புதிய ஏற்பாடு 2023
டிசம்பர் 11–17. வெளிப்படுத்தின விசேஷம் 6–14: “ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் … அவர்கள் ஜெயித்தார்கள்”


“டிசம்பர் 11–17. வெளிப்படுத்தின விசேஷம் 6–14: ‘ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் … அவர்கள் ஜெயித்தார்கள்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“டிசம்பர் 11–17. வெளிப்படுத்தின விசேஷம் 6–14,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

இயேசு நட்சத்திரங்களிடையே நின்றிருத்தல்

Composite art by Eric Johnson: The Grand Council, by Robert T. Barrett; star cluster courtesy of European Space Agency

டிசம்பர் 11–17

வெளிப்படுத்தின விசேஷம் 6–14

“ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் … அவர்கள் ஜெயித்தார்கள்”

தலைவர் பாய்ட் கே. பாக்கர் அறிவுரை கூறினார்: “வேதங்களின் மொழி முதலில் உங்களுக்கு விசித்திரமாகத் தோன்றினால், தொடர்ந்து படிக்கவும். அந்தப் பக்கங்களில் காணப்படும் அழகையும் வல்லமையையும் விரைவில் நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்கள்” (“The Key to Spiritual Protection,” Liahona, Nov. 2013, 27).

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

“பிரசவ வேதனையடைந்து, பிள்ளை பெறும்படி அலறிய” ஒரு பெண்ணை கற்பனை செய்யுங்கள். இப்பொழுது கற்பனை செய்யுங்கள், “ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பம்”, “பிள்ளை பெற்றவுடனே, அதைப் பட்சித்துப்போட” பெண்ணைச் சுற்றி நின்று ஆயத்தமாயிருந்தது (வெளிப்படுத்தின விசேஷம் 12:2–4). யோவானின் வெளிப்படுத்தின விசேஷத்திலுள்ள இந்த வசனங்களைப் புரிந்துகொள்ள, சபையையும், தேவனுடைய இராஜ்ஜியத்தையும், அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தையும் இந்த உருவங்கள் பிரதிபலிக்கின்றன என்பதை நினைவுபடுத்துங்கள். யோவானின் நாட்களில் பெருமளவிற்கு துன்புறுத்தல்களை அனுபவித்த பரிசுத்தவான்களுக்கு, தீமையின் மேல் வெற்றி சாத்தியமாகத் தோன்றாதிருக்கலாம். “பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணவும்” … “ஒவ்வொரு கோத்திரத்தின் மேலும், பாஷைக்காரர் மேலும், ஜாதிகள் மேலும் சத்துருவுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டபோது”, நமது காலத்தில் ஒரு நாளில் வெற்றியை முன்காண்பதுவும் கடினமானது” (வெளிப்படுத்தின விசேஷம் 13:7). ஆனால், யோவானின் வெளிப்படுத்தின விசேஷத்தின் முடிவில், நன்மை, தீமைக்கு மேலோங்கும் என்பதை மகிமையுடன் காட்டுகிறது. பாபிலோன் வீழும். பரிசுத்தவான்கள் “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” வெள்ளை நிற ஆடைகளுடன் வருவார்கள், அவர்களுடைய அங்கிகள் ஒருபோதும் கறைபடாததால் அல்ல, மாறாக பரிசுத்தவான்கள் “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் தோய்த்து வெளுத்தவர்கள்” (வெளிப்படுத்தின விசேஷம் 7:14).

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

வெளிப்படுத்தின விசேஷம் 6–11

பூமியின் சரித்திரத்தின் பல சம்பவங்களை, குறிப்பாக கடைசி நாட்களில் நடந்தவற்றை யோவான் பார்த்தான்.

இந்த அதிகாரங்களில் நீங்கள் ஏழு முத்திரைகள் கொண்ட புத்தகத்தைப்பற்றி படிப்பீர்கள். இதன் பொருள் என்ன என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், நீங்கள் தனியாக இல்லை. தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தும் ஆச்சரியப்பட்டார். இந்தப் புத்தகமும் அதன் முத்திரைகளும் பூமியின் “பூலோக இருப்பின்” கதையைக் குறிக்கின்றன என்று கர்த்தர் ஜோசப்பிற்கு வெளிப்படுத்தினார், ஒவ்வொரு முத்திரையும் ஆயிரம் ஆண்டுகளைக் குறிக்கிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 77:6–7 பார்க்கவும்). முதல் நான்கு முத்திரைகளின் நிகழ்வுகள் யோவானின் தரிசனத்தில் எட்டு வசனங்களில் மட்டுமே சுருக்கப்பட்டுள்ளன என்பதை அறிய நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் (வெளிப்படுத்தின விசேஷம் 6:1–8). அடுத்த மூன்று வசனங்கள் ஐந்தாவது முத்திரையை விவரிக்கின்றன (வசனங்கள் 9–11). கடைசி இரண்டு முத்திரைகளின் நிகழ்வுகள் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின் பெரும்பாலான பகுதிகளை எடுத்துக் கொள்கின்றன . வேறு வார்த்தைகளில் எனில், யோவானின் தரிசனத்தின் முக்கிய கவனம் கடைசி நாட்களான நமது நாட்கள். நீங்கள் படிக்கும்போது, கடைசி நாட்களைப்பற்றி யோவான் என்ன எழுதினான் என்பதை அறிவது ஏன் மதிப்புமிக்கது என்பதை யோசித்துப் பாருங்கள்.

