புதிய ஏற்பாடு 2023
அக்டோபர் 23–29. 1 மற்றும் 2 தீமோத்தேயு; தீத்து; பிலேமோன்: “விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு”


“அக்டோபர் 23–29. 1 மற்றும் 2 தீமோத்தேயு; தீத்து; பிலேமோன்: ‘விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“அக்டோபர் 23–29. 1 மற்றும் 2 தீமோத்தேயு; தீத்து; பிலேமோன்” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
முன்று பெண்கள் ஆலயத்திற்கு வெளியே நடந்துகொண்டிருத்தல்

அக்டோபர் 23–29

1 மற்றும் 2 தீமோத்தேயு; தீத்து; பிலேமோன்

“விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு”

மனதில் ஒன்று அல்லது அதிக கேள்விகளுடன் உங்களுடைய வேதப் படிப்பை அணுக சிலநேரங்களில் இது உதவியாயிருக்கும். நீங்கள் படிக்கும்போது பதில்களுக்காக உங்களை வழிநடத்த பரிசுத்த ஆவியை அழைத்து, நீங்கள் பெறுகிற எந்த உணர்த்துதலையும் பதிவு செய்யவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

தீமோத்தேயுவுக்கு, தீத்துவுக்கு, பிலேமோனுக்கு பவுல் எழுதிய நிருபங்களில் கர்த்தருடைய ஊழியக்காரரின் இருதயத்தின் ஒரு கண்ணோட்டம் நமக்கு கிடைக்கிறது. முழு சபைக்கும் பவுலின் பிற நிருபங்களைப் போலல்லாமல், தேவனுடைய பணியில் பவுலின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளான தனிநபர்களுக்காக இவைகள் எழுதப்பட்டவை, அவைகளை வாசித்தல் ஒரு உரையாடலில் அவைகளைக் கேட்பதைப் போன்றிருக்கிறது. தங்களுடைய சபை சேவையில், சபைகளின் இரண்டு தலைவர்களான தீமோத்தேயுவுக்கும் தீத்துவுக்கும் பவுல் ஊக்கமளித்ததை நாம் பார்க்கிறோம். சக பரிசுத்தவானை மன்னிக்கவும், சுவிசேஷத்தில் அவனை ஒரு சகோதரனாக நடத்தவும் அவனுடைய நண்பனான பிலேமோனை அவன் கெஞ்சிக்கேட்பதையும் நாம் பார்க்கிறோம். பவுலின் வார்த்தைகள் நமக்கு நேரடியாகக் கூறப்படவில்லை, ஒரு நாள் இவைகளை அநேக ஜனங்கள் வாசிப்பார்களென அவன் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கமாட்டான். இருந்தும், கிறிஸ்துவின் சேவையில் நம்முடைய தனிப்பட்ட ஊழியம் எதுவாயிருந்தாலும், இந்த நிருபங்களில் நமக்கான ஆலோசனைகளையும், ஊக்கமளித்தல்களையும் நாம் பார்க்கிறோம்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

தீமோத்தேயுவும், தீத்துவும் யார்?

பவுலின் ஊழியப் பயணங்கள் சிலவற்றில் அவனுடன் தீமோத்தேயுவும், தீத்துவும் ஊழியம் செய்தார்கள். இந்த சேவையில், அவர்கள் பவுலின் மரியாதையையும் நம்பிக்கையையும் சம்பாதித்தார்கள். பின்னர், எபேசுவில் ஒரு சபைத் தலைவராக தீமோத்தேயுவும், கிரேத்தாவில் ஒரு சபைத் தலைவராக தீத்துவும் அழைக்கப்பட்டார்கள். இந்த நிருபங்களில், சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல் மற்றும் ஆயர்களாக சேவை செய்ய மனிதர்களை அழைத்தலையும் சேர்த்து, அவர்களுடைய பொறுப்புகளைச் சார்ந்த அறிவுரையையும் ஊக்கத்தையும் தீமோத்தேயுவுக்கும் தீத்துவுக்கும் பவுல் கொடுத்தான்.

Bible Dictionary, “Pauline Epistles,”Timothy,” “Titus”ஐயும் பார்க்கவும்

படம்
இரண்டு ஊழியக்காரர்கள் ஒரு மனிதனுடன் பேசுதல்

“உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.” (1 தீமோத்தேயு 4:12).

1 தீமோத்தேயு 4:10–16

“விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு”

தீமோத்தேயு இளையவனாயிருந்தான், ஆனால் அவன் இளமையாயிருந்தபோதிலும், சபையின் ஒரு பெரிய தலைவராக அவனால் இருக்கமுடியும் என பவுல் அறிந்திருந்தான். 1 தீமோத்தேயு 4:10–16ல் என்ன ஆலோசனையை தீமோத்தேயுவுக்கு பவுல் கொடுத்தான்? இரட்சகரிடத்திலும் அவருடைய சுவிசேஷத்திற்கும் மற்றவர்களை நடத்த இந்த ஆலோசனை எவ்வாறு உங்களுக்கு உதவமுடியும்?

