புதிய ஏற்பாடு 2023
நவம்பர் 20–26. 1 மற்றும் 2 பேதுரு: “சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய் களிகூருங்கள்”


நவம்பர் 20–26. 1 மற்றும் 2 பேதுரு: ‘சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய் களிகூருங்கள்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“நவம்பர் 20–26. 1 மற்றும் 2 பேதுரு,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

ஆவி உலகத்தில் இயேசு கிறிஸ்து சுவிசேஷத்தைப் போதித்தல்

ஆவி உலகத்தில் கிறிஸ்து போதித்தல்–ராபர்ட் டி. பாரெட்

நவம்பர் 20–26

1 மற்றும் 2 பேதுரு

“சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய் களிகூருங்கள்”

பேதுருவின் நிருபங்களை, நீங்கள் வாசிக்கும்போது நீங்கள் உணர்த்துதல்களைப் பெறலாம். தேவன் உங்களுக்குப் போதிப்பவைகளை துல்லியமாக பிடித்துக்கொள்ளும்படியாக, நீங்கள் ”இன்னமும் ஆவிக்குள்ளிருக்கும்போது” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:80) இந்த உணர்த்துதல்களை பதிவுசெய்யவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

அவர் உயிர்த்தெழுந்ததற்கு பின்னர் விரைவிலேயே, பேதுருவுக்கு தொந்தரவாயிருந்திருக்கக்கூடிய ஒரு தீர்க்கதரிசனத்தை இரட்சகர் உரைத்தார். “இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்று” (யோவான் 21:18–19) பேதுருவின் விசுவாசத்திற்காக அவன் இரத்த சாட்சியாக மரிப்பான் என்று அவர் முன்னறிவித்தார். பல ஆண்டுகளுக்குப் பின்பு, அவனுடைய நிருபங்களை பேதுரு எழுதியபோது, இந்த தீர்க்கதரிசனமுரைக்கப்பட்ட இரத்த சாட்சி மரணம் சமீபத்திருக்கிறதென்பதை அவன் அறிந்திருந்தான்: ”நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்திருக்கிறேன்” (2 பேதுரு 1:14). இருப்பினும் பேதுருவின் வார்த்தைகள் பயம் அல்லது அவநம்பிக்கையால் நிரப்பப்படவில்லை. மாறாக, அவர்கள், “பலவிதமான சோதனைகளினாலே துக்கப்பட்டாலும்கூட”, “மிகவும் சந்தோஷப்பட” பரிசுத்தவான்களுக்கு அவன் போதித்தான். “[அவர்களுடைய] விசுவாசம் சோதிக்கப்படும்போது”, “இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அவர்களுக்கு புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகவும்” , [அவர்கள்] “ஆத்தும ரட்சிப்பை அடையவும்” நடத்துமென்பதை நினைவுகூர அவர்களுக்கு அவன் ஆலோசனையளித்தான் (1 பேதுரு 1:6–7, 9). பேதுருவின் விசுவாசம் அந்த ஆரம்பகால பரிசுத்தவான்களுக்கு ஆறுதலாக இருந்திருக்க வேண்டும், அது இன்றைய பரிசுத்தவான்களுக்கு ஊக்கமளிக்கிறது. “கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது [நாம்] களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.” (1 பேதுரு 4:13).

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

1 பேதுரு 1:3–9; 2:19–24; 3:14–17; 4:12–19

சோதனை மற்றும் பாடுகளின் நேரங்களில் நான் சந்தோஷத்தைக் காணமுடியும்.

கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்பட்ட காலத்திற்குப் பின்னர் ஒரு கிறிஸ்தவராக இருப்பதற்கு அது ஒரு எளிதான நேரம் அல்ல, பேதுருவின் முதல் நிருபம் அதை ஒப்புக்கொள்கிறது. முதல் நான்கு அதிகாரங்களில், கஷ்டங்களை விவரிக்கும் வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் நீங்கள் கவனிப்பீர்கள்: துக்கப்படுதல், சோதனைகள், உபத்திரவங்கள், பற்றியெரிகிற சோதனை, மற்றும் பாடுகள் (1 பேதுரு 1:6; 2:19; 4:12–13 பார்க்கவும்). ஆனால் மகிழ்ச்சியாகத் தோன்றும் வார்த்தைகளையும் நீங்கள் கவனிப்பீர்கள், நீங்கள் கண்டறிவதற்கான பட்டியலை நீங்கள் உருவாக்க விரும்பலாம். உதாரணமாக, 1 பேதுரு 1:3–9; 2:19–24; 3:14–17; 4:12–19,ஐ நீங்கள் வாசிக்கும்போது, கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும்கூட உங்களால் சந்தோஷத்தைக் காணக்கூடியதாக எது உங்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது?

