புதிய ஏற்பாடு 2023
அக்டோபர் 2–8. எபேசியர்: “பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு”


“அக்டோபர் 2–8. எபேசியர்: ‘பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“அக்டோபர் 2–8. எபேசியர்,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
குடும்பம் புகைப்படங்களை பார்த்தல்

அக்டோபர் 2–8

எபேசியர்

“பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு”

பொது மாநாட்டு செய்திகளுக்கும் எபேசியருக்கு புவுலின் நிருபத்துக்கும் இடையே எந்த தொடர்பையாவது பார்க்கிறீர்களா?

உங்கள் உணர்வுகளைப் பதிவு செய்யவும்

எபேசுவில் சுவிசேஷம் பரவத் தொடங்கியபோது, எபேசியர் மத்தியில் அது “பெரிய கலகத்தை” உண்டாக்கவில்லை (அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:23.) பெண் தெய்வ விக்கிரகங்களுக்கு சன்னதியைக் கட்டிய உள்ளூர் கைவேலைக்காரர்கள் தங்கள் வாழ்வுக்கு ஆபத்தாக கிறிஸ்தவத்தைப் பார்த்தனர், விரைவிலே “அவர்கள் கோபத்தால் நிறைந்து, … பட்டணம் முழுவதும் கலகத்தால் நிரம்பியது” (அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:27–29 பார்க்கவும்). இப்படிப்பட்ட பின்னணியில் சுவிசேஷத்துக்கு புதிதாக மனமாறியவராக இருப்பதை கற்பனை செய்யுங்கள். இந்தக் “கலகத்துக்கு” மத்தியில் அநேக எபேசியர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார்கள் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:40), “கிறிஸ்துவே … நமது சமாதானம்” என பவுல் உறுதியளித்தான் (எபேசியர் 2:13–14). அவனது அழைப்புடன் “சகல விதமான கசப்பும் கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்த துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது” (எபேசியர் 4:31) என்ற இந்த வார்த்தைகள், அப்போது போல இப்போதும் சரியான நேரத்திலும் ஆறுதலானதாகவும் தோன்றுகிறது. உங்களைப்போல எபேசியருக்கும், கஷ்டத்தை எதிர்கொள்ளும் பெலன் “கர்த்தரிலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும்” (எபேசியர் 6:10–13 பார்க்கவும்) வருகிறது.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்புக்கான ஆலோசனைகள்

எபேசியர் 1:4–11, 17–19

பூமியில் சில பொறுப்புகளை நிறைவேற்ற தேவன் என்னைத் தேர்ந்தெடுத்தார் அல்லது முன்நியமித்தார்.

தேவனால் “முன் குறிக்கப்பட்டிருக்கும்” பரிசுத்தவான்களைப்பற்றியும், தன் ஜனமாக இருக்குமாறு “உலகத்தோற்றத்துக்கு முன்னே … தெரிந்துகொள்ளப்பட்டதையும்” பற்றி பவுல் பேசினான். எவ்வாறாயினும், தலைவர் ஹென்றி பி. ஐரிங் குறிப்பிட்டுள்ளபடி, “தேவன் தம்முடைய பிள்ளைகளில் யாரைக் காப்பாற்றுவார் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அவர்களுக்கு சுவிசேஷம் கிடைக்கச் செய்திருக்க வேண்டும், அதே சமயம் சுவிசேஷத்தைக் கேட்காதவர்கள் ‘தெரிந்துகொள்ளப்படவில்லை’ என்று இதற்கு அர்த்தமல்ல. … தேவனின் திட்டம் மிகவும் அன்பானது மற்றும் அதை விட நீதியானது. தன் குடும்பம் முழுவதையும் கூட்டிச் சேர்க்கவும் ஆசீர்வதிக்கவும் நமது பரலோக பிதா ஆர்வமாக இருக்கிறார்” (“Gathering the Family of God,” Liahona, May 2017, 20–21). பரிசுத்த ஆலயங்களில் மரித்தோருக்காக நிறைவேற்றப்படும் பணியினிமித்தம் தேவனின் அனைத்து பிள்ளைகளும் சுவிசேஷத்தையும் அதன் நியமங்களையும் ஏற்க முடியும்.

