புதிய ஏற்பாடு 2023
உங்கள் குடும்ப வேதப் படிப்பை மேம்படுத்த ஆலோசனைகள்


“உங்கள் குடும்ப வேதப் படிப்பை மேம்படுத்த ஆலோசனைகள்”,என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“உங்கள் குடும்ப வேதப் படிப்பை மேம்படுத்த ஆலோசனைகள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
தாயும் குழந்தையும் வேதங்களைப் படிக்கிறார்கள்

உங்கள் குடும்ப வேதப் படிப்பை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள்

உங்கள் குடும்பம் பரிசுத்த ஆவியின் செல்வாக்கை உணரவும் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளவும் வழக்கமான குடும்ப வேதப் படிப்பு ஒரு வல்லமை வாய்ந்த வழியாகும். ஒரு குடும்பமாக நீங்கள் எவ்வளவு படித்தீர்கள் எவ்வளவு நேரம் படித்தீர்கள் என்பது, உங்கள் முயற்சிகளில் சீராக இருப்பதைப்போல முக்கியமானதல்ல. உங்கள் குடும்ப வாழ்க்கையில் வேதப் படிப்பை ஒரு முக்கியமான பகுதியாக நீங்கள் ஆக்கும்போது, பரலோக பிதாவிடத்திலும், இயேசு கிறிஸ்துவண்டையும் நெருக்கமாக வரவும் தேவனுடைய வார்த்தையின் அஸ்திபாரத்தின்மேல் அவர்களுடைய சாட்சிகளைக் கட்டவும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு நீங்கள் உதவுவீர்கள். பின்வரும் கேள்விகளுக்கு ஒன்றாக ஆலோசனை வழங்குவதைக் கருத்தில் கொள்ளவும்:

  • தனித்தனியாக வசனங்களைப் படிக்க உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எப்படி ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தலாம்?

  • உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் தாங்கள் கற்பதை பகிர்ந்துகொள்ள ஊக்குவிக்க உங்களால் என்ன செய்ய முடியும்?

  • புதிய ஏற்பாட்டில் அன்றாட போதித்தலின் தருணங்களில் நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிற கொள்கைகளை நீங்கள் எவ்வாறு வலியுறுத்தமுடியும்?

சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதலுக்கு வீடுதான் சிறந்த இடமென்பதை நினைவு வைத்திருங்கள். சபை வகுப்பில் சாத்தியமில்லாத வழிகளில், வீட்டில் சுவிசேஷத்தை நீங்கள் கற்றுக்கொள்ளவும் போதிக்கவும் முடியும். வேதங்களிலிருந்து உங்கள் குடும்பத்தினர் கற்றுக்கொள்ள உதவும் வழிகளை நீங்கள் சிந்திக்கும்போது ஆக்கபூர்வமாயிருங்கள். உங்கள் குடும்ப வேதப் படிப்பை மேம்படுத்த பின்வரும் ஆலோசனைகளில் சிலவற்றை கருத்தில் கொள்ளுங்கள்.

படம்
குடும்பம் மற்றும் சபைத் தலைவர்கள் ஒரு வீட்டில் ஒன்றாக பாடுகிறார்கள்

இசையைப் பயன்படுத்தவும்

வேதங்களில் போதிக்கப்பட்ட கொள்கைகளை வலுப்படுத்துகிற பாடல்களைப் பாடவும். ஆலோசனையளிக்கப்பட்ட பாடல் அல்லது ஒவ்வொரு வார குறிப்பிலும் பட்டியலிடப்பட்டுள்ள பிள்ளைகளின் பாடல். பாடலின் வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களைப்பற்றி நீங்கள் குடும்பத்தினரிடம் கேள்விகள் கேட்கலாம். பாடுவதுடன், அந்தப் பாடல்களுக்கேற்ற செயல்களை உங்கள் குடும்பத்தினர் செய்யலாம் அல்லது அவர்கள் பிற செயல்கள் செய்யும்போது பின்னணி இசையாக பாடல்களைக் கேட்கலாம். அதிக ஆலோசனைகளுக்கு, “உங்கள் சுவிசேஷம் கற்றலில் பரிசுத்த இசையை சேர்த்தல்” எனும் இந்த ஆதாரத்தில் பார்க்கவும்.

அர்த்தமுள்ள வேத வசனங்களைப் பகிர்ந்துகொள்ளவும்

அவர்களுடைய தனிப்பட்ட படிப்பின்போது அர்த்தமுள்ளதாக அவர்கள் கண்டுபிடித்த வேதத்தின் பத்திகளைப் பகிர்ந்துகொள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு நேரம் ஒதுக்கவும்.

உங்கள் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தவும்

நீங்கள் படிக்கிற வேதங்களிலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டவற்றை அவர்களுடைய சொந்த வார்த்தைகளில் தொகுக்கும்படி குடும்ப அங்கத்தினர்களை அழைக்கவும்.

