புதிய ஏற்பாடு 2023
டிசம்பர் 4–10. வெளிப்படுத்தின விசேஷம் 1–5: “ஆட்டுக்குட்டியானவருக்கு … மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக”


“டிசம்பர் 4–10. வெளிப்படுத்தின விசேஷம் 1–5: ‘ஆட்டுக்குட்டியானவருக்கு … மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“டிசம்பர் 4–10. வெளிப்படுத்தின விசேஷம் 1–5,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

புல் மீது ஆட்டுக்குட்டி அமர்ந்திருத்தல்

டிசம்பர் 4–10

வெளிப்படுத்தின விசேஷம் 1–5

“ஆட்டுக்குட்டியானவருக்கு … மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக”

வெளிப்படுத்தின விசேஷத்தில் நீங்கள் வாசித்தவைபற்றிய கேள்விகள் உங்களுக்கிருந்தால் எழுதுவதைக் கருத்தில் கொள்ளவும். பின்பு உங்கள் கேள்விகளுக்கு நீங்கள் விடை தேடலாம் அல்லது ஒரு குடும்ப அங்கத்தினரோடு அல்லது சபை வகுப்பில் அவற்றைக் கலந்துரையாடலாம்.

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்.

ஒரு வல்லமையான ஆவிக்குரிய அனுபவத்தின்போது, நீங்கள் உணர்ந்ததை பிறரிடம் தெரிவிக்க கஷ்டப்பட்டிருக்கிறீர்களா? ஆவிக்குரிய உணர்வுகளையும் எண்ணங்களையும் விவரிக்க அன்றாட பாஷை போதுமானதாக இல்லாமலிருக்கலாம். ஒருவேளை இதனால்தான் யோவான் தனது மகத்தான வெளிப்படுத்தலை விவரிக்க அதிகமான அடையாளத்தையும் கற்பனையையும் பயன்படுத்தியிருக்க வேண்டும். தான் இயேசு கிறிஸ்துவைப் பார்த்ததாக அவன் எளிதாக சொல்லியிருக்க முடியும், ஆனால் அவனது அனுபவத்தை நாம் புரிந்துகொள்ள உதவ, இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவன் இரட்சகரை விவரித்தான்: “அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது,” “அவர் வாயிலிருந்து இருகருக்குள்ள பட்டயம் புறப்பட்டது,” மற்றும் “அவருடைய முகம் வல்லமையாய் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது” (வெளிப்படுத்தின விசேஷம் 1:14–16). வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தை நீங்கள் வாசிக்கும்போது, ஒவ்வொரு அடையாளத்தின் பின்னாலுமிருக்கிற அர்த்தத்தை நீங்கள் புரியாவிட்டாலும்கூட, நீங்கள் கற்றுக்கொள்ளவும் உணரவும் யோவான் விரும்பிய செய்திகளை கண்டுபிடிக்க முயலவும். சபைகளை மெழுகுவர்த்திகளுக்கும், சாத்தானை வலுசர்ப்பத்துக்கும், இயேசு கிறிஸ்துவை ஆட்டுக்குட்டிக்கும் ஏன் ஒப்பிட்டிருக்க வேண்டும்? முடிவாக, மிக பிரசித்தமான தலைப்பாகிய இயேசு கிறிஸ்துவும் அவரைப் பின்பற்றுவோரும் மனுஷன் மற்றும் சாத்தானின் இராஜ்யங்களை மேற்கொள்வார்கள் உள்ளிட்ட வெளிப்படுத்தின விசேஷத்திலுள்ள இதன் முக்கிய தலைப்புக்களைப் புரிந்துகொள்ள ஒவ்வொரு அடையாளத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியதில்லை.

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

யோவானின் தரிசனம், பரலோக பிதாவின் பிள்ளைகளை இரட்சிக்கும் திட்டத்தைப்பற்றிக் கற்பிக்கிறது.

வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகம் புரிந்துகொள்ள கஷ்டமானது, ஆனால் தைரியமிழக்காதிருங்கள். முயற்சி செய்து கொண்டே இருக்க யோவானின் வாக்குத்தத்தம் உங்களை உணர்த்தலாம்: “இந்த தீர்க்கதரிசனத்தின் வார்த்தைகளை வாசித்து, கேட்டு புரிந்து கொள்பவர்கள், அதில் எழுதப்பட்ட காரியங்களை காத்துக்கொள்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ஏனெனில் கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறது” (ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, வெளிப்படுத்தின விசேஷம் 1:3 [in the Bible Appendix], emphasis added).

வெளிப்படுத்தின விசேஷத்தைப் படிப்பதற்கான ஒரு வழி இரட்சிப்பின் திட்டத்துடன் தொடர்புகளைத் தேடுவதாகும். இந்த பொதுவான கண்ணோட்டம் உங்களுக்கு உதவலாம்:

  • அதிகாரங்கள் 5 மற்றும் 12 அநித்தியத்துக்கு முந்தய வாழ்க்கையின் நிகழ்வுகளை விவரிக்கின்றன.