தலைவர் ரசல் எம். நெல்சனின் செய்தியையும் நீங்கள் படிக்கலாம் “Joy and Spiritual Survival” (Liahona, Nov. 2016, 81–84) மற்றும் பேதுரு கற்பித்ததற்கும் தலைவர் நெல்சன் கற்பித்ததற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைத் தேடுங்கள். இரட்சிப்பின் திட்டம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதுபற்றி என்ன உள்ளது?

Ricardo P. Giménez, “Finding Refuge from the Storms of Life,” Liahona, May 2020, 101–3 ஐயும் பார்க்கவும்.

1 பேதுரு 3:18–20; 4:1–6

மரித்தவர்கள் நீதியாக நியாயந்தீர்க்கப்படும்படியாக அவர்களுக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.

ஒரு நாள், ஒவ்வொருவரும் நியாய விசாரணைக் கூண்டில் நின்று, “உயிரோடிருப்பவர்களுக்கும், மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்க” ஆயத்தமாயிருப்பவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள்” (1 பேதுரு 4:5). சுவிசேஷத்தைப் புரிந்துகொண்டு வாழ்வதற்கான வாய்ப்புகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும்போது, எல்லா மக்களையும் தேவன் எவ்வாறு நியாயமாக நியாயந்தீர்க்க முடியும்? இந்த கேள்விக்கு பதிலளிக்க, 1 பேதுரு 3:18–20; 4:6ல் பேதுரு கற்பித்த கோட்பாடு எவ்வாறு உதவுகிறதென கவனியுங்கள். தேவனுடைய நியாயத்திலும், நீதியிலும், உங்களுடைய விசுவாசத்தை எவ்வாறு இந்த வசனங்கள் பெலப்படுத்துகிறது?

இந்த கோட்பாட்டை மேலும் ஆராய, பேதுருவின் இந்த எழுத்துக்களை தலைவர் ஜோசப் எப். ஸ்மித் தியானித்தபோது அவர் பெற்ற வெளிப்பாடான, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138ஐ படிக்கவும். தலைவர் ஸ்மித் என்ன கூடுதல் சத்தியங்களைக் கற்றுக்கொண்டார்?

Gospel Topics, “Baptisms for the Dead,” topics.ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்.

2 பேதுரு 1:1–11

இயேசு கிறிஸ்துவின் வல்லமை மூலமாக என்னுடைய தெய்வீகத் தன்மையை என்னால் மேம்படுத்த முடியும்.

இயேசு கிறிஸ்துவைப் போலாகுதலும், அவருடைய பண்புகளை வளர்ப்பதுவும் சாத்தியமற்றது என நீங்கள் எப்போதாவது உணர்கிறீர்களா? கிறிஸ்துவைப் போன்ற பண்புகளை நம்மால் எவ்வாறு வளர்க்கமுடியுமென்பதைப்பற்றி இந்த ஊக்குவித்தலின் சிந்தனையை மூப்பர் ராபர்ட் டி. ஹேல்ஸ் வழங்கினார்: “இரட்சகரின் பண்புகள் … பின்னிப் பிணைந்த தன்மைகள், ஊடாடும் வழிகளில் வளர்கிற அவை ஒன்றோடு ஒன்று சேர்க்கப்பட்டவை. வேறு வார்த்தைகளிலெனில், மற்றவர்களிடத்தில் சென்று செல்வாக்கு ஏற்படுத்தாவிட்டால், கிறிஸ்துவைப் போன்ற தன்மை ஒன்றைக்கூட நம்மால் பெறமுடியாது. ஒரு தன்மை பெலனாகும்போது, அநேக அதிகமானவை பெலனடைகிறது” (“Becoming a Disciple of Our Lord Jesus Christ,” Liahona, May 2017, 46).

சிக்கலாக நெய்யப்பட்ட ஒரு நாடா

நாம் மேம்படுத்துகிற கிறிஸ்துவைப் போன்ற ஒவ்வொரு குணமும் ஆவிக்குரிய சீஷத்துவத்தின் நாடாவை நெய்ய நமக்குதவுகிறது.

