புதிய ஏற்பாடு 2023
ஏப்ரல் 17–23. மத்தேயு 18; லூக்கா 10: “நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும்?”


“ஏப்ரல் 17–23. மத்தேயு 18; லூக்கா 10: ‘நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“ஏப்ரல் 17–23. மத்தேயு 18; லூக்கா 10,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
நல்ல சமாரியன்

நல்ல சமாரியன்–டான் பர்

ஏப்ரல் 17–23

மத்தேயு 18; லூக்கா 10

“ நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும்?”

மத்தேயு 18 மற்றும் லூக்கா 10 நீங்கள் ஜெபத்துடன் வாசித்து சிந்திக்கும்போது, பரிசுத்த ஆவியின் அமைதியான தூண்டுதல்களுக்கு கவனம் செலுத்தவும். இந்த போதனைகளும் கதைகளும் உங்களுக்கு எப்படி பொருந்தும் என அவர் உங்களுக்கு சொல்வார். நீங்கள் பெறும் எண்ணங்களைப் பதிவு செய்யவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

கர்த்தரை நீங்கள் ஒரு கேள்வி கேட்கும்போது, நீங்கள் எதிர்பாராத பதிலை நீங்கள் பெறலாம். என்னுடைய அயலான் யார்? உங்களுடைய உதவியும் அன்பும் தேவைப்படும் எவருமே. பரலோக இராஜ்யத்தில் உயர்ந்தவன் யார்? ஒரு பிள்ளை. குற்றஞ் செய்தவரை ஏழுமுறை மன்னித்தால் போதுமா? இல்லை, நீங்கள் அவரை ஏழெழுபது முறை மன்னிக்க வேண்டும். (லூக்கா 10:29–37; மத்தேயு 18:4, 21–22 பார்க்கவும்.) கர்த்தரின் எதிர்பாராத பதில்கள் நாம் நினைக்கும், உணரும் மற்றும் செயல்படும் முறையை மாற்ற நம்மை அழைக்கலாம். நீங்கள் உண்மையாகவே கர்த்தரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புவதால், நீங்கள் அவரின் சித்தத்தை நாடினால் அவருடன் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற வழியில் எப்படி வாழ்வதென கர்த்தர் உங்களுக்கு போதிப்பார்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

மத்தேயு 18:21–35

நான் கர்த்தரிடமிருந்து மன்னிப்பு பெற வேண்டுமானால், நான் பிறரை மன்னிக்க வேண்டும்.

அவன் ஒருவரை ஏழுமுறை மன்னிக்க முடியும் என்ற பேதுருவின் ஆலோசனை மிக தாராளமானதாகத் தோன்றலாம், ஆனால் இயேசு ஒரு உயர்ந்த நியாயப்பிரமாணத்தை போதித்தார். அவரது பதிலான, “ஏழுதரம் மாத்திரமல்ல, ஏழெழுபது தரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்,” (வசனம் 22), என்பது எண்களைப்பற்றி போதித்தது அல்ல, ஆனால் மன்னித்தலைப்பற்றிய கிறிஸ்துவின் மனோபாவத்தைப்பற்றியே. இரக்கமற்ற வேலைக்காரனின் உவமையை நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் தேவனின் இரக்கத்தையும் மனதுருக்கத்தையும் உணர்ந்த நேரங்களைப்பற்றி சிந்திக்கவும். உங்களிடமிருந்து இரக்கத்தையும் மனதுருக்கத்தையும் உணர வேண்டிய ஒருவர் இருக்கிறாரா?

மூப்பர் டேவிட் ஈ. சோரென்சன் இந்த முக்கியமான எச்சரிக்கையைக் கொடுத்தார்: “நம்மை காயப்படுத்தும் ஒரு அண்டை வீட்டாரை நாம் மன்னிக்க வேண்டும் என்றாலும், அந்த காயம் மீண்டும் நிகழாமல் தடுக்க நாம் இன்னும் ஆக்கபூர்வமாக உழைக்க வேண்டும். … மன்னிப்பதற்கு நாம் தீமையை ஏற்கவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ தேவையில்லை. … ஆனால் நாம் பாவத்திற்கு எதிராக போராடும்போது, வெறுப்பு அல்லது கோபத்தை நம் எண்ணங்கள் அல்லது செயல்களை கட்டுப்படுத்த அனுமதிக்கக்கூடாது” (“Forgiveness Will Change Bitterness to Love,” Liahona, May 2003, 12).

லூக்கா 10:1–20

எழுபதின்மர் யார்?