  • அதிகாரங்கள் 6–11, 13–14, 16–19 அநித்திய வாழ்க்கை மற்றும் பூமியின் வரலாற்று நிகழ்வுகளை விவரிக்கின்றன.

  • அதிகாரங்கள் 2–3, 15, 20–22 கடைசி நியாயத்தீர்ப்பையும் உண்மையுள்ளவர்களுக்கு காத்திருக்கிற மகிமையையும் விவரிக்கிறது.

நீங்கள் வாசிக்கும்போது, உங்களையே கேளுங்கள், “இது தேவனின் திட்டம்பற்றி என்ன போதிக்கிறது?” தீமையை வென்று அவரிடம் திரும்ப எனக்கு உதவ தேவன் என்ன செய்தார்? விசுவாசிகளுக்கு அவர் அளித்த வாக்குறுதிகள் என்ன?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 77 வெளிப்படுத்தின விசேஷத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அடையாளங்களை விளக்குகிறது என அறிவது உதவிகரமாக இருக்கும். கூடுதலாக, ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு வெளிப்படுத்தின விசேஷத்தில், உள்ள பல பகுதிகளை தெளிவுபடுத்துகிறது, எனவே அடிக்குறிப்புகளையும் வேதாகம பின்னிணைப்பையும் தவறாமல் சரிபார்க்கவும்.

Bible Dictionary, “John,” “Revelation of John” ஐயும் பார்க்கவும்.

வெளிப்படுத்தின விசேஷம் 1

ஜீவனுள்ள தேவனுடைய ஜீவனுள்ள குமாரன் இயேசு கிறிஸ்து.

வெளிப்படுத்தின விசேஷத்தின் முதல் அதிகாரம் யோவானுக்கு இயேசு கிறிஸ்துவின் தோற்றத்தை ஒரு தரிசனத்தில் விவரிக்கிறது. ஒருவேளை, இயேசு கிறிஸ்துவைப்பற்றி இந்த அதிகாரம் கூறுகிற, அவர் யார், அவர் நமக்காக என்ன செய்கிறார், அவர் எப்படிப்பட்டவர் என்பது உட்பட எல்லாவற்றையும் நீங்கள் பட்டியலிட்டு இருக்கலாம்.

நீங்கள் கற்றுக் கொள்ளும் சில காரியங்கள் அடையாளங்களில் இருந்து வரும். இந்தக் அடையாளங்கள் மூலம் கர்த்தர் தன்னைப்பற்றி உங்களுக்கு என்ன கற்பிக்க முயற்சிக்கிறார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். உதாரணமாக, இரட்சகர் தன்னை “ஆதியும் அந்தமும்” மற்றும் “முந்தினவரும் பிந்தினவரும்” என்று அழைப்பதைக் கவனியுங்கள். இந்த தலைப்புகள் ஏன் முக்கியமானவை என்று நினைக்கிறீர்கள்? இந்த பட்டங்கள் இரட்சகரைப்பற்றி என்ன போதிக்கின்றன?

வெளிப்படுத்தின விசேஷம் 2–3

இயேசு கிறிஸ்து தனிப்பட்ட விதமாக என்னை அறிகிறார் மற்றும் என் சவால்களை மேற்கொள்ள எனக்கு உதவுவார்.

வெளிப்படுத்தின விசேஷம் 2–3ல் இரட்சகரின் வார்த்தைகள் யோவானின் நாளில் சபையின் ஒவ்வொரு கிளையின் தனித்துவம் வாய்ந்த வெற்றிகளையும் போராட்டங்களையும் அவன் புரிந்திருந்தான் என வெளிப்படுத்துகிறது. அவன் பரிசுத்தவான்களின் முயற்சிகளைப் பாராட்டினான், மேலும் அவர்கள் மாற்ற வேண்டிய விஷயங்களைப்பற்றி எச்சரித்தான். இரட்சகரின் துதி மற்றும் எச்சரிக்கைகளிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

இரட்சகர் உங்கள் வெற்றிகளையும் போராட்டங்களையும் புரிந்துகொள்கிறார், மேலும் அவர் உங்களுக்கு உதவ விரும்புகிறார். வெற்றி பெறுபவர்களுக்கு அவர் அடிக்கடி அளிக்கும் வாக்குறுதிகளைக் கவனியுங்கள். இந்த வாக்குறுதிகளில் உங்களைக் கவர்வது என்ன? நீங்கள் எதை மேற்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்புவார்? அவருடைய உதவியைப் பெற நீங்கள் என்ன செய்யலாம்?

வெளிப்படுத்தின விசேஷம் 4–5

இயேசு கிறிஸ்து மட்டுமே பரலோக பிதாவின் திட்டத்தை சாத்தியமாக்க முடியும்.

