புதிய ஏற்பாடு 2023
அக்டோபர் 30–நவம்பர் 5. எபிரெயர் 1–6: “இயேசு கிறிஸ்து, ‘நித்திய இரட்சிப்புக்கு காரணர்’”


“அக்டோபர் 30–நவம்பர் 5. எபிரெயர் 1–6: ‘இயேசு கிறிஸ்து, “நித்திய இரட்சிப்புக்கு காரணர்,”’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“அக்டோபர் 30–நவம்பர் 5. எபிரெயர் 1–6,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

கிறிஸ்து ஒரு சிறுமியுடன் நின்றிருத்தல்

கிலேயாத்தின் தைலம்–ஆனி ஹென்றி

அக்டோபர்30–நவம்பர் 5

எபிரெயர் 1–6

இயேசு கிறிஸ்து, “நித்திய இரட்சிப்புக்கு காரணர்”

ஆவிக்குரிய எண்ணங்களை நீங்கள் பதிவுசெய்தல், நீங்கள் என்ன போதிக்க விரும்புகிறீர்கள் என பரிசுத்த ஆவியானவர் அடையாளம் காண உங்களுக்கு உதவும். உங்கள் எண்ணங்களின்படி செயல்படுதல் அந்த எண்ணங்கள் உண்மை என்ற உங்கள் விசுவாசத்தைக் காட்டுகிறது.

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளும்படியாக, அது கெட்டபழக்கங்களாக இருந்தாலும், தவறான நம்பிக்கைகளாக இருந்தாலும், ஆரோக்கியமற்ற உறவுகளாயிருந்தாலும் அல்லது வேறு எதுவானாலும் நாமனைவரும் ஏதாவதொன்றை விட வேண்டும். ஆரம்பகால கிறிஸ்தவ சபையில் உள்ள புறஜாதிகளுக்கு, மதமாற்றம் என்பது பெரும்பாலும் தவறான கடவுள்களைக் கைவிடுவதாகும். இருப்பினும், அதிக கஷ்டமானதாக இல்லாவிட்டாலும், சிறிது அதிக குழப்பமுடையதாக எபிரெயருக்கு (யூதருக்கு), மனமாற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. என்னவாயினும் அவர்களது பரம்பரை நம்பிக்கைகளும் பாரம்பரியங்களும் மெய்யான தேவனை ஆராதிப்பதிலும், அவரது தீர்க்கதரிசிகளின் போதனைகளிலும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே வேறூன்றியிருக்கிறது. ஆயினும் மோசேயின் நியாயப்பிரமாணம் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியிருக்கிறது, விசுவாசிகளுக்கு ஒரு உயர்வான நியாயப்பிரமாணம் இப்போது தரமாக ஆனது என அப்போஸ்தலர்கள் போதித்தனர். கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வது எபிரெயர்கள் தங்கள் முந்தய நம்பிக்கைகளையும் வரலாற்றையும் விட்டு விட வேண்டும் என்பதாகுமா? எபிரெயரின் நிருபம் மோசேயின் நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசிகள், மற்றும் நியமங்கள் அனைத்தும் முக்கியம், ஆனால் இயேசு கிறிஸ்து உயர்ந்தவர் என போதித்து, அப்படிப்பட்ட கேள்விகளை முடிக்க விழைகிறது.(எபிரெயர் 1:1–4; 3:1–6; 7:23–28பார்க்கவும்). உண்மையாகவே, இவை யாவும், கிறிஸ்துவை தேவ குமாரன் எனவும், யூதர்கள் காத்துக்கொண்டிருந்த வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மேசியா எனவும் சுட்டிக் காட்டி சாட்சியளிக்கின்றன.

அந்த ஆரம்ப நாட்களிலும் இன்றும் மதமாற்றம் என்பது இயேசு கிறிஸ்துவை நமது வழிபாட்டின் மையமாகவும், நம் வாழ்வின் மையமாகவும் மாற்றுவதாகும். சத்தியத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்வதும், அவரிடமிருந்து நம்மைத் திசைதிருப்புவதை விட்டுவிடுவதும் ஆகும், ஏனென்றால் அவர் “அவருக்குக் கீழ்ப்படிகிற அனைவருக்கும் நித்திய இரட்சிப்பின் காரணர்” (எபிரெயர் 5:9).

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

எபிரெயரின் நிருபத்தை எழுதியது யார்?

