“நவம்பர் 13–19. யாக்கோபு: ‘கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)
“நவம்பர் 13–19. யாக்கோபு,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023
நவம்பர் 13–19
யாக்கோபு
“கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்”
யாக்கோபின் நிருபத்தை, நீங்கள் வாசிக்கும்போது, உங்களைக் கவர்கிற சொற்றொடர்களில் கவனம் செலுத்தி, அவற்றை பதிவு செய்யவும். இந்த வார்த்தைகளை “செய்பவராக” இருக்க நீங்கள் எவ்வாறு தூண்டப்படுகிறீர்கள்? (யாக்கோபு 1:22).
உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்
சில சமயங்களில் வேதத்தின் ஒரு வசனம் கூட உலகத்தை மாற்ற முடியும். உங்களுக்கு ஞானம் தேவைப்பட்டால், தேவனிடம் கேளுங்கள் யாக்கோபு 1:5 என்பது ஒரு எளிய ஆலோசனைபோல தோன்றுகிறது, ஆனால் 14 வயது ஜோசப் ஸ்மித் அந்த வசனத்தை வாசித்தபோது, “[அவரது] இருதயத்தின் ஒவ்வொரு உணர்விலும் பெரும் வல்லமையோடு அது நுழைந்ததுபோல தோன்றியது” (ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:12). அப்படியாக உணர்த்தப்பட்டு, யாக்கோபின் புத்திமதியின்படி ஜோசப் செயல்பட்டு, ஜெபத்தின் மூலம் ஞானத்தைத் தேடினார். முதல் தரிசனம் என்ற மனித வரலாற்றின் மிகக் குறிப்பிடத்தக்க பரலோக வருகையில் ஒன்றைக் கொடுத்து, தேவன் உண்மையாகவே தாராளமாகக் கொடுத்தார். அந்த தரிசனம் ஜோசப்பின் வாழ்க்கையின் போக்கை மாற்றி, பூமியில் இயேசு கிறிஸ்துவின் சபையின் மறுஸ்தாபிதத்துக்கு வழிநடத்தியது. யாக்கோபு 1:5 வாசித்து அதன்படி ஜோசப் ஸ்மித் செயல்பட்டதால், நாமனைவரும் இன்று ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.
யாக்கோபுவின் நிருபத்தை நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் என்ன காண்பீர்கள்? ஒருவேளை ஒன்று அல்லது இரண்டு வசனம் உங்களை அல்லது நீங்கள் நேசிக்கும் ஒருவரை மாற்றும். வாழ்க்கையில் உங்கள் ஊழியத்தை நிறைவேற்ற நீங்கள் நாடும்போது, நீங்கள் வழிகாட்டுதலைப் பெறலாம். தயவாய் பேச அல்லது அதிகம் பொறுமையாயிருக்க நீங்கள் ஊக்கம் பெறலாம். உங்கள் செயல்களை உங்கள் நம்பிக்கையுடன் இணையச் செய்ய நீங்கள் தூண்டப்படலாம். உங்களுக்கு எது உணர்த்தினாலும், இந்த வார்த்தைகள் “[உங்கள்] இருதயத்தின் ஒவ்வொரு உணர்விலும் … நுழைவதாக.” யாக்கோபு எழுதியபடி, கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருக்க “வசனத்தை சாந்தமாய் ஏற்றுக் கொள்ளுங்கள்” (யாக்கோபு 1:21–22 பார்க்கவும்).
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
யாக்கோபு யார்?
யாக்கோபு நிருபத்தை எழுதியவர், இயேசு கிறிஸ்துவின் தாயாகிய, மரியாளின் குமாரன், ஆகவே இரட்சகரின் ஒன்றுவிட்ட சகோதரன் என பொதுவாக நம்பப்படுகிறது. மத்தேயு 13:55; மாற்கு 6:3; அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:17; 15:13; 21:18; மற்றும் கலாத்தியர் 1:19; 2:9 ல் யாக்கோபு குறிப்பிடப்படுகிறான். இந்த வசனங்களிலிருந்து யாக்கோபு எருசலேமிலுள்ள ஒரு சபைத்தலைவர் மற்றும் ஒரு அப்போஸ்தலனாக அழைக்கப்பட்டவன் என தோன்றுகிறது.(கலாத்தியர் 1:19 பார்க்கவும்).
