“அக்டோபர் 9–15. பிலிப்பியர்; கொலோசெயர்: ‘என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)
“அக்டோபர் 9–15. பிலிப்பியர்; கொலோசெயர்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023
அக்டோபர் 9–15
பிலிப்பியர்; கொலோசெயர்
“என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு”
புதிய ஏற்பாட்டை நீங்கள் வாசிக்கும்போது நீங்கள் பதிவுசெய்த ஆவிக்குரிய எண்ணங்களை எப்போது நீங்கள் கடைசி முறையாக வாசித்தீர்கள்? நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கிற உணர்த்துதல்களை மறுபரிசீலனை செய்வது உதவிகரமாயிருக்கக்கூடும்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
பவுல் சிறையிலிருந்தபோது பிலிப்பியருக்கும் கொலோசெயருக்கும் அவனுடைய நிருபங்களை அவன் எழுதினான். ஆனால் இந்த கடிதங்களில் சிறையில் உள்ள ஒருவரிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய தொனி இல்லை. துன்பங்கள் மற்றும், சோதனைகளைப்பற்றி பவுல் பேசுவதைவிட, சந்தோஷம், களிகூருதல் மற்றும் நன்றியறிதலைப்பற்றி அதிகமாக அவன் பேசினான்: “கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார், அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்” (பிலிப்பியர் 1:18) என அவன் சொன்னான். “சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தாலும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்” (கொலோசெயர் 2:5). நிச்சயமாக, பவுலுடைய கடினமான சூழ்நிலைகளில் “எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை” (பிலிப்பியர் 4:7), அவன் அனுபவித்தான், ஆனாலும் அது உண்மையாயிருந்தது. நம்முடைய சொந்த சோதனைகளில் இந்த இதே சமாதானத்தை நாம் உணரமுடிந்து, “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்க முடியும்” (பிலிப்பியர் 4:4). பவுல் செய்ததைப்போல, “நமக்கு மீட்பு உண்டாயிருக்கிற” (கொலோசெயர் 1:14) இயேசு கிறிஸ்துவின்மேல் முற்றிலுமாக நாம் சார்ந்திருக்க முடியும். “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப்பியர் 4:13; கொலோசெயர் 1:11ஐயும் பார்க்கவும்) என பவுல் சொன்னதைப்போல நம்மால் சொல்லமுடியும்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
பிலிப்பியர் 2:5–11; கொலோசெயர் 1:12–23
இயேசு கிறிஸ்துவில் என்னுடைய விசுவாசம் காணப்பட்டது.
தலைவர் ரசல் எம். நெல்சன், இயேசு கிறிஸ்துவைப்பற்றிய வசனங்களில் தனது வேதப் படிப்பை மையப்படுத்தியபோது, அது அவர்மீது தாக்கத்தை ஏற்படுத்தியதால், அவர் “வித்தியாசமான மனிதனாக” உணர்ந்ததாகக் கூறினார். (“Drawing the Power of Jesus Christ into Our Lives,” Liahona, May 2017, 39). நீங்கள் பிலிப்பியர் மற்றும் கொலோசெயரையும் படிக்கும்போது அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதைக் கருத்தில் கொள்ளுங்கள் (பிலிப்பியர் 2:5–11; கொலோசெயர் 1:12–23 குறிப்பாகப் பார்க்கவும்). இரட்சகரைக் குறித்து நீங்கள் என்ன அறிந்துகொள்ளுகிறீர்கள்? இந்த சத்தியங்கள் உங்களுக்கு எப்படி “வித்தியாசமான ஆணாக” அல்லது பெண்ணாக இருக்க உதவும்?
நாம் “[நம்முடைய] சொந்த இரட்சிப்பிற்காக” பிரயாசப்படுகிறோமா?