எபிரெயருக்கு நிருபத்தை பவுல் எழுதினானா என சில பண்டிதர்கள் கேள்வி எழுப்பினர். எபிரெயரின் எழுத்து அமைப்பு பவுலின் பிற கடிதங்களை விட ஒருவாறு வித்தியாசமானதாக இருக்கிறது, மற்றும் அந்த உரையின் முற்கால பிரதிகள் ஆசிரியர் பெயரை குறிப்பிடவில்லை. எனினும் எபிரெயரில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பவுலின் பிற போதனைகளை ஒத்திருப்பதால், கிறிஸ்தவ பாரம்பரியங்களை பாதுகாக்க பிற்காலப் பரிசுத்தவான்கள் இந்த நிருபத்தை எழுத குறைந்தபட்சம் பவுலும் ஈடுபட்டிருக்கிறான் என பொதுவாக ஒப்புக்கொண்டார்கள்.

Bible Dictionary, “Pauline Epistles,” ஐயும் பார்க்கவும்.

எபிரெயர் 1–5

இயேசு கிறிஸ்து பரலோக பிதாவின் “வெளிப்படையான சாயல்.”

இயேசு கிறிஸ்துவை தேவ குமாரனாக ஏற்றுக் கொள்வதை அநேக யூதர்கள் கடினமாகக் கண்டார்கள். எபிரேயருக்கு எழுதிய நிருபம் அவரைப்பற்றி எவ்வாறு சாட்சியமளிக்கிறது என்பதைக் கவனியுங்கள். உதாரணமாக, எபிரெயரின் முதல் ஐந்து அதிகாரங்களை நீங்கள் வாசிக்கும்போது, குறிப்பிடப்பட்டுள்ளதாக நீங்கள் காண்கிற இயேசு கிறிஸ்துவின் பட்டங்களையும், பாத்திரங்களையும், தன்மைகளையும் கிரியைகளையும்பற்றிய பட்டியலை நீங்கள் தயாரிக்கலாம். இக்காரியங்கள் இரட்சகரைப்பற்றி என்ன போதிக்கின்றன? அவை பரலோக பிதாவைப்பற்றி உங்களுக்கு என்ன போதிக்கின்றன?

மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்டின் பின்வரும் வாசகம் இந்த அதிகாரங்களிலுள்ள போதனைகளைப்பற்றிய உங்கள் புரிந்துகொள்ளுதலுக்கு என்ன சேர்க்கிறது? “தேவனைப்பற்றிய மனிதனின் பார்வையை அதிகரிக்கவும், அவர்களை அவர் எப்போதும் நேசித்திருக்கிறது மற்றும் எப்போதும் நேசிக்கவிருப்பது போல தங்கள் பரலோக பிதாவை நேசிக்கும்படி அவர்களிடம் கெஞ்சவும் இயேசு வந்தார். … ஆகவே பசியுற்றோருக்கு உணவளிக்கவும், வியாதியஸ்தரை குணமாக்கவும், மாய்மாலத்தை கடிந்து, விசுவாசத்துக்காக கெஞ்சி, பிதாவிடத்துக்கு வழியை நமக்கு கிறிஸ்து காட்டிய வழி இதுவே” (“The Grandeur of God,” Liahona, Nov. 2003, 72).

எபிரெயர் 2:9–18; 4:12–16; 5:7–8

இயேசு கிறிஸ்து எல்லாவற்றையும் அனுபவித்தார், அதனால் நான் துன்பப்படுவதைப் புரிந்துகொண்டு எனக்கு உதவ முடியும்.

நீங்கள் “தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே வரும்படிக்கும்,” இரக்கத்தை நாடவும் முடியுமென நினைக்கிறீர்களா? ( எபிரெயர் 4:16). நமது பாவங்கள் மற்றும் பலவீனங்கள் இருந்தாலும் தேவன் நாம் அணுகக்கூடியவர், அவரது கிருபை அடையக்கூடியது என்பது எபிரெயருக்கு எழுதிய நிருபத்தின் ஒரு செய்தி. எபிரெயர் 2:9–18; 4:12–16; 5:7–8ல், உங்கள் அநித்திய சவால்களில் இயேசு கிறிஸ்து உங்களுக்கு உதவுவார் என்ற உங்கள் நம்பிக்கையை பெலப்படுத்துகிற எதை நீங்கள் காண்கிறீர்கள்? இரட்சகர் உங்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்பதைப்பற்றிய உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒரு குறிப்பிதழில் எழுதுவதை கருத்தில் கொள்ளவும்.

மோசியா 3:7–11; ஆல்மா 7:11–13; 34; Matthew S. Holland, “The Exquisite Gift of the Son,” Liahona, Nov. 2020, 45–47ஐயும் பார்க்கவும்.

எபிரெயர் 3:74:11

“[தங்கள்] இருதயங்களைக் கடினப்படுத்தாதவர்களுக்கு” தேவனுடைய ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.

பூர்வ கால இஸ்ரவேலரின் கதையை திரும்ப சொல்லி, அவநம்பிக்கையினிமித்தம் தேவ ஆசீர்வாதங்களை மறுத்து, அவர்களது முன்னோர் செய்த தவறை தவிர்க்க, யூதர்களை வலியுறுத்த பவுல் நம்பினான். (எண்ணாகமம் 14:1–12, 26–35ல் பவுலுக்கு பொருத்தமான கதையை நீங்கள் வாசிக்கலாம்.)