யோவான் தீர்க்கதரிசனம் கூறிய சம்பவங்களைப்பற்றி நீங்கள் படிக்கும்போது, பின்வரும் ஆலோசனைகளையும் கேள்விகளையும் கருத்தில் கொள்ளவும்:

வெளிப்படுத்தின விசேஷம் 12–13

பரலோகத்தின் யுத்தம் பூமியின்மேல் தொடருகிறது.

பரலோகத்தின் யுத்தத்தைப்பற்றி நமக்கு அதிகம் தெரியாது, ஆனால் வெளிப்படுத்தின விசேஷம் 12:7–11ல் சுருக்கமாயிருந்தாலும் ஒரு தெளிவான விளக்கமிருக்கிறது. இந்த வசனங்களை நீங்கள் வாசிக்கும்போது, அந்த அநித்தியத்திற்கு முந்தைய முரண்பாட்டில் ஒரு அங்கமாயிருப்பதாக உங்களையே நீங்கள் கற்பனை செய்யுங்கள். சாத்தான் எப்படி ஜெயிக்கப்படுகிறான் என்பதைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? (வசனம் 11 பார்க்கவும்).

“இயேசு கிறிஸ்து குறித்த [சாட்சியமுள்ளவர்களுடன்] யுத்தம் செய்ய” சாத்தான் விடாப்பிடியாக இருப்பதால், பரலோகத்தில் தொடங்கிய போர் பூமியில் தொடர்கிறது (வெளிப்படுத்தின விசேஷம் 12:17). அவன் இன்று அந்தப் போரை எப்படி நடத்துகிறான் என்பதைப்பற்றி வெளிப்படுத்தின விசேஷம் 13ல் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? “ஆட்டுக்குக்குட்டியின் இரத்தம்” மற்றும் “[உங்கள்] வார்த்தையின் சாட்சியம்” எவ்வாறு இந்த யுத்தத்தில் தொடர்ந்து உங்களுக்கு உதவுகிறது (வெளிப்படுத்தின விசேஷம் 12:11)?

1 நேபி 14:12–14; மரோனி 7:12–13; மோசே 4:1–4; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:36–37; Gospel Topics, “War in Heaven,” topics.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

வெளிப்படுத்தின விசேஷம் 14:6–7

“வேறொரு தூதன் … நித்திய சுவிசேஷத்தை உடையவனாக இருப்பதைக் கண்டேன்.”

ஜோசப் ஸ்மித்துக்கு, மரோனி காணப்பட்டு, அவர் மொழிபெயர்த்து, மார்மன் புஸ்தகமாக வெளியிட்ட பதிவுகளுக்கு நடத்தியபோது, இந்த வசனங்களில் தீர்க்கதரிசனத்தின் ஒரு நிறைவேறுதல் நடைபெற்றது. “சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தினருக்கும்” நாம் பிரசிங்கிக்க கட்டளையிடப்பட்டிருக்கிற இந்த புஸ்தகம் “நித்திய சுவிசேஷத்தை” உள்ளடிக்கியிருக்கிறது (வெளிப்படுத்தின விசேஷம் 14:6).

நித்திய சுவிசேஷத்தை மீட்டெடுப்பதில் பங்குகொண்ட மற்ற தேவதூதர்களைப்பற்றி அறிய, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13; 27:5–13; 110:11–16; 128:20–21 பார்க்கவும்.

The Restoration of the Fulness of the Gospel of Jesus Christ: A Bicentennial Proclamation to the World” (ChurchofJesusChrist.org) ஐயும் பார்க்கவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

வெளிப்படுத்தின விசேஷம் 7:9, 13–15.ஆலய நியமங்களுக்கு நாம் ஏன் வெள்ளை ஆடை உடுத்துகிறோம் என்பதைப்பற்றி இந்த வசனங்கள் என்ன போதிக்கின்றன?

