புதிய ஏற்பாடு 2023
நவம்பர் 6–12. எபிரெயர் 7–13: “நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியர் வரப்போகிறார்”


“நவம்பர் 6–12. எபிரெயர் 7–13: ‘நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியர் வரப்போகிறார்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“நவம்பர் 6–12. எபிரெயர் 7–13,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

மெல்கிசேதேக்கு, ஆபிராமுக்கு ஒரு ஆசீர்வாதத்தைக் கொடுத்தல்

மெல்கிசேதேக்கு, ஆபிராமை ஆசீர்வதித்தல்– வால்டர் ரானே கலைஞனின் பரிசு

நவம்பர் 6–12

எபிரெயர் 7–13

“நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியர் வரப்போகிறார்”

எபிரெயர் 7–13ஐ நீங்கள் வாசிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் மூலமாக நீங்கள் உணர்த்துதல்களைப் பெறலாம். அவைகளைப் பதிவுசெய்யும் வழிகளைக் கருத்தில்கொள்ளவும், உதாரணமாக, உங்கள் வேதங்களின் ஓரங்களில், அல்லது சுவிசேஷ நூலகத்தின் செயலியில் இந்தக் குறிப்பில் அவைகளை நீங்கள் பதிவுசெய்யமுடியும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

சிலநேரங்களில், தங்களுடைய நம்பிக்கையை அசைக்கமுடிகிற “நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும்” விசுவாசமுள்ள பரிசுத்தவான்களும்கூட துன்பப்பட்டார்கள் (எபிரெயர் 10:32–38 பார்க்கவும்). கிறிஸ்தவத்திற்கு மனமாறிய யூதர்கள் தங்களுடைய புதிய விசுவாசத்தினிமித்தம் துன்புறுத்தல்களை அனுபவித்ததை பவுல் அறிந்திருந்தான். தங்களுடைய சாட்சிகளுக்கு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருக்க அவர்களை ஊக்குவிக்க, தங்களுடைய சொந்த வரலாற்றிலிருந்து உண்மையுள்ள விசுவாசிகளின் நீண்டகால பாரம்பரியத்தை அவன் அவர்களுக்கு நினைவுபடுத்தினான்: ஆபேல், ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், சாராள், யோசேப்பு, மோசே—தேவனின் வாக்குத்தத்தங்கள் உண்மையானவை, காத்திருக்கத் தகுந்தவை என்பதற்கு “சாட்சிகளின் கூட்டம்” (எபிரெயர் 11; 12:1 பார்க்கவும்). இந்த பாரம்பரியம் உங்களுடையதும் கூட. “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை” (எபிரெயர் 12:2) நோக்கின அனைவராலும் இந்த விசுவாசத்தின் பாரம்பரியம் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. நம்மை “பின்வாங்கிப்போக” விரும்ப, சத்துரு முயற்சிக்கும்போதெல்லாம், பதிலாக “உண்மையுள்ள இருதயத்தோடு விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் நாம் சேரக்கடவோம்” (எபிரெயர் 10:22, 38) பூர்வகால பரிசுத்தவான்களைப் பொறுத்தவரை இயேசு கிறிஸ்து “நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராக வரப்போகிறார்” (எபிரெயர் 9:11)

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

எபிரெயர் 7

மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் நமக்கு இயேசு கிறிஸ்துவை சுட்டிக் காட்டுகிறது.

நூற்றாண்டுகளாக, ஆரோனிய ஆசாரியத்துவமென்றும் அறியப்பட்ட, லேவிய ஆசாரியத்துவத்தை யூதர்கள் கையாண்டு வந்தனர். ஆனால், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பூரணத்துவத்துடன், இன்னும் பெரிய ஆசீர்வாதங்களை வழங்குகிற உயர் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் வந்தது. எபிரெயர் 7லிருந்து மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? இந்த நிருபத்தின் நோக்கம்-எல்லா வசனங்களையும் போலவே-இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை வளர்ப்பதே என்பதை மனதில் வைத்து, அவரைப்பற்றி சாட்சியமளிக்கும் பகுதிகளை நீங்கள் கவனிக்கலாம்.

நீங்கள் கண்டுபிடிக்கக்கூடிய சத்தியங்களின் சில எடுத்துக்காட்டுக்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன:

மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்திலிருந்தும் “அதனோடு தொடர்புடைய நியமங்களிலிருந்தும்” என்ன ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்? (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:20). கிறிஸ்துவிடம் வர மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் உங்களுக்கு எப்படி உதவியது?