நமது சொந்த முயற்சிகளால் மட்டுமே நாம் பாதுகாக்கப்பட்டோம் என்ற கருத்தை ஆதரிக்க, “உங்களுடைய சொந்த இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்” (பிலிப்பியர் 2:12) என்ற சொற்றொடரை சில மக்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால், “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” (எபேசியர் 2:8) என்ற பவுலின் போதனையைப் புரிந்துகொள்ள இரட்சிப்புக்கு எந்த செயல்களும் தேவையில்லை என சிலர் கோருவதற்கு பயன்படுத்துகின்றனர். இயேசு கிறிஸ்துவின் கிருபை மற்றும் இரட்சிப்பைப் பெறும்படியாக தனிப்பட்ட முயற்சி இரண்டிற்குமான தேவையை, பவுலின் எழுத்துக்களையும் சேர்த்து வேதங்கள் தெளிவாகப் போதிக்கின்றன. நமது இரட்சிப்பிற்காக, பிரயாசப்படுகிற நமது முயற்சிகளிலும் “தேவனே செய்கையை உங்களில் உண்டாக்குகிறார்” (பிலிப்பியர் 2:13; பிலிப்பியர் 1:6; 2 நேபி 25:23; Bible Dictionary, “Grace”) ஐயும் பார்க்கவும்).
எல்லா தியாகத்திற்கும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷமே தகுதியாயிருக்கிறது.
ஒரு பரிசேயனைப்போல யூத சமுதாயத்தில் பவுல் கொண்டிருந்த ஒரு செல்வாக்கான இடத்தையும் சேர்த்து, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு அவன் மனமாறிபோது அவன் அதிகமானவற்றைக் கைவிட்டான். சுவிசேஷத்திற்காக தியாகங்களைச் செய்ய பவுல் விரும்பியதால் அவன் என்ன பயனடைந்தான் என்பதை பிலிப்பியர் 3:4–14,ல் தேடுங்கள். அவனுடைய தியாகங்களைப்பற்றி அவன் எவ்வாறு உணர்ந்தான்?
பின்னர் உங்களுடைய சொந்த சீஷத்துவத்தைக் கருத்தில் கொள்ளவும். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக நீங்கள் என்ன தியாகங்களைச் செய்தீர்கள்? நீங்கள் எதைப் பெற்றீர்கள்? இரட்சகரின் மிக அர்ப்பணிப்பான சீஷனாக மாற செய்யத் தேவையென நீங்கள் உணருகிற ஏதாவது கூடுதல் தியாகங்களிருக்கின்றனவா?
3 நேபி 9:19–20; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:2–5; Taylor G. Godoy, “One More Day,” Liahona, May 2018, 34–36ஐயும் பார்க்கவும்.
என்னுடைய சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாது கிறிஸ்துவில் நான் சந்தோஷத்தைக் காணமுடியும்.
தலைவர் ரசல் எம். நெல்சனால் வெளிப்படுத்தப்பட்ட ஒரு தெளிவான விளக்கமே பவுலின் வாழ்க்கை: “இயேசு கிறிஸ்துவிலும் அவருடைய சுவிசேஷத்திலும் நமது வாழ்க்கையின் கவனமிருக்கும்போது, நமது வாழ்க்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது அல்லது நடந்துகொண்டிருக்கவில்லை என்பதைப் பொருட்படுத்தாது நாம் சந்தோஷத்தை உணரமுடியும். அவரிலிருந்தும் அவராலுமே சந்தோஷம் வருகிறது” (“Joy and Spiritual Survival,” Liahona, Nov. 2016, 82)
பிலிப்பியரை, குறிப்பாக அதிகாரம் 4ஐ நீங்கள் வாசிக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் சந்தோஷத்தைக் காண உங்களுக்குதவக்கூடிய வாசகங்களைத் தேடவும். ஒரு சவாலான நேரத்தில் “தேவ சமாதானத்தை” நீங்கள் எப்போது அனுபவத்தீர்கள்? (வசனம் 7). கடினமான காரியங்களைச் செய்ய “கிறிஸ்துவினாலே” எப்போது நீங்கள் பெலனைக் கண்டீர்கள்? (வசனம் 13). எல்லா சூழ்நிலைகளிலும் திருப்தியாயிருப்பது முக்கியமானதென நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? (வசனம் 11). வசனம் 8லிலுள்ள பண்புகளை பயிற்சி செய்வது எவ்வாறு உங்களுடைய சூழ்நிலைகளில் சந்தோஷத்தைக் காண உங்களுக்குதவும்?
