பழைய ஏற்பாடு 2022
பெப்ருவரி 14–20. ஆதியாகமம் 18–23: “கர்த்தருக்கு கடினமான காரியம் உண்டோ?”


“பெப்ருவரி 14–20. ஆதியாகமம் 18–23: ‘கர்த்தருக்கு கடினமான காரியம் உண்டோ?’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“பெப்ருவரி 14–20. ஆதியாகமம் 18–23” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

படம்
சாராள் குழந்தையாகிய ஈசாக்கை ஏந்தியிருத்தல்

சாராளும் ஈசாக்கும்–ஸ்காட் ஸ்னோ

பெப்ருவரி 14–20

ஆதியாகமம் 18–23

“கர்த்தருக்கு கடினமான காரியம் உண்டோ?”

ஆதியாகமம் 18–23வாசித்து சிந்தித்து, உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும். இந்த அதிகாரங்களைப் படிக்க உங்களுக்கு உதவ இந்த குறிப்பில் உள்ள ஆலோசனைகளை நீங்கள் பயன்படுத்தலாம், மேலும் உங்களுக்காக கர்த்தர் குறிப்பாக வைத்திருக்கிற வேதங்களிலுள்ள மற்ற செய்திகளைத் தேடவும் நீங்கள் உணர்த்தப்படலாம்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

ஆபிரகாமின் வாழ்க்கை, இதயத்தை நொறுக்கும் மற்றும் இதயத்தை இதமாக்கும் நிகழ்வுகளால் நிரப்பப்பட்டிருத்தல், ஆபிரகாம் ஒரு தரிசனத்தில் கற்றுக்கொண்ட ஒரு சத்தியத்தின் சான்றாகும். “கர்த்தராகிய [நம்] தேவன் எதைக் கட்டளையிட்டாலும் எல்லாவற்றையும் நாம் செய்வோமா எனப் பார்ப்பது நிரூபிக்கப்பட நாம் பூமியில் இருக்கிறோம்”( ஆபிரகாம் 3:25). ஆபிரகாம் தானே விசுவாசமுள்ளவன் என்பதை நிரூபிப்பானா? அவனும் சாராளும் தங்கள் வயதான காலத்தில் குழந்தை இல்லாத நிலையில் இருந்தபோதும், ஒரு பெரிய சந்ததி குறித்த தேவனின் வாக்குறுதியில் அவன் தொடர்ந்து விசுவாசம் வைத்திருப்பானா? ஈசாக்கு பிறந்தவுடன், ஆபிரகாமின் விசுவாசம் நினைத்துப்பார்க்க முடியாத, அந்த உடன்படிக்கையை அவன் மூலம் நிறைவேற்றுவதாக தேவன் வாக்களித்த மகனை பலியிடும்படியான கட்டளையை சகித்திருக்குமா? ஆபிரகாம் விசுவாசமுள்ளவன் என்பதை நிரூபித்தான். ஆபிரகாம் தேவனை நம்பினான், தேவன் ஆபிரகாமை நம்பினார். ஆதியாகமம் 18–23 ல், ஆபிரகாம் மற்றும் பிறரின் வாழ்க்கையிலிருந்து கதைகளை நாம் காண்கிறோம், அவை தேவனின் வாக்குத்தத்தங்களை நம்புவதற்கான துன்மார்க்கத்தை விட்டு ஓடுவதற்கும், ஒருபோதும் திரும்பிப் பார்க்காதிருப்பதற்கும், தியாகத்தைப் பொருட்படுத்தாமல் தேவனை நம்புவதற்கும் நம்முடைய சொந்த திறனைப்பற்றி சிந்திக்கத் தூண்டுகிறது.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

ஆதியாகமம் 18: 9–14 ; 21: 1–7

கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தங்களை தன் காலத்திலே நிறைவேற்றுகிறார்.

கர்த்தர் விசுவாசமுள்ளவர்களுக்கு மகிமையான வாக்குத்தத்தங்களை அளித்துள்ளார், ஆனால் சில சமயங்களில் நம் வாழ்வின் சூழ்நிலைகள் அந்த வாக்குத்தத்தங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட சாத்தியமாகும் என்று நம்மை ஆச்சரியப்படச் செய்யக்கூடும். ஆபிரகாமும் சாராளும் சமயங்களில் அப்படி உணர்ந்திருக்கலாம். அவர்களது அனுபவங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்? ஆதியாகமம் 17: 4, 15–22 ல் கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்களித்ததை மறுபரிசீலனை செய்வது உங்கள் படிப்பைத் தொடங்க உதவியாக இருக்கும். ஆபிரகாமும் சாராளும் எப்படி நடந்துகொண்டார்கள்? ( ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, ஆதியாகமம் 17:23 [ஆதியாகமம் 17:17, அடிக்குறிப்பு b]; ஆதியாகமம் 18:9–12). தம்முடைய வாக்குத்தத்தங்கள் மீது அதிக விசுவாசம் வைக்க அவர்களுக்கு உதவ கர்த்தர் எவ்வாறு பதிலளித்தார்? (ஆதியாகமம் 18:14 பார்க்கவும்).

