புதிய ஏற்பாடு 2023
ஏப்ரல் 10–16. மத்தேயு 15–17; மாற்கு 7–9: “நீர் கிறிஸ்து”


“ஏப்ரல் 10–16. மத்தேயு 15–17; மாற்கு 7–9: ‘நீர் கிறிஸ்து’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“ஏப்ரல் 10–16. மத்தேயு 15–17; மாற்கு 7–9,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
கிறிஸ்து மறுரூபமாகுதல்

மறுரூபமாகுதல்–கார்ல் ஹென்ரிச் ப்ளாக்

ஏப்ரல் 10–16

மத்தேயு 15–17: மாற்கு 7–9

“நீர் கிறிஸ்து”

வேதத்தை வாசிப்பது உங்கள் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியை அழைக்கிறது. இயேசு கிறிஸ்துவைப்பற்றி சாட்சியளிப்பது பரிசுத்த ஆவியானவரின் முக்கிய ஊழியங்களில் ஒன்றாயிருக்கிறது. இந்த வாரம் நீங்கள் வேதங்களைப் படிக்கும்போது, இரட்சகரைப்பற்றிய உங்கள் சாட்சியை வலுப்படுத்தும் ஆவிக்குரிய உணர்வுகளுக்கு கவனம் செலுத்துங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

பரிசேயரும் சதுசேயரும் இயேசு “வானத்திலிருந்து ஒரு அடையாளம்” காட்ட வேண்டும் என கேட்பது விசித்திரமாயில்லையா? அவரது அநேக நன்கு அறியப்பட்ட அற்புதங்கள் போதாதா? அவரது வல்லமையான போதனைகள் அல்லது அவர் நிறைவேற்றியிருக்கிற பூர்வ கால தீர்க்கதரிசனங்கள் என்னவாயின? அவர்களது கோரிக்கைகள் அடையாளங்களின் குறைவினால் தூண்டப்படவில்லை, ஆனால் “அடையாளங்களை பகுத்தறிந்து” அவற்றை ஏற்க மனமில்லாததுதான். (மத்தேயு 16:1–4 பார்க்கவும்.)

பரிசேயர் மற்றும் சதுசேயர் போல இரட்சகரின் அற்புதங்களைப் பார்த்து, அவரது போதனைகளை பேதுரு கேட்டிருக்கிறான். ஆனால் பேதுருவின் நிச்சயமான சாட்சியாகிய, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்பது “மாம்சம் மற்றும் இரத்தத்தின்” சரீர உணர்வுகள் மூலம் வரவில்லை. “பரலோகத்திலிருக்கிற நமது பிதாவால்” அவனது சாட்சி அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. தன் ஊழியர்களுக்கு பரலோகத்திலிருந்து வந்த வெளிப்படுத்தலான வெளிப்படுத்தல் அப்போதும் இப்போதும் இரட்சகர் அதன் மீது தன் சபையைக் கட்டிய கன்மலையாகும். இயேசுவே கிறிஸ்து மற்றும் அவரது ஊழியர்கள் “பரலோகத்தின் திறவுகோல்களை” தரித்திருக்கிறார்கள் என்ற வெளிப்படுத்தலான நமது சீஷத்துவத்தை அதன்மீது நாம் கட்டக்கூடிய கன்மலை இதுவே. இந்த அஸ்திபாரத்தின்மீது நாம் கட்டும்போது, “பாதாளத்தின் வாசல்கள் அதை [நம்மை] மேற்கொள்ளுவதில்லை.” (மத்தேயு 16:15–19).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

மத்தேயு 16:13–17

இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி வெளிப்படுத்தலால் வருகிறது.

“மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?” என்று இன்று இயேசு கிறிஸ்து ஜனங்களை கேட்டால், அவர்கள் என்ன சொல்லக்கூடும்? இயேசு உங்களிடம் “நான் யார் என்று சொல்லுகிறாய்” என கேட்டால் நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்? (மத்தேயு 16:13–15 பார்க்கவும்.)

இரட்சகரைப்பற்றிய உங்கள் சாட்சியையும் அதை எப்படி பெற்றீர்கள் எனவும் சிந்திக்கவும். அதைப் பெலப்படுத்தக்கூடிய மத்தேயு 16:15–17லிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்? சாட்சி மற்றும் தனிப்பட்ட வெளிப்படுத்தலைப்பற்றி நீங்கள் அதிகம் அறிய விரும்பினால், இந்த வசனங்களை ஆராயவும்: யோவான் 15:26; 2 நேபி 31:17–18; ஆல்மா 5:45–48; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 8:2–3.