2 பேதுரு 1:1–11 நீங்கள் வாசிக்கும்போது, இந்த வசனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள “தெய்வீக இயல்பின்” பண்புகளை சிந்தித்துப் பாருங்கள். உங்கள் அனுபவத்தில், மூப்பர் ஹேல்ஸ் விவரித்தபடி அவை எவ்வாறு “பின்னப்பட்டுள்ளன”? அவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு உருவாக்குகிறார்கள்? இந்த வசனங்களிலிருந்து கிறிஸ்துவைப் போன்றவர்களாக மாறுவதைப்பற்றி நீங்கள் வேறு என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

நீங்கள் உட்பட, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கும் “மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களை” நீங்கள் சிந்திக்கலாம் (2 பேதுரு 1:4). Elder David A. Bednar’s message “Exceeding Great and Precious Promises” (Liahona, Nov. 2017, 90–93) அந்த வாக்குறுதிகள் என்ன என்பதையும் அவற்றை எவ்வாறு பெறுவது என்பதையும் புரிந்து கொள்ள உங்களுக்கு உதவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

1 பேதுரு 2:5–10.உங்கள் குடும்பத்துடன் இந்த வசனங்களை நீங்கள் வாசிக்கும்போது, இரட்சகர் நமது “மூலைக்கல்லாயிருக்கிறார்” என்ற பேதுருவின் போதனைகளை குடும்ப அங்கத்தினர்கள் மனக்கண்ணில் பார்க்க கற்களைப் பயன்படுத்துவதைக் கருத்தில்கொள்ளவும். அவருடைய இராஜ்ஜியத்தைக் கட்ட பயன்படுத்திக்கொண்டிருக்கும் “ஜீவனுள்ள கற்களைப்” போல் நாம் எவ்வாறு இருக்கிறோம்? இரட்சகரைப்பற்றியும் அவருடைய இராஜ்ஜியத்தில் நம்முடைய பாத்திரத்தைப்பற்றியும் பேதுருவிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? உங்கள் குடும்பத்திற்கு பேதுருவின் செய்தி என்ன?

1 பேதுரு 3:8–17.நமது விசுவாசத்தைப்பற்றி நம்மிடம் கேட்கிறவர்களுக்கு “பதிலைக் கொடுக்க எப்போதுமே நாம் எவ்வாறு ஆயத்தமாயிருக்கலாம்”? சுவிசேஷத்தைப்பற்றிய ஒரு கேள்வியுடன் ஒருவர் அவர்களை அணுகுகிற நடிக்கும் சூழ்நிலைகளை உங்கள் குடும்பம் ரசிக்கக்கூடும்.

1 பேதுரு 3:18–20; 4:6உங்கள் முன்னோர்களுடன் இணைந்திருப்பதை உணர உங்கள் குடும்பத்தினர் என்ன செய்யலாம்? ஒருவேளை நீங்கள் மரித்த மூதாதையர்களின் பிறந்தநாளை அவர்களுக்குப் பிடித்த உணவைத் தயாரித்து, படங்களைப் பார்த்து அல்லது அவர்களின் வாழ்க்கையிலிருந்து கதைகளைச் சொல்லிக் கொண்டாடலாம். சாத்தியமானால், இந்த முன்னோர், ஆலயத்தில் நியமங்களைப் பெறுவதற்கு நீங்கள் திட்டமிடலாம் (உதவிக்கு, FamilySearch.org பார்க்கவும்).

2 பேதுரு 1:16–21.இந்த வசனங்களில், மறுரூப மலையில் அவனுடைய அனுபவத்தை பேதுரு பரிசுத்தவான்களுக்கு நினைவுபடுத்தினான் (மத்தேயு 17:1–9 ஐயும் பார்க்கவும்). தீர்க்கதரிசிகளின் போதனைகளைப்பற்றி இந்த வசனங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:38 ஐயும் பார்க்கவும்). இன்று நம்முடைய ஜீவிக்கிற தீர்க்கதரிசியைப் பின்பற்ற நமக்கு எது தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Family History—I Am Doing It,” Children’s Songbook, 94.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

“எப்போதும் ஆயத்தமாயிருங்கள்.” முறைசாரா போதித்தலின் நேரங்கள் விரைவாக வீட்டில் வந்து போகலாம், ஆகவே, அவை எழும்போது அவற்றை சாதகமாக பயன்படுத்துவது முக்கியம். போதிப்பதற்கான நேரங்கள் எழும்போது, உங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு சுவிசேஷ சத்தியங்களைப் போதிக்கவும், “உங்களிலிருக்கிற நம்பிக்கையை” பகிர்ந்துகொள்ளவும் “எப்பொழுதும் ஆயத்தமாயிருக்க” (1 பேதுரு 3:15) நம்மால் எவ்வாறு முயற்சிக்க முடியும்? (Teaching in the Savior’s Way16 பார்க்கவும்.)

ஒரு ஜனக்கூட்டத்திற்கு பேதுரு போதித்தல்

அதிகமான துன்புறுத்தலையும் எதிர்ப்பையும் பேதுரு சந்தித்திருந்தாலும்கூட, கிறிஸ்துவைக் குறித்த சாட்சியில் அவன் உறுதியாய் நிலைத்திருந்தான்.