புதிய ஏற்பாடு 2023
அக்டோபர் 16–22. 1 மற்றும் 2 தெசலோனிக்கேயர்: “உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்குங்கள்”


“அக்டோபர் 16–22. 1 மற்றும் 2 தெசலோனிக்கேயர்: ‘“உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்குங்கள்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“அக்டோபர் 16–22. 1 மற்றும் 2 தெசலோனிக்கேயர்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
ஊழியக்கார சகோதரிகள் ஒரு இளைஞனுடன் பேசுதல்

அக்டோபர் 16–22

1 மற்றும் 2 தெசலோனிக்கேயர்

“உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்குங்கள்”

ஆவியானவரிடமிருந்து நாம் பெறும் எண்ணங்களை நாம் பதிவுசெய்யாவிட்டால், நாம் அவற்றை மறக்கலாம். 1 மற்றும் 2 தெசலோனிக்கேயர் நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் எதை பதிவுசெய்ய பரிசுத்த ஆவி தூண்டுகிறது?

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

தெசலோனிக்கேயாவில் பவுலும் சீலாவும் “உலகத்தைக் கலக்குகிறவர்கள்” என குற்றஞ்சுமத்தப்பட்டார்கள் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:6). அவர்களது பிரசங்கம் யூதர்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட தலைவர்களுக்கு கோபமூட்டியது, இந்த தலைவர்கள் ஜனங்கள் கலகம் செய்யும்படி தூண்டிவிட்டனர் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:1–10 பார்க்கவும்). அதன் விளைவாக பவுலும் சீலாவும் தெசலோனிக்கேயாவை விட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். புதிய தெசலோனிக்கேய மனமாறியவர்களையும், அவர்கள் எதிர்கொள்கிற துன்புறுத்தல்களையும்பற்றி பவுல் கவலைப்பட்டான், ஆனால் அவர்களைச் சந்திக்க அவன் திரும்ப வர முடியவில்லை. “நான் இனிப்பொறுத்திருக்கக் கூடாமல், உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு அவனை அனுப்பினேன்” என அவன் எழுதினான். இதற்குப் பிரதியுத்தரமாக, பவுலின் உதவியாளனான தெசலோனிக்கேயாவில் சேவை செய்துகொண்டிருந்த தீமோத்தேயு, “உங்கள் விசுவாசத்தையும் அன்பையும்குறித்து, … எங்களுக்கு நற்செய்தி சொன்னான்” (1 தெசலோனிக்கேயர் 3:5–6). உண்மையாகவே, தெசலோனிக்கேயாவின் பரிசுத்தவான்கள், “விசுவாசிகள் யாவருக்கும்” மாதிரிகளாக அறியப்பட்டார்கள் (1 தெசலோனிக்கேயர் 1:7), அவர்களது விசுவாசத்தைப்பற்றிய செய்தி, தூரத்திலுள்ள பட்டணங்களுக்கெல்லாம் பரவியது. அவர்கள் மத்தியிலே அவனது பணி “வீணாகவில்லை” என பவுல் கேள்விப்பட்டபோது, அவனது மகிழ்ச்சியையும் மனநிம்மதியையும் கற்பனை செய்யுங்கள் (1 தெசலோனிக்கேயர் 2:1). ஆனால் கடந்த கால விசுவாசம் வருங்கால ஆவிக்குரிய வாழ்வுக்கு போதாது என பவுல் அறிவான், பரிசுத்தவான்கள் மத்தியில் கள்ளப் போதகர்கள் செல்வாக்கைப்பபற்றி கவலையடைந்தான் (2 தெசலோனிக்கேயர் 2:2–3 பார்க்கவும்). அவர்களுக்கும் நமக்கும் அவனது செய்தி, “[நமது] விசுவாசத்தின் குறைகளை நிறைவாக்கும்படிக்கு,” “அன்பில் இன்னும் அதிகமாய் பெருகவும்” தொடர்ந்திருப்பதாகும் (1 தெசலோனிக்கேயர் 3:10; 4:10 பார்க்கவும்).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

1 தெசலோனிக்கேயர் 1–2

கிறிஸ்துவின் சீஷர்கள் உண்மையுடனும் அன்புடனும் போதிக்கிறார்கள்.

1 தெசலோனிக்கேயரில் தேவ பிள்ளைகளுக்கு முழுமையாக தன்னை ஒப்புக்கொடுத்த, ஒருவரின் அக்கறையையும் மகிழ்ச்சியையும் பவுலின் வார்த்தைகள் தெரிவிக்கின்றன. விசேஷமாக 1 தெசலோனிக்கேயர் முதல் இரண்டு அதிகாரங்களில், ஒரு உண்மையான ஊழியன் சுவிசேஷத்தை எவ்வாறு போதிக்கிறான் என விவரிக்கிற வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் நீங்கள் காண்பீர்கள். உதாரணமாக, கர்த்தருக்கு சேவை செய்வதுபற்றி 1 தெசலோனிக்கேயர் 1:5–8; 2:1–13லிருந்து நீங்கள் என்ன கற்கிறீர்கள்?

தேவனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் சேவை செய்வதற்கான உங்கள் சொந்த வாய்ப்புகளைப்பற்றி சிந்தியுங்கள். உங்கள் சேவையை மேம்படுத்த உங்களைத் தூண்டும் இந்த அதிகாரங்களில் நீங்கள் எதைக் காண்கிறீர்கள்? “நானறிந்த காரியங்களில் நான் ஒரு மாதிரியாக இருக்கிறேனா?” போன்ற நீங்கள் காண்கிறவற்றின் அடிப்படையில் உங்களையே கேள்விகள் கேட்பதைக் கருத்தில் கொள்ளவும் (1 தெசலோனிக்கேயர் 1:7 பார்க்கவும்).

1 தெசலோனிக்கேயர் 3:7–13; 4:1–12

“அன்பில் அதிகரித்து பெருகுங்கள்.”

தெசலோனிக்கேய பரிசுத்தவான்களின் விசுவாசத்தில் பவுல் மகிழ்ச்சியடைந்தான் (1 தெசலோனிக்கேயர் 3:7–9 பார்க்கவும்). அவர்கள் அந்த விசுவாசத்தில் “அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு,” அவன் விரும்பினான் (1 தெசலோனிக்கேயர் 4:1). 1 தெசலோனிக்கேயர் 3:7–13; 4:1–12, நீங்கள் வாசிக்கும்போது, ஆவிக்குரிய விதமாக “அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு,” வழிகளைச் சிந்தியுங்கள் (1 தெசலோனிக்கேயர் 4:10). உதாரணமாக, பவுல் “பரிசுத்தம்” மற்றும் “சுத்திகரிக்கப்படுதல்” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதைக் கவனியுங்கள். இந்த வார்த்தைகளின் அர்த்தங்களைப்பற்றி பவுலின் எழுத்துக்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? அதிக பரிசுத்தமாகவும் சுத்திகரிக்கப்படவும் இரட்சகர் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Guide to the Scriptures, “Holy,” “Sanctification,” scriptures.ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்.

1 தெசலோனிக்கேயர் 4:16–18; 5:1–10; 2 தெசலோனிக்கேயர் 1:4–10

நான் விசுவாசத்துடனும் கவனமாயும் இருந்தால், இரட்சகரின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்பட்டிருப்பேன்.

1 தெசலோனிக்கேயர் 5:1–10ல், பூமிக்கு இயேசு எப்போது வருவார் என்கிற நேரத்தைப்பற்றிய முக்கிய சத்தியங்களை போதிக்க பவுல் பல உருவகங்களை பயன்படுத்தினான். இந்த உருவகங்களை நீங்கள் படிக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப்பற்றி உங்களுக்கு வருகிற எண்ணங்களை எழுதுவதை கருத்தில் கொள்ளவும்:

  • “இராத்திரியில் திருடன்“:

  • “குழந்தையுடன் இருக்கும் பெண்ணின் வேதனை”:

  • நீங்கள் காண்கிற பிற உருவகங்கள்:

1தெசலோனிக்கேயர் 4:16–18; 5:1–10; 2 தெசலோனிக்கேயர் 1:4–10லிருந்து என்ன கூடுதல் சத்தியங்களை நீங்கள் காண்கிறீர்கள்? இரட்சகரின் வருகைக்காக கவனித்து ஆயத்தப்பட என்ன செய்ய நீங்கள் தூண்டப்படுகிறீர்கள்?

D. Todd Christofferson, “Preparing for the Lord’s Return,” Liahona, May 2019, 81–84 ஐயும் பார்க்கவும்.

2 தெசலோனிக்கேயர் 2

ஒரு மதமாறுபாடு, அல்லது சத்தியத்திலிருந்து விலகுதல் இரண்டாம் வருகைக்கு முன்வருவதாக தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கிற துன்புறுத்தல்களுக்கு மத்தியில், அநேக தெசலோனிக்கேய பரிசுத்தவான்கள் இரட்சகரின் இரண்டாம் வருகை அருகிலிருக்க வேண்டும் என நம்பினர். ஆனால் இயேசு பூமிக்குத் திரும்புவதற்கு முன் ஒரு மதமாறுபாடு, ஒரு கலகம் அல்லது சத்தியத்திலிருந்து “விலகுதல்” இருக்கும் என பவுல் அறிந்தான் (2 தெசலோனிக்கேயர் 2:1–4 பார்க்கவும்) . பின்வரும் சிலவற்றை சிந்தித்து, மாபெரும் மதமாறுபாடு மற்றும் மறுஸ்தாபிதத்துக்கு உங்கள் பாராட்டின் புரிந்துகொள்ளுதலை நீங்கள் அதிகரிக்கலாம்.