பொறுமையாக சகித்தல் பரிபூரணத்துக்கு வழிநடத்துகிறது.
யாக்கோபு 1:2–4; 5:7–11, வாசித்த பிறகு, பொறுமையைப்பற்றிய யாக்கோபுவின் முக்கிய செய்தி என்னவென நீங்கள் சொல்வீர்கள்? மூப்பர் ஜெர்மி ஆர். ஜக்கியின் குடும்பத்தினர் இந்த வசனங்களிலிருந்து பொறுமையைப்பற்றி என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதைச் சிந்திக்க இது உதவக்கூடும் (“Let Patience Have Her Perfect Work, and Count It All Joy!,” Liahona, Nov. 2020, 99–101 பார்க்கவும்). பொறுமையின் “பூரண கிரியை” யாது? (யாக்கோபு 1:4). நீங்கள் பொறுமையாக இருக்க விருப்பமாயிருக்கிறீர்கள் என கர்த்தரிடம் நீங்கள் எவ்வாறு காட்ட முடியும்?
யாக்கோபு 1:3–8, 21–25; 2:14–26; 4:17
விசுவாசத்துக்கு செயல் தேவை.
உங்களுக்கு இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் இருக்கிறதா என எப்படி அறிகிறீர்கள்? உங்கள் கிரியைகள் தேவனில் உங்கள் விசுவாசத்தை எவ்வாறு காட்டுகின்றன? விசுவாசத்தைப்பற்றிய யாக்கோபுவின் போதனைகளை நீங்கள் படிக்கும்போது, இந்தக் கேள்விகளைப்பற்றி சிந்திக்கவும். யாக்கோபு குறிப்பிட்ட இரண்டு எடுத்துக்காட்டுகளாகிய ஆபிரகாம் மற்றும் ராகாபைப்பற்றி வாசிப்பது ரசிக்கக்கூடியதாக இருக்கலாம் (ஆதியாகமம் 22:1–12; யோசுவா 2 பார்க்கவும்). அவர்களுக்கு தேவனிடத்தில் விசுவாசம் இருக்கிறது என அவர்கள் எவ்வாறு காட்டினார்கள்?
யாக்கோபு 1:3–8, 21–25; 2:14–26; 4:17 வாசிப்பது சிறப்பாக நீங்கள் செய்யக்கூடியவராயிருக்க வழிகளை சிந்திக்க உங்களுக்கு உதவலாம். நீங்கள் பெறுகிற உணர்த்துதல்களை பதிவுசெய்து, அவற்றின்படி செயல்பட திட்டமிடவும்.
ஆல்மா 34:27–29; 3 நேபி 27:21 ஐயும் பார்க்கவும்.
நான் பேசுகிற வார்த்தைகள் பிறரை காயப்படுத்த அல்லது ஆசீர்வதிக்க வல்லமை பெற்றிருக்கின்றன.
யாக்கோபு பயன்படுத்தியுள்ள வளமான கற்பனையிடையே யாக்கோபு இந்த நிருபம் முழுவதிலும் அவனது முக்கிய அழகிய மொழியில் சில பாஷையைப்பற்றிய ஆலோசனை காணப்படுகிறது. யாக்கோபு பாஷை அல்லது வாய் என விவரித்த எல்லா வழிகளையும் ஒரு பட்டியலிடுவதை கருத்தில் கொள்ளவும். நாம் பேசுகிற வார்த்தைகளைப்பற்றி இந்த ஒப்பீடு அல்லது உருவம் என்ன ஆலோசனையளிக்கிறது? உங்கள் வார்த்தைகளுடன் ஒருவரை ஆசீர்வதிக்க நீங்கள் செய்யக்கூடிய ஒன்றை யோசிக்கவும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 108:7. பார்க்கவும்).
இயேசு கிறிஸ்துவின் சீஷனாக, அவர்களது சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாது நான் எல்லா ஜனத்தையும் நேசிக்க வேண்டும்.