எபிரெயர் 3:74:11 உங்களுக்கு எப்படி பொருந்தும் என்பதைக் கருத்தில் கொள்ளவும். இதைச் செய்ய நீங்கள் இதுபோன்ற கேள்விகளைச் சிந்திக்கலாம்.

  • இஸ்ரவேலர் கர்த்தரை எவ்வாறு கோபமூட்டினார்கள்? (எபிரெயர் 3:8–11 பார்க்கவும்). கடின இருதயம் பெற்றிருப்பதன் விளைவுகள் யாவை?

  • என் இருதயம் கடினமாக நான் எப்போது அனுமதித்திருக்கிறேன்? நான் விசுவாசக்குறைச்சலினிமித்தம் நான் பெறாத, தேவன் கொடுக்க விரும்புகிற ஆசீர்வாதங்கள் ஏதாவதிருக்கிறதா?

  • மென்மையான நருங்குண்ட இருதயத்தை நாம் எவ்வாறு மேம்படுத்த முடியும்? (ஏத்தேர் 4:15; நீதிமொழிகள் 3:5–6; ஆல்மா 5:14–15 பார்க்கவும்).

1 நேபி 2:16; 15:6–11; யாக்கோபு 1:7–8; ஆல்மா 12:33–36; Neill F. Marriott, “Yielding Our Hearts to God,” Liahona, Nov. 2015, 30–32 ஐயும் பார்க்கவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

எபிரெயர் 1:8–9.அவர் நீதியை நேசிக்கிறார், அநீதியை வெறுக்கிறார் என எந்த வழிகளில் இயேசு காட்டியிருக்கிறார்? அநீதியான வாஞ்சைகள் நமக்கிருந்தால், அவற்றை மாற்ற நாம் என்ன செய்ய முடியும்?

எபிரெயர் 2:1–4.“நாம் கேட்ட” சுவிசேஷ சத்தியங்களைப் பற்றிப் பிடித்தல் என்றால் என்ன என உங்கள் குடும்பத்தினர் புரிந்துகொள்ள உதவக்கூடிய ஒரு பொருள்சார் பாடத்தை நீங்கள் நினைக்க முடிகிறதா? தூக்க கடினமான ஒரு பொருளுடன் இதை நீங்கள் விளக்கலாம். நமது சாட்சியை வைத்திருக்க நமது முயற்சிகள் இந்த பொருளை பிடித்து தாங்குவதுபோல நமது முயற்சிகள் எப்படி இருக்கின்றன? “நாம் கேட்ட காரியங்கள்” நம்மிடமிருந்து “நழுவிப்போகாதபடி” நாம் எப்படி உறுதி செய்ய முடியும்? (வசனம் 1).

எபிரெயர் 2:9–10.இரட்சிப்பின் அதிபதி என்ற சொற்றொடரை ஆராய, அதிபதி யாரென கலந்துரையாடுவதில் நீங்கள் தொடங்கலாம். இரட்சிப்பு என்றால் அர்த்தம் என்ன? நமக்கும் நமது இரட்சிப்புக்கும் அதிபதி போல இயேசு கிறிஸ்து எப்படியிருக்கிறார்?

எபிரெயர் 5:1–5.ஆசாரியத்துவம் தரித்திருக்க, தேவனால் அழைக்கப்படுவது என்றால் என்ன என்பதைப்பற்றி கலந்துரையாட இந்த வசனங்கள் உங்களுக்கு உதவ முடியும். அழைப்புகள் பெற்று நிறைவேற்றுவதைப்பற்றி இயேசு கிறிஸ்துவின் எடுத்துக்காட்டிலிருந்து நாம் என்ன கற்க முடியும்?

மோசே ஆரோனை நியமித்தல்

ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.(எபிரெயர் 5:4). மோசே ஊழியத்துக்கு ஆரோனை அழைத்தல்–ஹாரி ஆன்டர்சன்

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I Need Thee Every Hour,” Hymns, no. 98.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

வித்தியாசமான அணுகுமுறைகளை முயற்சி செய்யுங்கள். ஒரே விதமாக வேதங்களை எப்போதும் படிப்பதை விட பல்வேறு படிப்பு ஆலோசனைகளை கருத்தில் கொள்ளவும். சில ஆலோசனைகளுக்காக, இந்த புத்தகத்தின் ஆரம்பத்திலுள்ள “Ideas to Improve Your Personal Scripture Study” பார்க்கவும்.

இயேசு கிறிஸ்து

உலகுக்கு ஒளியேற்றுங்கள்–வால்ட்டர் ரானே