புதிய ஏற்பாடு 2023
நவம்பர் 27–டிசம்பர் 3. 1–3 யோவான்; யூதா: “தேவன் அன்பாயிருக்கிறார்”


“நவம்பர் 27–டிசம்பர் 3. 1–3 யோவான்; யூதா: ‘தேவன் அன்பாயிருக்கிறார்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“நவம்பர் 27–டிசம்பர் 3. 1–3 யோவான்; யூதா” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
புன்னகைக்கும் ஒரு குழந்தையுடன் அமர்ந்திருக்கும்போது இயேசு கிறிஸ்து

பரிபூரண அன்பு–டெல் பார்சன்

நவம்பர் 27–டிசம்பர் 3

1–3 யோவான் ; யூதா

“தேவன் அன்பாயிருக்கிறார்”

யோவான் மற்றும் யூதாவின் நிருபங்களை நீங்கள் வாசிக்கும்போது தேவனிடத்தில் உங்கள் அன்பை நீங்கள் எவ்வாறு காட்டமுடியுமென்பதைப்பற்றிய உணர்த்துதலை நாடவும். இந்த எண்ணங்களைப் பதிவுசெய்து அவைகளின்படி செயல்படவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்.

யோவானும் யூதாவும் தங்கள் நிருபங்களை எழுதியபோது, சீர்கெட்ட கோட்பாடு பல பரிசுத்தவான்களை மதமாறுபாட்டுக்கு இட்டுச் சென்றது. இயேசு கிறிஸ்து உண்மையிலேயே “மாம்சத்தில்” காணப்பட்டாரா என்றும் சில பொய்யான போதகர்கள் கேள்வி கேட்டனர் (உதாரணமாக, 1 யோவான் 4:1–3; 2 யோவான் 1:7 பார்க்கவும்). அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சபைத் தலைவர் என்ன செய்ய முடியும்? அப்போஸ்தலனாகிய யோவான் இரட்சகரைப்பற்றிய தனது தனிப்பட்ட சாட்சியைப் பகிர்ந்துகொண்டு பதிலளித்தான்: “ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினால் கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற, ஜீவ வார்த்தையைக் குறித்து நாங்கள் கொடுக்கிற, இதுவே சாட்சி” (ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, 1 யோவான் 1:1 [1 யோவான் 1:1, அடிக்குறிப்பு a]) பின்னர் யோவான் அன்பைப்பற்றி கற்பித்தான்: நம்மீதுள்ள தேவனின் அன்பு மற்றும் அவரிடத்திலும் அவருடைய பிள்ளைகளிடத்திலும் நாம் வைத்திருக்கவேண்டிய அன்பு. எல்லாவற்றிற்கும் மேலாக, யோவான் அதற்கும் சாட்சியாக இருந்தான். அவன் இரட்சகரின் அன்பை தனிப்பட்ட முறையில் அனுபவித்திருந்தான் (யோவான் 13:23; 20:2 பார்க்கவும்) அதே அன்பை பரிசுத்தவான்கள் உணர வேண்டும் என்று அவன் விரும்பினான். இயேசு கிறிஸ்து மீதான நம்பிக்கை கேள்விக்குறியாகி, பொய்யான போதனைகள் பெருகும்போது, அன்புபற்றிய யோவானின் சாட்சியும் போதனைகளும் இன்று தேவைப்படுகின்றன. யோவானின் நிருபங்களைப் படிப்பது இன்றைய கஷ்டங்களை தைரியமாக எதிர்கொள்ள உதவும், ஏனெனில் “அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்.” (1 யோவான் 4:18).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

1 யோவான்; 2 யோவான்

தேவன் ஒளியாயிருக்கிறார், தேவன் அன்பாயிருக்கிறார்.

தேவனை விவரிக்க ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியதிருந்தால், அவைகள் எவையாயிருக்கும்? யோவான் தனது நிருபங்களில், “ஒளி” மற்றும் “அன்பு” என்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தினான்.(உதாரணமாக, 1 யோவான் 1:5; 2:8–11; 3:16, 23–24; 4:7–21). யோவானின் முதல் இரண்டு நிருபங்களை நீங்கள் படிக்கும்போது, இரட்சகரின் ஒளி மற்றும் அன்புடன் யோவான் பெற்ற அனுபவங்களைப்பற்றி சிந்தியுங்கள். உதாரணமாக, யோவான் 3:16–17; 12:35–36, 46; 15:9–14; 19:25–27ல் இயேசுவின் போதனைகளிலிருந்து யோவான் என்ன கற்றுக்கொண்டான் என்பதைக் கருத்தில் கொள்ளவும் . இந்த போதனைகளுக்கும் தேவனின் ஒளி மற்றும் அன்பைப்பற்றி 1 யோவான் போதிக்கும் காரியங்களுக்கும் இடையே ஏதேனும் ஒற்றுமைகள் இருப்பதை நீங்கள் காண்கிறீர்களா? தேவன் ஒளியாயும் அன்பாயுமிருக்கிறார் என்பதை எந்த தனிப்பட்ட அனுபவங்கள் உங்களுக்குப் போதித்தன?