ஆல்மா 17:11 ஐயும் பார்க்கவும்.

2 தீமோத்தேயு

“தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.”

2 தீமோத்தேயு பவுல் எழுதிய கடைசி நிருபமாக நம்பப்படுகிறது மற்றும் பூமியில் அவனுடைய நேரம் குறைவாயிருந்ததை அவன் அறிந்திருந்தான் எனத் தோன்றுகிறது (2 தீமோத்தேயு 4:6–8 பார்க்கவும்). சீக்கிரத்திலே, அவனுக்கு நம்பிக்கையான வழிகாட்டியும் தலைவருமானவர் இல்லாமலிருக்கக்கூடும் என்பதை அறிந்திருந்ததில் தீமோத்தேயு எவ்வாறு உணர்ந்திருப்பான்? அவனை ஊக்குவிக்க பவுல் என்ன சொன்னான்? உங்கள் சொந்த சவால்கள் மற்றும் அச்சங்களை மனதில் வைத்து நீங்கள் படிக்கலாம். கர்த்தர் உங்களுக்காக என்ன நம்பிக்கையின் மற்றும் ஊக்குவிக்கும் செய்திகளை 2 தீமோத்தேயுல் வைத்திருக்கிறார்?

Kelly R. Johnson, “Enduring Power,” Liahona, Nov. 2020, 112–14 ஐயும் பார்க்கவும்.

2 தீமோத்தேயு 3

சுவிசேஷத்தின்படி வாழுதல், கடைசி நாட்களில் ஆவிக்குரிய அபாயங்களிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது.

பவுல் பேசின “கடைசி நாட்களில்” நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் மற்றும் “கொடிய காலங்கள்” வந்திருக்கின்றன (2 தீமோத்தேயு 3:1). 2 தீமோத்தேயு 3ஐ நீங்கள் வாசிக்கும்போது, குறிப்பிடப்பட்ட கடைசி நாட்களின் கொடுமைகளை எழுதுங்கள் (1 தீமோத்தேயு4:1–3 ஐயும் பார்க்கவும்):

உங்களைச் சுற்றியுள்ள அல்லது உங்கள் சொந்த வாழ்க்கையிலுள்ள இந்தக் கொடுமைகளின் எடுத்துக்காட்டுகளை உங்களால் சிந்திக்கமுடியுமா? வசனம் 6ல் விளக்கப்பட்டிருக்கிற ஜனங்களைப்போல, இந்தக் கொடுமைகள் எவ்வாறு “[உங்களுடைய வீடுகளில்] நுழைந்து [உங்களை]வசப்படுத்திக்கொள்ளும்”? இந்த ஆவிக்குரிய அபாயங்களிலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளக்கூடிய என்ன ஆலோசனையை 2 தீமோத்தேயு 3ல் மற்றும் இந்த நிருபங்களில் வேறு எங்காவது நீங்கள் காண்கிறீர்களா? (உதாரணமாக, 1 தீமோத்தேயு 1:3–11; 2 தீமோத்தேயு 2:15–16; தீத்து 2:1–8 பார்க்கவும்)

பிலேமோன் யார்?

பவுலால் சுவிசேஷத்துக்கு மனமாற்றப்பட்ட பிலேமோன் ஒரு கிறிஸ்தவனாயிருந்தான். பிலேமோனுக்கு ஒனேசிமு என்ற அடிமை இருந்தான், அவன் ரோமுக்கு தப்பியோடினான். அங்கு ஒனேசிமு பவுலைச் சந்தித்து சுவிசேஷத்துக்கு மாறினான். ஒனேசிமுவை “இப்போது வேலைக்காரனாக அல்ல, ஊழியக்காரனுக்கு மேலாக, பிரியமான சகோதரனாக” ஏற்றுக்கொள்ளும்படி பிலேமோனை ஊக்குவிக்கும் கடிதத்துடன் ஒநேசிமுவை பவுல் திரும்பவும் பிலேமோனிடம் அனுப்பினான். (பிலேமோன் 1:16)

பிலேமோன்

இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் ஒருவரையொருவர் சகோதர சகோதரிகளைப் போல நடத்துகிறார்கள்.