ஆல்மா 13:1–13; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:36–46; Gospel Topics, “Melchizedek Priesthood,” topics.ChurchofJesusChrist.org; Guide to the Scriptures, “Melchizedek,” scriptures.ChurchofJesusChrist.org; Russell M. Nelson, “Spiritual Treasures,” Liahona, Nov. 2019, 76–79; Dallin H. Oaks, “The Melchizedek Priesthood and the Keys,” Liahona, May 2020, 69–72 ஐயும் பார்க்கவும்.

எபிரெயர் 9; 10:1–22

பழங்கால மற்றும் தற்கால நியமங்கள் இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டுகிறது.

பவுல் விவரித்த பழங்கால ஆசரிப்புக்கூடாரம் மற்றும் நியமங்களுடன் இந்த நிருபத்தின் முற்கால எபிரேயு வாசகர்கள் மிகவும் பரிச்சயமுள்ளவர்களாயிருந்தார்கள். ஆனால், இந்த நியமங்களின் நோக்கம், இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண பலியை சுட்டிக்காட்டவே என்பதை சிலர் முழுமையாகக் கண்டுணரவில்லை.

வேதாகமத்தின் காலங்களில், பாவநிவர்த்தியின் நாள் என அழைக்கப்பட்ட, ஒரு வருடாந்தர விடுமுறை நாளில், எருசலேம் ஆலயத்தில் மிகப் பரிசுத்தமான இடத்திற்கு (அல்லது பரிசுத்தங்களின் பரிசுத்தம்) ஒரு பிரதான ஆசாரியர் பிரவேசித்து, இஸ்ரவேலின் பாவங்களுக்காக ஒரு ஆட்டை அல்லது ஆட்டுக்குட்டியை பலி கொடுத்தார்.

இந்த நியமங்களைப்பற்றிய பவுலின் விவரிப்பை நீங்கள் படிக்கும்போது, இரட்சகரின் பிராயச்சித்த ஊழியத்தை நீங்கள் நன்கு புரிந்துகொள்ள உதவும் அடையாளங்கள் மற்றும் போதனைகளைத் தேடுங்கள்.

இன்று நாம் பங்கேற்கும் நியமங்கள் பவுலின் காலத்தில் இருந்ததை விட வேறுபட்டவை, ஆனால் அவற்றின் நோக்கம் ஒன்றே. இன்றைய நியமங்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி உங்களுக்கு எவ்வாறு சாட்சியமளிக்கின்றன?

யூதர்களின் பழங்கால சடங்குகளையும் அடையாளங்களையும்பற்றி அதிகமாக அறிந்துகொள்ள, “The Tabernacle” மற்றும் “Sacrifice and Sacrament” காணொலிகளை (ChurchofJesusChrist.org) பார்க்கவும்.

எபிரெயர் 11

தேவனின் வாக்குத்தத்தங்களில் நம்பிக்கை வைத்தல் விசுவாசத்திற்கு அவசியமாயிருக்கிறது.

விசுவாசத்தை விளக்கும்படி ஒருவர் உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? விசுவாசம்பற்றிய இந்த விளக்கத்தைக் கொடுப்பதற்காக, சகோதரி ஆன் சி. பிங்ரி எபிரெயர் 11லிருந்து மொழி நடையை ஈர்த்தார்: “தொலைவில் காணப்படுகிற வாக்களிப்புகளை இணங்கச்செய்கிற ஆவிக்குரிய திறன், ஆனால் இந்த வாழ்க்கையில் அடையமுடியாததாக இருக்கலாம்” (“Seeing the Promises Afar Off,” ELiahona, Nov. 2003, 14).

எபிரெயர் 11லிலுள்ள ஆலோசனைகளை நீங்கள் சிந்திக்கும்போது விசுவாசத்தின் உங்களுடைய சொந்த விளக்கத்தை மேம்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும். இந்த அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனங்களின் எடுத்துக்காட்டுகள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்கு என்ன போதிக்கின்றன? (ஏத்தேர் 12:6–22 ஐயும் பார்க்கவும்.)

என்ன வாக்குறுதிகளை நீங்கள் “தொலைவில்” பார்க்கிறீர்கள்? நீங்கள் “அவர்களை வற்புறுத்தியுள்ளீர்கள், அவர்களைத் தழுவிக்கொண்டிருக்கிறீர்கள்” என்பதை எவ்வாறு உங்களால் கர்த்தருக்குக் காட்ட முடியும்? ( எபிரெயர் 11:13).