  • மதமாறுபாட்டைப்பற்றி முன்னறிவித்த வசனங்கள்: ஏசாயா 24:5; ஆமோஸ் 8:11–12; மத்தேயு 24:4–14; 2 தீமோத்தேயு 4:3–4

  • பவுலின் காலத்தில் ஏற்கனவே மதமாறுபாடு தொடங்கி விட்டது என தெரிவிக்கிற வேத வசனங்கள்: அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:28–30; கலாத்தியர் 1:6–7; 1 தீமோத்தேயு 1:5–7

  • மதமாறுபாட்டைப்பற்றி கிறிஸ்தவ மறுமலர்ச்சியாளர்களின் கருத்துக்கள்:

    மார்ட்டின் லுத்தர்: “பரிசுத்த வேதங்களின் உறுதிப்பாட்டுடன் சபையை மாற்றுவதை விட நான் எதையும் நாடவில்லை. … அதைப் பாதுகாத்திருக்க வேண்டியவர்களின் மத்தியில், கிறிஸ்தவம் இருக்கவில்லை என மட்டும் நான் சொல்கிறேன்” (in E. G. Schweibert, Luther and His Times: The Reformation from a New Perspective [1950], 590).

    ரோஜர் வில்லியம்ஸ்: “மதமாறுபாடு … புதிதாக சபைகளை ஏற்படுத்த புதிய அப்போஸ்தலர்களை கிறிஸ்து அனுப்பும் வரை அந்த மாறுபாட்டிலிருந்து மீளுதல் இல்லாதிருக்கும்படியாக அனைத்தையும் இதுவரைக்கும் மதமாறுபாடு கெடுத்து விட்டது“ (in Philip Schaff, The Creeds of Christendom [1877], 851).

2 நேபி 28; Gospel Topics, “Apostasy,” topics.ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

1 தெசலோனிக்கேயர் 3:9–13.பவுல் தன் நண்பர்களைப்பற்றி கொண்டிருந்த உணர்வுகளைப்பற்றிய எது உங்களை உணர்த்துகிறது? நாம் எவ்வாறு “ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்ய முடியும்” ? (வசனம் 12).

1 தெசலோனிக்கேயர் 4:13–18.உயிர்த்தெழுதல்பற்றி இந்த வசனங்களில் எந்த சொற்றொடர்கள் உங்களுக்கு ஆறுதலளிக்கின்றன?

1 தெசலோனிக்கேயர் 5:14–25.1 தெசலோனிக்கேயர் 5:14–25லிலுள்ள பவுலின் ஆலோசனையைப் பரிசீலித்து, உங்கள் குடும்பம் கவனிக்க வேண்டிய சொற்றொடரை கண்டுபிடிக்க ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரையும் அழைக்கவும். நினைவூட்டலாக உங்கள் வீட்டில் இந்த சொற்றொடர்களைக் காட்சிப்படுத்த ஆக்கப்பூர்வமான வழிகளைக் கண்டறியவும். உதாரணமாக, ஒவ்வொரு நபரும் அவர் அல்லது அவள் தேர்ந்தெடுத்த சொற்றொடரை விளக்கும் அல்லது வலுப்படுத்தும் படங்களை கண்டுபிடிக்கலாம் அல்லது வரையலாம்.

2 தெசலோனிக்கேயர் 3:13.சீஷத்துவத்தின் தேவைகளால் ஒருவேளை மேற்கொள்ளப்பட்டு, “நன்மை செய்ய” அலுப்படைவதாக நாம் எப்போதாவது உணர்ந்திருக்கிறோமா? இவ்விதமாக நாம் உணரும்போது, நமக்கு எது உதவுகிறது? (கலாத்தியர் 6:9; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:33 பார்க்கவும்.) இது நடக்கும்போது ஒருவருக்கொருவர் எப்படி ஆதரவளிக்கலாம்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I’m Trying to Be like Jesus,” Children’s Songbook, 78–79.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

தினமும் வெளிப்படுத்தலை நாடுங்கள். “வெளிப்படுத்தல் அடிக்கடி, ஒரே முறையாக அல்ல, ‘வரிவரியாக’ வருகிறது (2 நேபி 28:30). [சுவிசேஷப் படிப்பை] நேரம் கிடைத்தால் படிக்கும் ஒன்றாக நினைக்காதீர்கள், ஆனால் நீங்கள் எப்போதும் செய்யும் ஒன்றாக ஆக்குங்கள்” (Teaching in the Savior’s Way, 12).

படம்
மேகத்துக்குள் கிறிஸ்து

உயிர்த்தெழுந்த கிறிஸ்து–ராபர்ட் டி. பாரட்

அச்சிடவும்