பிலேமோனுக்கு பவுல் எழுதிய நிருபத்தை நீங்கள் படிக்கும்போது, மற்றவர்களுடனான உங்கள் உறவுகளுக்கு அவருடைய அறிவுரைகளை நீங்கள் எவ்வாறு கடைப்பிடிக்கலாம் என்று சிந்தியுங்கள். நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய சில கேள்விகள் கீழே உள்ளன:

  • வசனங்கள் 1–7: பரிசுத்தவான்களுக்கு இடையேயான உறவுகளைப்பற்றி “உடன் வேலையாள்” மற்றும் “உடன் போர்ச்சேவகன்” போன்ற வார்த்தைகள் உங்களுக்கு என்ன பரிந்துரைக்கின்றன? கிறிஸ்துவில் ஒரு சகோதரன் அல்லது சகோதரியால் நீங்கள் எப்போது “இளைப்பாறுதல்” அடைந்தீர்கள்?

  • வசனங்கள் 8–16: “கட்டப்பட்டு” மற்றும் “மன்றாடுதல்” என்றால் என்ன? பிலேமோனிடம் கட்டப்பட்டு என்பதைவிட மன்றாடுவதைவிட ஏன் பவுல் தேர்ந்தெடுத்தான்? ஒனேசிமுவை பிலேமோனிடம் திருப்பி அனுப்புவதன் மூலம் என்ன நிறைவேற்றப்படும் என்று பவுல் நம்பினான்?

  • வசனம் 16: கர்த்தருக்குள் … பிரியமான “ சகோதரன் [அல்லது சகோதரி]” என்பதன் அர்த்தம் என்ன? இந்த விதமாக நீங்கள் வரவேற்க வேண்டிய ஒருவரை உங்களுக்குத் தெரியுமா?

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

1 தீமோத்தேயு 2:9–10.“நற்கிரியைகளினாலும், [நம்மை] … அலங்கரிக்கவேண்டும்”என்பதன் அர்த்தம் என்ன? இந்த வாரத்தில் உங்கள் குடும்பம் செய்யக்கூடிய என்ன சில நல்ல வேலைகளுண்டு? “Have I Done Any Good?”போன்ற நல்லது செய்வது பற்றிய ஒரு பாடலை நீங்கள் ஒன்றாகப் பாடலாம் (Hymns, no. 223.

1 தீமோத்தேயு 4:12.“விசுவாசிகளுக்கு ஒரு மாதிரியாயிருக்க” உங்களுடைய குடும்ப அங்கத்தினர்களின் விருப்பத்திற்குதவ, அவர்களுக்கு எவ்வாறு ஜனங்கள் நல்ல மாதிரியாயிருக்கிறார்கள் என்பதை படங்களாக வரைய அவர்களை அழைக்க கருத்தில்கொள்ளவும். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற இந்த ஜனங்கள் எவ்வாறு நம்மை உணர்த்தினார்கள்? தலைவர் தாமஸ் எஸ் மான்சனின் செய்தி “Be an Example and a Light” (Liahona, Nov. 2015, 86–88)மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது எப்படி என்று சில யோசனைகளை கொடுக்க முடியும்.

1 தீமோத்தேயு 6:7–12.“பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது” என நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? பணம் அல்லது உடைமைகளில் நம் வாழ்க்கையை மையப்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன? நமக்கிருக்கிற ஆசீர்வாதங்களுடன் நாம் எவ்வாறு திருப்தியாயிருக்க முடியும்?

2 தீமோத்தேயு 3:14–17.இந்த வசனங்களின்படி வேதங்களைப்பற்றி அறிந்து அவைகளைப் படிக்கிறவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் வருகின்றன? குறிப்பாக, “பயனுள்ளதாக” இருப்பதாக அவர்கள் கண்ட வசனங்களை ஒருவேளை குடும்ப அங்கத்தினர்கள் பகிர்ந்துகொள்ளலாம்.

பிலேமோன் 1:17–21.ஒநேசிமுக்கு என்ன செய்ய பவுல் விருப்பமாயிருந்தான்? இரட்சகர் நமக்காகச் செய்த எது, இதற்கு எவ்வாறு ஒத்ததாயிருக்கிறது? (1 தீமோத்தேயு 2:5–6; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:3–5ஐயும் பார்க்கவும்). பவுல் மற்றும் இரட்சகரின் எடுத்துக்காட்டுகளை எவ்வாறு நாம் பின்பற்றமுடியும்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Shine On,” Children’s Songbook, 144.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

தெளிவான எளிதான கோட்பாட்டை போதிக்கவும். அதன் எளிமையில் சுவிசேஷம் அழகாயிருக்கிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 133:57 பார்க்கவும்). பாடங்களுடன் உங்கள் குடும்பத்தை மகிழ்விக்க முயற்சிப்பதைவிட, அதிக ஆயத்தப்படுதலும், தூய்மையான, எளிதான கோட்பாட்டைப் போதித்தலும் அவசியமாயிருக்கிறது (1 தீமோத்தேயு 1:3–7 பார்க்கவும்).

படம்
இரு பிள்ளைகள் வேதங்களைப் படித்துக்கொண்டிருத்தல்

“கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.” (2 தீமோத்தேயு 3:15).

அச்சிடவும்