ஐஸ்வர்யவான்களுக்கு சாதகமாகவும், ஏழைகளை ஏமாற்றுவதற்கும் எதிராக குறிப்பாக பரிசுத்தவான்களை யாக்கோபு எச்சரித்தான், ஆனால் பிறரிடம் நாம் கொண்டிருக்கிற எதிர்ப்புக்கு அல்லது வெறுப்புக்கு அவனது எச்சரிக்கை பொருந்தும். நீங்கள் ஜெபத்துடன் யாக்கோபு 2:1–9 படிக்கும்போது, உங்கள் சொந்த இருதயத்தில் தேடி, பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களுக்கு செவிகொடுக்கவும். இந்த வசனங்களில் உள்ள சொற்றொடர்களை மாற்றுவதற்கு இது உதவக்கூடும், நீங்கள் நியாயமற்ற முறையில் தீர்ப்பளிக்க ஆசைப்படக்கூடிய ஒருவரை விவரிக்கும் வேறு வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள், அதாவது, “கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரன்” (வசனம் 2) போன்றவை. நீங்கள் பிறரை நடத்துகிற அல்லது நினைக்கிற விதத்தில் நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்களைப்பற்றி நீங்கள் உணர்கிறீர்களா?
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
யாக்கோபு 1:5.யாக்கோபு 1:5 வாசித்து, முதல் தரிசனத்தைப்பற்றிய விவரத்தை சுருக்கமாக சொல்ல குடும்ப அங்கத்தினரை அழைப்பதைக் கருத்தில் கொள்ளவும் (ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:8-20 அல்லது “Ask of God: Joseph Smith’s First Vision” on ChurchofJesusChrist.org) காணொலி பார்க்கவும். தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தைப்பற்றிய அவர்களது சாட்சிகளையும் பரலோக பிதா அவர்களது ஜெபங்களுக்கு பதிலளித்த அனுபவங்களையும் பகிர குடும்பத்தினரை அழைக்கவும்.
-
யாக்கோபு 1:26–27.“True Christianity” (ChurchofJesusChrist.org) காணொலி பார்ப்பதை கருத்தில் கொள்ளவும். பின்பு சுத்தமான பக்தியைப்பற்றிய யாக்கோபின் விளக்கம் யாக்கோபு 1:26–27, வாசித்து, உங்கள் மார்க்கத்தை அதிக சுத்தமாக பயிற்சி செய்ய உங்கள் குடும்பம் பின்பற்ற வேண்டிய வழிகளை கலந்துரையாடவும்.
-
யாக்கோபு 3.உங்கள் குடும்பத்தினர் தயவாய் பேசுவதை நினைக்க உதவ, நினைவில் நிற்கக்கூடிய பொருள்சார் பாடங்களை உணர்த்தக்கூடிய அநேக உருவங்களை யாக்கோபு 3 கொண்டுள்ளது. உதாரணமாக, நீங்கள் ஒன்றாக நெருப்பை உருவாக்கலாம் மற்றும் ஒரு சிறிய, இரக்கமற்ற வார்த்தை எப்படி பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதைப்பற்றி பேசலாம் (வசனங்கள் 5–6 பார்க்கவும்). அல்லது ஒரு தேன் பாட்டிலில் எலுமிச்சை சாறு போன்ற இனிப்பு உணவுக்கு வழக்கமாக பயன்படுத்தக்கூடிய ஒன்றை, புளிப்பு அல்லது கசப்பானதற்கு பரிமாறவும். இது இனிமையான மற்றும் உற்சாகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதுபற்றிய விவாதத்திற்கு வழிவகுக்கும் (வசனங்கள் 9–14 பார்க்கவும்).
-
யாக்கோபு 4:5–8.நாம் சோதனையை எதிர்கொள்ளும்போது ஏன் “தேவனிடம் சேர” (யாக்கோபு 4:8) வேண்டும்?
-
யாக்கோபு 5:14–16.“குடும்பத்தில் ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களை பெற்றோர்கள் அதிகம் ஊக்குவிக்க வேண்டும்” என்று தலைவர் டாலின் எச். ஓக்ஸ் கற்பித்தார் (“The Powers of the Priesthood,” Liahona, May 2018, 67). ஒருவேளை யாக்கோபு 5:14–16 வாசிப்பது, ஆசாரியத்துவ ஆசீர்வாதத்தைப் பெறுவதுபற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது, குடும்ப உறுப்பினர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது ஆவிக்குரிய பலம் தேவைப்படும்போது ஆசீர்வாதத்தைக் கேட்க அவர்களை ஊக்குவிக்கலாம்.
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Have I Done Any Good?,” Hymns, no. 223.