பழைய ஏற்பாடு 2022
ஜனுவரி 31–பெப்ருவரி 6. ஆதியாகமம் 6–11; மோசே 8: “நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது”


“ஜனுவரி 31–பெப்ருவரி 6. ஆதியாகமம் 6–11; மோசே 8: ‘நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“ஜனுவரி 31–பெப்ருவரி 6. ஆதியாகமம் 6–11; மோசே 8,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

படம்
நோவா, அவனுடைய குடும்பம், விலங்குகள், பேழை, மற்றும் வானவில்

நோவா பேழையை விட்டு வெளியேறுதல்–சாம் லாலர்

ஜனுவரி 31–பெப்ருவரி 6

ஆதியாகமம் 6–11 ; மோசே 8

“நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது”

வேதங்களில் உள்ள கதைகள் அடிக்கடி ஆவிக்குரிய பாடங்களை நமக்குக் கற்பிக்க முடியும். மாபெரும் பிரளயம் மற்றும் பாபேல் கோபுரத்தைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, இந்த விவரங்கள் உங்களுக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதைப்பற்றிய உணர்வை நாடுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

வேதாகமம் வாசிக்கும் தலைமுறைகள் நோவா மற்றும் பிரளயத்தின் கதையால் உணர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் பிற்காலத்தில் வாழும் நாம், அதற்கு கவனம் செலுத்துவதற்கான விசேஷித்த காரணம் உண்டு. அவருடைய இரண்டாவது வருகையை நாம் எவ்வாறு கவனிக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து கற்பித்தபோது, அவர் சொன்னார், “நோவாவின் நாட்களில் இருந்தபடியே அது மனுஷகுமாரனின் வருகையிலும் இருக்கும்” ( ஜோசப் ஸ்மித்—மத்தேயு 1: 41 ). கூடுதலாக, சீர்கெட்டு மற்றும் கொடுமையினால் நிறைந்திருந்தது போன்ற நோவாவின் நாட்களை விவரிக்கும் சொற்றொடர்கள் எளிதாக நமது காலத்தையும் விவரிக்கக் கூடும் (ஆதியாகமம் 6:12–13; மோசே 8:28). பெருமையைப்பற்றிய விளக்கமும், தேவனின் பிள்ளைகளிடையே குழப்பமும் பிரிவினைகளுமுடன், பாபேல் கோபுரத்தின் கதையும் நம் நாளுக்கு பொருந்தும் போல தோன்றுகிறது.

இந்த பூர்வகால விவரங்கள் மதிப்புமிக்கவை என்பது வரலாறு முழுவதும் துன்மார்க்கம் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது என்பதை நமக்குக் காட்டுவதனிமித்தம் மட்டும் அல்ல, மிக முக்கியமாக, அதை என்ன செய்ய வேண்டும் என்று அவை நமக்குக் கற்பிக்கின்றன. அவனைச் சுற்றிலும் துன்மார்க்கம் இருந்தபோதிலும், நோவாவுக்கோ “கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது” (மோசே 8:27 ). யாரேது மற்றும் அவனது சகோதரனின் குடும்பத்தினர் கர்த்தரிடத்தில் திரும்பினர், பாபேலில் இருந்த துன்மார்க்கத்திலிருந்து புறம்பே வழிநடத்தப்பட்டனர் (ஏத்தேர் 1: 33–43 பார்க்கவும்). சீர்கேடு மற்றும் கொடுமையான காலங்களில் நம்மையும் நமது குடும்பத்தினரையும் எவ்வாறு பாதுகாப்பது என்று நாம் ஆச்சரியப்பட்டால், நமக்கு கற்பிக்க இந்த அதிகாரங்களில் உள்ள அறிமுகமான கதைகள் நிறைய உள்ளன.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

ஆதியாகமம் 6; மோசே 8

கர்த்தருடைய தீர்க்கதரிசியைப் பின்பற்றுவதில் ஆவிக்குரிய பாதுகாப்பு இருக்கிறது.

மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்துக்கு நன்றி, பழைய ஏற்பாட்டில் காணப்படுவதை விட நோவாவைப்பற்றி நாம் அதிகம் அறிகிறோம். ஜோசப் ஸ்மித்தின் உணர்த்தப்பட்ட ஆதியாகமம் 6 , மோசே 8 ல் காணப்படுகிற மொழிபெயர்ப்பு, நோவா தேவனின் மாபெரும் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்பதை வெளிப்படுத்துகிறது. {இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பிரசங்கிக்க அவன் நியமிக்கப்பட்டு, அனுப்பப்பட்டான், தேவனுடன் நடந்தான், பேசினான், பிரளயத்திற்குப் பிறகு பூமியில் தேவனின் பிள்ளைகளை மீண்டும் நிலைநிறுத்த அவன் தேர்ந்தெடுக்கப்பட்டான் (Teachings of Presidents of the Church: Joseph Smith [2007], 104, 201)ஐயும் பார்க்கவும். நோவாவின் அனுபவங்களிலிருந்து தீர்க்கதரிசிகளைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

நோவாவின் நாளைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, நமது நாளுடுன் உள்ள ஒற்றுமையை நீங்கள் கவனிக்கலாம். உதாரணமாக:

இன்றைய உலகில் உங்களைப் பாதுகாப்பாக வைக்கக்கூடிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப்பற்றி தீர்க்கதரிசிகள் இன்று என்ன கற்பிக்கிறார்கள்? நோவாவின் அனுபவங்களைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, இன்று கர்த்தருடைய தீர்க்கதரிசிகளைப் பின்பற்ற உங்களுக்கு உணர்த்துவது எது?

2 நேபி 13:33; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 21:4–7ஐயும் பார்க்கவும்.

ஆதியாகமம் 9:8–17.

கர்த்தருடனான நமது உடன்படிக்கைகளை நினைவுறுத்த அடையாளங்கள் அல்லது சின்னங்கள் நமக்கு உதவுகின்றன.

சுவிசேஷ உடன்படிக்கைகள் ஒரு சமிக்ஞை, சின்னம் அல்லது “அடையாளத்தால்” குறிப்பிடப்படுகிறது( ஆதியாகமம் 9:12 ). உதாரணமாக, திருவிருந்தின் அப்பமும் தண்ணீரும் அல்லது ஞானஸ்நானத் தண்ணீர் உங்கள் உடன்படிக்கைகளுக்கு சம்மந்தப்பட்ட எந்த பரிசுத்த சத்தியங்களை மனதுக்கு கொண்டு வருகிறது என்பதைப்பற்றி சிந்தியுங்கள். ஆதியாகமம் 9: 8–17 படி, ஒரு வானவில் உங்கள் மனதில் எதைக் கொண்டு வர முடியும்? ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, ஆதியாகமம் 9: 21–25 (வேதாகம பிற்சேர்க்கை) உங்கள் புரிதலுக்கு என்ன சேர்க்கிறது? நீங்கள் அவரையும் நீங்கள் செய்த உடன்படிக்கைகளையும் நினைவில் வைத்துக் கொள்ள கர்த்தர் ஏன் விரும்புகிறார்?

Gerrit W. Gong, “Always Remember Him,” Liahona, May 2016, 108–11ஐயும் பார்க்கவும்.

ஆதியாகமம் 11:1–9.

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதே பரலோகத்தை அடைய ஒரே வழி.

பூர்வகால பாபேல் அல்லது பாபிலோன் நீண்ட காலமாக துன்மார்க்கத்திற்கும் உலகப்பிரகாமானதிற்கும் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது ( வெளிப்படுத்தின விசேஷம் 18: 1–10 ; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 133: 14 பார்க்கவும்). நீங்கள் ஆதியாகமம் 11: 1–9 படிக்கும்போது, “ஜனங்கள் பரலோகத்தைக் கிட்டிச்சேர, ஒரு உயரமான கோபுரத்தைக் கட்டும்படியான வாஞ்சையை அவர்களது இருதயங்களில் போட்டவன்” சாத்தான் என்று எழுதிய மார்மன் தீர்க்கதரிசி அளித்த உள்ளுணர்வுகளைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள்( ஏலமன் 6:28 ; வசனங்களையும் 26–27 பார்க்கவும்). பாபேல் கோபுரத்தின் கதை உங்களுக்கு என்ன எச்சரிக்கைகள் வைத்திருக்கிறது?

சங்கீதம் 127:1ஐயும் பார்க்கவும்.