வெளிப்படுத்தின விசேஷம் 4ல் இருந்து பரலோக பிதாவைப்பற்றியும், வெளிப்படுத்தின விசேஷம் 5ல் இருந்து இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? இயேசு கிறிஸ்து (“ஆட்டுக்குட்டி”) பரலோக பிதாவின் திட்டத்தை சாத்தியமாக்குவார் என்பதை நாம் அனைவரும் உணர்ந்தபோது அது எப்படி இருந்திருக்கும் என்பதைக் கவனியுங்கள் (இரட்சகர் “புத்தகத்தைத் திறக்கலாம், மேலும் … ஏழு முத்திரைகளை அவிழ்க்க முடியும்” [வெளிப்படுத்தின விசேஷம் 5:5]). இயேசு கிறிஸ்து மட்டுமே அதை ஏன் செய்ய முடியும்? உங்கள் இரட்சகராக அவரில் உங்கள் விசுவாசத்தை நீங்கள் எப்படி காட்ட முடியும்?

யோபு 38:4–7; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 77:1–7 ஐயும் பார்க்கவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

வெளிப்படுத்தின விசேஷம் 1:20.இயேசு தனது சபையை ஏன் மெழுகுவர்த்தியுடன் ஒப்பிட்டார்? (மத்தேயு 5:14–16 பார்க்கவும்). “Shine On” (Children’s Songbook, 144) போன்ற மெழுகுவர்த்தியில் விளக்கு போல நாம் எப்படி இருக்க முடியும் என்பதைப்பற்றி ஒரு பாடலைப் பாடுங்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 2–3. அவனது காலத்தில் சபைகளுக்கு அவன் கொடுத்தவை போல உங்கள் குடும்பத்துக்கு ஒரு செய்தி கொடுக்க யோவான் கேட்டுக்கொள்ளப்பட்டதுபோல பாசாங்கு செய்யவும். நன்றாக நடக்கிறது என எதைச் சொல்வான்? நீங்கள் எப்படி முன்னேறலாம்?

வெளிப்படுத்தின விசேஷம் 3:15–16.இந்த வசனங்களைப் படித்த பிறகு, உங்கள் குடும்பத்தினர் சூடான அல்லது குளிர்ச்சியான சுவையுள்ள வெதுவெதுப்பான ஒன்றைக் குடிக்கலாம். ஆவிக்குரிய விதமான வெதுவெதுப்பு என்பதற்கு அர்த்தம் என்ன?

வெளிப்படுத்தின விசேஷம் 3:20.இரட்சகர் கதவைத் தட்டும் படத்தைக் காட்டுங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 3:20 உங்கள் குடும்பம் வாசிக்கும்போது, (இந்தக் குறிப்பின் கடைசியைப் பார்க்கவும்) இயேசு ஏன் உள்ளே வராமல் தட்டுகிறார்? குடும்ப உறுப்பினர்கள் மாறி மாறி கதவைத் தட்டலாம். பின்னர் குடும்பத்தில் உள்ள வேறொருவர் இரட்சகருக்கு “கதவைத் திறந்து” குடும்ப உறுப்பினரை உள்ளே அனுமதிக்கும் வழியை பரிந்துரைக்கலாம். நம் வீட்டில் இரட்சகர் இருப்பது எப்படி இருக்கும்?

வெளிப்படுத்தின விசேஷம் 4:10–11.பரலோக பிதாவை ஆராதித்தல் என்பதற்கு அர்த்தம் என்ன? அவரைப்பற்றி நாம் அறிந்த எது அவரை ஆராதிக்க நம்மை விரும்பச் செய்கிறது?

வெளிப்படுத்தின விசேஷம் 5:6, 12–13. இயேசு கிறிஸ்து ஏன் “ஆட்டுக்குட்டி” என்று அழைக்கப்படுகிறார்? இந்தப் பட்டம் அவரைப்பற்றி நமக்கு என்ன போதிக்கின்றது?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Jesus, Once of Humble Birth,” Hymns, no. 196.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

கேள்விகளை ஊக்குவிக்கவும். குடும்ப அங்கத்தினர்கள் கற்றுக்கொள்ள தயாராயிருக்கிறார்கள் மற்றும் அவர்கள் கற்பிக்கப்பட்டதற்கு எவ்வாறு பதிலளிக்கிறார்கள் என்பதற்கு உள்ளுணர்வு கொடுக்கிறார்கள் என்பதன் அறிகுறிதான் கேள்விகள். வேதங்களில் எப்படி பதில் கண்டுபிடிப்பது என உங்கள் குடும்பத்துக்கு போதிக்கவும். (Teaching in the Savior’s Way, 25–26 பார்க்கவும்.)

கிறிஸ்து கதவைத் தட்டுதல்

அவர் உள்ளே வரட்டும்–க்ரெக் ஆல்சன்