர் நினைக்கிறபடி எல்லாக் காலங்களிலுமிருந்த பூர்வத்தார், பரலோக முறையை அறியவில்லை என நாம் நம்ப முடியாது, ஏனெனில் இரட்சிக்கப்பட்ட அனைவரும், கிறிஸ்து வருவதற்கு முன்னும் இந்த மாபெரும் மீட்பின் திட்டத்தின் வல்லமையால் இரட்சிக்கப்பட்டார்கள், ஏனெனில். … சுவிசேஷம் அவனுக்குப் பிரசங்கிக்கப்படாவிட்டாலும் ஆபிரகாம் பலி செலுத்தினான்” (“The Elders of the Church in Kirtland to Their Brethren Abroad,” The Evening and the Morning Star, Mar. 1834, 143, JosephSmithPapers.org). ஆபிரகாமும் மற்ற பூர்வகால தீர்க்கதரிசிகளும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பெற்றிருந்தார்கள் என்பதை பவுலின் காலத்தில் இருந்த பரிசுத்தவான்கள் தெரிந்துகொள்வது ஏன் முக்கியமாக இருந்தது என்று ஏன் நினைக்கிறீர்கள்? இந்த ஆசீர்வாதங்களைப்பற்றி அறிந்து கொள்வது உங்களுக்கு ஏன் முக்கியம்? (ஏலமன் 8:13–20; மோசே 5:58–59; 6:50–66 பார்க்கவும்.)
Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 45–56 ஐயும் பார்க்கவும்.
நான் “ஆவிக்கேற்றபடி நடந்தால்,” நான் “ஆவியின் கனியைப்” பெறுவேன்.
இந்த வசனங்களை படிப்பது, நீங்கள் எவ்வாறு முழுமையாக ஆவிக்கேற்றபடி நடக்கிறீர்கள் என மதிப்பிட உதவ முடியும். வசனங்கள் 22–23ல் குறிப்பிடப்பட்டுள்ள ஆவியின் கனியை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? ஆவிக்குரிய வாழ்க்கையின் என்ன பிற கனி அல்லது விளைவுகளை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள்? இக்கனியை மிக முழுமையாக போஷிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டுமென சிந்திக்கவும். இக்கனியை போஷித்தல் உங்கள் வாழ்க்கையில் முக்கிய உறவுகளை எப்படி மேம்படுத்தும்?
நீங்கள் ஆவிக்கேற்றபடி நடக்க முயற்சிக்கிறீர்கள், ஆனால் உங்கள் முயற்சிகள் வாக்குறுதியளிக்கப்பட்ட பலனைத் தரவில்லை என்றால், கலாத்தியர் 6:7–10 படிக்கவும் இந்த வசனங்களில் கர்த்தர் உங்களுக்கு என்ன செய்தி வைத்திருக்கிறார் என உணர்கிறீர்கள்?
ஆல்மா 32:28, 41–43; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:32–34 ஐயும் பார்க்கவும்.
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
கலாத்தியர் 3:11.“விசுவாசத்தினாலே பிழைத்தல்” என்றால் என்ன? ஒரு குடும்பமாக நாம் எவ்வாறு விசுவாசத்தால் பிழைக்கிறோம்?
-
கலாத்தியர் 4:1–7.ஒரு இராஜாவின் வேலைக்காரன் மற்றும் அவனது பிள்ளைகள் இடையே உள்ள வித்தியாசத்தை கலந்துரையாடி, கலாத்தியர் 4ஐ நீங்கள் அறிமுகம் செய்யலாம். ஒரு வேலைக்காரனிடம் இல்லாத தகுதி அல்லது எந்த சந்தர்ப்பங்களை இராஜாவின் பிள்ளை பெற்றிருக்கிறான்? வசனங்கள் 1–7 நீங்கள் சேர்ந்து வாசிக்கும்போது இதைப்பற்றி சிந்தியுங்கள். பரலோக பிதாவுடன் நமது உறவைப்பற்றி இந்த வசனங்கள் என்ன போதிக்கின்றன?
-
கலாத்தியர் 5:16–26.“மாம்சத்தின் கிரியைகள்” மற்றும் “ஆவியின் கனி” ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைப்பற்றி விவாதிக்கவும். உங்கள் கலந்துரையாடலில் சிறிது வேடிக்கை சேர்க்க, ஆவியின் கனியை விவரிக்க பவுல் பயன்படுத்திய வார்த்தைகளை வெவ்வேறு பழங்களில் உங்கள் குடும்பத்தினர் பெயரிடலாம். பின்பு ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் ஒன்றை தேர்ந்தெடுத்து, விளக்கி, அந்த பழத்தை எடுத்துக்காட்டாக கொண்டு நடக்கிற ஒருவரைப்பற்றி பேசவும். உங்கள் குடும்பத்துக்குள் ஆவியை வரவேற்று இக்கனியை போஷிக்க பரிசுத்த ஆவியை வரவழைக்கிற வழிகளுக்கு இந்த கலந்துரையாடல் வழிநடத்தலாம். கலந்துரையாடலுக்குப் பிறகு, நீங்கள் சேர்ந்து பழங்களை சாப்பிடலாம்.
-
கலாத்தியர் 6:1–2.உங்கள் குடும்பத்தில் ஒருவர் “குற்றத்தில் அகப்படும்” நேரங்கள் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் என்ன செய்வதென்பதைப்பற்றி கலாத்தியர் 6:1–2ல் என்ன ஆலோசனையை நீங்கள் காண்கிறீர்கள்?
-
கலாத்தியர் 6:7–10.உங்கள் குடும்பத்தினர் எப்போதாவது ஒன்றை ஒன்றுசேர்ந்து நட்டிருந்தால், “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என்ற கொள்கையை விளக்க அந்த அனுபவத்தை நீங்கள் பயன்படுத்தலாம் (வசனம்7). அல்லது தங்கள் அபிமான பழம் அல்லது காயைப்பற்றி உங்கள் குடும்ப அங்கத்தினர்களிடம் கேட்டு, உணவை உற்பத்தி செய்கிற ஒரு செடியை வளர்க்க என்ன செய்வதென பேசவும். (இந்த குறிப்பின் கடைசியில் இருக்கிற படத்தைப் பார்க்கவும்.) உங்கள் குடும்பம் பெற நம்புகிற ஆசீர்வாதங்கள் மற்றும் அந்த ஆசீர்வாதங்களை எப்படி “அறுவடை செய்வது” என்பதைப்பற்றி பின்னர் நீங்கள் ஒரு உரையாடல் நடத்தலாம்.
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனயளிக்கப்பட்ட பாடல்: “Teach Me to Walk in the Light,” Children’s Songbook, 177.