1 யோவான் 2–4; 2 யோவான்

“நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்.”

யோவானின் நிருபங்கள் முழுவதிலும் “உடனிருத்தல்” மற்றும் “நிலைத்திருத்தல்” போன்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் வருவதை நீங்கள் காணலாம். குறிப்பாக 1 யோவான் 2–4 மற்றும் 2 யோவான் நீங்கள் படிக்கும்போது இந்த வார்த்தைகளைத் தேடுங்கள். தேவன் மற்றும் அவரது கோட்பாட்டில் “உடனிருத்தல்”மற்றும் “நிலைத்திருத்தல்”என்பதன் அர்த்தம் என்ன என நினைக்கிறீர்கள்? (2 யோவான் 1:9 பார்க்கவும்). தேவன் “உடனிருத்தல்” அல்லது “நிலைத்திருத்தல்” செய்வதன் அர்த்தம் என்ன என நினைக்கிறீர்கள்?

1 யோவான் 2:243:3

நான் இயேசு கிறிஸ்துவைப் போலாக முடியும்.

கிறிஸ்துவைப் போலாகும் இலக்கு எப்போதாவது மிக உயர்ந்ததாக உங்களுக்கு தோன்றியதா? யோவானின் ஊக்கமளிக்கும் ஆலோசனையை கருத்தில் கொள்ளவும்: “பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது … தைரியமுள்ளவர்களாயிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்.” (1 யோவான் 2:28; 3:2). இயேசு கிறிஸ்துவின் ஒரு சீஷனாக உங்களுக்கு தைரியத்தையும் ஆறுதலையும் கொடுக்கிற எதை 1 யோவான் 2:243:3ல் நீங்கள் காண்கிறீர்கள்? யோவானின் நிருபங்களை நீங்கள் படிக்கும்போது, அதிகமாய் கிறிஸ்துவைப்போலாக உங்களுடைய முயற்சிகளில் உங்களுக்கு உதவக்கூடிய பிற கொள்கைகளை அல்லது ஆலோசனையைத் தேடவும்.

மரோனி 7:48; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:67–68; Scott D. Whiting, “Becoming like Him,” Liahona, Nov. 2020, 12–14 ஐயும் பார்க்கவும்.

1 யோவான் 4:12

“தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லையா”?

ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, 1 யோவான் 4:12 “தேவனை எந்த மனிதனும் எந்தக் காலத்திலும் பார்த்ததில்லை.விசுவாசிப்பவர்களைத் தவிர” (1 யோவான் 4:12, அடிக்குறிப்பு a; யோவான் 6:46; 3 யோவான் 1:11ஐயும் பார்க்கவும்) . யோவானையும் சேர்த்து, உண்மையுள்ள தனிப்பட்டவர்களுக்கு பிதாவாகிய தேவன் தம்மை வெளிப்படுத்தியபோதுள்ள பல நிகழ்வுகளை வேதங்கள் பதித்திருக்கிறது (வெளிப்படுத்தின விசேஷம் 4 பார்க்கவும்; அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:55–56; 1 நேபி 1:8; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:23; ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:16–17 ஐயும் பார்க்கவும்).

1 யோவான் 5

இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை நான் வைக்கும்போது, என்னால் உலகத்தை ஜெயிக்கமுடியும்.

1 யோவான் 5, நீங்கள் வாசிக்கும்போது உலகத்தை ஜெயிக்கவும் நித்திய ஜீவனை அடையவும் நாம் என்ன செய்யவேண்டும் என்பதைத் தேடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் எது உலகத்தை ஜெயிப்பது போலிருக்கக்கூடும்? மூப்பர் நீல் எல்.ஆண்டர்சென்னின் செய்தியில் பதில்களையும் உள்ளுணர்வுகளையும்கூட நீங்கள் காணமுடியும்“Overcoming the World” (Liahona, May 2017, 58–62).