இரட்சிக்கப்படவோ அல்லது இரட்சிக்கப்படாமலிருக்கவோ ஒருவரும் முன்குறிக்கப்படாவிட்டாலும், தற்கால வெளிப்படுத்தல் இப்பூமியில் தேவனின் பொறுப்புக்களை நிறைவேற்ற சிலர் தெரிந்துகொள்ளப்பட்டு, “முன்நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்”. எபேசியர் 1 மற்றும் Gospel Topics, “Foreordination” (topics.ChurchofJesusChrist.org), நீங்கள் வாசிக்கும்போது, இந்த சத்தியம் உங்களுக்கு எப்படி பொருந்துகிறது என்பதுபற்றி சிந்தியுங்கள்.

எபேசியர் 1:10

தேவன் “கிறிஸ்துவுக்குள் அனைத்தையும் ஒன்றாக கூட்டிச் சேர்ப்பார்.”

“காலங்களின் முழுமையின் ஊழியக்காலம்“ என நமது காலம் அழைக்கப்படுவது ஏன் என நினைக்கிறீர்கள்? “கிறிஸ்துவுக்குள் அனைத்தையும் ஒன்றாக கூட்டிச் சேர்ப்பார்” என்பதன் அர்த்தம் என்ன? இந்த சொற்றொடர்களை நீங்கள் சிந்திக்கும்போது, பின்வரும் வசனங்களை வாசிக்கவும்: எபேசியர் 4:13; 2 நேபி 30:7–8; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:11–16; 112:30–32; 128:18–21. இந்த சொற்றொடர்களின் உங்கள் சொந்த விளக்கங்களை எழுத நீங்கள் உணர்த்தப்படுவதாக உணரலாம்.

David A. Bednar, “Gather Together in One All Things in Christ,” Liahona, Nov. 2018, 21–24 ஐயும் பார்க்கவும்.

எபேசியர் 2:19–22; 3:1–7; 4:11–16

அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் மீது சபை கட்டப்பட்டிருக்கிறது, இயேசு கிறிஸ்துவே இதன் பிரதான மூலைக்கல்.

எபேசியர் 2:19–22; 3:1–7; 4:11–16ன்படி, நாம் ஏன் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் பெற்றிருக்கிறோம்? பொது மாநாட்டின் போது நீங்கள் கேட்ட தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் செய்திகளைப்பற்றி சிந்தியுங்கள். பவுல் விவரித்த நோக்கங்களை அவர்களின் போதனைகள் எவ்வாறு நிறைவேற்றுகின்றன? உதாரணமாக, “கோட்பாட்டின் எல்லாவித காற்றினாலும் அலைகிறவர்களாயிருக்காமல்” இந்த போதனைகள் எவ்வாறு உங்களுக்கு உதவியிருக்கிறது?

இயேசு கிறிஸ்து எவ்வாறு சபைக்கு ஒரு மூலைக்கல்லாக இருக்கிறார்? உங்கள் வாழ்க்கைக்கு அவர் எப்படி ஒரு மூலைக்கல்லாக இருக்கிறார்?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:10–12ஐயும் பார்க்கவும்.

படம்
ஒரு கட்டிடத்தின் மூலைக்கல்

இயேசு கிறிஸ்துவே சபையின் மூலைக்கல்.

எபேசியர் 5:216:4

இரட்சகரின் உதாரணத்தைப் பின்பற்றுதல் என் குடும்ப உறவுகளை பெலப்படுத்த முடியும்.

எபேசியர் 5:216:4 நீங்கள் வாசிக்கும்போது, இந்த வசனங்களில் உள்ள அறிவுரைகள் உங்கள் குடும்ப உறவுகளை எவ்வாறு பலப்படுத்தலாம் என்று சிந்தியுங்கள்.

எபேசியர் 5:22லிலுள்ள பவுலின் வார்த்தைகள் அவனது யுகத்தின் சமூக வழக்கங்களின்படி எழுதப்பட்டன என்பதைக் கவனிப்பது முக்கியமாகும். இன்று ஆண்கள், பெண்களை விட உயர்ந்தவர்கள் அல்ல எனவும் துணைவிகள் “சம பங்குதாரர்கள்” எனவும் தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் போதிக்கின்றனர். (“The Family: A Proclamation to the World,” ChurchofJesusChrist.org பார்க்கவும்). அப்படியானாலும் எபேசியர் 5:25–33ல், பொருத்தமான ஆலோசனையை இப்போதும் நீங்கள் காண முடியும். உதாரணமாக, எவ்வாறு கிறிஸ்து பரிசுத்தவான்கள் மீது தன் அன்பைக் காட்டுகிறார்? சம பங்காளர்களாக கணவன் மனைவி எப்படி ஒருவரையொருவர் நடத்த வேண்டும்? இந்த வசனங்களில் நீங்கள் என்ன செய்திகளைக் காண்கிறீர்கள்?