ஆல்மா33:23; டியட்டர் எப்.உக்டர்ப், “Grateful in Any Circumstances,” Liahona, May 2014, 70–77 பார்க்கவும்.
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி சீஷர்கள் வாழும்போது அவர்கள் அவரில் “புதியதாகுகிறார்கள்”.
“ஒரு புதிய மனிதனாக [அல்லது பெண்ணாக]” மாற இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் உங்களுக்கு உதவுகிறதாவென நீங்கள் எவ்வாறு சொல்ல முடியும்? கொலோசெயர் 3:1–17ஐ ஆய்வுசெய்து, “பழைய மனிதனின்” அணுகுமுறைகளை, பண்புகளை மற்றும் செயல்களைப்பற்றி பட்டியலிட்டு, “புதிய மனிதனின்” அணுகுமுறைகளை, பண்புகளை மற்றும் செயல்களைப்பற்றி மற்றொரு பட்டியலிடுவது கண்டுபிடிப்பதற்கான ஒரு வழி.
வருங்காலத்தில் மதிப்பாய்வு செய்யும்படியாக, நீங்கள் உங்கள் சிந்தனைகளை பதிவுசெய்து நீங்கள் எவ்வாறு முன்னேறிக் கொண்டிருக்கிறீர்களென சிந்தியுங்கள்.
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
பிலிப்பியர்.பிலிப்பியரில் அடிக்கடி மீண்டும் மீண்டும் வருகிற சந்தோஷம் அல்லது களிகூருதல் என்ற வார்த்தைகளை உங்கள் குடும்பத்தினர் கவனிக்கலாம். இந்த வார்த்தைகள் ஒன்றைக் கடந்து போகிற ஒவ்வொரு முறையும் எவ்வாறு சந்தோஷத்தைக் கண்டுபிடிப்பதென்பதைப்பற்றி பவுல் போதித்ததை நீங்கள் நிறுத்தி கலந்துரையாடலாம்.
-
பிலிப்பியர் 2:14–16.எவ்வாறு நாம் “உலகத்தில் சுடர்களைப்போல பிரகாசிக்கமுடியும்”?
-
பிலிப்பியர் 4:8.ஒருவேளை இந்த வசனத்திலுள்ள விளக்கங்களுக்கு பொருந்தக்கூடியதை “சிந்திக்க” காரியங்களை உங்கள் குடும்பத்தினர் அடையாளம் காணலாம் (விசுவாசப் பிரமாணங்கள் 1:13ஐயும் பார்க்கவும்). பவுலின் ஆலோசனையைப் பின்பற்றுவதால் எவ்வாறு உங்கள் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்?
-
கொலோசெயர் 1:23; 2:7ஒருவேளை ஒரு மரத்தைச் சுற்றி அமர்ந்துகொண்டு அல்லது ஒரு மரத்தின் படத்தைப் பார்த்துக்கொண்டு உங்கள் குடும்பம் இந்த வசனங்களை வாசிக்கலாம் (இந்தக் குறிப்பில் இணைந்திருக்கிற ஒன்றைப் போன்று). கிறிஸ்துவில் “ஸ்திரப்பட்டு” மற்றும் “வேரூன்றியிருத்தல்” என்றால் அர்த்தமென்ன? நமது ஆவிக்குரிய வேர்களை பெலப்படுத்த எவ்வாறு நாம் ஒருவருக்கொருவர் உதவமுடியும்?
-
கொலோசெயர் 2:2–3.சுவிசேஷத்தில் நீங்கள் காணும் “ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்கள்” ஆகியவற்றைக் குறிக்கும் “ஐஸ்வர்யங்களை” கொண்டு உங்கள் குடும்பம் “புதையல் பெட்டியை” நிரப்பி மகிழலாம்.
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Rejoice, the Lord Is King!,” Hymns, no. 66.