உங்கள் விசுவாசத்தை வளர்க்கிற இந்த வசனங்களில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்? கர்த்தர் தம்முடைய வாக்குறுதிகளை அவருடைய நேரத்திலும் வழியிலும் நிறைவேற்றுவார் என்ற உங்கள் விசுவாசத்தை உங்கள் வாழ்க்கையில் அல்லது வேறு ஒருவரின் வாழ்க்கையில் என்ன பிற அனுபவங்கள் பலப்படுத்தியுள்ளன?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:68 ஐயும் பார்க்கவும்.

ஆதியாகமம் 19:12–29

துன்மார்க்கத்தை விட்டு விலகியோடும்படி கர்த்தர் நமக்குக் கட்டளையிடுகிறார்.

லோத்தையும் அவருடைய குடும்பத்தினரையும்பற்றி நீங்கள் வாசிக்கும்போது துன்மார்க்கத்தை விட்டு ஓடுவதைப்பற்றி நீங்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறீர்கள்? உதாரணமாக, லோத்தும் அவனுடைய குடும்பத்தினரும் அழிவிலிருந்து தப்பிக்க தேவதூதர்கள் சொன்னதையும் செய்ததையும்பற்றி உங்களை எது உணர்த்துகிறது? (ஆதியாகமம் 19: 12–17 பார்க்கவும்). தப்பி ஓட அல்லது உலகில் உள்ள தீய தாக்கங்களிலிருந்து பாதுகாப்பைக் காண உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கர்த்தர் எவ்வாறு உதவுகிறார்?

சோதோம் மற்றும் கொமோராவின் பாவங்களைப்பற்றி மேலும் அறிய, எசேக்கியேல் 16: 49–50 மற்றும் யூதா 1: 7–8 பார்க்கவும்.

ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, ஆதியாகமம் 19:9–15ஐயும் (வேதாகமப் பிற்சேர்க்கையில்) பார்க்கவும் .

படம்
லோத்தும் அவனது குடும்பத்தினரும் சோதோம் கொமோராவை விட்டு ஓடும் விளக்கப்படம்

சோதோம் கொமோராவிலிருந்து தப்பி ஓடுதல்–ஜூலியஸ் ஷ்னோர் வான் கரோல்ஸ்ஃபெல்ட்

ஆதியாகமம் 19:26

லோத்தின் மனைவி என்ன தவறு செய்தாள்?

மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலன்ட் போதித்தார்:

“வெளிப்படையாகவே, லோத்தின் மனைவியின் தவறு என்னவென்றால், அவள் திரும்பிப் பார்த்தது மட்டுமல்ல; அவள் இதயத்தில் திரும்பச் செல்ல விரும்பினாள். அவள் நகர எல்லையைத் தாண்டுவதற்கு முன்பே, சோதோம் கொமோரா அவளுக்கு வழங்கியதை அவள் ஏற்கனவே இழந்துவிட்டாள் என்று தோன்றும். … அவளுக்கு விசுவாசமில்லை. தனக்கு ஏற்கனவே இருந்ததை விட சிறந்த ஒன்றைக் கொடுக்கும் கர்த்தரின் திறனை அவள் சந்தேகித்தாள். …

“ஒவ்வொரு தலைமுறையினருக்கும் [எல்லா மக்களுக்கும்],‘ லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்’ [லூக்கா 17:32] என்று நினைவூட்டுகிறேன். விசுவாசம் எதிர்காலத்திற்கானது. விசுவாசம் கடந்த காலத்தின் மேல் கட்டுகிறது, ஆனால் ஒருபோதும் அங்கே தங்க விரும்புவதில்லை. தேவன் நம் ஒவ்வொருவருக்கும் பெரிய காரியங்களை வைத்திருக்கிறார் என்றும், கிறிஸ்து உண்மையிலேயே ‘வரவிருக்கும் நல்ல காரியங்களின் பிரதான ஆசாரியன்’ என்றும் விசுவாசம் நம்புகிறது ( எபிரெயர் 9:11 ) ” (“The Best Is Yet to Be,” Ensign, Jan. 2010, 24, 27).

ஆதியாகமம் 22:1–19

ஈசாக்கை பலியிடுவது ஆபிரகாமின் விருப்பமாயிருந்தது, தேவன் மற்றும் அவருடைய குமாரனின் மாதிரியாகும்.