எபேசியர் 6:10–18

தீமைக்கு எதிராக நிற்க, தேவனின் சர்வாயுத வர்க்கம் எனக்கு உதவும்.

எபேசியர் 6:10–18 நீங்கள் வாசிக்கும்போது, அவன் செய்த விதமாக சர்வாயுத வர்க்கத்தின் ஒவ்வொரு பாகத்தையும் பவுல் ஏன் சொல்லியிருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளவும். “தேவனின் சர்வாயுத வர்க்கம்” உங்களை எதிலிருந்து பாதுகாக்கும்? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கவசத்தையும் மிக முழுமையாக அணிய நீங்கள் என்ன செய்யலாம்?

2 நேபி 1:23; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:15–18ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

எபேசியர் 1:10.இந்த வசனத்தைப்பற்றி கற்பிக்க, மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் ஒரு கயிற்றின் உதாரணத்தைப் பயன்படுத்தினார் (“Gather Together in One All Things in Christ” பார்க்கவும்). நீங்கள் மூப்பர் பெட்னாரின் செய்தியின் சில பகுதிகளைப் பகிரும்போது குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு கயிற்றைக் காண்பிப்பதையும், அதைப் பிடித்துப் பரிசோதிக்க அனுமதிப்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். தேவன் எப்படி எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்குள் கூட்டிச் சேர்க்கிறார்? இந்தக் கூடுகையால் நாம் எப்படி ஆசீர்வதிக்கப்படுகிறோம்?

எபேசியர் 2:4–10; 3:14–21இந்த வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ள தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவின் அன்பையும் இரக்கத்தையும் அவர்கள் உணர்ந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ள குடும்பத்தாரை அழைக்கவும்.

எபேசியர் 2:12–19.நீங்கள் வீட்டிலுள்ள தலையணைகள் அல்லது பிற பொருட்களைக் கொண்டு சுவர்களைக் கட்டி, பின்னர் அவற்றை அடித்துத் தள்ளி உங்கள் குடும்பம் மகிழலாம். புறஜாதிகளுக்கும் யூதர்களுக்கும் இடையிலான “சுவரை” பவுல் குறிப்பிடுகையில், இன்று எந்த வகையான சுவர்கள் மக்களைப் பிரிக்கின்றன? இயேசு கிறிஸ்து எப்படி இந்த சுவர்களை “இடித்தார்”? அவர் எவ்வாறு “[நம்மை] தேவனுடன் ஒப்புரவாக்குகிறார்”? (வசனம் 16).

எபேசியர் 6:10–18.வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டு தங்கள் சொந்த “தேவனின் சர்வாயுத வர்க்கத்தை” உங்கள் குடும்பம் செய்யலாம். காணொலி “The Armour of God” (ChurchofJesusChrist.org) குடும்ப உறுப்பினர்கள் இந்தக் கவசத்தைக் காட்சிப்படுத்த உதவலாம், மேலும் அவர்கள் “The Whole Armor of God” (Friend, June 2016, 24–25)ல் எளிய விளக்கங்களைக் காணலாம். சர்வாயுத வர்க்கத்தின் ஒவ்வொரு பாகமும் ஆவிக்குரிய விதமாக எவ்வாறு நம்மைப் பாதுகாக்கிறது? தினமும் “தேவனின் சர்வாயுத வர்க்கத்தை தரிக்க” (எபேசியர் 6:11) நாம் ஒருவருக்கொருவர் உதவ நாம் என்ன செய்ய முடியும்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Hope of Israel,” Hymns, no. 259.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

உங்கள் படிப்பை பரிசுத்த ஆவி வழிநடத்துவதாக. நீங்கள் முதலில் திட்டமிடாத ஒரு தலைப்பைப் படிக்க வழிநடத்தினாலும், ஒவ்வொரு நாளும் நீங்கள் கற்கவேண்டியவற்றை நோக்கி அவர் உங்களை வழிநடத்தும்போது பரிசுத்த ஆவியை உணர விழிப்புடனிருங்கள்.

படம்
புதிய ஏற்பாட்டு கால சர்வாயுத வர்க்கத்தில் மனிதன்

தேவனின் சர்வாயுத வர்க்கத்தை தரித்துக்கொள்வது ஆவிக்குரிய விதமாக நம்மை பாதுகாக்க முடியும்.

அச்சிடவும்