ஆல்மா 32:21, 26–43; Jeffrey R. Holland, “An High Priest of Good Things to Come,” Ensign, Nov. 1999, 36–38; Gospel Topics, “Faith in Jesus Christ,” topics.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

எபிரெயர் 10:32–36.சத்தியத்துடன் “ஒளியேற்றப்பட்டதாக” அவர்கள் உணர்ந்தபோது ஆவிக்குரிய அனுபவங்களை பகிர்ந்துகொள்ள குடும்ப அங்கத்தினர்களை நீங்கள் அழைக்கலாம். சோதனை அல்லது சந்தேகத்தின் நேரங்களில்,“[ நமது] தைரியத்தை விட்டுவிடாதிருக்க” இந்த அனுபவங்கள் நமக்கு எவ்வாறு உதவமுடியும்?

எபிரெயர் 11.எபிரெயர் 11ல் குறிப்பிடப்பட்ட விசுவாசமுள்ள எடுத்துக்காட்டுகளிலிருந்து உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் கற்றுக்கொள்ள உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் எவ்வாறு உதவமுடியும்? இந்த எடுத்துக்காட்டுக்களின் சில கதைகளை நடித்துக்காட்டுவது வேடிக்கையாயிருக்கக்கூடும். Old Testament Stories லுள்ள சில கதைகளை நீங்கள் மறுபரிசீலனை செய்யலாம். அல்லது, ஒருவேளை, முன்னோர்களையும், சபைத் தலைவர்களையும், உங்களுடைய சமுதாயத்திலுள்ள அங்கத்தினர்களையும் சேர்த்து, உங்களுக்குத் தெரிந்த விசுவாசமுள்ள பிற ஜனங்களின் எடுத்துக்காட்டுகளை உங்கள் குடும்பம் கலந்துரையாடலாம். “Faith” (Children’s Songbook, 96) போன்ற விசுவாசம்பற்றிய பாடல்களையும் நீங்கள் பாடலாம்.

எபிரெயர் 12:2.இந்த வசனத்தின்படி, சிலுவையில் ஏன் இயேசு வேதனையையும் பாடுகளையும் சகித்துக்கொள்ள சித்தமாயிருந்தார்? நமது சோதனைகளில் நாம் எவ்வாறு நிலைத்திருக்கமுடியுமென்பதைப்பற்றி இது நமக்கு எதைப் போதிக்கிறது? இந்த வசனத்தின்மேல் சில உதவிகரமான உள்ளுணர்வுகளை தலைவர் ரசல் எம். நெல்சன் அவருடைய செய்தியில், கொடுத்தார் “Joy and Spiritual Survival” (Liahona, Nov. 2016, 81–84).

எபிரெயர் 12:5–11.ஏன் கர்த்தர் நம்மை கடிந்துகொள்கிறார், சரிப்படுத்துகிறார்? கர்த்தர் தண்டனையைப் பார்க்கும் விதத்தைப்பற்றி இந்த வசனங்களில் நாம் என்ன கவனிக்கிறோம்? தண்டனையை நீங்கள் கொடுக்கிற அல்லது பெறுகிற வழியை இந்த வசனங்கள் எவ்வாறு பாதிக்கிறது?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Faith,” Children’s Songbook, 96.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

பரிசுத்த ஆவியை வரவேற்கவும் கோட்பாட்டைக் கற்றுக்கொள்ளவும் இசையை பயன்படுத்தவும். “பெரிய ஆவிக்குரியவற்றிற்கு நேராக [நம்மை] நகரச்செய்வதற்காக இசைக்கு அளவிடமுடியாத வல்லமைகளிருக்கின்றன”(“First Presidency Preface,” Hymns, x) என பிரதான தலைமை சொன்னார்கள். ஒருவேளை “True to the Faith” (Hymns, no. 254) போன்ற, ஒரு பாடல், விசுவாசத்தைப்பற்றிய எபிரெயர் 11லிருந்து ஒரு குடும்ப கலந்துரையாடலுக்கு துணை புரியும்.

பழங்கால எருசலேமின் மாதிரி

பூர்வகால ஆலயத்தின் மற்றும் அதன் நியமங்கள் மற்றும் அடையாளங்கள், இயேசு கிறிஸ்துவின் பாத்திரத்தைப்பற்றி போதிக்கின்றன.