புதிய ஏற்பாடு 2023
இளம் பிள்ளைகளுக்கு போதித்தல்


“இளம் பிள்ளைகளுக்கு போதித்தல்”, என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“இளம் பிள்ளைகளுக்குப் போதித்தல்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

இளம் பிள்ளைகளுக்கு போதித்தல்

உங்கள் குடும்பத்தில் இளம்பிள்ளைகள் இருந்தால், அவர்கள் கற்றுக்கொள்ள உதவ சில பயிற்சிகள் இங்கே இருக்கின்றன:

  • பாடவும். துதிப்பாடல்கள் மற்றும் பிள்ளைகள் பாடல் புத்தகத்திலிருந்து பாடல்கள் கோட்பாட்டை வல்லமையாக போதிக்கிறது. பிள்ளைகள் பாடல் புஸ்தகத்தின் பின்புறத்திலுள்ள தலைப்பு குறிப்பில் நீங்கள் கற்பிக்கிற சுவிசேஷ கொள்கைகளுக்கு தொடர்புடைய பாடல்களைப் பயன்படுத்தவும். பாடல்களின் செய்திகளை தங்கள் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்த உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். (இந்த புத்தகத்தில் “உங்கள் சுவிசேஷம் கற்றலில் பரிசுத்த இசையைச் சேர்த்தல்”ஐயும் பார்க்கவும்.)

  • ஒரு கதையை கேட்கவும் அல்லது நடிக்கவும். வேதங்களிலிருந்து, உங்கள் வாழ்க்கையிலிருந்து, உங்கள் வாழ்க்கையிலிருந்து, உங்கள் குடும்ப வரலாற்றிலிருந்து அல்லது சபை பத்திரிகைகளிலிருந்து இளம் பிள்ளைகள் கதைகளை விரும்புகிறார்கள். கதை சொல்வதில் அவர்களை ஈடுபடுத்த வழிகளைத் தேடவும். அவர்கள் படங்கள் அல்லது பொருட்களை தூக்கிப்பிடிக்கலாம், அவர்கள் கேட்பதை படமாக வரையலாம், கதையை நடிக்கலாம் அல்லது கதை சொல்லவும் உதவலாம். நீங்கள் பகிர்ந்துகொள்கிற கதைகளிலுள்ள சுவிசேஷ சத்தியங்களை அடையாளம் காண உங்கள் பிள்ளைகளுக்கு உதவவும்.

  • ஒரு வசனம் வாசிக்கவும். இளம் பிள்ளைகள் அதிகம் வாசிக்க முடியாமலிருக்கலாம், ஆனால் வேதங்களிலிருந்து கற்றுக்கொள்ள இப்போதும் நீங்கள் ஈடுபடுத்தலாம். ஒரு வசனம், முக்கிய சொற்றொடர் அல்லது வார்த்தையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியதிருக்கலாம். ஒருசில முறைகள் திரும்பத்திரும்ப அவைகளை அவர்கள் கூறினால் வேதங்களிலிருந்து சிறு சொற்றொடர்களை அவர்களால் மனப்பாடம் செய்ய முடியலாம். அவர்கள் தேவ வார்த்தையைக் கேட்கும்போது, அவர்கள் பரிசுத்த ஆவியை உணர்வார்கள்.

  • ஒரு படத்தைப் பார்க்கவும் அல்லது ஒரு காணொலி பார்க்கவும். நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு சுவிசேஷ கொள்கை அல்லது வேத கதை தொடர்புள்ள படம் அல்லது காணொலி காட்டும்போது, அவர்கள் பார்ப்பதிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள உதவுகிற கேள்விகளைக் கேட்கவும். உதாரணமாக, “இப்படத்தில் அல்லது காணொலியில் என்ன நடக்கிறது?” என நீங்கள் கேட்கலாம். இது உங்களை எவ்வாறு உணரச் செய்கிறது?” The Gospel Media app, medialibrary.ChurchofJesusChrist.org, மற்றும் children.ChurchofJesusChrist.org ஆகியவை படங்களையும் காணொலிகளையும் தேட சிறந்த இடங்கள்.

  • உருவாக்குங்கள். பிள்ளைகள், அவர்கள் கற்றுக்கொள்கிற கதை அல்லது கொள்கைகளுக்கு தொடர்புடைய எதாவதொன்றை கட்டலாம், வரையலாம் அல்லது வண்ணமிடலாம்.

  • பொருள்சார் பாடங்களில் பங்கேற்கவும். புரிந்துகொள்ள கஷ்டமான சுவிசேஷ கொள்கைகளை பிள்ளைகள் புரிந்துகொள்ள உதவ ஒரு எளிய பொருள்சார் பாடம் உதவக்கூடும். பொருள்சார் பாடங்களைப் பயன்படுத்தும்போது, உங்கள் பிள்ளைகள் பங்கேற்க வழிகளைக் கண்டு பிடிக்கவும். ஒரு காட்சியைப் பார்ப்பதை விட ஒரு உரையாடல் அனுபவத்திலிருந்து அவர்கள் அதிகம் கற்பார்கள்.

  • பாத்திர-நடிப்பு. நிஜ வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை பிள்ளைகள் நடிக்கும்போது ஒரு சுவிசேஷக் கொள்கை தங்கள் வாழ்க்கைக்கு எப்படி பொருந்துகிறதென்பதை அவர்களால் சிறந்த முறையில் புரிந்துகொள்ள முடியும்.

  • பயிற்சிகளை திரும்ப செய்யவும். இளம் பிள்ளைகள் அவற்றைப் புரிந்துகொள்ள கருத்துக்களைப் பலமுறை கேட்க வேண்டியதிருக்கும். அடிக்கடி கதைகள் அல்லது பயிற்சிகளை திரும்ப செய்ய பயப்பட வேண்டாம். உதாரணமாக, வேதங்களிலிருந்து வாசித்தல், உங்கள் சொந்த வார்த்தைகளில் சுருக்கிச் சொல்லுதல், ஒரு காணொலியைக் காட்டுதல், நீங்கள் கதைகூற பிள்ளைகளை உதவ வைத்தல், கதையை நடித்துக்காட்ட அழைத்தல் போன்று. ஒரு வேதக் கதையை பல தடவை பல வழிகளில் நீங்கள் பகிர்ந்துகொள்ளக்கூடும்.

படம்
குடும்பம் வேதங்களைப் படித்தல்

அச்சிடவும்