வெளிப்படுத்தின விசேஷம் 7:14–17.இந்த வசனங்களில் கர்த்தருடைய வாக்குறுதிகளைப்பற்றிய தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள குடும்ப உறுப்பினர்களை அழைப்பதைக் கருத்தில் கொள்ளவும். நாம் “மிகுந்த உபத்திரவத்தில்” இருக்கும்போது அவருடைய வாக்குறுதிகள் எவ்வாறு நமக்கு உதவக்கூடும்? (வசனம் 14).

வெளிப்படுத்தின விசேஷம் 12:7–11; 14:6.வெளிப்படுத்தின விசேஷத்தில் விளக்கப்பட்டிருக்கிற தரிசனத்தின் படங்களை வரைவதை குடும்ப அங்கத்தினர்கள் சிலர் மகிழலாம், பலனடையலாம். உதாரணமாக, வெளிப்படுத்தின விசேஷம் 12ஐ அடிப்படையாகக்கொண்டு, வரைதல், பரலோகத்தின் யுத்தத்தைக் குறித்த கலந்துரையாடலுக்கு நடத்தலாம் (வசனங்கள் 7–11 பார்க்கவும்). வெளிப்படுத்தின விசேஷம் 14:6 அடிப்படையாகக் கொண்ட படங்கள் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம்பற்றிய கலந்துரையாடல்களுக்கு வழிவகுக்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 14:6ஐ ஒன்றாகப் படித்த பிறகு, நமது நாளில் சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்ய உதவிய மரோனி தூதன் மற்றும் பிற தேவதூதர்களின் படங்களைக் காண்பிப்பதைக் கருத்தில் கொள்ளவும் (இந்த குறிப்பின் முடிவில் உள்ள படங்களைப் பார்க்கவும்). “[நமக்கு] நித்திய சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க தேவதூதர்கள் வந்திருப்பதற்கு” குடும்ப அங்கத்தினர்கள் ஒரு படத்தைப் பிடித்துக்கொண்டு மாறி மாறிப் படம் பிடித்துக் கொண்டு, நன்றியுள்ள காரணங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.

வெளிப்படுத்தின விசேஷம் 12:11.“தங்கள் சாட்சியின் வசனம்” என்ற சொற்றொடருக்கு அர்த்தம் என்னவாயிருக்கலாம்? இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நமது சாட்சிகள் எவ்வாறு சாத்தானை மேற்கொள்ள நமக்கும் மற்றவர்களுக்கும் உதவுகிறது?

வெளிப்படுத்தின விசேஷம் 13:11–14.தந்திரமான மிருகத்தைப்பற்றி என்ன சிந்தனைகள் உங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு இருக்கிறது? இன்றைய உலகத்தில் நாம் பார்க்கிற வஞ்சனைகளை எவ்வாறு நாம் கண்டுபிடித்து தவிர்க்கலாம்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I Will Be Valiant,” Children’s Songbook, 162.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

வேதங்களில் மூழ்கிவிடுங்கள். தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார், “தேவனுடைய வார்த்தையில் தினசரி மூழ்குவது ஆவிக்குரிய பிரகார உயிர்வாழ்வதற்கு முக்கியமானது, குறிப்பாக எழுச்சி அதிகரித்து வரும் இந்த நாட்களில்” (“Hear Him,” Liahona, May 2020, 89). “தேவனின் வார்த்தையில் மூழ்குவது” என்றால் என்ன அர்த்தம்?

கிறிஸ்து கதவைத் தட்டுதல்

மரோனி தங்கத்தகடுகளைக் கொடுத்தல்–காரி எல் காப்; என் சக ஊழியர்கள் மீது–லிண்டா கர்லி க்றிஸ்டன்சன் மற்றும் மைக்கல் டி. மாம் (யோவான் ஸ்நானன் ஜோசப் ஸ்மித் மீது ஆரோனிய ஆசாரியத்துவத்தை அருளுதல்); இராஜ்யத்தின் திறவுகோல்கள்–லிண்டா கர்லி க்றிஸ்டன்சன் மற்றும் மைக்கல் டி. மாம் (பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஜோசப் ஸ்மித் மீது மெல்கிசேதேக்கு ஆரோனிய ஆசாரியத்துவத்தை அருளுதல் ; கர்த்லாந்து ஆலயத்தில் தரிசனம்–காரி ஈ. ஸ்மித் (மோசே, எலியாஸ், மற்றும் எலியா ஜோசப் ஸ்மித்துக்கும் ஆலிவர் கௌட்ரேயுக்கும் தோன்றுதல்).