ஈசாக்கை பலியாகக் கொடுக்கும்படி ஆபிரகாமுக்கு தேவன் கட்டளையிட்ட எல்லா காரணங்களும் நமக்குத் தெரியாது; இது தேவன்மீது அவன் வைத்திருந்த நம்பிக்கையின் சோதனை என்று நமக்குத் தெரியும் (ஆதியாகமம் 22: 12–19 பார்க்கவும்). நீங்கள் ஆதியாகமம் 22: 1–19 வாசிக்கும்போது, ஆபிரகாமின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

ஆபிரகாம் தனது மகனை பலியிட சித்தமாயிருந்தது,“ தேவனுக்கும் அவருடைய ஒரே மகனுக்கும் மாதிரியாக” இருந்தது (யாக்கோபு 4: 5 ). ஆபிரகாமின் சோதனைக்கும், பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனை நமக்காக பலியிடுவதற்கும் உள்ள ஒற்றுமையை நீங்கள் சிந்திக்கும்போது, உங்கள் பரலோக பிதாவைப்பற்றி நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?

ஈசாக்குக்கும் இரட்சகருக்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன. இந்த ஒற்றுமைகளைத் தேடி ஆதியாகமம் 22: 1–19 மீண்டும் வாசிப்பதைக் கருத்தில் கொள்ளவும்.

“Akedah (The Binding)” (video), ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்.

படம்
family study icon

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

ஆதியாகமம் 18:14.வேதங்களிலிருந்தோ, உங்கள் குடும்ப வரலாற்றிலிருந்தோ, அல்லது உங்கள் சொந்த வாழ்க்கையிலிருந்தோ கர்த்தருக்கு ஒன்றும் கடினமானதல்ல என உங்களுக்குப் போதித்ததை நீங்கள் பகிரக்கூடிய கதைகள் உள்ளனவா?

ஆதியாகமம் 18:16–33.இந்த வசனங்களில் இருந்து ஆபிரகாமின் குணாதிசயங்களைப்பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? அவனது எடுத்துக்காட்டை நாம் எவ்வாறு பின்பற்ற முடியும்? (ஆல்மா 10:22–23ஐயும் பார்க்கவும்.)

ஆதியாகமம் 19: 15–17.துன்மார்க்க சூழ்நிலைகளில் இருந்து உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் தப்பி ஓட வேண்டிய நேரங்களுக்காக ஆயத்தம் செய்ய இந்த வசனங்கள் உதவக்கூடும். இந்த சூழ்நிலைகளில் சில என்னவாக இருக்கலாம்? எடுத்துக்காட்டாக, பொருத்தமற்ற ஊடகங்கள் அல்லது வதந்தி பேச தூண்டுதலைப்பற்றி நீங்கள் கலந்துரையாடலாம். இத்தகைய சூழ்நிலைகளில் இருந்து நாம் எவ்வாறு தப்பி ஓட முடியும்?

ஆதியாகமம் 21:9–20.சாராளும் ஆபிரகாமும் அவர்களை வெளியேற்றியபின், ஆகாரையும் இஸ்மவேலையும் தேவன் நடத்திய விதத்தில் உங்கள் குடும்பத்தினரின் எண்ணங்கள் எவை?

ஆதியாகமம் 22:1–14.ஈசாக்கை பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிட்ட கதைக்கும் இரட்சகரின் பாவநிவாரணபலிக்கும் இடையிலான தொடர்பைக் காண உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் எவ்வாறு உதவ முடியும்? குடும்ப அங்கத்தினர்கள் இந்த நிகழ்வுகளுக்கு இடையில் அவர்கள் காணும் ஒற்றுமையைப்பற்றி விவாதிக்கும்போது,( பழைய ஏற்பாட்டு கதைகளில் “ஆபிரகாம் மற்றும் ஈசாக்கு” பார்க்கவும்) ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் சிலுவையில் அறையப்படுதல் படங்களை நீங்கள் காட்டலாம் . “He Sent His Son” (Children’s Songbook, 34–35), போன்ற இரட்சகரின் பலியைப்பற்றி நீங்கள் ஒரு பாடல் அல்லது கீர்த்தனையை பாடலாம், மேலும் இரட்சகரின் பலியை விவரிக்கும் சொற்றொடர்களைத் தேடலாம்.

ஒரு குடும்பமாக எதை தியாகம் செய்ய நாம் கேட்கப்பட்டோம்? இந்த தியாகங்கள் நம்மை எவ்வாறு தேவனுக்கு நெருக்கமாக கொண்டு வந்தன?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “God Loved Us, So He Sent His Son,” Hymns, no. 187.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

பரிசுத்த ஆவிக்கு செவிகொடுக்கவும். நீங்கள் படிக்கும்போது, அவை நீங்கள் வாசிப்பனவற்றுக்கு தொடர்பற்றனவாக இருந்தாலும் கூட, உங்கள் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் கவனம் செலுத்துங்கள், அந்த எண்ணங்களே, நீங்கள் அறியவேண்டுமென தேவன் விரும்புகிற அதே காரியங்களாயிருக்கலாம்.

படம்
ஆபிரகாமும் ஈசாக்கும் நடத்தல்

ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் விளக்கப்படம்–ஜெஃப் வார்ட்

அச்சிடவும்