படம்
பாபேல் கோபுரம்

பாபேல் கோபுரத்தின் பட விளக்கம்–டேவிட் கிரீன்

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

ஆதியாகமம் 45:6–8.தீர்க்கதரிசியைப் பின்பற்றுவது நம்மை ஆவிக்குரிய விதமாக பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என உங்கள் குடும்பத்துக்கு கற்பிக்க நீங்கள் எவ்வாறு நோவாவின் பேழையின் கதையைப் பயன்படுத்தலாம் Old Testament Stories). காகிதம் அல்லது மரத்துண்டுகளால் ஒரு எளிய பொம்மை படகு உருவாக்க உங்கள் குடும்பத்தினர் இணைந்து பணியாற்றலாம். ஆதியாகமம் 6–7 நீங்கள் வாசிக்கும்போது, பேழை வழங்கிய பாதுகாப்பை தீர்க்கதரிசியைப் பின்பற்றுவதில் நாம் காணும் பாதுகாப்போடு ஒப்பிடலாம். நீங்கள் தீர்க்கதரிசியிடமிருந்து சமீபத்திய ஆலோசனையைப்பற்றி கலந்துரையாட விரும்பலாம் மற்றும் உங்கள் படகில் அவருடைய ஆலோசனைகளை எழுதலாம்.

நோவாவின் குடும்பத்தைக் காப்பாற்றிய பேழையுடன் ஒப்பிடப்படக்கூடிய வேறு எதை தேவன் நமக்கு அளித்துள்ளார்? இந்த ஆதாரங்கள் சில பதில்களை ஆலோசனையளிக்கின்றன, இன்னும் பல உள்ளன: 2 நேபி 9: 7–13 ; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 115: 5–6 ; மற்றும் தலைவர் ரசல் எம். நெல்சனின் செய்தி “Becoming Exemplary Latter-day Saints” (Liahona, Nov. 2018, 113–14).

மோசே 8:17.கர்த்தருடைய ஆவியானவர் நம்முடன் “பாடுபடுவது” என்றால் என்ன? ( 1 நேபி 7:14; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:33 பார்க்கவும்). ஆவியானவர் நம்முடன் பாடுபடுவதை நாம் எப்போது அனுபவித்திருக்கிறோம்?

ஆதியாகமம் 9:8–17.வானவில் எதைக் குறிக்கிறது என்பதைப்பற்றி பேசும்போது, சிறு பிள்ளைகள் அதை வரைவது அல்லது வண்ணம் தீட்டுவதை ரசிக்கலாம் ( ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, ஆதியாகமம் 9: 21–25 [வேதாகம பிற்சேர்க்கை] பார்க்கவும்). இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான ஞானஸ்நான உடன்படிக்கையை நினைவில் கொள்ள உதவும் திருவிருந்து போன்ற நமது உடன்படிக்கைகளை நினைவில் கொள்ள உதவும் விஷயங்களையும் நீங்கள் விவாதிக்கலாம் ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20: 75–79 பார்க்கவும்).

ஆதியாகமம் 11:1–9.உங்கள் குடும்பம் ஆதியாகமம் 11 வாசித்து பாபேல் கோபுரத்தைப்பற்றி அறியும்போது ஏத்தேர் 1: 33–43 வாசிப்பது உதவிகரமாக இருக்கும். உலகில் துன்மார்க்கம் இருந்தபோதிலும் ஆவிக்குரிய பாதுகாப்பைக் கண்டுபிடிக்க நமது குடும்பத்திற்கு உதவக்கூடிய யாரேது மற்றும் அவனது சகோதரனின் குடும்பங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? இதேபோன்ற சவாலை எதிர்கொண்ட நோவா மற்றும் அவனது குடும்பத்தினரிடமிருந்து என்ன கூடுதல் பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம்? ( மோசே 8:13, 16–30 பார்க்கவும்).

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Follow the Prophet,” Children’s Songbook, 110–11 ( பத்தி 3).

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

உங்கள் உள்ளுணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள் வேதங்களிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டதைப் பகிர்ந்து கொள்ளும்போது, நீங்கள் மற்றவர்களை ஆசீர்வதிப்பது மட்டுமல்லாமல், உங்கள் சொந்த புரிதலையும் ஆழப்படுத்துகிறீர்கள். உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது தொகுதி அங்கத்தினர்களுடன் வேதங்களிலிருந்து பகிர்ந்து கொள்ள எது உணர்த்தப்படுவதாக நினைக்கிறீர்கள்?

படம்
நோவாவின் பேழை

நோவாவின் பேழையின் சித்தரிப்பு–ஆதாம் க்ளின்ட் டே

அச்சிடவும்