பழைய ஏற்பாட்டு காலங்களில் ஏற்படுத்தப்பட்ட மாதிரியைப் பின்பற்றி (யாத்திராகமம் 24:1; எண்ணாகமம் 11:16 பார்க்கவும்), அவரைக் குறித்து சாட்சியளிக்கவும், அவரது சுவிசேஷத்தை பிரசங்கிக்கவும், அவரது பணியில் உதவவும் அவரது பன்னிரு அப்போஸ்தலர்களுடன் கூடுதலாக “பிற எழுபதின்மரை இயேசு கிறிஸ்து நியமித்தார்.” மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் இந்த மாதிரி தொடர்கிறது. உலகம் முழுவதற்கும் இயேசு கிறிஸ்துவின் விசேஷித்த சாட்சிகளாக அவர்களது ஊழியத்தில் பன்னிருவருக்கு உதவி செய்ய எழுபதின்மர் அழைக்கப்படுகின்றனர்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:25–26,33–34, 97 ஐயும் பார்க்கவும்.

லூக்கா 10:25–37

நித்திய ஜீவனைப்பெற நான் தேவனை நேசிக்க வேண்டும் மற்றும் என் அயலானையும் என்னைப்போல நேசிக்க வேண்டும்.

இரண்டு கேள்விகளுக்கு இயேசுவின் வழியில் பதிலளித்த நல்ல சமாரியனின் உவமையை நினைவுகூர்வது உதவிகரமாக இருக்கும்: “நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?” மற்றும் “எனக்குப் பிறன் யார்?” (லூக்கா 10:25, 29). இந்த உவமையை நீங்கள் வாசிக்கும்போது, அந்த கேள்வியை மனதில் வையுங்கள். நீங்கள் என்ன கேள்விகளைக் காண்கிறீர்கள்?

இயேசுவின் நாளில், யூதர்களுக்கும் சமாரியர்களுக்குமிடையிலான வெறுப்பு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நீடித்தன. சமாரியர்கள் புறஜாதியாருடன் திருமணம் செய்துகொண்ட, சமாரியாவில் வாழ்ந்த யூதர்களின் வழித்தோன்றல்கள். சமாரியர்கள் புறஜாதியினருடன் தொடர்பால் கெட்டுப்போய் மதமாறுபாடடைந்தவர்கள் என யூதர்கள் உணர்ந்தனர். சமாரியா வழியாக கடந்து செல்வதைத் தவிர்க்க தங்கள் வழியை விட்டு பல மைல்கள் யூதர்கள் நடப்பார்கள். (லூக்கா 9:52–54; 17:11–18; யோவான் 4:9; 8:48 ஐயும் பார்க்கவும்.)

மனதுருக்கம் மற்றும் அயலானை நேசிக்கும் எடுத்துக்காட்டாக யூதர்களால் வெறுக்கப்பட்ட ஒருவனாகிய சமாரியனை இரட்சகர் ஏன் தேர்ந்தெடுத்தார் என நீங்கள் நினைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்ய வேண்டுமென இந்த உவமை உணர்த்துகிறது?

மோசியா 2:17; “Parable of the Good Samaritan” and “A Good Samaritan” (videos), ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

லூக்கா 10:38–42

நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அன்றாட தேர்ந்தெடுப்புகளைச் செய்து நாம் “நல்ல பங்கை” தெரிந்து கொள்கிறோம்.

லூக்கா10:38–42ல், இயேசு தன் நேரத்தை செலவழிக்கும் விதத்தைப்பற்றி வித்தியாசமாக சிந்திக்கும்படி மார்த்தாளை மெதுவாக அழைத்தார். இந்த வசனங்களை மேற்கோள் காட்டிய பிறகு, சகோதரி கரோல் எப். மெக்கான்கி போதித்தார்: “நாம் பரிசுத்தமாக இருக்க விரும்பினால், நாம் இஸ்ரவேலின் பரிசுத்தரின் பாதத்தில் உட்கார்ந்து பரிசுத்தத்திற்கு நேரம் கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். தொலைபேசியையும், முடிவற்ற செயல்களின் பட்டியலையும், உலகத்தின் அக்கறையையும் நாம் ஒதுக்கி வைக்கிறோமா? ஜெபம், படிப்பு மற்றும் தேவனின் வார்த்தைக்கு செவிசாய்ப்பது அவரது சுத்தப்படுத்தி குணமாக்கும் அன்பை நம் ஆத்துமாக்களுக்குள் அழைக்கிறது. அவருடைய பரிசுத்தமான மற்றும் பரிசுத்தமாக்கும் ஆவியால் நாம் நிரப்பப்படுவதற்கு, நாம் பரிசுத்தமாக இருக்க நேரம் ஒதுக்குவோமாக” (“The Beauty of Holiness,” Liahona, May 2017, 11). நீங்கள் உங்கள் நேரத்தை எப்படி செலவழிக்கிறீர்கள் என்பதை ஆராய விரும்பலாம், நல்ல காரியங்களில் கூட. உங்கள் கவனத்திற்கு அதிகத் தகுதியான “தேவையானது” (வசனம் 42) ஏதாவது இருக்கிறதா?