“President Nelson: Hear Him—Personal Revelation” (video), ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

மத்தேயு 16:13–19; 17:1–9; மாற்கு 9:2–9

“பரலோக இராஜ்யத்தின் திறவுகோல்கள்” இன்று பூமியில் உள்ளன.

பேதுருவுக்கு இரட்சகர் கொடுப்பதாக வாக்குத்தத்தம் செய்த “பரலோக இராஜ்யத்தின் திறவுகோல்கள்,” ஆசாரியத்துவ திறவுகோல்கள் (மத்தேயு 16:19). ஆசாரியத்துவ திறவுகோல்கள் யாவை? நமக்கு ஏன் அவை தேவையாயிருக்கிறது? மத்தேயுw 16:13–19ல் இரட்சகரின் வாக்குறுதியைப்பற்றி நீங்கள் படிக்கும்போதும் அது நிறைவேறுவதை மத்தேயு 17:1–9; மாற்கு 9:2–9 ல் பார்க்கும்போதும் இக்கேள்விகளைச் சிந்திக்கவும் (ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, மாற்கு 9:3 [மாற்கு 9:4, அடிக்குறிப்பு a] ஐயும் பார்க்கவும்).

ஆசாரியத்துவ திறவுகோல்களைப்பற்றி நீங்கள் அறிய உதவக்கூடிய பிற ஆதாரங்களில் அடங்குவன, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 65:2; 107:18–20; 110:11–16; 128:9–11; “Keys of the Priesthood” in Guide to the Scriptures (scriptures.ChurchofJesusChrist.org); and Elder Gary E. Stevenson’s message “Where Are the Keys and Authority of the Priesthood?,” (Liahona, May 2016, 29–32). இந்த ஆதாரங்களைப் படிக்கும்போது, ஆசாரியத்துவ திறவுகோல்கள் மற்றும் அவற்றிலிருந்து வரும் ஆசீர்வாதங்களைப்பற்றி நீங்கள் கற்றுக்கொள்வதைப் பட்டியலிடுவதைக் கருத்தில் கொள்ளவும். ஆசாரியத்துவ சேவையை வழிநடத்துவதற்கான உரிமைக்கு ஒரு திறவுகோலை ஒரு நல்ல அடையாளமாக ஏன் நினைக்கிறீர்கள்?

Dallin H. Oaks, “The Melchizedek Priesthood and and the Keys,” Liahona, May 2020, 69–72; Bible Dictionary, “Transfiguration, Mount of ஐயும் பார்க்கவும்.”

படம்
திறவுகோல்களைப் பேதுரு தரித்திருக்கிற சிலை

ஆசாரியத்துவத் திறவுகோல்கள் ஆசாரியத்துவத்தின் பயன்பாட்டை வழிநடத்தும் அதிகாரமாகும்.

மத்தேயு 17:14–21; மாற்கு 9:14–29

அதிக விசுவாசத்தை நாடும்போது, நான் பெற்றிருக்கிற விசுவாசத்தோடு நான் தொடங்கலாம்.

மத்தேயு 17 மற்றும் மாற்கு 9ல் குறிப்பிடப்பட்டிருக்கிற அந்த தகப்பன் தன் மகனை இயேசு குணமாக்க முடியுமா என நிச்சயமில்லாதிருக்க காரணங்கள் இருந்தன. தன் மகனை குணமாக்குமாறு அவன் இயேசுவின் சீஷர்களைக் கேட்டிருந்தான், அவர்களால் முடியவில்லை. ஆனால் அவன் இரட்சகரிடம் ஒரு அற்புதத்தைக் கேட்டபோது, அவன் விசுவாசத்தை வெளிப்படுத்தத் தேர்ந்தெடுத்தான். “விசுவாசிக்கிறேன் ஆண்டவரே”, அவன் சொன்னான். பின்பு அவனது விசுவாசம் பரிபூரணமானது அல்ல என்பதை ஏற்றுக்கொண்டவனாய் சொன்னான், “என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும்.”

இந்த அற்புதத்தைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு என்ன போதிக்கிறார்? உங்கள் விசுவாசத்தை அதிகரிக்க பரலோக பிதா உங்களுக்கு எவ்விதம் உதவியிருக்கிறார்? நீங்கள் ஏற்கனவே பெற்றுள்ள விசுவாசத்தின் மீது கட்ட உங்களால் என்ன செய்ய முடியும்? ஒருவேளை, உங்கள் விசுவாசத்தை பெலப்படுத்திய வசனங்களின் பட்டியல், மாநாட்டு செய்திகள் அல்லது உங்கள் அனுபவங்களை நீங்கள் தொகுக்கலாம்.