உங்கள் வாழ்க்கையில் வேதங்களைப் பிரயோகிக்கவும்

ஒரு வேத பாகத்தைப் படித்த பின்னர், அவர்களுடைய வாழ்க்கையில் பொருந்துகிற வழிகளைப் பகிர்ந்துகொள்ள குடும்ப உறுப்பினர்களைக் கேட்கவும்.

ஒரு கேள்வியைக் கேட்கவும்

சுவிசேஷ கேள்வி ஒன்றைக் கேட்க குடும்ப உறுப்பினர்களை அழைத்து, பின்னர் அந்த கேள்விக்கு பதிலளிக்க உதவுகிற வார்த்தைகளுக்காக தேடுவதில் நேரத்தை செலவழிக்கவும்.

ஒரு வசனத்தை காட்சியாக வைக்கவும்

அர்த்தமுள்ளதாக நீங்கள் காண்கிற ஒரு வசனத்தை தேர்ந்தெடுத்து, குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி பார்க்கக்கூடிய ஒரு இடத்தில் அதைக் காட்சியாக வைக்கவும். காட்சியாக வைக்க ஒரு வேத வசனத்தை தேர்ந்தெடுப்பதில் முறை எடுக்க பிற குடும்ப உறுப்பினர்களை அழைக்கவும்.

படம்
தாய் மற்றும் குழந்தைகள் வேதங்களைப் படிக்கிறார்கள்

ஒரு வசனப் பட்டியலை உருவாக்கவும்

வரப்போகிற வாரத்தின்போது கலந்துரையாட நீங்கள் விரும்புகிற பல்வேறு வசனங்களை ஒரு குடும்பமாக தேர்ந்தெடுக்கவும்.

வேத வசனங்களை மனப்பாடம் செய்யவும்

உங்கள் குடும்பத்துக்கு அர்த்தமுள்ளதாயிருக்கிற ஒரு வேத பத்தியைத் தேர்ந்தெடுத்து, அதை தினமும் திருப்பி திருப்பி சொல்வதால், அல்லது மனப்பாட விளையாட்டை விளையாடுவதால் அதை மனப்பாடம் செய்ய குடும்ப அங்கத்தினர்களை அழைக்கவும்.

பொருள்சார் பாடங்களைப் பகிர்ந்துகொள்ளவும்

ஒரு குடும்பமாக நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் வேத பாகங்களில் உள்ள சுவிசேஷக் கொள்கைகளுக்குத் தொடர்புள்ள பொருள்களை கண்டறியவும். வேதங்களிலுள்ள போதனைகளுக்கு ஒவ்வொரு பொருளும் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறதென்பதைப்பற்றிப் பேச குடும்ப உறுப்பினர்களை அழைக்கவும்.

ஒரு தலைப்பை எடுத்துக்கொள்ளவும்

குடும்பம் ஒன்றுசேர்ந்து படிக்கப்போகிற ஒரு தலைப்பை தேர்ந்தெடுப்பதில் குடும்ப உறுப்பினர்கள் முறை எடுத்துக்கொள்ளட்டும். தலைப்பைப்பற்றி வேத பத்தியைக் கண்டுபிடிக்க Topical Guide, Bible Dictionary, அல்லது Guide to the Scriptures (scriptures.ChurchofJesusChrist.org) பயன்படுத்தவும்.

ஒரு படத்தை வரையவும்

ஒரு குடும்பமாக ஒரு சில வசனங்களை வாசித்து, பின்னர், நீங்கள் படித்ததற்கு தொடர்புடைய ஒன்றை வரைய குடும்ப உறுப்பினர்களுக்கு நேரத்தை அனுமதிக்கவும். ஒருவருக்கொருவரின் ஓவியங்களைப்பற்றி கலந்துரையாட நேரம் செலவழிக்கவும்.

ஒரு கதையை நடிக்கவும்

ஒரு கதையை வாசித்த பின்னர், அதை நடித்துக்காட்ட குடும்ப உறுப்பினர்களை அழைக்கவும். அதன் பின்னர், தனிப்பட்டவர்களாகவும், குடும்பமாகவும் நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிற காரியங்களுக்கு கதை எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைப்பற்றி பேசவும்.

தலைவர் ரசல் எம். நெல்சன் சொன்னார்: “காலப்போக்கில் சுவிசேஷம் கற்றுக்கொள்ளுதலின் மையமாக உங்கள் வீட்டை மாற்றியமைக்க நீங்கள் சிரத்தையுடன் பணியாற்றும்போது உங்கள் ஓய்வு நாட்கள் உண்மையில் மகிழ்ச்சியானதாயிருக்குமென நான் வாக்களிக்கிறேன். உங்கள் பிள்ளைகள் இரட்சகரின் போதனைகளைக் கற்றுக்கொள்ளவும் அதன்படி வாழவும் உற்சாகமுள்ளவராயிருப்பார்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையிலும் உங்கள் வீட்டிலும் சத்துருவின் செல்வாக்கு குறைந்துபோகும். உங்கள் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் வியக்கத்தக்கதாகவும் நீடித்ததாகவுமிருக்கும்” (“Becoming Exemplary Latter-day Saints,” Ensign or Liahona, Nov. 2018, 113).

அச்சிடவும்