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

மத்தேயு 18:1–11.நாம் சிறு பிள்ளைகள் போல் ஆக வேண்டும் என இயேசு ஏன் விரும்புகிறார்? நாம் இன்னும் கிறிஸ்துவைப் போன்றவர்களாக மாறக்கூடிய பிள்ளைகள் பெற்றுள்ள பண்புகள் என்ன? (மோசியா 3:19 பார்க்கவும்).

படம்
பிள்ளைகளுடன் இயேசு

தன் சீஷர்கள் சிறு பிள்ளைகள் போல் ஆக வேண்டும் என இயேசு விரும்புகிறார்.

மத்தேயு 18:15. மத்தேயு 18:15ல் உள்ள ஆலோசனையை நம் குடும்ப தொடர்புகளுக்கு எப்படிப் பயன்படுத்தலாம்? அதைச் செய்வது நம் குடும்பத்தை எவ்வாறு ஆசீர்வதிக்க முடியும்?

மத்தேயு 18:21–35.இயேசு கிறிஸ்துவைப்பற்றி இந்த உவமை உங்களுக்கு என்ன போதிக்கிறது? நமது சோதனைகளில் நாம் எவ்வாறு நிலைத்திருக்கமுடியுமென்பதைப்பற்றி இது நமக்கு எதைப் போதிக்கிறது?

லூக்கா 10:25–37. குடும்ப உறுப்பினர்கள் ஆடைகளை அணிந்து இந்த உவமையை நடிப்பதை அனுபவிக்கலாம். உவமையில் உள்ள வெவ்வேறு நபர்களைப் போல நாம் சில சமயங்களில் எப்படி இருக்கிறோம்? இரட்சகர் நமக்கு ஒரு நல்ல மேய்ப்பனைப் போல எப்படி இருக்கிறார்? நாம் எப்படி நல்ல சமாரியன் போல இருக்க முடியும்?

இந்த உவமையில் உள்ள உண்மைகளை ஆதரிக்கும் ஒரு பாடல் அல்லது பிள்ளைகள் பாடலை ஒன்றாக பாடுவதை நீங்கள் கருத்தில் கொள்ளலாம். ஒரு எடுத்துக்காட்டு “Lord, I Would Follow Thee” (Hymns, no. 220), ஆனால் பிற அநேகம் இருக்கின்றன. குடும்ப உறுப்பினர்கள் ஒரு துதிப்பாடல் அல்லது பாடலைக் கண்டுபிடித்து அது உவமையுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை விளக்கி மகிழலாம்.

லூக்கா 10:38–42. உங்கள் குடும்ப நிகழ்வுகளில் ஆவிக்குரியவற்றை பொருத்துவது எப்போதாவது கஷ்டமாக இருக்கிறதா? இதை எப்படி செய்வதென்பதை, மரியாள் மற்றும் மார்த்தாளின் கதை குடும்ப ஆலோனைக்குழுவுக்கு அல்லது குடும்ப இல்ல மாலைக்கு உணர்த்த முடியும். குடும்பமாக “நல்ல பங்கை” தெரிந்துகொள்ளும் வழிகளை நீங்கள் பட்டியலிடலாம் (லூக்கா 10:42).

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில் என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Jesus Said Love Everyone,” Children’s Songbook, 61.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

அன்பான சூழ்நிலையை வளர்க்கவும். ஒருவருக்கொருவரைப்பற்றி குடும்ப அங்கத்தினர்கள் உணர்தல் மற்றும் நடத்தும் விதம் உங்கள் வீட்டின் ஆவிக்கு ஆழமான செல்வாக்கு ஏற்படுத்தும். அனுபவங்களையும், கேள்விகளையும், சாட்சிகளையும் பகிர்ந்துகொள்ளுவதை எல்லாரும் பாதுகாப்பாக உணர அன்பான மரியாதை மிக்க வீட்டை ஸ்தாபிக்க தங்கள் பங்கை செய்ய குடும்ப அங்கத்தினர்களுக்கு உதவவும். (Teaching in the Savior’s Way, 15 பார்க்கவும்.)

படம்
மரியாள் மற்றும் மார்த்தாளுடன் கிறிஸ்து

மரியாள் மற்றும் மார்த்தாளின் வீட்டில் கிறிஸ்து–வால்ட்டர் ரானே

அச்சிடவும்