யூதா 1

“உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை [உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்].”

தேவனுக்கும் அவருடைய பணிக்கும் எதிராகப் போராடுபவர்களைப்பற்றி யூதா 1:10–19 உங்களுக்கு என்ன கற்பிக்கிறது? 20–25 வசனங்களில் இருந்து நீங்கள் இயேசு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை எப்படி பலமாக வைத்திருப்பதுபற்றி என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

1 யோவான் 2:8–11.யோவானின் போதனைகளை சிந்திக்க உங்கள் குடும்பத்திற்குதவ, ஒரு இருட்டான அறையில் ஒன்றுகூடி, இருளில் நடப்பதற்கும் ஒளியில் நடப்பதற்கும் இடையிலுள்ள வேறுபாட்டை குடும்ப அங்கத்தினர்கள் அனுபவிக்கட்டும். இருளில் நடக்கவும் தடுமாறவும் எவ்வாறு வெறுப்பு நமக்குக் காரணமாயிருக்கிறது? ஒருவருக்கொருவரை நேசிப்பது எவ்வாறு நமது வாழ்க்கையில் ஒளியைக் கொண்டு வருகிறது?

1 யோவான் 3:21–22.தேவனிலும், நமது ஜெபங்களுக்கு பதில்களைப் பெறுவதில் நமது திறனிலும் இந்த வசனங்களிலுள்ள எது “தைரியத்தை” அதிகரிக்கிறது?

படம்
ஜெபத்தில் ஒரு குடும்பம் ஒன்றுசேர்ந்து முழங்கால்படியிடுதல்

தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுதல் உலகத்தை ஜெயிக்க நமக்குதவுகிறது.

1 யோவான் 5:2–3.பின்பற்றுவதற்கு “கடுமையாகவும்“ அல்லது கஷ்டமாகவும் நாம் கருதுகிற ஏதாவது கட்டளைகளில் இருக்கிறதா? அவருடைய கட்டளைகளைப்பற்றி நாம் உணருகிற வழியை தேவனிடத்திலுள்ள நமது அன்பு எவ்வாறு மாற்றுகிறது?

3 யோவான் 1:4.“சத்தியத்தில் நடத்தல்” என்றால் என்ன? இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, குடும்ப உறுப்பினர்கள் எப்படி உண்மையாக நடப்பதை நீங்கள் பார்த்தீர்கள் என்பதைச் சொல்லவும், அது உங்களுக்குக் கொடுக்கும் மகிழ்ச்சியைப்பற்றிப் பேசவும். குடும்ப உறுப்பினர்கள் தாங்கள் கற்றறிந்த உண்மைகளை காகிதத் தடங்களில் எழுதுவது அல்லது வரைந்து அவற்றைப் பயன்படுத்தி உங்கள் குடும்பம் ஒன்றாக நடக்கக்கூடிய பாதையை உருவாக்கி மகிழலாம்.

யூதா 1:3–4.நமது வாழ்க்கையிலும் குடும்பத்திற்குள்ளும் “நுழைகிற” ஆவிக்குரிய அபாயங்கள் எதாவதிருக்கின்றனவா? (யூதா 1:4). “விசுவாசத்திற்காக தைரியமாகப் போராடவும்” இந்த அபாயங்களைத் தடுக்கவும் நாம் எவ்வாறு யூதாவின் எச்சரிக்கைகளைப் பின்பற்ற முடியும்? (யூதா 1:3). நமது குடும்பத்தில் “சமாதானமும், அன்பும் பெருகுவதை“ உறுதி செய்ய நம்மால் என்ன செய்யமுடியும்? (யூதா 1:2).

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Where Love Is,” Children’s Songbook, 138–39.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

தேவனுடைய அன்பைக் கண்டடையுங்கள். தலைவர் எம். ரசல் பல்லார்ட் போதித்தார்,“தேவனிடத்தில் அன்பு மற்றும் ஒருவருக்கொருவரில் அன்பு என்ற அன்பின் சுவிசேஷம் சுவிசேஷமாயிருக்கிறது” (“God’s Love for His Children,” Ensign, May 1988, 59). வேதங்களை நீங்கள் வாசிக்கும்போது, தேவனின் அன்பின் ஆதாரங்களைக் குறித்துக்கொள்ளவும்.

படம்
ஒரு ஏரிக்கரையின் வழியே கிறிஸ்து நடந்துபோகுதல்.

என்னோடு நடந்து வா – க்ரெய்க் கே. ஓல்சன்

அச்சிடவும்