Jeffrey R. Holland, “Lord, I Believe,” Liahona, May 2013, 93–95 ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

மத்தேயு 15:7–9; மாற்கு 7:6–7.தேவனை நம் உதடுகளால், அல்லது வார்த்தைகளால் கனம்பண்ணுவதற்கும், நம் இருதயங்களால் அவரை கனம்பண்ணுவதற்கும் இடையில் என்ன வித்தியாசம்?

மத்தேயு 15:17–20; மாற்கு 7:18–23நாம் ஏன் நம் வாயில் வைப்பதைக் குறித்து கவனமாக இருக்கிறோம்? இந்த வசனங்களில் இயேசு கற்பித்ததன் அடிப்படையில், நம் வாயில் இருந்து மற்றும் நம் இருதயத்தில் இருந்து வருவதுபற்றி ஏன் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்? நாம் எப்படி நமது இருதயங்களை சுத்தமாக வைத்திருக்க முடியும்?

மத்தேயு 16:15–17.இயேசுவே “கிறிஸ்து, ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்” என்பதை தேவன் நமக்கு எப்படி வெளிப்படுத்துகிறார்? (வசனம் 16). அவரிடமிருந்து இந்த வெளிப்பாட்டைப் பெற நாம் எவ்வாறு நம்மை தயார்படுத்திக் கொள்ள முடியும்?

மத்தேயு 16:13–19; 17:1–9ஆசாரியத்துவ திறவுகோல்களைப்பற்றி பிள்ளைகளுக்கு போதிக்க, அவரது காருக்குள் சாவியை வைத்து அடைக்கப்பட்ட மூப்பர் காரி ஈ. ஸ்டீவென்சனின் கதையை நீங்கள் சொல்லலாம் (“Where Are the Keys?” on ChurchofJesusChrist.org காணொலி பார்க்கவும்). வீடு, கார் அல்லது பிற பூட்டுக்களை திறக்க உங்கள் பிள்ளைகள் திறவுகோல்களைப் பயன்படுத்த நீங்கள் அனுமதிக்கலாம். சபைத் தலைவரின் படத்தைக் காட்டி, பேதுருவைப் போல ஆசாரியத்துவ திறவுகோல்கள் அனைத்தையும் அவர் தரித்திருக்கிறார் என சாட்சியளிப்பதைக் கருத்தில் கொள்ளவும்.

மத்தேயு 17:20.இயேசு கிறிஸ்துவில் விசுவாசமுடன் தீர்க்கதரிசிகள் மலைகளை உண்மையாகவே நகர்த்தியிருக்கிறார்கள் (யாக்கோபு 4:6; மோசே 7:13 பார்க்கவும்). ஆனால் பொதுவாக, அது நமக்குத் தேவையான அற்புதம் அல்ல. தலைவர் எம். ரசல் பல்லார்ட் போதித்தார்: “கடுகு விதையைப் போல நமக்கு நம்பிக்கை இருந்தால், குடும்ப உறுப்பினர்கள், சபை உறுப்பினர்கள் மற்றும் இன்னும் சபையில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் உட்பட தேவனின் பிள்ளைகளுடன் நாம் பணியாற்றும்போது, நம்முன் இருக்கும் பணிகளில் மனச்சோர்வின் மலைகள் மற்றும் சந்தேகங்களை அகற்ற கர்த்தர் நமக்கு உதவ முடியும்.” (“Precious Gifts from God,” Liahona, May 2018, 10). நமது வாழ்க்கையில் நகர்த்தப்பட வேண்டிய மலைகளில் சில யாவை? இந்த மலைகளை நகர்த்த நமக்குதவ தேவ வல்லமையில் விசுவாசத்தை நாம் எவ்வாறு காட்ட முடியும்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I Believe in Christ,” Hymns, no. 134.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

அடிக்கடி ஒன்று கூடுங்கள். தலைவர் ஹென்றி பி. ஐரிங் போதித்தார்: “இயேசு கிறிஸ்துவின் கோட்பாட்டை ஒன்றாக கற்றுக்கொள்ள பிள்ளைகளைக் கூட்டிச் சேர்க்கும் சந்தர்ப்பத்தை ஒருபோதும் தவற விடாதீர். எதிரியின் முயற்சியோடு ஒப்பிடும்போது அத்தகைய சந்தர்ப்பங்கள் மிக அரிதானவைகளே” (“The Power of Teaching Doctrine,” Ensign, May 1999, 74).

படம்
இயேசுவின் முன் நோயுற்ற மகனுடன் ஒரு மனிதன்

ஆண்டவரே, என் குமாரனை உம்மிடம் கொண்டுவந்திருக்கிறேன்–வால்டர் ரானே

அச்சிடவும்